Jump to content

இழப்புகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதைநெதர்லாந்து இளமுதிர்சோலைமண்றத்தின்

தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன்.

என் இனிய யாழ் கள உறவுகளுக்காக..

பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி

 

 இழப்புகள்..!

 

 அப்பாவின் அறிவை இழந்தோம்

அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம்

 அவர்களுடன் கொஞ்சி குலாவும் 

 அன்பை இழந்தோம்-ஏன் 

 அவர்களை கூடவே  இழந்தோம்.

 

கோழி கூவலை இழந்தோம்.

கோவில் மணிச் சத்தம் இழந்தோம்.

 வாய்க்கால் வயல்கள் இழந்தோம்.

 வழமான வாழ்வையே இழந்தோம்.

 

காலை விடியலை இழந்தோம்,

 கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம்

பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம்,

பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண்

 

சட்டியில் குழைத்துண்ட உணவுகள் இழந்தோம்

 சம்பல் அரைத்த அம்மியை இழந்தோம்

சகலதும் இடித்துண்ட உரலையும் இழந்தோம்

கிணற்று நீரின் சுவையை இழந்தோம்,

கிடுகுக் கொட்டிலின் வனப்பை இழந்தோம்

 

 பனை,தென்னை தந்த பலனை இழந்தோம் 

பாட்டிகள் சொல்லும் கதைகள் இழந்தோம்

கூட்டுக்குடும்ப வாழ்க்கை இழந்தோம்,

கும்மாளம் போட்ட நண்பர்கள் இழந்தோம்

 

பாடசாலை நண்பிகள் இழந்தோம், 

பார்தத அரச வேலைகள் இழந்தோம்

தேன் ஊறும் எங்கள் பழங்களை இழந்தோம்,

தெவிட்டாத எங்கள் உணவுகள் இழந்தோம்.

 

கயூனாபீச்சின் கடற்கரை இழந்தோம் 

காங்கேசன் துறையின் ஆலையை இழந்தோம்

கீரிமலையின் குளியலை இழந்தோம் 

கிளிநொச்சி நகரின் பசுமையை இழந்தோம்

 

ஆணை இறவு உப்பையும் இழந்தோம் 

ஆனைக்கோட்டை கள்ளையும் இழந்தோம்

 

தீப கற்ப மூலிகை இழந்தோம்

தித்திக்கும் கடல்த்தேன் உணவுகள் இழந்தோம்

 மட்டக்களப்பு வாவியை இழந்தோம்

மன்னார்,புத்தள முத்தையும் இழந்தோம்

 

திருகோணமலையின் அழகினை இழந்தோம்

தேசத்தின் மிகுதியும் நாமே இழந்தோம்

கல்வி இழந்தோம்!கலைகள் இழநதோம்!

காவியம் படைத்த வீரம் இழந்தோம்!

 

முள்ளிவாய்க்காலில் முழுவதும் இழந்தோம்-இங்கு

மூச்சு ஒன்றுதான் மிஞ்சியே வாழ்கின்றோம்.

      -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

அத்தனை ஞாபகங்களையும் சுமந்துகொண்டு இப்போது  நினைவுகளுடனேயே நம் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறோம். 

அழகான கவிதை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.