Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இது கதையல்ல அதிபரும் வெளிநாட்டுப்பணமும்
*************************************************

இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது.

மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் சுற்றிக் காட்டினார்.

அந்தப் பாடசாலையின் மலசலகூடம், வேறும் பல கட்டங்கள் திருத்த வேண்டிய நிலையிலிருந்தன.

அந்த வெளிநாட்டு நண்பர் தானாக முன்வந்து உதவிகளைச் செய்வற்குத் தயாரானார். அதிபர் மறுத்துவிட்டார். மறுத்துவிட்டதோடு ஆசிரியர் கூட்டத்தில் ஒரு அறிவித்தலையும் விடுத்தார். இனிமேல் யாராவது பழைய மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தாராளமாக பாடசாலையை சுற்றிக் காட்டுங்கள். ஆனால், பாடசாலை நேரத்திலல்ல. பாடசாலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாணவர் கல்விக்கு இடையூறு எற்படாவண்ணம் செய்யுங்கள் என்றார்.

ஆசிரியர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். வெளிநாட்டு பழைய மாணவர்களின் வளங்களை முறையாகப் பயன்படுத்த எங்கள் அதிபருக்குத் தெரியவில்லை என வெளிப்படையாகவே பேசினர்.
அதிபர் நிதானமாகச் சொன்னார். வெளிநாட்டு உதவிகளால் பல பாடசாலை நிர்வாகங்கள் படும் அவலங்களை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த நிலை எமக்கும் வேண்டாம். உதவி அடிப்படையில் அவர்களது தாராள சிந்தைனயும் உதவும் மனப்பாங்கும் உண்மையானதுதான். ஆனால் அதனது பக்கவிளைவுகள் குறிப்பாக குடாநாட்டைச் சீரழிக்கிறது.

பாடசாலை ஒன்றிற்கு ஐம்பதினாயிரம் ரூபா மேலதிக தேவையிருக்க, தாராள மனமுள்ள பழைய மாணவர்களால் சில வேளைகளில் 5 லட்சம் சேர்ந்து விடுகிறது. மிகுதி நாலரை இலட்சத்தையும் என்ன செய்வது என்று திண்டாடும் அதிபரும் பாடசாலை நிர்வாகமும் அதற்கு தேவையில்லாத திட்டங்களை வகுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இதுவே தொடர்ச்சியாகி அவர்கள் ஒரு பொறிக்குள் விழுந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு உதவியில்லாது பாடசாலையை நடத்தவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. இந்த நிலை எங்களுக்கு வேண்டாம். என்றொரு பெரிய வகுப்பே எடுத்துவிட்டார்.

இங்கே உள்ள பாடசாலைகளை வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்கள், ஆர்வக் கோளாறினால் வீங்கச் செய்துவிட்டு, பின் பாடசாலை அதிபர்களும், நிர்வாகமும் திண்டாடும்போது அவர்களை குற்றம் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

ஆசிரியர்களுக்கு, அவர் இன்னுமொரு கோரிக்கையையும் முன்வைத்தார். நீங்கள் வெளிநாட்டு பழைய மாணவர்களிடம் உதவி பெறுவதைவிட உங்கள் வேலைகளை இன்னும் கடமையுணர்வோடு நேர்த்தியாகச் செய்யுங்கள்! எமது பாடசாலை அரச பொதுப் பரீட்சைகளின்போது பெறப்படும் விசேட பெறுபேறுகளுக்கு அரசு விசேட மானியம் வழங்குகிறது. நாங்கள் அந்த மானியத்தில் குறியாயிருப்போம். மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்கு பாடுபடலாம். இன்னும் கல்வியோடு சமுதாய உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதற்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களையும், முதியோர் இல்லங்களையும் கூட்டிச் சென்று காட்டுங்கள்!

பாடசாலை சமூகத்தின் முன்னோடி. சமூக உருவாக்கி. எங்களுடைய ஒவ்வொரு செயலும் பொறுப்பு வாய்ந்தவையாக இருக்கவேண்டும். எமது சமூகத்தில் வளர்ந்து வரும் 'கையேந்தும் கலாச்சாரம்' ஆபத்தானது. அந்த நோய் மாணவர்களில் தொற்றிக் கொள்ளாதிருக்க நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய மாணவர்களே நாளைய உலகம்.

