• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

Recommended Posts

viyakala.jpg

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இணுவிலில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களின் வரிப்பணத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டவேலை திட்டங்கள் தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளினால் திறக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்தோடு இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது அவரின் பணிப்பிலா இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது. இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார்கள். எனினும் தற்போது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவ தலையீடு அதிகரித்து வருகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களில் அரச அதிகாரிகள்கூட அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள்.

தற்போது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் முன்னைய காலங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை. அந்த நிலமை இந்த அரசால் மாற்றப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே எதிர்வரும் காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்க முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/யாழில்-சுயவிவரக்கோவை-சேக/

Share this post


Link to post
Share on other sites
Quote

இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது அவரின் பணிப்பிலா இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது. இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

 

உண்மையை சொல்லக்கூடிய  சனாதிபதி சிறிலங்கா சரித்திரத்தில்  இல்லையே.

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, nunavilan said:

 

உண்மையை சொல்லக்கூடிய  சனாதிபதி சிறிலங்கா சரித்திரத்தில்  இல்லையே.

இனியும் இருக்க போவதில்லை 

தமிழீழத்தில் இருந்தார் எம் தலைவர் 🙏

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.
  • தேர்தல் பின்னடைவுகளை மறைப்பதற்காக“ஒற்றுமை”யின் பெயரால் கூட்டமைப்பு நாடகம்: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும், பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களாக நாம் எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களுக்கும், கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது. இவ்வாறான நிலையில் “ஒற்றுமை” யான செயற்பாடு என்ற பெயரில் பின்னடைவுகளை மறைத்து சுயலாப அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகமாடுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் தான் உருவக்கப்பட்டது. இருப்பினும் அதில் இருப்பவர்களால் தனிநபர் சார்ந்த செயற்படுகளால் தான் பிளவுகள் ஏற்பட்டன என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள  வேண்டும். அதற்கு பின்னர் பல்வேறு முயற்சிகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது கூட்டமைப்பு அனைத்தையும் முடக்கியது. சரி, அந்த வரலாற்றை நாம் விடுவோம். மிக அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சிங்கள மக்கள் தமது தெரிவை சிங்கள, பேரினவாத பௌத்த சித்தாந்தத்தினை மையப்படுத்தி தீர்மானித்து விட்ட நிலையில் தமிழ் மக்களின் இருப்பினையும், பாதுகாப்பினையும், அடிப்படையாக வைத்து தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான முயற்சியை எடுத்தார்கள். அந்த சமயத்தில் நாங்கள் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றியே பங்கேற்றோம். நியாயமான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காக கொண்டு செயற்பட்டோம். ஏனைய தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்த நிபந்தனைகளை நாம் ஒவ்வொன்றாக வலுப்படுத்தினோம். அச்சமயத்தில் தான் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். தமிழரசுக்கட்சி ரணில் அரசுடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை அவர்களே நிராகரிப்பது என்பது சங்கடமான விடயம். அதனால் அவர்கள் அதற்கு உடன் பட்டிருக்கவில்லை. அதில் நியாயம் உள்ளது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ,பி.