Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒரு பெண்ணின் அவலம் - நவீன அடிமைத்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவீன அடிமைத்தனம்

2019ம் ஆண்டுஏப்ரல் மாதம் 7ம் திகதி. லண்டன் லூட்டன் விமான நிலையம்.

ரொமானியாவில் இருந்து 20 வயது பெண், தனது குடும்ப கஷ்டம் தீரும் வகையில், தான் காத்திருந்த, நல்ல சம்பளத்துடன், பாக்டரி வேலை கிடைத்து, முதலாளி அனுப்பிய விமானசீட்டில் வந்து இறங்குகிறார்.

வீட்டினை நினைத்து கண்கள் கசிகிறது.

அழைத்துப்போக, வந்தவர்கள் அவர்கள் நாட்டினை சேர்த்த இருவர். இருவரும் அண்ணன், தம்பி.

a group of people posing for the camera

கூட்டிப்போய் லண்டன் ப்ளும்ஸ்டேட் பகுதில் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.  அங்கே இரண்டு ரொமானிய பெணகள் இருந்தனர்.

இவரை பார்த்து விட்டு, தமது அறைகளுக்கு சென்று விட்டனர், எதுவும் பேசாமல்.... என்ன அமைதியாக சென்று விட்டார்களே அன்று ஆதங்கம். அந்த பெண்ணின் கடவுசீட்டினை வாங்கிக் கொண்ட அவர்களுக்கு.... பெண்ணை மறுநாள் வரை காத்திருக்க வைக்க நேரமில்லை. பணம் முக்கியம். 

இன்றிரவு வேலைக்கு தயாராக இரு. கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து கொண்டு வரவேண்டும், என்று சொல்லி, அவர் அணியவேண்டிய உடைகளை கொடுத்து உள்ளனர்.

மாலை வந்த அவர்கள், காரில் செல்லும் போது, ஆணுறைகளை கொடுத்து, இவைகளையும் உனது கைபையில் வைத்து கொண்டு வரவேண்டும் என்று சொல்லி உள்ளனர். 

அதிர்ந்து போன அந்த பெண், தான் அந்த மாதிரி பெண் அல்ல, இப்படி நடந்து கொள்ள தெரியாது என்று சொல்ல, வீதி ஓரமாக காரினை நிறுத்திய, அவர்கள்... மிக கடுமையாக பயமுறுத்தி உள்ளனர். கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

உனக்கு, விமான பயணம், உன்னை அறிமுகப்படுத்தியவருக்கு கொடுத்த பணம் என பெரும்தொகை செலவாகி விட்டது. ஆகவே இன்றிரவு அந்த பணத்தினை உழைத்து திருப்பி தந்து விட்டு நீ போகலாம், இல்லாவிட்டால் இந்த சுத்தியலால் தலையில் ஒரே அடி அடித்து, தேம்ஸ் நதியினில் போட்டால்.... யாருக்கும் தெரியாமல் மாண்டு போவாய் என்று வேறு மிரட்டி உள்ளனர்.

பயந்து போய் விட்டார் அந்த பெண்.

முதல் நாளே அவர்கள் முன்னரே ஏற்பாடு செய்திருந்த வாடிக்கையாளருடன் அவரின் விருப்பத்துக்கு மாறாக உறவுற வைத்தார்கள். அந்த வாடிக்கையாளர் ஆணுறை அணிய மறுத்தனால், அவர் மூலமாகவே கருத்தரித்தார். (என பின்னர் அறிந்து கொண்டார்)

அன்றய வசூல் பணத்தினை அண்ணன், தம்பி வாங்கிக் கொண்டு, அந்த பெண்ணை விடாமல், தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார்கள்.

பயமுறுத்தல் மூலம் தினமும் £1000 வரை உழைத்துக் கொண்டனர். பெண்ணுக்கு சாப்பாடு கூட கொடுக்காமல், தினமும் 10 - 15 வாடிக்கையாளர் வரை சேவை செய்யுமாறு மிரட்டினர்.

பெண்களுக்கான உடல் உபாதைகள் வந்த சமயங்களில், அவர் மறுத்த போதெல்லாம் தடியால், அவரது பின் பக்கத்தில் தாக்கி, இருக்கிறார்கள். வேறு வழி இன்றி கிளம்பி போய் இருக்கிறார். வீட்டில் இருந்து தாம் வெளியே கூட்டிக் கொண்டு போனால் அன்றி, அவளாக போக முடியாதவாறு பயமுறுத்தி உள்ளனர்.

முடிந்த வரை உழைத்துக் கொண்டு, துரத்தி விட்டு, வேறு பெண்ணை இறக்கலாம் என்று இருந்திருக்கிறார்கள்.

ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த போது, அதனை அறிந்து, ஏன் கருத்தடை மாத்திரை பாவிக்கவில்லை என்று தாக்கி, மருந்து, மாத்திரை கொடுத்து, கருக்கலைப்பு செய்ய முயன்று இருக்கின்றனர். குழந்தை வேறு வளர்ந்து கொண்டிருந்தது. 

குழந்தை அசையவில்லை என்று உணர்ந்து, இறந்து விட்டது... நல்லது தான்... தானும் அதனுடன் இறந்து போகலாம் என்று நினைத்து இருக்கிறார்.

