• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nige

அவளும் நானும்

Recommended Posts

ஏனோ இந்த கேள்வி இப்போதெல்லாம் சுயாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் “ சுயா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமோ அதை விட வேகமாக அக்குழந்தை அதை மறந்தும் விடுகின்றது . நாம் வாழும் சூழலும் வாழ்கின்ற வாழ்க்கையும் முன்னுக்கு பின் முரணானது. முரண்பட்ட சூழலில் நேரான ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது நமக்கே கடினமாக இருக்கின்ற போது பாவம் அந்த குழந்தையால் இதை சரியாகப் புரிந்துகொள்ளல் எப்படி சாத்தியம்? ஒரு தாயாக நம் மகள் சோர்வுறும் போதெல்லாம் நீதான்அவளை தட்டிக்கொடுத்தாக வேண்டும். அது உன் கடமையும் கூட” . அவன் இதை சொல்லும் போதெல்லாம் ஒரு தாயாக அதன் உண்மையை அவள் உணர்ந்து கொள்வதுண்டு.ஆனாலும் அவளது மகள் திரும்ப திரும்ப அந்த கேள்வியை எழுப்பும் போது ஒரு நிமிடம் அவள் தன்னை மறந்து வெறுப்பை காட்டி விடுவதும் உண்டு.
                           வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது அத்தனை இலகுவானதல்ல. புகைப்படங்களில் பார்ப்பதற்கு அத்தனை அழகாகவும் வர்ணஜாலமாகவும் தெரியும் இந்த வாழ்க்கை உண்மையில் வாழ்வதற்கு அத்தனை சிரமமானது . அமைதியாக எதையும் சிந்தித்து செய்வதற்கு இந்த வாழ்க்கை எப்போதுமே இடம் கொடுப்பதில்லை. எம்மால் முடியுமோ இல்லையோ அதன் போக்கில் நாம் ஓடியே ஆக வேண்டும். இயந்திரங்களுடனும் தொழில்நுட்பத்துடனும் போராடிப்போராடி மனிதத்தையும் மனிதர்களையும்
மதிக்கத் தெரியாத ஒரு யடமாக வெளிநாடுகளில் மனித இனம் மாறிக் கொண்டிருக்கின்றது. பேசுவதற்கு உறவுகளோ சேர்ந்து விழையாட நண்பரகளோ இல்லாமல் இலத்திரனியல் சாதனங்களுடனேயே போராடும் இந்த குழந்தைகளின் வாழ்க்கை அத்தனை கொடுமையானது. மாறுபட்ட நிறம் மாறுபட்ட மொழி நமக்கு பொருத்தப்படாத வாழ்க்கை முறை இவற்றுடன் தம்மை பொருத்திக்கொள்வதென்பது குழந்தைகளிற்கு உண்மையிலேயே மிகப் பெரிய சவால் என்பது சுயாவிற்கு நன்கு புரிந்திருந்தும் ஏனோ சில நிமிடங்களில் அவள் தடுமாறி விடுவதுண்டு.
                    அவள் தாயாகிவிட்டாள் என்பதை விட ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியதில்தான் அவள் இரட்டிப்பு சந்தோஷமே அமைந்திருந்தது. அவளை சுற்றி இருந்த உறவுகளிற்கு அது ஒரு சிறு ஏமாற்றமாக அமைந்த போதும் சயாவிற்கும் கணவருக்கும் அது பெருமையையே கொடுத்திருந்தது . சுயா தன் வீட்டில் ஒரு தேவதையாகவே வளர்ந்து இருக்கின்றாள். ஆனால் திருமணம் பற்றி அவள் மனதிலும் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருமணத்துடன் ஒரு பெண்ணின் சுதந்திரம் முடிந்து விடும் என்று பலர் சொல்லி அவள் கேட்டிருக்கின்றாள்.தனது சுயத்தை தொலைத்து ஒரு திருமண பந்தத்தை அமைத்து கொள்வதில் அவளிற்கு என்றுமே உடன்பாடு கிடையாது.காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அவளையும் காலம் ஒருவனுடன் இணைத்து வைத்தது. அவனை கைப்பிடித்த பின்புதான் ஆண்கள் மீதே அவளிற்கு மரியாதை வந்தது. அவளிற்கு பெற்றோர் கொடுத்த அன்பும் சுதந்திரமும் மரியாதையும் அவனிடமிருந்து இரட்டிப்பாகவே கிடைத்தது. மொத்தத்தில் அவள் அவனிற்கு ஒரு குழந்தையாகவே மாறி இருந்தாள் . இந்த மாற்றம்தான் அவள் பெண் குழந்தையை விரும்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
                   ஒரு வரமாக தனக்கு கிடைத்த குழந்தையின் வேதனையை நன்கு புரிந்தும் அதற்கான தீர்வு எதுவும் தன்னிடம் இல்லை என்று எண்ணும் போது யாரோ அவளது இதயத்தை நெரிப்பதுபோல் இருந்தது. தமிழனாய்  பிறந்தது தப்பா அல்லது தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனது தப்பா? இதுதான் வெளிநாட்டில் குடியேறியதில் இருந்து அவளுக்குள் எழும் ஒரே கேள்வி.இப்படியே சிந்தனையில் இருந்தவளை “ அம்மா” என்று அழைத்த மகளின் குரல் மீண்டும் அவளை நனவுலகத்நிற்கு கொண்டு வந்தது. 
“என்னடா என்ற சுயாவின் கேள்வியிலேயே ஏதோ ஒரு பயம் இருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே மகள் அதே கேள்வியை திரும்ப ஆரம்பித்தாள்
“அம்மா ஏன் என்னுடைய வகுப்பில் நான் மட்டும் கறுப்பாய் இருக்கிறன். என்ர பிரண்ட்ஸ் எல்லாம் வெள்ளையாய் இருக்கினம். எனக்கு என்ர கலர் பிடிக்கேல்ல. நான் வெள்ளையாய் இருந்தால் தான்
