Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையல்ல அதிபரும் வெளிநாட்டுப்பணமும்
*************************************************

இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது.

மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் சுற்றிக் காட்டினார்.

அந்தப் பாடசாலையின் மலசலகூடம், வேறும் பல கட்டங்கள் திருத்த வேண்டிய நிலையிலிருந்தன.

அந்த வெளிநாட்டு நண்பர் தானாக முன்வந்து உதவிகளைச் செய்வற்குத் தயாரானார். அதிபர் மறுத்துவிட்டார். மறுத்துவிட்டதோடு ஆசிரியர் கூட்டத்தில் ஒரு அறிவித்தலையும் விடுத்தார். இனிமேல் யாராவது பழைய மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தாராளமாக பாடசாலையை சுற்றிக் காட்டுங்கள். ஆனால், பாடசாலை நேரத்திலல்ல. பாடசாலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாணவர் கல்விக்கு இடையூறு எற்படாவண்ணம் செய்யுங்கள் என்றார்.

ஆசிரியர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். வெளிநாட்டு பழைய மாணவர்களின் வளங்களை முறையாகப் பயன்படுத்த எங்கள் அதிபருக்குத் தெரியவில்லை என வெளிப்படையாகவே பேசினர்.
அதிபர் நிதானமாகச் சொன்னார். வெளிநாட்டு உதவிகளால் பல பாடசாலை நிர்வாகங்கள் படும் அவலங்களை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த நிலை எமக்கும் வேண்டாம். உதவி அடிப்படையில் அவர்களது தாராள சிந்தைனயும் உதவும் மனப்பாங்கும் உண்மையானதுதான். ஆனால் அதனது பக்கவிளைவுகள் குறிப்பாக குடாநாட்டைச் சீரழிக்கிறது.

பாடசாலை ஒன்றிற்கு ஐம்பதினாயிரம் ரூபா மேலதிக தேவையிருக்க, தாராள மனமுள்ள பழைய மாணவர்களால் சில வேளைகளில் 5 லட்சம் சேர்ந்து விடுகிறது. மிகுதி நாலரை இலட்சத்தையும் என்ன செய்வது என்று திண்டாடும் அதிபரும் பாடசாலை நிர்வாகமும் அதற்கு தேவையில்லாத திட்டங்களை வகுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இதுவே தொடர்ச்சியாகி அவர்கள் ஒரு பொறிக்குள் விழுந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு உதவியில்லாது பாடசாலையை நடத்தவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. இந்த நிலை எங்களுக்கு வேண்டாம். என்றொரு பெரிய வகுப்பே எடுத்துவிட்டார்.

இங்கே உள்ள பாடசாலைகளை வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்கள், ஆர்வக் கோளாறினால் வீங்கச் செய்துவிட்டு, பின் பாடசாலை அதிபர்களும், நிர்வாகமும் திண்டாடும்போது அவர்களை குற்றம் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

ஆசிரியர்களுக்கு, அவர் இன்னுமொரு கோரிக்கையையும் முன்வைத்தார். நீங்கள் வெளிநாட்டு பழைய மாணவர்களிடம் உதவி பெறுவதைவிட உங்கள் வேலைகளை இன்னும் கடமையுணர்வோடு நேர்த்தியாகச் செய்யுங்கள்! எமது பாடசாலை அரச பொதுப் பரீட்சைகளின்போது பெறப்படும் விசேட பெறுபேறுகளுக்கு அரசு விசேட மானியம் வழங்குகிறது. நாங்கள் அந்த மானியத்தில் குறியாயிருப்போம். மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்கு பாடுபடலாம். இன்னும் கல்வியோடு சமுதாய உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதற்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களையும், முதியோர் இல்லங்களையும் கூட்டிச் சென்று காட்டுங்கள்!

பாடசாலை சமூகத்தின் முன்னோடி. சமூக உருவாக்கி. எங்களுடைய ஒவ்வொரு செயலும் பொறுப்பு வாய்ந்தவையாக இருக்கவேண்டும். எமது சமூகத்தில் வளர்ந்து வரும் 'கையேந்தும் கலாச்சாரம்' ஆபத்தானது. அந்த நோய் மாணவர்களில் தொற்றிக் கொள்ளாதிருக்க நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய மாணவர்களே நாளைய உலகம்.

