Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள்.

twitter-1.jpeg

எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ருவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.

உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ருவிட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ருவீட் நீக்கப்பட்டுள்ளது.

Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ருவிட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ருவீட் செய்யப்பட்டுள்ளது.

பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ருவீட் செய்யப்பட்டுள்ளது.

கணினியூடான இரகசிய எழுத்துக்கலையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் நிதி கொடுக்கல் வாங்கல் முறைமையே பிட்கொய்ன் எனப்படுகின்றது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜோ பைடன் மற்றும் கானியா வெஸ்ட் உள்ளிட்டோரின் ருவிட்டர் கணக்குகளும் இந்த முறைகேட்டில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.vanakkamlondon.com/ஊடுருவப்படும்-ட்விட்டர்/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு

ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 


 
புதிய பாதுகாப்பு குறைபாடு ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்விட்டர் செயலியை பாதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்கவல் விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

 ட்விட்டர் 

இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களை பாதித்து இருப்பதால், இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது.

முதலில் பிழையை சரி செய்து விட்டு, அதன்பின் பயனர்களுக்கு தகவல் வழங்கலாம் என ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்ட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டை பிரபல பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஹேக்கர்ஒன் கண்டறிந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/08103758/1768918/Twitter-reports-security-bug-in-Android-wants-users.vpf

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.