 அவை என்னோட பழகுவினம். ஏன் அம்மா நான் கறுப்பாய் பிறந்தனான் “  என்று மகள் கேட்ட போது அந்த வார்தைகள் அவளது வலியை அப்படியே படம் பிடித்து காட்டின. இந்த நிறம் என்பது எங்கேயும் ஒரு பிரச்சனைதான். நம் நாட்டில் எல்லோரும் ஒரே நிறம் என்றாலும் அதற்குள்ளும் கறுப்பு , பொதுநிறம், வெள்ளை என நாமே நம்மை பிரித்து வைத்துள்ளோம். அழகு என்பது நிறத்தில்தான் தங்கி இருப்பதாக நம்பும்
ஆண் சமூகமும் நிறமாய் இருந்தால் திருமணச் சந்தையில் பெண்களை இலகுவாய் விற்று விடலாம் என நம்பும் பெற்றோரும் வாழும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 
இந்த நிலையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளை மட்டுமே பாடசாலையில் பார்த்து வளரும் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனை வருவது மிகவும் இயல்பானதே என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. 
               இதற்கு என்ன தீர்வு என்பதுதான் அவளிற்கு புரியாமலே உள்ளது. நிற வேறுபாட்டிற்கான காரணங்களை புவியியல் , காலநிலை , பரம்பரை என்ற ரீதியில் அவள் பலமுறை விளக்கி இருக்கின்றாள். ஆனாலும் அவை எதுவும் மகளிற்கு தேவையான பதிலை வழங்கவில்லை என்பது ஒரே கேள்வி திரும்ப திரும்ப அவளிடம் இருந்து வரும்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் இம்முறை வேறுபட்ட கோணத்தில் இதற்கான பதிலை ஆரம்பித்தாள் 
“ செல்லம் நீ ஒன்றும் கறுப்பு இல்லை. உனது நண்பர்களை விட நீ கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கின்றாய். அவ்வளவுதான். வெள்ளை மட்டுமே அழகான நிறம் என்று எண்ணும் உன் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள். நிறங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட அழகை கொண்டவை. கோயிலில் இருக்கும் அத்தனை விக்கிரகங்களும் கறுப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருக்கும் அழகை வேறெங்கும் பார்க்க முடிவதில்லை . அந்த விக்கிரகங்களில் நிறைந்திருக்கும் அன்பும் கருணையும் அமைதியும் எல்லோருக்கும் உதவும் இயல்பும் அவற்றின் அழகை இரட்டிப்பாக்கின்றன. செல்லம் நீ மற்றவர்களுடன் உன்னை ஒரு போதும் ஒப்பிட்டு பார்க்காதே . நான் தான் எனக்கு அழகு என்பதை முதலில் நீ நம்பியாக வேண்டும். அந்த எண்ணம் உனக்குள் ஒரு வைராக்கியத்தை கொண்டுவரும் . எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உன்னுள் தோற்றுவிக்கும் . நான் அழகாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அன்பு  அமைதி அடக்கம் ஒழுக்கம் கருணை போன்ற உயரிய பண்புகளை உன்னுள் நீ வளர்த்து கொண்டால் உன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் நீ அழகாகத் தெரிவாய். மற்றவர்கள் மாதிரி நீ இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட மற்றவர்களிற்கு நீ முன்னுதாரணமாய் இருக்க முயற்சி செய். அது உனக்கு உண்மையான சந்தோஷத்தை கற்றுத்தரும். என்று தன்னால் முடிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் சுயா. 
                 இதை அவள் சொல்லி முடித்த போது அவள் மகளின் முகத்தில் ஒரு தெளிவை அவளால் அவதானிக்க முடிந்தது.இது நடந்து முடிந்து ஒரு ஆறு மாதத்திற்கு மேலாகிவுட்டது. இப்போதெல்லாம் அந்த கேள்வி மகளிடமிருந்து வருவதில்லை. இன்று வழமைக்கு மாறக பாடசாலையில் இருந்து வந்த மகளின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அதை பார்த்த சுயாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இதைத்தான் அவள் எதிர்பாரத்துக் கொண்டிருந்தாள். அவள் அதற்கான காரணத்தை கேட்கும் முன்பு மகளே ஆரம்பித்தாள். 
“அம்மா நீங்கள் சொன்னது சரிதான் . நான்
எல்லோரிலும் அன்பாக இருக்க ஆரம்பித்தேன் . எனது வேலையை சரியாக செய்தேன். மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் நான் நானாக இருந்தேன். இப்போது எல்லோரும் என்னுடன் நட்பாக இருக்க ஆசைப்படுகிறார்கள். என்னுடைய ரீச்சர் நான்தான் மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக சொன்னார். என்று மகிழ்வோடு சொல்லி அவளை இறுக கட்டி அணைத்தாள். சுயாவின் கண்களில் இப்போது ஆனந்த கண்ணீர் .இப்போதுதான்  சுயாவிற்கு நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது.  