இதேபோல இன்னொரு நண்பரின் அனுபவமும் கவனம் கொள்ள வேண்டியது. அவரும் வெளிநாடொன்றிலிருந்து நீண்ட நாட்களுக்குப்பின் ஊருக்குச் சென்றார். மனிதாபிமானவாதி. அதில் ஐயமில்லை. அவர் உதவும் நோக்கோடு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். இல்லத்தைச் சுற்றிப்பார்த்த அவர் பெரிய மனதோடு தான் வந்த காரணத்தைச் சொன்னார். மிக பொறுமையாய் அதை உள்வாங்கிய நிர்வாகி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு உதவியையும் மறுத்துவிட்டார்.

நாங்கள் பெரிய வசதியாக இல்லாது விட்டாலும் நாங்கள் ஒரு நிறுவனமாக இருக்கிறோம். எங்களால் ஓரளவுக்கு முடியும். முடியாவிட்டாலும் உள்ளதை வைத்து சமாளிக்கும் வலு எங்களிடம் இருக்கிறது. எங்களைப்போல் நிறுவனமயப்படாது உதிரிகளாக தேடுவோரற்று பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தேடி நீங்கள் உதவுவதே முறையானது என்று அனுப்பி வைத்தார்.

இன்னுமொரு சமூகசேவை மனிதரின்ஆதங்கம் இது. நாங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் உறவுகளிடமும் பணம் வாங்குகிறோம் என்பது உண்மை. வெளிப்படையானது. ஆனால் அவர்களில் மட்டும் தங்கியிருக்காது எங்கள் திட்டங்களை நாமே நகர்த்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறோம். அதில் ஒருவகையில் வெற்றியும் கண்டு வருகிறோம். ஆனால் எங்கள் முயற்சிகளை கொச்சைப் படுத்தும் விதமாக 'உங்களுக்கென்ன வெளியில் இருந்து காசு வருகுது. நீங்கள் சும்மா இருந்து செலவு செய்யிறியள்' என்ற கிண்டல்கள் எங்களை வேதனைப் படுத்துகின்றன. நாங்கள் எங்கள் பலத்தில் நிற்கவே விரும்புகிறோம்.

இதையெல்லாம், உங்களைப் போலவே எனக்கும் நம்புவதற்கு கஸ்ரமாகத்தான் இருந்தது. ஆனாலும் இவ்வாறான மனிதர்கள் இன்னும் பலர் அங்கே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நம்புங்கள்!

-மனோ சின்னத்துரை
 

மூலம்: என்வினவி (WhatsApp)

 

  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வருடம் சித்திரையில் ஊருக்கு போகும் பொழுது இதைப்பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன்.. இந்த COVIDஆல் எல்லாம் மாறிவிட்டது..

எங்களில் பலர்( உள்நாடு/வெளிநாடு), பல்கலைகழகம் தெரிவான மாணவர்களில் கல்வியை பணபற்றாகுறையால் தொடரமுடியாமல் உள்ளவர்களுக்கு உதவுவது உண்டு.. அது ஒரு வழிப்பயணமாக மட்டுமே இருக்கும்.. ஆனால் கிளிநொச்சியில் இந்த அறக்கட்டளை செய்வது வித்தியாசமானதாக பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்குவதாகவும் தேன்றுவதால் இங்கே இதை இணைக்கிறேன்..

முழுவிபரங்களையும் அறிந்து இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும், ஆனால் இது ஒரு சிந்தனைக்குரிய விடயம்.

கிளிநொச்சி மாணவர்களிற்கு கலங்கரை விளக்கான கல்வி வளர்ச்சி அறக்கட்டளை

January 2, 2020
IMG_9816-696x464.jpg

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் பட்டப்படிப்புக்கான உதவியை பெறுகின்றனர்.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கான உதவியை பெறுகின்றனர். இதில் 609 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யதுள்ளதோடு. 178 மாணவர்கள் உதவியை பெற்ற கற்று வருகின்றனர்.

கடந்த வாரம் உதவி பெறும் பல்கலைகழக மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே இத தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

IMG_9816-300x200.jpgபுலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற உறவுகள், அமைப்புக்கள், உள்ளுர் தனிநபர்கள் உள்ளிட்ட பல நல்லுள்ளம் கொண்டவர்கள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக இவ்வுதவியை வழங்கி வருகின்றனர்.மாணவர் ஒருவர் உயர்ந்த பட்சம் மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் நிதியுதவியை பெற்றுவருகின்றார். மருத்துவம், பொறியியல் தொடக்கம் கலை வர்த்தக பிரிவுகளில் நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்களி்ல் கல்வி பயிலும் மாணவர்கள் இவ்வுதவியை பெறுகின்றனர்.