ஆர்.எல்.எப், விக்கினேஸ்வரன் ஆகியோர் இடைக்கால அறிக்கைவெளியானதும், அது ஒற்றையாட்சியை அடியொற்றியது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள். அத்தகையவர்கள் நாம் முன்வைத்த நிபந்தனையின் நியாயத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகக்குறைந்தது ஆதரிக்கவுமில்லை. அமைதியாக இருந்தார்கள். இதனால் தான் நாம் அந்த நிபந்தனையில் கையொப்பம் இடுவதை தவிர்த்து வெளியேறினோம். தமிழ் அபிலாஷைகளை ஒருநாளும் ஒற்றையாட்சிக்குள் வென்றெடுக்க முடியாது. ஆனால் தமிழரசுக்கட்சி அதனையே செய்ய விளைந்தது. அதேபோன்று தான் ஜெனீவா விடயத்திலும் நடந்து கொண்டது. இப்படியான நிலைமைகள் காணப்படுகின்றன என்பதை நாம் எமது மக்களுக்கு படிப்படியாக எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினோம். எமக்கான தேசம் அவசியம் என்பதையும், இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதற்கான முறைமைகளையும் சுட்டிக்காட்டினோம். கூட்டமைப்பு விடுகின்ற அனைத்து சுத்துமத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்தினோம். எமது அரசியல் கோட்பாடுகளுக்கு அமைவாக நாம் நேர்மையாக செயற்பட்டோம். அதன் பிரதிபலிப்பே தற்போது எமக்கான ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். ஒரு தசாப்த போராட்டத்திற்கு கிடைத்தவொரு முதற்கட்ட வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். அவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வாக்கு வங்கி மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. பிரதிநித்துவங்களும் இழக்கப்பட்டாகிவிட்டது. இவ்வாறான நிலையில் கொள்கையிலிருந்து விலகியதாலேயே தமக்கு பின்னடைவுகள் ஏற்பட்டது என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறைப்பதற்காக தற்போது ஒற்றுமையாக தமிழ் மக்கள் சார்ந்து பாராளுமன்றிலும், வெளியிலும் செயற்படுவோம் என்று அழைப்பு விடுகின்றார்கள். இதுவொரு அரசியல் நாடாகமாகும். ஆகவே எமது மக்கள் அளித்த வாக்குகளை மறந்து அவர்களுக்காக நாம் வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு கூட்டமைப்பின் பின்னால் சென்று மீண்டும் ஒரு தவை ஏமாறமுடியாது. எமது மக்களையும் ஏமாற்றமுடியாது. ஆகவே அவர்கள் எவ்விதமான நடந்துகொள்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்கள் எமதுகொள்கைகளை ஏற்று இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்றார்.   https://www.virakesari.lk/article/87732
  • ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.    புதிய பாதுகாப்பு குறைபாடு ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்விட்டர் செயலியை பாதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்கவல் விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.  ட்விட்டர்  இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களை பாதித்து இருப்பதால், இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது. முதலில் பிழையை சரி செய்து விட்டு, அதன்பின் பயனர்களுக்கு தகவல் வழங்கலாம் என ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்ட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டை பிரபல பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஹேக்கர்ஒன் கண்டறிந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தார். https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/08103758/1768918/Twitter-reports-security-bug-in-Android-wants-users.vpf  
  • நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.
  • பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல் 08/08/2020 இனியொரு...   