Jump to content

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது?

 
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெரியார் அமைப்பினர், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்.சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்,'' என தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அவமரியாதை குறித்து, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

 

https://www.bbc.com/tamil/india-53447969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் தானே.... கடவுள் சிலையை, கும்பிடாதீர்கள்...
அது,  வெறும் கருங் கல், என்றவர்.

இந்தப் பெரியார் சிலை... கல்லு இல்லையா?
அதை... அவமதித்தால், ஏன் கோபம் வருகின்றது.

திராவிடத்தின்,  சூழ்ச்சியை... இப்பதான், தமிழன் புரிய ஆரம்பித்திருக்கின்றான்.

-நேற்று ஒரு காணொளியில் பார்த்து, ரசித்த வரிகள் இவை.-  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பெரியார் இல்லாட்டில் தமிழ்நாடு எப்பிடி இருந்திருக்கும்.
எனக்கு பெரியாரை பிடிக்காது. 😎

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் தானே.... கடவுள் சிலையை, கும்பிடாதீர்கள்...
அது,  வெறும் கருங் கல், என்றவர்.

இந்தப் பெரியார் சிலை... கல்லு இல்லையா?
அதை... அவமதித்தால், ஏன் கோபம் வருகின்றது.

திராவிடத்தின்,  சூழ்ச்சியை... இப்பதான், தமிழன் புரிய ஆரம்பித்திருக்கின்றான்.

-நேற்று ஒரு காணொளியில் பார்த்து, ரசித்த வரிகள் இவை.-  :)

 

12 hours ago, குமாரசாமி said:

உந்த பெரியார் இல்லாட்டில் தமிழ்நாடு எப்பிடி இருந்திருக்கும்.
எனக்கு பெரியாரை பிடிக்காது. 😎

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

 

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தெலுங்கர் தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

ஆமா இனிமேல் இவரை ராமசாமி என்றுதான் கூப்பிடனும், தமிழ் கலாச்சாரத்தை திட்டமிட்டே அழிக்க ஒரு கூட்டமிருக்கு, பகுதறிவு என்ற போர்வைக்குள் புகுந்து, இவர்கள் தமிழர்கள் தானா என்ற கேள்வி வருகின்றது, எங்களின் கலாச்சாரத்தை அழிக்க துணைபோகும் இந்த கபட வேடதாரிகள் நினைக்கவே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

 

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

உள்ளதை சொல்லுறன்......முதல்லை மூத்- சட்டி எண்டுதான் எழுத யோசிச்சனான்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சிலை அவமதிப்பு : ராகுல் காந்தி கண்டனம்!

spacer.png

 

கோவையில் நேற்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது  நேற்று காலை, அடையாளம் தெரியாத நபரால் காவி சாயம் ஊற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினர் உட்பட பல்வேறு கட்சியினரும் சிலை முன் திரண்டனர்.  பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவி சிலை தூய்மையாக்கப்பட்டது.

 

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று மாலை பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன்(21) இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதனிடையே, திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் இருக்கும் பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 18) கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப் படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/politics/2020/07/18/33/congress-leader-Rahul-Gandhi-Condemns-periyar-statue-defacing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் சிலையல்ல அது  வெறும் கல்  என்றவருக்கு

கல்லில் சிலை  வைத்து மாலை அணிவித்து

மரியாதை  செய்கிறார்கள்

இப்போ யார் முட்டாள் யாரு வெங்காயம்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

கடவுள் சிலையல்ல அது  வெறும் கல்  என்றவருக்கு

கல்லில் சிலை  வைத்து மாலை அணிவித்து

மரியாதை  செய்கிறார்கள்

இப்போ யார் முட்டாள் யாரு வெங்காயம்????

கூகிளில் தேடினால் இப்படி விளக்கம் வருகின்றது..