IMG_9799-300x200.jpgமாதாந்தம் உதவியை பெற்று தங்களின் பல்கலைகழக கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட உதவியை நிரந்த தொழில் ஒன்றை பெற்றப் பின்னர் மீள கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உதவியை பெறுகின்றனர். இவர்களால் மீளச்செலுத்தப்படும் தொகையானது மறுபடியும் புதிதாக உதவிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வழங்கப்படுகிறது.

IMG_9842-300x200.jpgகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக நிதியை பெற்று தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்த 609 மாணவர்களில் 130 மாணவர்கள் மீளச்செலுத்தி வருகின்றனர். 33 மாணவர்கள் முழுமையாக பெற்ற உதவியை மீளச் செலுத்தியுள்ளனர். அத்தோடு தற்போது தங்களின் பல்கலைகழக க்ல்விக்கான உதவியை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 85 காணப்படுகின்றனர்.

 

IMG_9821-300x200.jpgஇவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் அதிபர் பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது இதில் அறக்கட்டளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, மட்டகளப்பு மாவட்ட உளநல வைத்திய அதிகாரி யூடிரமேஸ் ஜெயகுமார், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா, அறக்கட்ளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபாலா, ஓய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

https://www.pagetamil.com/97893/

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  (WhatsApp) மூலம் மனோ அண்ணரிடமிருந்து இக்கதை  வந்தது

கதையின் கரு உண்மைதான்

அவ்வாற  தான் இனி  இருப்பதும்  நல்லது

ஆனால் பழைய மாணவர்களாலும் புலம் பெயர்ந்த அக்கம் பக்கத்தவர்களின் உதவிகளாலுமே 

அதிகம் பாடசாலைகளும் மாணவர்களும் வளர்ந்திருக்கிறார்கள்

அரசு கூட அடுத்த  படிதான்

எனவே உதவிகளை  பெறுவதோ 

கோருவதோ  நல்லதே

ஆனால் அவை திட்டங்களாக 

தேவை  சார்ந்தவையாக  இருக்கணும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ,பிரபா உங்கள் இணைப்புகளுக்கு நன்றி 
 

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய நாட்டில், இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பது பல வெளிநாட்டு அமைப்புகளினால் பாராடப்பட்டது. நாட்டின் இலவச கல்வியின் தந்தையாக CW கன்னங்கரா இன்றும் மதிக்கப்படுகின்றார். பிரிட்டனில் கூட இல்லாத வகையில், இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. அதுமட்டுமா, மகாபொல மானியமும் கிடைக்கும்.

சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் காட்டினாலும், இலங்கை என்னும் நாட்டின் மீது நான் வைத்திருக்கும் பெருமதிப்பு இந்த கல்வி, மருத்துவ காரணமாகவே. இதனை, ஒரு உறவு நையாண்டி செய்ய முனைந்தார். 

என்னை பொறுத்தவரையில், நாட்டுடன் பகை இல்லை, அரசியல் வாதிகளுடன் தான் என அவருக்கு புரிய வைக்க முனைந்தேன்.