எண்பதுகளில் ஆரம்பித்து ஈழப் போராட்டத்திற்காக ஐம்பதயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை வட கிழக்கு மண் மக்களுக்காகத் தானம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் அந்தப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக தலைமையில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டு பதினொரு வருடங்களின் பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக் கிழக்கிலும் மறுமுனை புலம் பெயர் நாடுகளிலும் குடிகொண்டிருக்க ஒவ்வொரு கணமும் அழிவிற்கானதாக மாற்றமடைகிறது. உலகில் பல நாடுகளில் போராட்டங்கள் அழிவைச் சந்திருக்கின்றன, ஆனல் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மட்டுமே எந்த வித மாற்றமும் இன்றி பாராளுமன்றம் என்ற பன்றித் தொழிவத்திற்குள் குடிகொண்டுள்ளது. பரபரப்பு தரும் நாளந்த செய்திகள், இந்திய சினிமாகள், தொலைக்காட்சித் தொடர்கள், வன்முறை, வாள்வெட்டு போன்றவை மட்டுமே நாளாந்த மக்களின் வாழ்வாகிவிட குறைந்த பட்ச அரசியல் விவாதங்கள் கூட நடப்பதில்லை. சமூகத்தில் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூட தெரிந்துகொள்ளாமல் மக்களை இருளுக்குள் வைத்திருக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் சமூக வலைத்தள குழுக்கள், ஊடகங்கள், இந்தியத் தொலைக்காட்சிகளின் நாடகங்கள், இந்துத்துவ உள்ளீடுகள் போன்ற செயற்படுகின்றன. இத்தனை ஆயிரம் மக்களின் தியாகத்தின் பின்னர் புரட்சிகர அமைப்பல்ல, அடிப்படை ஜனநாயக அமைப்புக்கள் கூட தோன்றாமல் பார்த்துக்கொள்ள பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிகளின் வாக்குறுதிகளும் பயன்படுகின்றன. சரி, இவர்களை அரசியலிலிருந்த அகற்ற வேண்டும் என ஒரு முன்னைநாள் போராளிக்காவது தோன்றியதில்லையா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகின்றது. விமர்சனம் சுய விமர்சனம் என்ற நமது பண்பாட்டுத் தொடர்ச்சி அழிக்கப்பட்டு மதங்களைப் போன்ற புனித சாயம் பூசப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். தமிழ்த் தேசிய வீர வசனம் பேசுவதில் நான் பெரிதா நீபெரிதா என்ற போராட்டம் வாக்குப் பொறுகிகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நின்று போய், ஆள் பிடிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். எங்காவது இடைவெளி கிடைத்தால் பாராளுமன்றதுள் புகுந்துவிடலாம் என்ற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் அத்தனை “மக்கள் பிரதிநிதிகள்” கண்களிலும் காணக்கிடைக்கிறது. பேரினவாத ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூடக் கிடைக்காது என்று எண்பதுகளிலேயே முடிவிற்கு வந்தாகிற்று. வெறும் தனிமனித அதிகாரத்திற்காகவும், உடன்படிக்கைகளுக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே பாராளுமன்றம் என்று தெரிந்திருந்தும் மாற்று வழிகளில் இல்லாமையால் மட்டுமே மக்கள் வாக்களிக்கிறார்கள்.   பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தனி அடையாளம் கொண்ட குழுக்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல நாளந்த மக்களின் வாழ்க்கையிலும் மாற்று உலகத்தைச் சார்ந்த எதிரிகளாகவே கருதப்படுகின்றனர். இதையெல்லாம் குறித்து அரசியல் வாதிகள் கவலைகொள்வதில்லை. அவர்களுக்கு குறித்த எந்தக் கோட்பாடும் கிடையாது. சமூக நீதி, வர்க்கம், மக்கள் மத்தியிலான முரண்பாடுகள், பொருளாதாரம், ஒடுக்குமுறை போன்ற எந்த அறிவுமற்ற கோமாளிகளே அவர்கள். அவற்றை அறிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. சிங்கள பேரினவாதம் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாளை இலங்கையின் அரசியல் யாப்பு அவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படலாம். திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்தப்படலாம். அடுத்த தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையாக சிங்கள் மக்களே வாக்களிக்கும் நிலை தோன்றலாம். இவை குறித்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவான யாராவது ஒருவராவது பேசியிருக்கிறாரா என்றால் ஏமாற்றமே மிஞ்சும். யார் துரோகி, யார் தியாகி என புலம் பெயர் நாடுகளிலிருந்து தீர்மானிக்க முயலும் எஜமானர் குழுக்களுக்கு இதைப்ப்ற்றிப் பேச நேரம் கிடைத்திருகாது. தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம். அவரது வீட்டை நோக்கிப் படையெடுக்கும் அரசியல்வாதிகள் நாளைய ஆபத்தான எதிர்காலம் குறித்து சில நிமிடங்களாவது தமது நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். யுத்தம் நடந்த மண் என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி மயானத்திலிருந்து எழும் கூக்குரல் போல அப்பாவி மக்களின் செவிப்பறைகளை இவர்கள் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்”     http://inioru.com/srilankanelection2020/