• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன

Recommended Posts

விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன- பேர்ள்

July 23, 2020

பேர்ள்- இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவராணத்திற்கான மக்கள்

கறுப்பு ஜுலையின் போது- அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் பதிவிடுகின்றோம்.
1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்விளைவே என்ற கட்டுக்கiதை தொடர்ந்து சொல்லப்பட்டுவருகின்றது.
இது பொய்

blavk-july1-300x169.jpg

அரசாங்கத்தை சேர்ந்தவர்களின் வன்முறைகள் ஜூலை மாததத்துக்கு முன்னரே அதிகரித்து வந்தன.தமிழர்களை தங்கள் விருப்பம் போல கொலை செய்தனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
சட்டடே ரிவியூ உட்பட உள்ளுர் செய்தித்தாள்கள் அந்த வன்முறைகளை பதிவு செய்திருந்தன.

1983 ஏப்பிரலில் காந்திய இயக்கத்தின் எஸ்ஏ டேவிட்டும் ராஜசுந்தரமும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.
அவர்கள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டனர்.

ghandia1-300x277.png

 

காந்திய இயக்கம் ஒரு சாத்வீக அமைப்பு அந்த அமைப்பு பண்ணைகளை ஏற்படுத்துவதன் மூலம் அகதிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

குருநகர் இராணுவமுகாமில் ஏப்பிரல் 10 ம் திகதி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார் அதுகுறித்து இடம்பெற்ற விசாரணைகளின் போது உயிரிழந்தவரின் உடலில் 35 காயங்கள் காணப்பட்டன.
திருகோணமலை கிளிவெட்டியை சேர்ந்த 28 வயது நவரட்ணராஜா பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

3-295x300.png

 

மே 18 ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் விடுத்த அழைப்பு விடுத்தனர், பின்னர் இடம்பெற்ற மோதலொன்றில் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், இதன் பின்னர் வெறியாட்டத்தில் இறங்கிய படையினர் யாழ்ப்பாணத்தை தீ மூட்டி எரித்தனர்.
கடைகள்,வீடுகள் வாக னங்களை தீ மூட்டி எரித்த படையினர் சூறையாடலிலும் ஈடுபட்டனர்.

இலங்கையின் தென்பகுதியில் தமிழர்கள் அதிகளவு பாரபட்சம்,துன்புறுத்தல், வன்முறைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.
பல்கலைகழங்கள்,மருத்துவமனைகள் அரச அலுவலகங்கள் போன்றவற்றில் இந்த போக்கு காணப்பட்டது.
1983 ம் ஆண்டு ஐந்தாம் மாதம் 30 திகதி
வல்வெட்டித்துறையை சேர்ந்த சபாரட்ணம் பழனிவேல் என்பவர் டவுன் இராணுவமுகாமுக்குள் இழுத்து கொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர்கள் பார்த்துக்கொண்டிருக்க அவரது உடலின் மேல் இராணுவவீரர் ஒருவர் டிரக்கினை செலுத்தினார்.

8-300x259.png7-300x275.png

இதேவேளை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணமடைந்த கிளிவெட்டியை சேர்ந்த கதிர்காமத்தம்பி நவரட்ணராஜா( 28)இரட்ணசிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா(25)ஆகிய இருவரினதும் மரணம் குறித்த தீர்ப்புகள் வெளியாகின- இருவரும் படையினரால் கொல்லப்பட்டனர்.
ஜூன் மாதம் முதலாம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.இதனை தொடர்ந்து கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டன படையினர் கட்டிடங்களை எரித்ததுடன் தமிழர்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
காந்திய இயக்கத்தின் அலுவலகமும் பண்ணைகளும் தாக்கப்பட்டன.
ஆறாம் மாதம் மூன்றாம் திகதி அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

9-298x300.png

இந்த சட்டம் நீதிபகுப்பாய்வு இன்றி பிரேத பரிசோதனையின்றி கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவதற்கு படையினருக்கு அனுமதி வழங்கியது.

10-287x300.png

இரு தமிழ் இளைஞர்களை படையினர் கொலை செய்தனர் என்பது நீதி விசாரணைகளின் மூலம் தெரியவந்ததன் பின்னரே இந்த சட்;டம் நடைமுறைக்கு வந்தது.
ஆறாம் மாதம் முழுவதும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே இனவன்முறைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்களை கொலை செய்த இராணுவம் அவர்களின் உடல்களை ஒப்படைக்க மறுத்தது.
திருகோணமலையில் வீடுகளும் வர்த்தகநிலையங்களும் எரிக்கப்பட்டன.
ஊரடங்கு வேளையின் போது சம்பந்தனின் வீட்டின் மீது குண்டுகள் எரியப்பட்டன.
திருகோணமலை,யாழ்ப்பாணம்,நீர்கொழும்பு, இரத்மலானை,குருநாகல் உட்பட பல பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்,தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன.