ரொமானியாவில் வீட்டுடன் எந்த தொடர்பும் கொள்ள முடியாதவாறு, அண்ணன், தம்பி பார்த்துக் கொண்டனர். கையில் மொபைல் போனும் கொடுக்கவில்லை.

ஒரு வாடிக்கையாளர்... இந்த பெண் கர்ப்பிணி என புரிந்து கொண்டார். ஏன் இந்த நிலையிலும் இந்த வேலை செய்கிறாய் என்று கேட்க, கண்ணீருடன் தனக்கு நடக்கின்ற அவலத்தினை சொல்லி இருக்கின்றார் அவர். நல்ல வேளையாக அவரும் அதே மொழி பேசும், ரொமேனியர்.

தனக்கு ஏதும் சிக்கல் வரும் என்று, அவர் பொலிஸினை அழைக்க விரும்பவில்லை. ஆனால் மீண்டும் சில நாட்களில் சந்தித்த அவர், ஒரு மொபைல் போன் ஒன்றினை கொடுத்து, ரொமேனியாவில் உள்ள குடும்பத்துடன் தொடர்பு கொள்ள சொல்லி உள்ளார். உடனே அவர் தொடர்பு கொண்டு, தனது குடும்பத்துக்கு தனது நிலையினை சொல்லி அழுதுள்ளார்.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி, அவரது குடும்பம் தமது அரசுக்கு முறையிட, ரொமேனிய அரச அதிகாரிகள், லண்டன் மெட்ரோபாலிட்டன் பொலிஸாருக்கு தகவல் தர, அந்த போலீஸ் துறையின், நவீன அடிமைத்துவ, சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவின் அதிகாரிகள் (Modern Slavery and Child Sexual Exploitation Unit (MSCE) )உடனடியாக செயலில் இறங்கினர்.

ரொமேனியாவில் இருந்து விரைந்து வந்த இரு அதிகாரிகளுடன், இந்த துறை அதிகாரிகளும் சேர்ந்து, குறித்த வீட்டினை முற்றுகை இட்டு, அண்ணன், தம்பியை கைது செய்ததுடன், பெண்ணையும் மீட்டனர்.

a bedroom with a bed and desk in a small room: The woman was held in a flat in Plumstead (Met Police)

பெண் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறை

தம்பிக்கு 15 வருடமும், அண்ணனுக்கு 16 வருடமுமாக, இன்று 24ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் கண்காணிப்பாளர் ஆண்டர்சன் இது குறித்து பத்திரிகையாளருடன் இன்று பேசிய போது, "இந்த பெண்ணுக்கு நேர்ந்தது மிக கொடுமையானது. அவலமானது.ஒரு திடகாத்திரமான ஆண் பிள்ளை ஒன்றை பெற்றுள்ள அந்த பெண்ணுக்கு இருக்கக்கூடிய ஒரே மனநிறைவு, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாகியவர்கள், கம்பிகளின் பின்னால் இருக்கிறார்கள் என்பதாகவே இருக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.

இந்த மாதிரியான, நவீன அடிமைத்தனத்தினை களைய நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் மக்கள் இதுகுறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர்.

Streatham High Road incident What to do if you have information about or …

எவ்வாறு அறிந்து கொள்வது?

உங்கள் சமூகத்தில் இந்த நவீன அடிமைத்தனம் இருக்கக்கூடும் என்பதனால் அவதானமாக இருக்குமாறு போலீசார் கோருகின்றனர். பின்வரும் சில அறிகுறிகள் குறித்து கவனமெடுங்கள் என்கிறார்கள் போலீசார்:

1. தன்னில் கவனமின்மை, பொருத்தமில்லாத உடைகளை அணிதல்.
2. உடல் எப்போதும் சோர்வாக, தளர்வாக, கண்ணோடு, கண் பார்ப்பதை தவிர்ப்பவராக இருத்தல்.
3. ஆட்கள் அதிகம் இருக்கும் வீடு ஒன்றில், அறை திரைசீலை எப்போதுமே மூடிய நிலையில் இருத்தல் (எதையோ மறைக்க நிர்பந்திக்க பட்டுள்ளார்கள்)
4. மிக குறைந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலை ஒன்றினை, மிக அதிக நேரம் எடுத்து செய்வது.  தவறான ஆயுதங்களை உபயோகிப்பது. ( காரணம்: நிர்பந்தத்தால் உண்டான அர்வமின்மை).

To report a suspicion or seek advice call the Modern Slavery Helpline confidentially on 08000121700, 24 hours a day.

Source: Evening Stardard, London

யாழுக்காக: அடியேன்

ஒரு தமிழர் அவர் மனைவியுடன், 30 வருடமாக ஒரு பெண்ணை வீட்டு வேலைகாக அடிமையாக வைத்திருந்தனர் என்று சிறையில் அடைக்கப்பட்டார் என்பதால், இது வேறு சமூக பிரச்னை என்று வாசித்து விட்டு போகக்கூடாது என்றுதான் மொழிபெயர்த்து போட்டேன். ஆகவே கவனமாக நமது சமூகத்தினையும் அவதானியுங்கள்.

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன.. அடிமைத்தனம், என்ற தலைப்பைப் பார்த்தவுடன்..
இங்கு நடக்கும், அடிமைத்தனம்  என்று நினைத்து விட்டேன். 

Link to comment
Share on other sites

இதுபுதிதா என்ன?? தெரியாமல் எத்தனையோ நடந்துகொண்டேதானே இருக்கு நாதமுனி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.