Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும்  ஈழத்தமிழனை-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் 
ஈழத்தமிழனை-பா.உதயன் 

தேர்தல் வருகிறது 
தினம் ஒரு பொய் சொல்வர் 
கையில் பூக்களோடு 
காலையில் புத்தனுக்கு 
பூசை செய்வர்

அறமோ கருணையோ 
இல்லாத மனிதர்கள் எல்லாம் 
அந்த புத்தனிடத்திலும் போய் 
பொய் உரைப்பர் 

இனவாதம் பேசுவர் 
இது சிங்கள தேசம் என்பர் 
தமிழர் அதில் படரும் 
கொடி என்பர் 

இனவாதம் என்றொரு
பெரும் பூதம் 
இராணுவத்துணையோடு 
இலங்கையை ஆள்கிறது 
எப்பவும் இது சொல்வதே சட்டம் 

ஐக்கியத்துக்கு குந்தகம் 
அந்த தமிழரே காரணம் என்று 
அந்த தமிழரோடு சேர்ந்து 
ஒப்பந்தம் செய்வோர் 
ஒருமித்த எம் தேசத்தின் 
இறைமைக்கு எதிரி என்பர் 

குடும்ப அரசியல் வாதிகள் 
பதவிக்கும் பணத்துக்குமாய் 
பாலும் தேனும் ஓடவைப்போம் 
பஞ்சம் எல்லாம் 
தீர்த்து வைப்போம் என 
பல கதை விடுவார் 

இடது சாரிகள் என்ற பெயரில்
சிவப்புச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் 
போலி சோசலிசவாதிகள் எல்லாம் 
இனவாதிகளோடு சமரசம் செய்வர் 
பிழைப்பு வாதிகளாக 

உழைப்பவன் வியர்வையை 
திருடியவன் பக்கம் நின்று 
ஊரையே ஏமாத்துவார் 

மனிதநேயம் தெரியாதவன் எல்லாம் 
மாக்சியவாதிகள் நம் நாட்டிலும் 
வெளிநாட்டில் நம்மவர் சிலரும் 

வியர்வை சிந்தி உழைப்பவனுக்கும் 
விடுதலைக்காய் போராடுபவனுக்கும் 
காலம் முழுக்க குரல் கொடுக்கும் 
உண்மையான சோஷலிசவாதிகளை 
கண்டு கொள்ள யாரும் இல்லை 

எங்களிலும் சிலர் 
என்னமோ கதை சொல்லி 
இருந்ததையும் குழப்பி விட்டு 
குரங்கு பித்த அப்பமாய் 
அண்ணன் தம்பிக்கு இடையே
ஆளுக்கு ஒரு கட்சி என்று 
அரசியல் நாடகம் வேற 

அண்ணன் தம்பிக்கு இடையே 
ஏதோ அரசியல் பிரிவினையாம் 
அந்தக்கதிரைக்காய் 
அடி பிடிகள் நடக்கிறது 

அரை நூற்றாண்டுக்கு மேலாய் 
அந்தப் பாராளுமன்றம் 
சிங்களம் கட்டிய 
கோட்டையை போலே 
எந்தத் துரும்பயும் 
எமக்காய் தந்ததில்லை 

இணக்க அரசியல் என்று 
எத்தனையோ செய்து பார்த்தும் 
எதைத் தான் தந்தார்கள் 
அவர்களுக்காய் கோட்டுக்கு போய் 
முண்டு குடுத்து தூக்கியும் விட்டோம் 

தீர்மானிக்கும் சக்தியாகவும் 
இருந்தோம் 
எந்த ஒரு கோரிக்கையும் 
வைக்க மறந்தோம் 

ஒற்றுமையே பலம் என்று 
ஒருத்தனுக்கும் விளங்கவில்லை 
இலக்கு ஒன்று என்றால் 
இவர்களுக்கு ஏன் 
இத்தனை கட்சி 

அந்த சிங்களத்துக்கு 
பால் வார்த்தது போல்
பலம் இழந்து நிலம் இழந்து 
நாம் பானையை போட்டு உடைக்க 
புரையோடிய புண்ணுக்கு 
புலத்திலும் நிலத்திலும் 
புதுசாய் ஏதும் மருந்து இல்லை 

அந்த சிங்கள தேசியமோ 
அவன் பாட்டன் கொடுத்த 
ராஜதந்திரத்தோடு 
அரை நூறு ஆண்டுக்கு மேல் 
எம்மையும் உலகையும் 
ஏப்பம் விட்டபடி