குருநாகலில் ஒரு அரசதொழிற்சாலை தாக்கப்பட்டது.பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது இடம்பெற்றது.
புதிய சட்டங்களின் கீழ் விசாரணைகள் அவசியமில்லை.
மே 18 ம் திகதிக்கு பின்னர் தமிழர்களுக்கு எதிராக ஒரு தாக்குதல் கூட இடம்பெறாத நாள் இல்லை என லண்டனை சேர்ந்த தமிழ் டைம்ஸ் ஜூன் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த இரு முக்கிய செய்தித்தாள்களான சட்டடே ரிவியு மற்றும் சுதந்திரனை அரசாங்கம் தடை செய்ததது.

இதன் பின்னர் கடும் தணிக்கை நடைமுறைக்கு வந்ததால் புலம்பெயர் செய்தித்தாள்கள் மாத்திரம் தகவல்களை வெளியிட்டன.
ஜீலை 20 ம் திகதி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்த செய்திகளை

வெளியிடுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு செய்தித்தாள்களுக்கு தடை விதித்தது.
ஜூலை மாதம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து காணப்பட்டன,22 ம் திகதி இராணுவம் மூன்று தமிழ் யுவதிகளை கைதுசெய்து முகாமுக்கு கொண்டு சென்றது.
அவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பரவியது.

23 ம் திகதி விடுதலைப்புலிகள் அதுவரையில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகவும் வெற்றிகரமானதாக்குதலை நடத்தினார்கள்.தின்னவேலியில் இடம்பெற்ற தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கை முழுவதும் பரவின,முன்கூட்டியே திட்டமிட்ட வன்முறைகள் காரணமாக கொழும்பிலும் சிங்களவர்கள் வாழும் ஏனைய பகுதிகளிலும் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்களின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டது.

black-july-1-300x216.jpg

 

இனக்கலவரம்குறித்த செய்தி வெளியே தெரியவரத்தொடங்கியதும்.அந்த வன்முறைகள் அரச பாதுகாப்புபடையினரின் ஆதரவுடனேயே இடம்பெற்றன- அவை முன்னரே நன்கு திட்டமிடப்பட்டவை என்பது தெளிவாகியது.
யூரர்களின் சர்வதேச ஆணைக்கு 1983 டிசம்பரில் இவ்வாறு தெரிவித்தது.
சிங்கள காடையர்களின் தமிழர்கள் மீதான வன்முறை இனப்படுகொலை என கருதத்தக்க விதத்தில் காணப்படுகின்றது என்பதை ஆதாரங்கள் புலப்படுத்துகின்றன
கறுப்பு ஜூலையில் சிங்கள கும்பல்கள் இழைத்த பயங்கரங்களும் தீமைகளும் ஈழத்தமிழ் மக்களிடம் ஆழமான காயங்களாக பதிந்துள்ளன.
அதற்கு காரணமாக பலர் இன்னமும் உயிருடன் உள்ளனர்.
இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

ஆவணங்கள் – நூலகம்.நெட்

 

http://thinakkural.lk/article/57277

Share this post


Link to post
Share on other sites

வருகிற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 300க்கு மேட்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்  இவ்வளவு பேரும் 7 mp  பதவிக்கு போட்டியிடுனம் 

இதில் ஒருவர்கூட 1983ல் நடைபெற்ற யூலை படுகொலைகள் குறித்து ஒரு அஞ்சலி வார்த்தைகூட நினைவு கூரவில்லை.

 

Share this post


Link to post
Share on other sites

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

அதுதான் தமிழ் சிங்கள முதலாவது இனக்கலவரமாய் பதிவுகளில் உள்ளது ஆனால் அதுக்கு முதலும் பலஇடங்களில் இனமுறுகள் நடைபெற்று உள்ளன 2009நந்திக்கடலுக்கே விளக்கு கொழுத்த எத்தனை அரசியல் நடக்குது . கணக்க  வேண்டாம் ஊரெல்லாம் வாக்கு பிச்சை கேட்க்கும் சுமத்திரன் பக்கத்தில் உள்ள நவாலி தேவாலய படுகொலைகள்  சம்பந்தமாக ஏதாவது சொன்னாரா ?

எல்லாம் சொத்து சேர்ப்பதில்  நிக்கினம் .

