Jump to content

பிரெஞ் ஓப்பன் டெனிஸ் முதல் சுற்றில் சானியா, ஷரபோவா சிறப்பான வெற்றி


Recommended Posts

பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7-6 என தன்வசப்படுத்தினார்.

இறுதியில் 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

நேற்று முன்தினம் நடந்த மற்றொரு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 50 ஆவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா 87 ஆவது இடம்பிடித்துள்ள இத்தாலியின் அலிஸ் பிரயான்டியை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்திலிருந்தே சானியா முழு ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-1 என இலகுவாகக் கைப்பற்றிய இவர் இரண்டாவது செட்டையும் 6-1 என வென்றார். இறுதியில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இலகுவாக வெற்றி பெற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் சுற்றிலே தோல்வியடைந்த இவர் முதன் முறையாக இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் அவர் தரவரிசையில் 7 ஆவது இடத்திலிருக்கும் செர்பியாவின் அன்னா இவானோவிக்கை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் நடந்த மற்றப் போட்டிகளில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா 6-0, 6-3 என சகநாட்டு வீராங்கனை எகட்ரீனா பைச்கோவாவையும் மற்ற ரஷ்ய வீராங்கனைகளான டினரா சபினா 6 - 1, 6 - 0 என இஸ்ரேலின் சிபோரா ஒப்லிசரையும், அன்னா செக்வடாட்சி 6-2, 6-3 என அவுஸ் திரேலியாவின் அலிசா மோலிக்கையும் வீழ்த்தினர். செர்பியாவின் அன்னா இவானோவிக் 6-2, 6-0 என சுவீடனின் சோபியா அர்விட் சன்னை தோற்கடித்தார். சுலோவாக்கியாவின் காத்ரீனா ஷ்ரீபொட்னிக் , டேனியலா ஹன்டுசோவா , ரஷ்யாவின் எலினா டெமன்டிவா, வெரா துஷிவினா, செக்குடியரசின் லூசி சபரோவா, சுவிற்சர்லாந்தின் பெய்டி ஸினைடர் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் மோயா 6-1, 3-6, 6-3, 2-6, 6-0 என்ற செட்களில் இத்தாலியின் ஆன்ட்ரியாஸ் செப்பியை கடும் போராட்டத்துக்கு பின் வீழ்த்தினார். மற்ற ஸ்பெயின் வீரர்களான டாமி ரா பர்டோ மூன்றாவது சுற்றுக்கும் டேவிட் பெரர் இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மாரட் சபின் 4-6, 4-6, 5-7 என்ற செட்களில் செர்பியாவின் ஜான்கோ டிப்சார்விக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஆன்டி ரோடிக் 6-3, 4-6, 3-6,4-6 என்ற செட்களில் ரஷ்யாவின் இகோர் ஆன்ட்ரிவிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு அமெரிக்க வீரரான ஜேம்ஸ் பிளேக் 6-4, 4-6, 5-7, 5-7 என்ற செட்களில் குரோசியாவின் இவாகார் நோவிக்கிடம் வெற்றியை பறிகொடுத்தார். இவர்களைத் தொடர்ந்து கென்ட்ரிக் , ஸ்பாடியா , ரசல், ராபி கின்பிரி என இதுவரை விளையாடிய 9 அமெரிக்க வீரர்களும் தோல்வியடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

--thinakkural.com--

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.