ஆனாலும் நன்றி முக்கியமானது. 🙏


 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், பிரபா இருவருக்கும்
தகவலுக்கு நன்றி.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர் சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை.
    • சிஸ்ரம் சரியில்லை நான் அரசியலுக்கு வருவேன்.!கிட்னி சரியில்லை நான் அரசியலுக்கு வரமாட்டேன்.!      ஸ்டாலின் தாத்தாவும்,  வீட்டில்தான் இருக்காரு.       கட்சிய அதிமுகலயும் அறிவாலயத்துலயும் மாத்தி மாத்தி அடகு வச்சிட்டுகட்சியே ஆரம்பிக்காத ரஜினிய நொட்டிட்டு திரியுறானுவ    
    • நாங்கு மதங்களின் இணைப்பாளரிட்டையும் தலைவர் சொல்லியிருப்பார் ....உங்கன்ட மதங்களின் விசேட நாள்களில் என்னை பிரதம விருந்தினராக  அழைத்து  முதல் மரியாதை செய்ய வேண்டும் அதற்கு நான் பிரதிபலனாக உங்களுக்கு அடுத்த தேர்தலில் கள்ளவோட்டு போட்டு அமைச்சர் ஆக்குவேன்...
    • “கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல் கொரோனா வந்ததும் வந்தது இன்னும் மனிசர பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கு’ முன் வீட்டு பரமேஸ் அக்கா முணங்கிக் கொண்டே கதவடியில் வந்து நின்றாள். கொழும்பில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கும் தொடர் மாடி வீடுகளில் அவரவர் கதவடியில் வந்து நின்றாலும் நமது வீட்டுக் கதவடியில் வந்து நிற்பது போல் தான் இருக்கும். முகத்தினை துணியினால் பொத்திக் கொண்டு நின்ற பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாகக் கிடந்தது. ‘ஏன் அக்கா என்னாச்சு’ என்று கேட்ட என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ‘ஏன் உமக்கு கத தெரியாதே… நம்மட மல்காந்தி இப்போ கோல் எடுத்தவா. அவவும் மற்ற பிளட் ஆக்களோட சேர்ந்து கீழே போய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாவாம். நியூஸ்ல காட்றவை தானே.. ஒவ்வொரு பிளட்களையும் ஆட்கள் கத்திக் கொண்டிருக்கினை. அவ என்னையும் கூப்பிட்டவா. எத்தின நாளைக்கு தான் இப்படி எங்கள அடைச்சு வைச்சு கொடுமைப்படுத்தப் போறியள் என்று எல்லோரும் நியாயம் கேட்கப் போறாங்க. நீயும் இறங்கி கீழ வாயேன். இந்த அரசாங்கத்த ஒரு கைப் பாப்பம்!’ பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாக தான் இருந்தது. அவசரத்தில் பேஸ்மாஸ்க் இல்லாம துணியைக் கட்டிக் கொண்டு போகப் போறா. கீழே நிற்கிற பொலிஸ்காரன்கள் கண்டமேனிக்கு பேசப்போறாங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போது பரமேஸ் அக்காவின் கையில் இருந்த போன் சிணுங்க தொடங்கியது. ‘ஹலோ ஹலோ மம மே தென் எனவா. பொட்டக் இன்னக்கோ!’ என்று கூறி விட்டு, என்னைப் பார்த்து ‘நீங்கள் வாறியளோ? டிவிக் காரரும் வந்திருக்காங்களாம். வாரும் அந்த 5 ஆயிரம் பத்தி பேசின அந்த மந்திரியையும் சேர்த்து கிழிச்சிட்டு நியாயம் கேட்டு வருவம்’ என்றார். பல நாட்களைக் கடந்திருக்கும் லொக் டவுன். உணவுப் பற்றாக்குறை. பணப் பற்றாக்குறை. எல்லாம் சேர்த்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த பரமேஸ் அக்கா உட்பட கொழும்பு வாழ் லொக் டவுன் வாசிகள் இவ்வாறு புறுபுறுத்து பறபறத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், செய்திகள் மீது நாட்டு நடப்புகள் மீது கடும் அக்கறையும் வாசிப்பும் கொண்ட அவரது பரம தோழி மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் அடிக்கடி டிவியில் செய்திகளைப் பார்த்து ஓவர் ஆல் டிஸ்கஷன் நடத்திக் கொள்வதை நான் நன்கறிவேன். இது போதாது