 

தந்தை பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

திருச்சி, சிறுகனூர் என்ற இடத்தில் ‘பெரியார் உலகம்’ அமைக்கப்படுகிறது அங்கு பெரியாருக்கு 140 அடியில் சிலை வானுயர எழுப்பப்படவிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு பெரியாரின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டன.

“பெரியாருக்கு ஏன் சிலை வைக்கப்படுகிறது?''

“பெரியார் சிலையை ஏன் வணங்குகிறீர்கள்?

பெரியார் சிலைக்கு ஏன் மாலை போடுகிறீர்கள்?'' மடவாதிகளின் ரிப்பீடேட் கொஸ்டின்.

பெரியார் சிலையை பகுத்தறிவாளர்கள் வணங்குவதில்லை. பெரியாரின் பிறந்தநாளிலோ மறைந்த நாளிலோ அந்த நாளை மக்களுக்கு நினைவுபடுத்தி பிரச்சாரம் செய்யும் நோக்கில் பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்பது சிலையை 'ஹைலைட்' செய்வது. மதவாத மூடர்களுக்குப் பலமுறை சொல்லியாயிற்று.ஆனாலும் அவர்கள் திருந்தியபாடில்லை.

தந்தை பெரியார் சிந்தனையில் உருவான கருத்துகளும் அவற்றை நடைமுறைப்படுத்த கைக்கொள்ளப்படும் அணுகுமுறைச் சிறப்புகளும் தனித்துவம் கொண்டவை. உலகில் தோன்றிய மற்ற புரட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு, பொது வாழ்வில் பங்கேற்று சிந்தித்து, யாரும் தொட்டுப் பார்க்காத, தட்டிக் கேட்காத சமூக அவலங்களைத் துணிச்சலாக நேர்கொண்டு வெற்றி கண்டவர் பெரியார். அந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் எனும் நோக்கத்தில் இயக்கம் கண்டு, அதற்குரிய தலைமையினை அடையாளம் காட்டி தனது வாழ்வினையே வரலாறாக விட்டுச் சென்று, வழித்தடம் அமைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் ஒரு அணுகுமுறையாக அவருக்கு சிலை அமைத்திடும் செயல் தந்தை பெரியாரது காலத்தே தொடங்கியதுதான்.

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக்கொள்கையினை,சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; ''என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும்'' என்று கூறி சிலை வைக்க அனுமதி அளித்தார்.

 

http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr19/37137-2019-04-30-08-26-27

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எப்பவுமே தன்ர இனத்துப் பெருமைகள் தெரியாது. ஈ வே ராமசாமி என்ற கன்னடனை பெரியாராக்கி.. சிலை வைச்சு.. அதுக்குள் ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில்.. திராவிட.. சாதிய.. பகுத்தரிவு சிந்தனைகளை புகுத்தினதே.. இந்தக் கன்னடன் செய்த வேலை.

இதுவும் ஒரு வகை தமிழின அழிப்பே ஆகும். அடுத்தவன் எடுத்தவன் எல்லாம் தமிழனுக்கு தலைவன் வழிகாட்டி ஆன படியால் தான் தமிழன்.. இன்று அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

தமிழா நீ தமிழனாக இரு. அதுதான் உன் இன இருப்புக்கு முக்கியம். முதலில் இந்தச் சிலைகளை தமிழ் நாட்டில்.. இல்லாது ஒழிக்க வேண்டும். தமிழ் மன்னர்களின்.. தமிழ் பாட்டன்களின்.. பாட்டிகளின் சிலை மட்டுமே கருத்துருவாக்கிகளாக எழுந்து நிற்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

 

இவர் உண்மையில் ஈழதமிழரா?பேச்சு நடை அப்படி இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர் உண்மையில் ஈழதமிழரா?பேச்சு நடை அப்படி இல்லையே

ஆம். இவர் ஈழத்தமிழர் தான். யாழ் இந்துவின் மைந்தன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

109670648_975506696207293_70063039972709

                ----(பொதுமக்கள்)---- ☺️

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.