கொஞ்சம் இனக்கலவர தரவுகள் உங்களுக்காக 

1956 இல் கலோயாவில் சிங்கள-தமிழ் மோதல்

1956 ஆம் ஆண்டில், சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, சிங்களத்தை ஆங்கிலத்திற்கு பதிலாக உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது, அந்த நேரத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. அதன்படி, சிங்கள அதிகாரப்பூர்வ மொழிச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் குறித்த விவாதம் ஜூன் 4, 1956 அன்று தொடங்கியது. கொல்வின் ஆர். டி சில்வா ஆட்சேபித்தபோது, ஒரு மொழி கொள்கையின் மூலம் நாடு பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும், இலங்கை தமிழ் கூட்டணி (இளங்கை தமிழ் அராசு கச்சி) அல்லது கூட்டாட்சி கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.சல்வனாயகம் தமிழ் மக்களை தனி மாநிலத்தை கோரும் நிலையில் வைக்கக்கூடாது என்றும் கூறினார். என்று மற்ற அரசியல் தலைவர்களிடம் கேட்டார். ஜூன் 05 அன்று, செல்வநாயகம் தலைமையில் சுமார் 200 பேர் காலே முகத்தில் அமைதியான சத்தியாக்கிரகத்தை நடத்தினர். அரசாங்கத்தின் இளைய மந்திரி ஒருவர் சத்தியாக்கிரகத்தைத் தாக்கி நாசப்படுத்திய பின்னர், கொழும்பில் ஒரு கடை திருட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜூன் 11, 1956 அன்று, கலோயா இயக்கத்தின் கீழ், புதிய குடியேறிகள் குழு மாகாண குண்டர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைத் தாக்கி, சிறுபான்மையினரைச் சேர்ந்த 150 இலங்கையர்களைக் கொன்றது, மற்றும் ஏராளமான சொத்துக்களை சூறையாடியது. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும். இதன் விளைவாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 150 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெரிய அளவில் கொள்ளை மற்றும் சொத்துக்கள் தீப்பிடித்தன. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும். இதன் விளைவாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 150 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெரிய அளவில் கொள்ளை மற்றும் சொத்துக்கள் தீப்பிடித்தன. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும்.

1958 இலங்கை முழுவதும் சிங்கள-தமிழ் மோதல்கள்

ஜூலை 26, 1957 அன்று, சிங்கள மொழி எழுப்பிய இனவெறி பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் பண்டாரநாயக்க எஸ்.ஜே.வி.க்கு அழைப்பு விடுத்தார். ஒரு பெரிய தமிழ் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் தமிழ் மொழியை நியாயமாகப் பயன்படுத்த அனுமதிக்கவும், தமிழை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கவும் செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், மற்ற தமிழ் மற்றும் இடது கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் உடன்படவில்லை. இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், யு.என்.பி 1957 செப்டம்பரில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, கொழும்பிலிருந்து கண்டிக்கு அணிவகுத்து, பல் கோயிலில் இருந்து அதன் போராட்டத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதாக அறிவித்தது. இந்த அணிவகுப்பை அரசாங்கம் தடை செய்தது. இந்த அணிவகுப்பை கொழும்பு, கெலானியா மற்றும் கம்பாஹாவில் உள்ள கிராண்ட்பாஸில் எஸ்.எல்.எஃப்.பி உறுப்பினர்கள் தாக்கினர். அணிவகுப்பு தொடர முடியாததால், அவர்கள் வாகனங்களில் கண்டிக்குச் சென்று பல் கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் மொழி உரையை அழிக்க கொழும்பில் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், மட்டக்களப்பில் ஒரு ரயில் தாக்கப்பட்டது. பொலன்னருவாவில், பண்ணைகளில் இருந்த தமிழ் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்-சிங்கள மோதல்கள் நடந்தன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனது. ஆயிரக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

மூலம் https://www.lankanewsweb.net/sinhala/94-featured-news/44442-නිදහසින්-පසු-ලංකාවේ-ඇතිවූ-ජාතීන්-අතර-ගැටුම්

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

கட்டுரை 83 இனக்கலவரத்திற்கான கொதிநிலை திருநெல்வேலியில் நடந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே அந்த ஆண்டில் ஆரம்பித்துவிட்டது என்பதை பத்திரிகை ஆதாரங்களுடன் தருகின்றது.

இனக்கலவரங்களின் வரலாறு 58 க்கு முன்னர் ஆரம்பித்துவிட்டது.

1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.  கடைசியாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் வந்து முடிந்தது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this