என்று என்னையும் வம்பில் இழுத்து விட்டு என்டெர்டெயின்ட்மன்ட் தேடுவது தான் அவர்களின் கொரோனா லொக்டவுன் கால பிழைப்பாக இருக்கின்றது. கொ. மு அதாவது கொரோனாவுக்கு முன் வரை தென்னிந்திய டிவி நாடகங்கள் தான் உயிர் மூச்சு என்று இருந்த பரமேஸ் அக்கா, இப்போ தலைகீழாக மாறி அந்த நாடகங்கள் எல்லாம் ‘வெரி வெரி போரிங்’ என்று தீர்க்கமான முடிவை எடுத்து விட்டார். இப்போ உலக அரசியல் முதல் உள்நாட்டு நடப்பு வரை அரங்கேறும் அனைத்;துவித என்டர்டெயின்ட்மன்ட்களும் அக்காவுக்கு பிங்கர் டிப்ஸில் இருக்கும் அளவுக்கு அத்துப்படி. கூடவே மல்காந்தியையும் சேர்த்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு தரம் எல்லாவற்றையும் எடுத்து அலசி ஆராய்ந்து துவைத்து காய வைத்து விட்டு தான் மறுவேலைப் பார்ப்பாள். இப்பொழுது லோக்கல் டிவி செனல் செய்திகளில் தொடர்மாடிகளில் வசிப்போர் வரிசைக் கட்டிக் கொண்டு பொலிசாருடன் மல்லுக் கட்டுவதைப் பார்த்து விட்ட மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் வரிந்துக் கட்டிக் கொண்டு அடுத்த கட்ட வேலைக்கு ஒருவாறு என்கேஜ் ஆகி விட்டனர். என்னைப் பார்த்து முறைத்த பரமேஸ் அக்கா, ‘ஏன் ஹலோ நீர் என்ன அந்த மந்திரி விமல் வீரவன்சவின் ஆளோ. கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி சிலையாட்டம் நிற்கின்றீர்.’ என்று அதட்டிக் கேட்க சற்று சுதாகரித்துக் கொண்டு ‘இல்லையே’ என்றேன். ‘இப்பிடித் தான் பல வருஷங்களுக்கு முதல் ஒருத்தன் 2500 ரூபா கதையை சொன்னான். இப்போ இவன் 5 ஆயிரம் கதையை சொல்கிறான். 5 ஆயிரம் ரூபா எத்தனை நாளைக்கு போதும்? 5 ஆயிரம் கொடுத்தது ஒரு மாசம் வைச்சு சாப்பிடவாம்… 3 நாளைக்குள் முடிக்க இல்லையாம்… அது தான் பார்ளிமென்ட்டில மனோ அண்ண நல்லா நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாரு. இவங்க எல்லாம் சிவப்பு சட்டையை மாட்டிக் கிட்டு ஒரு காலத்தில புரட்சி பத்தி பேசினவங்க. இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு ஆக்கள் கஷ்டத்தப் பத்தி நினைக்காம பதவிக்கு வந்தவுடன் உளறிக் கொட்டுறாங்க’ என்று பரமேஸ் அக்கா ஆவேசமாகக் கூறிக்கொண்டு இருந்தாள். ‘ஓம் ஓம்’ என்று தலையாட்டிக் கொண்டு நின்ற என்னிடம் மீண்டும் ஏதோ சொல்ல வந்த பரமேஸ் அக்காவை கையிலிருந்த தொலைபேசி மீண்டும் சிணுங்கி தடுத்து நிறுத்தவும் அப்பாடா என்று இருந்தது எனக்கு. ‘ஐயோ மல்காந்தி, மெ தென் எனவா! எப்பாத? எய்? மக்வுனாத? ஹா ஹா . அப்பராதே னே. என்ட படிப் பெலட்ட பொட்டக் கத்தாகரமுக்கோ’… (அது என்னவோ பரமேஸ் அக்காவின் புரோக்கன் சிங்களம் மல்காந்திக்கு புரிகின்றது. மல்காந்தியின் புரோக்கன் தமிழ் பரமேஸ் அக்காவுக்கு புரிகின்றது. எப்படியோ இடையில் மாட்டிக் கொண்டு நான் எல்லாவற்றையும் தமிழில் கிரகித்துக் கொள்வேன். மல்காந்தியின் தமிழும் பரமேஸ் அக்காவின் சிங்களமும் படும் பாடு என்னை சிரிப்பில் ஆழத்தினாலும், அந்த சங்கடத்தை ஏன் மற்றவர்களுக்கு கொடுப்பானேன் என்று நானே மல்காந்தியின் சிங்களத்தைத் தமிழ்ப்படுத்தி விட்டேன் என்பதைக் கவனிக்க.) போனை காதிலிருந்து எடுத்த பரமேஸ் அக்கா ‘அநியாயம் வேலை கென்சல் ஆகிட்டு. பொலிஸ் ஆட்கள் வந்து நிவாரணம் தர்றதா சொல்லியிருக்காங்களாம்’ என்று நான் கேட்காமலேயே கூறிய அவர், ‘மல்காந்தியை வரச் சொன்னேன். அவட்ட புதுக் கதைகள் நிறைய இருக்காம். சிங்களப் பேப்பர்களா ஒன்னு விடாம மனுசனோட சேர்;ந்து பார்க்கிறவ தானே. கொஞ்சம் கதைக் கேட்போம். பொழுதும் போகும்.’ என்று கண்ணை சிமிட்டினாள். பரமேஸ் அக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மல்காந்தி வந்துக் கொண்டிருந்தார். கொரோனா டிஸ்ட்டன்ட் மெயின்ட்டன் பண்ணும் நல்ல எண்ணத்தில படியின் கீழ் நின்று கொண்டு பேச்சைத் தொடங்கிய அவர், பிரதமர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து அவரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் வரையும் சம கால அரசியல் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருக்க பரமேஸ் அக்கா வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். இருவருக்கும் மத்தியில் ஆமாம் போடும் ஆளாக தவிர்க்க முடியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். போதாக் குறைக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு கதை சொல்லி வாயை சுட்டுக் கொண்ட மந்திரியையும் அர்ச்சிக்க அவர்கள் மறக்கவில்லை. பாவம் அந்த ஆள். ஏதோ அவசரப்பட்டு உளறிக் கொட்டிப் போட்டுது என்று சொல்ல முடியாத அளவுக்கு விலாவாரியாக ஆக்கிரோஷமாக மக்கள் படும் கஷ்டங்களை விளங்காமல் பேசிட்டார். இந்த பெண்களோ சேர்ந்து கொண்டு, அவன் விளங்காமல் போகோணும், கட்டையில போகோணும் என்று வசைபாடுவதைக் கேட்க என்னவோப் போலிருந்தது. மகிந்தவுக்கு 7 கேக் பிரதமர் மகிந்தவின் 75 வது பிறந்த நாள் விழாவைப் பற்றி பேசியது மட்டுமல்லாமல் அவருக்கு கிடைத்த 7 கேக்குளையும் பற்றி மல்காந்தி வாய் நிறைய நேரில் பார்த்தது போல் விபரித்துக் கொண்டிருக்க பரமேஸ் அக்காவோ, ‘எத்தத,? எத்தத,?’ என்று வாய்ப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக ஒரு பேர்த்டேயிக்கு ஒரு கேக் கிடைப்பதே இப்பொழுது பெரும் பாடாய் இருக்கும் நிலையில் 7 கேக்குகள் கிடைப்பது எவ்வளவு அதிர்ஸ்டமானது என்று கூறிய மல்காந்தி, அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவும், ‘ஆமாம், ஆமாம் அவரின் 75வது பேர்த்டேக்கு அடுத்த நாள் பட்ஜெட். பிறகு ஜனாதிபதி மல்லியின் ஒரு வருட பதவிப் பூர்த்தி நாள் என்று ராஜபக்சக்களுக்கு இந்த நவம்பர் மாதம் மறக்கமுடியாத சிறப்பான மாதமாக அமைந்து விட்டது தானே’ என்று பரமேஸ் அக்கா சொல்ல, அதுமட்டுமல்ல ‘இன்னும் சில விசயங்கள் இருக்கு’ என்று தொடர்ந்த மல்காந்தி, ‘மகிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக சமர்ப்பித்த 11 வது பட்ஜட் இதுவாம். இவ்வாறு 11 பட்ஜட்களை முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தான் சமர்ப்பித்திருந்தாராம். இதன்படி பட்ஜட் சமர்ப்பிப்பில் ரொனி டி மெல் படைத்த சாதனையை பிரதமர் முறியடித்து விட்டாராம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு சமர்ப்பிக்கப்பட்ட 75 வது பட்ஜட் இது. அப்படிப் பார்த்தால் பிரதமர் தனது 75 வது வயது பூர்த்தியடைவதற்கு முதல் நாள் தான் நாட்டின் 75வது பட்ஜட்டை சமர்ப்பித்திருக்கின்றார்’ என்று கூறி முடிக்கவும், பரமேஸ் அக்கா புலம்பத் தொடங்கினாள். ‘மல்காந்தி இவ்வளவு ஸ்பெஷலான பட்ஜட் என்று நீ சொன்னாலும் இதில் சாதாரண மக்களுக்கு என்ன இருக்கு? எப்பவுமே ஆளும் பக்கம் உள்ளவங்க பட்ஜட் நல்லம் அதி அற்புதம் என்பார்கள். எதிர்ப்பக்கம் உள்ளவங்க படு மோசம் என்பாங்க. இது காலம் காலமாக நடக்கிறது தானே? யார் ஆண்டா என்ன எங்கட பொழப்ப நாங்க தான் பார்க்கோணும்’ என்று சலித்ததுக் கொண்டே, ‘இப்போ கொரோனா பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எந்த திட்டமும் பட்ஜட்ல இல்லையே. சாமான் விலை நாளுக்கு நாள் ரொக்கட் வேகத்தில அதிகரிக்குது. ஆனால் எங்கட வருமானம் அதிகரிக்குதா? இல்லையே. விலைவாசியைக் கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்காம இருப்பது நியாயமா?’ பரமேஸ் அக்கா கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தா. ‘ஆமாம். பரமேஸ் நங்கி. நேத்து கொட்டஹேன எங்கட அக்கா கோல் எடுத்தா. அவ சொன்னா சாமான் விலை ரொம்ப மோசமாம். வீட்டு கிட்ட சாமான எடுத்துக் கொண்டு விற்க யாவரிகள் வந்தாலும் ஆனை விலை குதிரை விலை சொல்றாங்களாம். இப்படி அநியாயம் நடப்பதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது தவறு தான். எல்லாத்தையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேணாமா?’ மல்காந்தி கூறி பெருமூச்சு விட்டார். ‘உண்மை தான். எங்கட விலை உது தான். வாங்கினால் வாங்குங்க இல்லாட்டி விடுங்க என்று திரும்பிப் போறாங்களாம். அதனால எவ்வளவு கஸ்டத்திலயும் பிள்ளைக்குட்டியைப் பட்டினிப் போடாம இருக்க அவங்க சொல்ற விலைக்கு வாங்க வேண்டியதா இருக்காம்’ பரமேஸ் அக்கா கவலையுடன் கூறி முடித்தாள். பச்சை மீனும் சஜித்தும் மல்காந்தியும், பரமேஸ் அக்காவும் ஒருவாறு பட்ஜட் பரபரப்புகளை முடித்து விட்டு பேலியகொட பக்கம் திரும்பினர். ‘என்ன மல்காந்தி. சப்பான்க்காரன் சாப்பிடுற மாதிரி பச்சை மீனை ஒருத்தர் சாப்பிடறத டிவியில பார்த்தியளா?’ என்று கேட்க, மல்காந்தி விலாவாரியாக விபரிக்க தொடங்கினாள். ‘ஓம் ஓம் பாத்தன். திலிப் வெதஆரச்சி பச்சை மீன் சாப்பிட்டதைப் பார்த்து எல்லாம் கேலிப் பேசினாங்க. ஆனால் பொருளாதார ரீதியில் விழுந்திருக்கும் மீன் பிடிக்கிற ஆட்களுக்கும் விற்கிற ஆட்களுக்கும் அவர் ஒட்சிசன் கொடுத்திருக்கிறார். அது பெரிய விசயம் தானே. அது மட்டுமில்லாம எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அவர் செய்த வேலையைப் பாராட்டியிருக்கிறார். இந்த வேலையை அரசாங்கம் செய்திருக்கணும். ஆனால் அவங்க அது பத்தி கணக்கெடுக்கல. நீங்க இத செஞ்சு நாட்டுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறீங்க என்டு சஜித் அவரைப் பாராட்டியிருக்கிறார்’. ‘என்னவோ. இப்ப கொஞ்சம் மீன் மேலே இருந்த கொரோனா பயம் ஆட்கள்ட்ட குறைஞ்சுக் கொண்டே வருகுது. எனக்கும் நல்ல டேஸ்ட்டா மீன் கறி சாப்பிடணும் போல இருக்கு’ என்று பரமேஸ்; அக்கா சப்புக் கொட்டிக் கொண்டாள். ‘ம் எனக்கும் அப்படித்தான். லொக்டவுன் முடியட்டும் நானே சால மீன் கறி சமைச்சு தாறேனே’ என்று கூறிய மல்காந்தி தொடர்ந்து, ‘சஜித் ஆக்கள் அவங்கட ஒபிஸ்ல பொதுமக்கள் குறைகளைக் கேட்க கொஞ்ச பேர நியமிச்சிருக்காங்களாம். உனக்கும் ஏதாவது குறை இருந்தா எடுத்து சொல்லு. ஹரீன் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, முஜிபுர், மரிக்கார் எல்லாம் அங்க பிஸியா இருக்காங்க’ என்று சொல்லவும், ‘ஐயோ மல்காந்தி குறையைக் கேட்டு என்ன செய்ய. அவங்க எல்லோரும் நினைச்சா எவ்வளவோ செய்யலாமே’ என்ற பரமேஸ் அக்கா, ‘பார்ளிமென்ட்ல இருக்கிற எல்லாரும் தங்கட மாச சம்பளத்தையும், மத்த நிவாரணங்களையும் அரைவாசியாக் குறைக்க சொல்லிக் கேட்டு அந்த காசில மக்களுக்கு உதவலாம் தானே. என்ன நான் சொல்றதுல நியாயம் இருக்கு தானே… நல்ல யோசிங்க மல்காந்தி, இப்போ இந்த மந்திரிமார் எல்லாம் நாட்டின் பொருளாதாரம் விழுந்துப் போச்சி, கடன் கூடிப் போச்சி, நிவாரணம் தர முடியேல்ல என்டு தானே புலம்புறாங்க தானே. ஆனா தங்கட சம்பளங்களையும், இதர சலுகைகளையும் குறைச்சு அந்த காசுல மக்களுக்கு நிவாரணம் தர முன்வாறாங்களா? இல்லையே?’