• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தூரநோக்கற்ற அரசியல் தலைமைகளும் உட்கட்சி சனநாயகமும் 

Recommended Posts

தூரநோக்கற்ற அரசியல் தலைமைகளும் உட்கட்சி சனநாயகமும் 


----------------------------------------------
இலங்கையில் இன்னுமொரு “சனநாயக” தேர்தல் களைகட்டியுள்ளது. என்னதான் இந்தத் தேர்தல்கள் சனநாயக வழியில் எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் எத்தனை பேர் அறிவுசார் முடிவெடுக்கும் வாக்காளர்களாக, மிகவும்  பொருத்தமானவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வி உலகில் பல நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு கேள்வியாகும்.

இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளிலும் தேர்தலின்போது வாக்காளர்கள் குறித்த ஒரு கட்சிக்கோ அல்லது குறித்த ஒரு வேட்பாளருக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை வழமையாகக் கொண்டிருப்பார்கள். முழுக் குடும்பமுமே ஒரு கட்சிக்கே வாக்களிப்பதும், பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாகவே ஒரு கட்சிக்கே வாக்களிப்பதும் பல சமூகங்களிடையே காணக் கூடிய ஒரு விடயம். 

இவ்வாறு மக்களில் பெரும் பகுதியானவர்கள் வாக்களிப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய உளவியற் காரணம் இருக்கிறது. உலகில் பல நாடுகளிலும் நீண்டகாலமாக மக்கள் மன்னராட்சிக்கே பழக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். மன்னராக இருப்பவர் சகல அதிகாரம் பொருந்தியவராக, நாட்டின் முடிவுகளை எடுப்பவராக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்து வந்துள்ளார். அரசன்/ தலைவனாக இருப்பவனை வழிபாட்டுக்குரியவனாக ஏற்கவும் ஆள்பவனுக்காக தமது உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருப்பதற்கும் மக்கள் பழக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். 

காலப் போக்கில் அந்த இடத்தை நில உடமையாளர்களும் கல்விமான்களும், , சமூகத்தில் செல்வாக்கானவர்களும் பிடித்துக் கொண்டார்கள். சனநாயக ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, மக்கள் பிரதிநிதிகளும் அந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டனர்.

என்னதான் சனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் மக்கள் குறித்த சில குடும்பத்தவர்கள் மீது அல்லது கட்சிகள் மீது கண்மூடித்தனமான விசுவாசத்தைக் காட்டி வந்துள்ளனர். அதன் விளைவுதான் இன்று பல நாடுகளிலும், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் நாம் காணக்கூடிய வாரிசு அரசியல் வடிவம். உதாரணமாக, இந்தியாவில்  நேருவின் பரம்பரை, மு.கருணாநிதி பரம்பரை,இலங்கையில் D.S. சேனநாயக்க, SWRD பண்டாரநாயக்க, D.A. ராஜபக்க்ஷ போன்றோரின் குடும்ப வாரிசு அரசியல்களைச் சொல்லலாம்.

இலங்கைத் தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் தொண்டமான் குடும்பம், பொன்னம்பலம் குடும்பம் என்று இங்கும் குடும்ப அதிகாரம், வாரிசு முறை அரசியல் முறையைக் காண்கிறோம். முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தம் நடைபெறாவிட்டால் இன்னும் பல வாரிசுகள் வந்திறங்கி இருப்பார்கள். இது ஒருபுறமிருக்க, எழுபது ஆண்டுகளுக்கு மேல் நீண்ட வரலாறு கொண்ட கட்சிகள் இன்றுவரை உட்கட்சி சனநாயக வழிமுறைகளை பின்பற்றியதும் அரிது. அதேபோல தமிழ் மக்களுக்கு அரசியல் அறிவூட்டல் செய்தது அதைவிட அரிது. 

சகல அதிகாரம் பொருந்திய தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாத தலைமைதான் இன்று பல கட்சிகளில் காணப்படுகிறது. தலைமைக்குப் பிடித்தவரே இரண்டாம் நிலைத் தலைவராக கொண்டுவரப்படும் வழமையையும் நாங்கள் காண்கிறோம். சனநாயக முறையில் கட்சித தலைவரை தேர்ந்தெடுக்க இன்னமும் எந்த ஒரு தமிழ் கட்சியும் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தப் பலவீனங்களாலேயே மூன்று  மில்லியன் தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முப்பது கட்சிகள் கொடி பிடித்து நிற்கின்றன.

இவ்வாறான தூர நோக்கற்ற, அதிகாரத்தைப் பகிர விரும்பாத தலைவர்கள் பலகாலமாக பின்பற்றிய சர்வாதிகார போக்கினையே தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப் போரை முன்னெடுத்த அனைத்து ஆயுதக் குழுக்களும் பின்பற்றின என்பதுதான் கசப்பான உண்மை. அந்த இளைஞர்களுக்கு இவர்கள் சரியான முன்னுதாரணமாக இருந்திருக்கவில்லை எனபதை மறுக்க முடியாது. உண்மையில் கடந்த எழுபது வருடங்களின் தமிழர்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை இருக்கவேயில்லை என்பதுதான் உண்மை. 

எங்களில் பலர், வடகிழக்குத் தமிழர்கள் மலையகத் தமிழர்களிடமிருந்தும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் தமிழர்களிடமிருந்தும் தள்ளியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய குழுக்களே காரணம் என்று பலரும் சொல்லிக் கடந்து போய்விட நினைகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மூன்று முக்கியமான சமுதாயங்களும் விலகியிருக்கும் சூழல் ஏற்பட பிரதான காரணங்கள் தமிழர்களின் தலைவர்களாகவும் மீட்பர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்ட அரசியல் தலைமைகள் எழுபதுகளில் எடுத்த அரசியல் தீர்மானமும், தூரநோக்கற்ற அரசியல் செயற்பாடுகளுமே.  

இனியாவது நாம் விழித்தெழுவோமா? தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் உண்மையான சனநாயகத்தை எதிர்காலத்திலாவது இலங்கையில் கட்டியெழுப்ப முடியும். அதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் அரசியல்பற்றி தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தயவுசெய்து எந்த ஒரு அரசியல் கட்சியிடமோ அரசியல் தலைவரிடமோ சரியான அரசியலைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ்நாட்டில் வேண்டுமானால் தமிழ் பேசும் எல்லோரும் தமிழர்கள் இல்லையென்று சாமானியர்களும் சீமானியர்களும் வாதிக்கலாம். ஆனால் இலங்கையில் தமிழ் பேசும் இனக்குழுக்கள் எல்லோரும் தமிழர்தான். இதை தமிழ் பேசும் நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே தமிழர்கள் தமிழ்தேசியம் பேசுவதற்கு பலமான அத்திவாரமாக அமையும். தமிழ்பேசும் மக்களின் இந்த ஒற்றுமையே எதிர்காலத்திலாவது உண்மையான பேரம் பேசும் பலத்தை எமக்குக் கொடுக்கும். இதற்கு பழைய பானைகள் எந்த விதத்திலும் பயன்படாது என்பதுதான் உண்மை.

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this