Jump to content

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

 

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டது.

இந்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு அங்கமாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையானது, ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் நடைபெறும், பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நேற்று அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விழா பிரதமர் மோடியின் வசதிக்கேற்ப அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறும், இதற்கான அழைப்பை அவர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்டுவதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முதலில் 3 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறபோது, அதுவே ராம ஜென்ம பூமிக்கு அவரது முதல் பயணமாக அமையும்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறுவதை அறக்கட்டளை உறுப்பினரான காமேஷ்வர் சவுபால் உறுதிப்படுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் மேலும் கூறியதாவது:-

இயல்பு நிலை திரும்பிய பிறகு நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு, கோவில் கட்டுமானத்துக்கான அனைத்து வரைபடங்களும் தயாரிக்கப்பட்டு, ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் 3 முதல் 3½ ஆண்டுகளில் முடியும்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் மண் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 60 மீட்டர் ஆழத்துக்கு கீழே உள்ள மண்ணின் வலிமையின் அடிப்படையில் அஸ்திவாரம் போடப்படும். வரைபடத்தின் அடிப்படையில் அஸ்திவார பணிகள் தொடங்கும்.

சோம்புரா மார்பிள்ஸ் சார்பில் கோவிலுக்கான செங்கற்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். செங்கற்கள் தொடர்பான பணிகள், சோம்புரா மார்பிள்ஸ் நிறுவனத்தாரால் மேற்கொள்ளப்படும். அவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கோவிலை கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/19041828/Ram-Janambhoomi-Teertha-Kshetra-Trust-invites-PM-to.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

நல்லது.
இந்த நிகழ்வில் கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல ராமர் பிறந்த இடத்தை செக் பண்ணுங்க..👍

108285077_2480207412270504_1769915301566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முதல்ல ராமர் பிறந்த இடத்தை செக் பண்ணுங்க..👍

108285077_2480207412270504_1769915301566

நேபாளி சண்டைக்கு வரப்ப் போகின்றான். நேபாளப் படைகளுக்கு முன்னர் இந்தியப் படைகள் நின்று பிடிக்க ஏலாது என்று வேறு கூறுகிறான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை: பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பங்கேற்க வாய்ப்பு

pm-modi-likely-to-visit-ayodhya-on-august-5-for-ram-temple-bhoomi-pujan பிரதமர் மோடி : கோப்புப்படம்

அயோத்தி


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5-ம்தேதி பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோயில் பூமி பூஜைக்கான பணியில் ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா தீவிரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

1595212556756.jpg

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்குவது குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா சனிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவும் முடிவுஎடுக்கப்பட்டது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்த்தியா கோபால் தாஸ் அன்றைய கூட்டத்தில் கூறுகையில், பூமி பூஜைக்ாக 40 கிலோ எடையுள்ள வெள்ளியான செங்கல் வைத்து வழிபட்டு பூமி பூஜையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

1595212569756.jpg

இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில் “ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையின் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது உறுதிதான். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை.

பெரும்பாலும் பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பூமி பூஜையில் பங்கேற்கவே வாய்ப்புள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார். பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே அழைப்பிதவ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரின் வருகைக்கான தேதி மட்டும் இன்னும் பிரதமர் அலுவலகத்திலிருந்து கூறப்படவில்லை.

வாரணியில் பூமிபூைஜக்கான பல்வேறு பூஜைகள் முடிந்தபின் ராம் லல்லாவின் சிலை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/india/565416-pm-modi-likely-to-visit-ayodhya-on-august-5-for-ram-temple-bhoomi-pujan-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நேபாளி சண்டைக்கு வரப்ப் போகின்றான். நேபாளப் படைகளுக்கு முன்னர் இந்தியப் படைகள் நின்று பிடிக்க ஏலாது என்று வேறு கூறுகிறான். 😂

110312327_675512346512047_7668059935260118538_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=hrhli5Ns29EAX8MPx_Y&_nc_ht=scontent-frt3-1.xx&oh=dceeb2f870e84fab03682cbfe19ec3c8&oe=5F39A0AF

அருவாள் எங்கே...  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி தெரிவிப்பு..

ram-temple-sambha-1596485693.jpg

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பின் தலைவர் சம்பாஜி பிதே திங்களன்று தெரிவித்தார்.

ராமர் கோயிலின் 'பூமி பூஜை' புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடைபெற உள்ளது, இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்திக்கு அருகிலுள்ள சாங்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பாஜி பிதே "நீங்கள் நிறுவப் போகிற ராமர், லக்ஷ்மணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோவிந்த் கிரிஜி மகாராஜிடம் (கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர்) கேட்டுள்ளேன்.

நீங்கள் தவறுகளைச் சரிசெய்யாவிட்டால் (ராமர் சிலைகளுக்கு மீசை இல்லாமல் போனால்) என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, கோயில் கட்டப்பட்டாலும், அது பயனில்லை." என்று கூறியுள்ளேன்.

கோயில் தளத்தில் "பூமி பூஜை" விழாவைத் தொடங்குவதற்கு முன்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜா உருவத்தை வணங்க வேண்டும் மேலும்அயோத்தி கோயில் பூமி பூஜை நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியை இந்துக்கள் தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகையை போன்று கொண்டாட வேண்டும்" என்றார்

https://tamil.oneindia.com/news/india/the-idol-of-lord-ram-in-the-proposed-temple-at-ayodhya-should-have-a-moustache-sambhaji-bhide-393297.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.