இதேபோல இன்னொரு நண்பரின் அனுபவமும் கவனம் கொள்ள வேண்டியது. அவரும் வெளிநாடொன்றிலிருந்து நீண்ட நாட்களுக்குப்பின் ஊருக்குச் சென்றார். மனிதாபிமானவாதி. அதில் ஐயமில்லை. அவர் உதவும் நோக்கோடு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். இல்லத்தைச் சுற்றிப்பார்த்த அவர் பெரிய மனதோடு தான் வந்த காரணத்தைச் சொன்னார். மிக பொறுமையாய் அதை உள்வாங்கிய நிர்வாகி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு உதவியையும் மறுத்துவிட்டார்.

நாங்கள் பெரிய வசதியாக இல்லாது விட்டாலும் நாங்கள் ஒரு நிறுவனமாக இருக்கிறோம். எங்களால் ஓரளவுக்கு முடியும். முடியாவிட்டாலும் உள்ளதை வைத்து சமாளிக்கும் வலு எங்களிடம் இருக்கிறது. எங்களைப்போல் நிறுவனமயப்படாது உதிரிகளாக தேடுவோரற்று பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தேடி நீங்கள் உதவுவதே முறையானது என்று அனுப்பி வைத்தார்.

இன்னுமொரு சமூகசேவை மனிதரின்ஆதங்கம் இது. நாங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் உறவுகளிடமும் பணம் வாங்குகிறோம் என்பது உண்மை. வெளிப்படையானது. ஆனால் அவர்களில் மட்டும் தங்கியிருக்காது எங்கள் திட்டங்களை நாமே நகர்த்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறோம். அதில் ஒருவகையில் வெற்றியும் கண்டு வருகிறோம். ஆனால் எங்கள் முயற்சிகளை கொச்சைப் படுத்தும் விதமாக 'உங்களுக்கென்ன வெளியில் இருந்து காசு வருகுது. நீங்கள் சும்மா இருந்து செலவு செய்யிறியள்' என்ற கிண்டல்கள் எங்களை வேதனைப் படுத்துகின்றன. நாங்கள் எங்கள் பலத்தில் நிற்கவே விரும்புகிறோம்.

இதையெல்லாம், உங்களைப் போலவே எனக்கும் நம்புவதற்கு கஸ்ரமாகத்தான் இருந்தது. ஆனாலும் இவ்வாறான மனிதர்கள் இன்னும் பலர் அங்கே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நம்புங்கள்!

-மனோ சின்னத்துரை
 

மூலம்: என்வினவி (WhatsApp)

 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வருடம் சித்திரையில் ஊருக்கு போகும் பொழுது இதைப்பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன்.. இந்த COVIDஆல் எல்லாம் மாறிவிட்டது..

எங்களில் பலர்( உள்நாடு/வெளிநாடு), பல்கலைகழகம் தெரிவான மாணவர்களில் கல்வியை பணபற்றாகுறையால் தொடரமுடியாமல் உள்ளவர்களுக்கு உதவுவது உண்டு.. அது ஒரு வழிப்பயணமாக மட்டுமே இருக்கும்.. ஆனால் கிளிநொச்சியில் இந்த அறக்கட்டளை செய்வது வித்தியாசமானதாக பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்குவதாகவும் தேன்றுவதால் இங்கே இதை இணைக்கிறேன்..

முழுவிபரங்களையும் அறிந்து இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும், ஆனால் இது ஒரு சிந்தனைக்குரிய விடயம்.

கிளிநொச்சி மாணவர்களிற்கு கலங்கரை விளக்கான கல்வி வளர்ச்சி அறக்கட்டளை

January 2, 2020
IMG_9816-696x464.jpg

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் பட்டப்படிப்புக்கான உதவியை பெறுகின்றனர்.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கான உதவியை பெறுகின்றனர். இதில் 609 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யதுள்ளதோடு. 178 மாணவர்கள் உதவியை பெற்ற கற்று வருகின்றனர்.

