Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சர்வதேசம் ஒருபோதும் தீர்வு வழங்காது என சம்பந்தனுக்கு அரசாங்கம் அறிவுரை.!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஒருபோதும் தீர்வு வழங்காது என சம்பந்தனுக்கு அரசாங்கம் அறிவுரை.!

heke.jpg

"சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

'தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சமஷ்டி முறைமையிலான தீர்வை ஒருபோதும் தமிழர்களுக்கு அரசு வழங்காது. புதிய நாடாளுமன்றத்தில் மூவின மக்களுக்கும் உரித்தான பொதுவான தீர்வையே அரசு வழங்கும். இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் சற்றேனும் பின் நகரமாட்டோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களையே வலியுறுத்தியுள்ளது. அதனாலேயே அந்த விஞ்ஞாபனத்தை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தத்தமது நலனில் அக்கறைகொண்டுதான் செயற்படுகின்றன. எனவே, சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று சம்பந்தனிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, சம்பந்தன் இலங்கையில் இருந்துகொண்டுதான் வீரவசனம் பேசுகின்றார். அவர் சர்வதேசத்தில் இருந்துகொண்டு வீரவசனம் பேசவில்லை என்பதை அவரே கவனத்தில்கொள்ள வேண்டும்.

தேர்தல் காலம் என்றபடியால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் அநாதைகள் என்று கூறவும் மாட்டோம்; அப்படி நினைக்கவும் மாட்டோம். தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் என்றே அரசு நினைத்துச் செயற்படுகின்றது. ஆனால், தமிழர்களின் அரசியல் தலைமைகள்தான் அவர்களைத் தனி வழியில் செல்லத் தூண்டுகின்றன. இதைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/23/14782/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தத்தமது நலனில் அக்கறைகொண்டுதான் செயற்படுகின்றன.

தெரிந்தும் அதை சேர்த்துக்கொண்டு ஒரு  இனத்தை, தன் குடிமக்களை  அழித்த இவர்களை என்ன சொல்வது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாட்டைப் பிடித்தாண்ட போர்த்துக்கேயனும், ஒல்லாந்தனும், ஆஙகிலேயனும் எதை தீவிரமாக நம்பி, கோட்டை, கொத்தளம் என்று கட்டினார்களோ, அதையே நீங்களும் தீவிரமாக நம்புகிறீர்கள்....

அணைத்துக்குமே ஒருநாள் முடிவு இருக்கும்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை - இப்படிக் கூறுகின்றது அரசு.!

   போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு  உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.என்று அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார்.
   அவர் மேலும் தெரிவித்ததாவது:-
   ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.
   ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
   மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார்.
   எனினும். இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும் – என்றார்.
   https://thamilkural.net/newskural/leadnews/117171/
  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?!

   வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?"
   - இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
   "தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
   'வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
   அவர் மேலும் தெரிவித்ததாவது:-
   "சிங்களவர்களைப் போல் தமிழர்களும் சகல உரிமைகளையும் இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தற்போது பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரவே அனுமதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தையும், ஹர்த்தால் போராட்டத்தையும் நடத்தியுள்ளார்கள். தமிழ்க் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தமிழர்கள் இந்த ஒரு நாள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதனால எந்தப் பயனையும் தமிழர்களும், தமிழ்க் கட்சியினரும் ஒருபோதும் பெற மாட்டார்கள்.
   இந்த ஏமாற்றுப் வழி போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்று தமிழ்த் தலைவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள். இவ்வாறு ஒரு நாள் போராட்டங்கள் வெற்றியடைந்தன எனில் , சுமார் 70 வருடங்களாக தமிழர்கள் ஏன் அறவழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடினார்கள்.?
   தமிழ்த் தலைவர்களின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இனியும் துணைபோகக்கூடாது" - என்றார்.
   http://aruvi.com/article/tam/2020/10/01/17392/
  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.!

   காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
   "இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது."
   - இவ்வாறு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
   அவர் மேலும் தெரிவித்ததாவது:-
   "காணாமல்போனோர் குறித்து தேட அரசு தயார். ஆனால், அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி வரும். சிவில் மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம். காணாமல்போனோரில் அதிகமானவர்கள் சிவிலியன்களாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அதுபோன்றே காணாமல்போன இராணுவத்தினர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும்.
   காணாமல்போனதாகக் கூறப்படுவோர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் எண்ணுகின்றோம். அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுகின்றோம். ஆனால், அதனை உறுதியாகக் கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு கூறி வைக்கின்றேன்.
   சில காணாமல்போனோர் எனக் கூறப்படுவோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே, இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். போர் நிறைவுக்கு வந்து தற்போது 11 வருடங்கள் கடந்துவிட்டன. 7 வருடங்களின் பின்னர் சான்றிதழ் வழங்கலாம்" - என்றார்.
   http://aruvi.com/article/tam/2020/08/23/15873/
  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