. பரமேஸ் அக்காவின் கேள்வியில நியாயம் இருப்பதாக தான் எனக்கும் பட்டது. மல்காந்தியும் அந்த கருத்தை ஆமோதிக்கும் விதமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். ‘பாவம் ரோஸி அக்கா தான் ஓடி ஓடி கொழும்பில ஆக்களுக்கு ஏதா செஞ்சு கொண்டிருக்கிறா. கொழும்பை முழுசா லொக்டவுன் பண்ணினால் நல்லம் என்டு வேற சொல்றா. போறப் போக்கைப் பார்த்தாள் கொரோனா வந்து சாகுற மனிசர் எண்ணிக்கை குறைஞ்சு பட்டினியால சாகிறவங்க தான் அதிகரிப்பாங்க போல இருக்கு’ பரமேஸ் அக்கா ஆதங்கப்பட்டா.   5 கோடியும் முன்னாள் ஜனாதிபதியும் ‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இப்பொழுது அடிக்கடி டிவியில பார்க்க முடியுது தானே. மனிசன் நல்ல பிரெஸ்ஸா ரிலாக்ஸா சாட்சியமளிக்க வந்து போறார்’ என்று புதுக் கதையொன்றுக்கு அத்திவாரம் போட்ட மல்காந்தி, ‘பரமேஸ் உனக்கு தெரியுமா, றோயல் பார்க் கொலை சம்பவத்தில குற்றவாளி ஜுட் ஷமந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்க மைத்திரிபால 5 கோடி ரூபா லஞ்சம் வாங்கியதா புதுக் கiதையொன்றை வன்ஷொட் மேன் எங்கட ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கிறார். அதற்கு நெகோஷியேசன் செய்ய உதவிய ரத்தன தேரர் 3 கோடி வாங்கியதாகவும் மேலதிக தகவல் வந்திருக்கு’. ‘அப்படியா?’ என்று வாயைப் பிளந்த பரமேஸ் அக்கா, ‘இது என்ன புதுக்கதையா இருக்கு’ என்றாள். ‘ஓம். புதுக்கதை தான். எங்கட ரஞ்சன் அய்யாவ பத்தி தான் தெரியுமே. அவர் இப்போ இந்த குற்றச்சாட்ட மைத்திரிபால சிறிசேன மேலேயும், அத்துரலியே ரத்தன தேரர் மேலேயும் சுமத்தியிருக்கிறார். பெரிய பெரிய தலைகள்ட தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்து கொடிக்கட்டிப் பறந்தவராயிட்டே. அவர் செய்த அந்த வேலைகளை ஆமோதிச்ச நாள தான சனம் அவர பார்ளிமென்ட்டுக்கு அனுப்பியிருக்கிறாங்க’ என்று மல்காந்தி சொல்லவும், ‘ஐயோ மல்காந்தி அதை கொஞ்சம் விபரமா தான் கூறுமென்’ என்று பரமேஸ் அக்கா கெஞ்ச தொடங்கினாள். தொடர்ந்து கூறிய மல்காந்தி, ‘அது தான் அந்த றோயல் பார்க் கொலை கேஸில மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தப் பெடியனுக்கு 2019ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால தனது பதவிக்காலத்தில பொது மன்னிப்பு குடுத்திருந்தார். அதற்காக தான் அவர் இந்த பெரிய அமௌன்ட்டை இலஞ்சமா வாங்கினார் என்பது தான் ரஞ்சனின் குற்றச்சாட்டு. இதை மைத்திரிபாலவும், ரத்தன தேரரும் மறுத்து அபாண்டமான பொய் என்டும் சொல்லியிருக்காங்கள்’. ‘5 கோடியா’ என்று வாயைப் பிளந்த பரமேஸ் அக்கா, சலித்துக் கொண்டே ‘5 ஆயிரம் நோட்டைப் பார்த்தே எத்தனையோ கிழமைப் போயாச்சு, நாங்க எல்லாம் எப்ப 5 கோடியப் பார்க்கப் போறோம்’ என்றாள். அத்துடன், ‘அது என்ன சபாநாயகர ரஞ்சன் லொக்கா லொக்கா என்று கூப்பிடுறத பத்தி பார்ளிமென்ட்ல கொமண்ட் அடிச்சிருந்தாங்களே? என்று கேட்க, ‘ஆமா ரஞ்சன் அப்படித்தான். எல்லாருக்கும் அவரால் ரொம்ப ரொம்ப என்டெர்டெயின்ட்மன்’ என்று மல்காந்தி சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தாள். திடீரென்று அம்மா அம்மா என்று உள்ளே சத்தம் வர பரமேஸ் அக்கா ‘ஐயோ பிள்ளைகளுக்கு பசி வந்திட்டு போல’ மல்காந்தி பிறகு பேசுவோமே’ என்று கூறிக் கொண்டே என்னையும் கண்டுகொள்ளாது உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள். இப்படி ஒருவாறு மல்காந்தி வித் பரமேஸ் அக்கா மீட்டிங் அன்றைய தினம் சுமுகமாக என்ட் ஆகியது. அருவி இணையத்துக்காக அகநிலா http://aruvi.com/article/tam/2020/11/30/19834/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.