கடந்த வாரம் உதவி பெறும் பல்கலைகழக மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே இத தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

IMG_9816-300x200.jpgபுலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற உறவுகள், அமைப்புக்கள், உள்ளுர் தனிநபர்கள் உள்ளிட்ட பல நல்லுள்ளம் கொண்டவர்கள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக இவ்வுதவியை வழங்கி வருகின்றனர்.மாணவர் ஒருவர் உயர்ந்த பட்சம் மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் நிதியுதவியை பெற்றுவருகின்றார். மருத்துவம், பொறியியல் தொடக்கம் கலை வர்த்தக பிரிவுகளில் நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்களி்ல் கல்வி பயிலும் மாணவர்கள் இவ்வுதவியை பெறுகின்றனர்.

IMG_9799-300x200.jpgமாதாந்தம் உதவியை பெற்று தங்களின் பல்கலைகழக கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட உதவியை நிரந்த தொழில் ஒன்றை பெற்றப் பின்னர் மீள கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உதவியை பெறுகின்றனர். இவர்களால் மீளச்செலுத்தப்படும் தொகையானது மறுபடியும் புதிதாக உதவிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வழங்கப்படுகிறது.

IMG_9842-300x200.jpgகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக நிதியை பெற்று தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்த 609 மாணவர்களில் 130 மாணவர்கள் மீளச்செலுத்தி வருகின்றனர். 33 மாணவர்கள் முழுமையாக பெற்ற உதவியை மீளச் செலுத்தியுள்ளனர். அத்தோடு தற்போது தங்களின் பல்கலைகழக க்ல்விக்கான உதவியை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 85 காணப்படுகின்றனர்.

 

IMG_9821-300x200.jpgஇவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் அதிபர் பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது இதில் அறக்கட்டளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, மட்டகளப்பு மாவட்ட உளநல வைத்திய அதிகாரி யூடிரமேஸ் ஜெயகுமார், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா, அறக்கட்ளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபாலா, ஓய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

https://www.pagetamil.com/97893/

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  (WhatsApp) மூலம் மனோ அண்ணரிடமிருந்து இக்கதை  வந்தது

கதையின் கரு உண்மைதான்

அவ்வாற  தான் இனி  இருப்பதும்  நல்லது

ஆனால் பழைய மாணவர்களாலும் புலம் பெயர்ந்த அக்கம் பக்கத்தவர்களின் உதவிகளாலுமே 

அதிகம் பாடசாலைகளும் மாணவர்களும் வளர்ந்திருக்கிறார்கள்

அரசு கூட அடுத்த  படிதான்

எனவே உதவிகளை  பெறுவதோ 

கோருவதோ  நல்லதே

ஆனால் அவை திட்டங்களாக 

தேவை  சார்ந்தவையாக  இருக்கணும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ,பிரபா உங்கள் இணைப்புகளுக்கு நன்றி 
 

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய நாட்டில், இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பது பல வெளிநாட்டு அமைப்புகளினால் பாராடப்பட்டது. நாட்டின் இலவச கல்வியின் தந்தையாக CW கன்னங்கரா இன்றும் மதிக்கப்படுகின்றார். பிரிட்டனில் கூட இல்லாத வகையில், இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. அதுமட்டுமா, மகாபொல மானியமும் கிடைக்கும்.

சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் காட்டினாலும், இலங்கை என்னும் நாட்டின் மீது நான் வைத்திருக்கும் பெருமதிப்பு இந்த கல்வி, மருத்துவ காரணமாகவே. இதனை, ஒரு உறவு நையாண்டி செய்ய முனைந்தார். 

என்னை பொறுத்தவரையில், நாட்டுடன் பகை இல்லை, அரசியல் வாதிகளுடன் தான் என அவருக்கு புரிய வைக்க முனைந்தேன்.

ஆனாலும் நன்றி முக்கியமானது. 🙏


 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிருபன், பிரபா இருவருக்கும்
தகவலுக்கு நன்றி.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.