இந்தியாவையும் சீனாவையும் 
வளைச்சுப் போட்டு 
எம்மைப் போட்டு 
மிதிச்சுப் போட்டு 

இப்போ இன்னும் ஒரு 
தேர்தலோடு 
அது தாறம் இது தாறம்  
அந்த 13க்கு மேல் தாறம் என்றோர் 
அது எல்லாம் முடியாது என்பர் 

அதன் பின் அபிவிருத்தி மட்டும் 
காணும் என்பர் 
அதற்காக எம்மில் 
சிலரை வேண்டவும் பார்ப்பர் 

எம் தம்பிமாரும் தமிழர் நலனே 
தம் பணி என்று சொல்லி 
தமிழ் அரசில் ஜெயித்து விட்டு 
காசே தான் கடவுள் என 
கட்சி தாவ காத்திருப்பர்
இது காலம் காலமாய் 
எம்மை சூழ்ந்த வரும் நோய் போல 

புலம் பெயர் சில தம்பிமாரும் 
புதுசாய் சில கதை சொல்லுவார் 
நாட்டுக்குள் போய் பார்த்து வந்தோம் 
நல்லா தான் நாடு இருக்கு என்பர் 

காட்டிக் கொடுக்கவும் கழுத்து அறுக்கவும் 
காசு அடிக்கவும் வியாபாரிகள் வருவார்கள் 
மனிதாபிமானம் அபிவிருத்தி 
என்ற மாய மானோடு

சொந்தச்சகோதரர்கள் 
துன்பத்தில் உழல்கள் கண்டு 
வச்சனை செய்யும் 
வாய்ச்சொல்லில் வீரர்கள் போல் 

மொழி இனம் அடையாளம் 
இல்லா தமிழனாய் 
வேரோடு பிய்த்து எறிந்த 
வாழ்வு உனக்காய் 

கடைசியில் சிங்களம் 
இனவாத துரும்புச்சீட்டை 
எடுத்த வைப்பார் மேசையிலே 
ஏதேதோ பொய் பேசி ஏமாத்தி  
காட்டிக் கொடுத்து விட்டனர் 
எங்கள் படை வீரர்களை என்று 
பதவிக்காய் பேசுவார் 

மீண்டும் பதவிக்காய் 
நாட்டையே நாசம் செய்வர்
புத்த பிக்கு பிரித் ஓத 
இது ஒரு சிங்கள தேசம் என்று 
இன்னும் ஓர் சிங்க கொடியை 
ஏற்றி வைக்கும் இனவாதம்

எழுதுவதும் கிளிப்பதுமாய் 
ஏமாத்தும் இனவாதம் 
எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 
இனி என்ன செய்ய 
நினைத்திருக்கும் எம் இனம்

இனி இறைவன் தான் 
காப்பாத்த வேண்டும் என 
எப்பவோ கேட்ட குரல் 
நினைவிருக்கு

அரை நூற்றாண்டாய் 
நாம் அழுகிற குரல் 
அவனுக்கும் கேக்கலையே.

பா.உதயன் ✍️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 23:39, uthayakumar said:


எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 

இல்லை கயவர்கள் எட்டப்பர்கள் காட்டிகொடுப்போர் இனம் தான் தமிழ் இனம், மற்றவனுக்கு சோப்பு போடுவதில் வல்லவர்கள்.

ஒற்றுமை என்பது ? தமிழனத்தை யார் ஏமாற்ற தமிழனைவிட?

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

தேர்தல் நேரத்தில் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

 

4 hours ago, உடையார் said:

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

நியி,உடையார், உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.தமிழர்கள் ஒன்று பட வேண்டும்.ஒற்றுமையே பலம் என்பதை உணரவேண்டும்.
எமக்கானதோர் நிரந்தரமான அரசியல் தீர்வுக்காய் எல்லோரும் உழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 12:54, suvy said:

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

நீங்கள் சொல்லுவது போல் சுவி அவர்களும் தமிழர் பலத்தை பல வழிகளில் உடைத்திருக்கிறார்கள்.அதேபோல் நாமும் ஒரே பலத்தின் பின் இன்று வரை ஒற்றுமைப்படவில்லை.இனி வரும் காலங்களும் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.எதிர் காலத்தில் நிகழவிருக்கும் உலக மாற்ரத்தோடு பல படிப்பினைகளோடு எமது போராட்டத்தை நகர்த்த வேண்டியவராய் இருக்கிறோம்.நன்றி உங்கள் கருத்துக்கு சுவி.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.