   “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”
   – இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.
   ‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
   “கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.
   இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.
   உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
   எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.
   http://www.vanakkamlondon.com/hehaliya-12-03-2020/
   டிஸ்கி

 • Topics

 • Posts

  • அப்ப  மற்றைய அமைப்புக்கள் என்ன புத்தன் போல் இருந்தனவா ? அதெந்த அமைப்பு பெயரை சொல்ல முடியவில்லையா ? அந்த அமைப்பை இயங்கவிடாமல் மற்றைய அமைப்புகள் கொடுத்த தொந்தரவு நிச்சயம் நமது எதிர்கால சந்ததிக்கு சொல்லுபட  வேணும் . மற்றய  அமைப்புக்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ் ஈழ கனவுடன் வந்த உறுப்பினர்களை தமிழ்நாட்டு கடற்கரையோர சவுக்கம் காட்டுக்குள் அரை  உயிருடன் புதைத்த கதைகளும் நமது அடுத்த சந்ததிக்கு முதலில் சொல்லணும் அடுத்து வரும் சந்ததிகள் புத்திசாலிகள் பொய்யான தரவுகளை புறம் தள்ளுவார்கள் .
  • உங்களது பதிவின் பின்னர் பேபாலை அவதானித்தேன், மிக குறுகிய காலத்தில் சில சாதக பண்புகள் தெரிகிறது 186 இறுதி விலையில் சந்தை மூடியுள்ளது, அத்துடன் விலை வீழ்ச்சி காலத்தில் அதிகமான பங்குகள் விற்பனையாகியுள்ளது, வாங்கும் தரப்பு வெவ்வேறு விலை மட்டங்களில் வாங்கியிருக்கலாம் ( பொதுவாக விலை பக்கவாட்டாக நகரும் ).  இப்போது வழங்கல் விலை 192 உள்ளது விலை பொதுவாக இந்த புள்ளியில் திரும்ப சந்தர்ப்பம் உண்டு ( எனது கணிப்பு பெரும்பாலும் தவறாகவே உள்ளது) அது மீண்டும் 180 விலையின தொட முயற்சித்து அந்த விலையை உடைக்க முடியாவிட்டால் மீண்டும் மேலேறி 192 கடந்து 200 நோக்கி செல்லும் இது தவிர 215, 225, 250 முக்கிய வலயங்களாகக்குறுகிய காலத்தில் உள்ளது,  எனது கருத்தினை கொண்டு முடிவு எடுக்கமாட்டீர்கள் என தெரியும், இருந்தாலும் எனது கருத்தினை பதிகிறேன். விலை 192 திரும்பாமல் மேலேறினால் இன்னுமொரு பகுதி வாங்குவார்கள் இவ்வாறு முக்கிய வ்லயங்களை கடக்கும் போது சிறிது சிறிதாக இருப்பினை அதிகரித்து (scale in) அத்துடன் உயர்த்தி சந்தை ஆபாயத்தை நீக்குவதுடன் (Trailing stop) தேவையான நேரத்தில் இலாபங்களையும் சிறிது சிறிதாக பதிவும் செய்வார்கள் (Scale out). 180 கீழ் விலை சென்றால் அதனை விற்கலாம் அப்பிள் விலை குறுங்காலத்திற்கு கீழிறங்குவதற்கு சாத்திய கூறுகள் காணப்படுகிறது 147 மட்டத்தில் எவ்வாறு செயற்படுகிறது என அவதானிக்கிறேன், RSI Divergence gap not filled in intraday.
  • அதே கார்டியனில் He said:“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை . கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .
  • எண்டைக்கு நாக விகாரை பக்கதில வந்துதோ அண்டைக்கே ஆரியகுளமும் பறிபோயிட்டுது. 
  • உங்களுக்கு PayPal   ஐப் பற்றி எழுதி விசாரித்துக் கொண்டிருந்த போதே 180$  கொண்ட 4 பங்குகளை Limit இல் போட்டு வைத்திருந்தேன்.நான் வாங்குவது விற்பது எல்லாமே Limit இல்த் தான். அடுத்த நாள் 179 வரை போயிருந்தது. Account: XXXX-6286Order Number: 69Order type: BuySecurity: PYPLTerm: GTCPrice type: Limit at $180Execution price: $180Quantity: 4
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.