நிகே

  • Like 7

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, nige said:

நல்லதொரு கருத்தை அந்த பிள்ளைக்கு கூறியள்ளார் தாய்,

நாம் எம்முடைய வேலைகளை செய்து கொண்டு மற்றவர்களுடன் அன்பாக உதவிகள் செய்து கொண்டிருந்தோம் என்றால் எம்மை சுற்றி நல்லதொரு கூட்டம் அமையும், இது நான் நேரில் கண்ட அனுபவம்.

எரிந்து விழுந்தாலோ அல்லது எரிச்சல் பொறமைகள் இருந்தால் நிம்மதியின்றி மனம் அலையும், அத்துடன் எம்மை சுற்றி இருப்பவர்களும் நிம்மதியை தொலைத்து மன அழுத்த திற்கு தான் ஆளாவார்கள் . 

பாராட்டுக்கள் நல்லதொரு கதை பகிர்வுக்கு

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, உடையார் said:

நன்றி உடையார். இதில் சில கற்பனைகள் இருந்தாலும் பெரும்பாலும் எங்கள் வீட்டில் நடந்த சம்பவத்தைதான் கதையாக்கியிருக்கிறேன். வெள்ளைக்கார பிள்ளைகளை மட்டுமே பார்த்து வளரும் நம் குழந்தைகளிற்கு யதார்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளும்வரை இது ஒரு பெரிய சவால். 

கருத்து பகிர்வுக்கு நன்றி

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, nige said:

நீ ஒன்றும் கறுப்பு இல்லை. உனது நண்பர்களை விட நீ கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கின்றாய். அவ்வளவுதான். வெள்ளை மட்டுமே அழகான நிறம் என்று எண்ணும் உன் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள். நிறங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட அழகை கொண்டவை. கோயிலில் இருக்கும் அத்தனை விக்கிரகங்களும் கறுப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருக்கும் அழகை வேறெங்கும் பார்க்க முடிவதில்லை . அந்த விக்கிரகங்களில் நிறைந்திருக்கும் அன்பும் கருணையும் அமைதியும் எல்லோருக்கும் உதவும் இயல்பும் அவற்றின் அழகை இரட்டிப்பாக்கின்றன. செல்லம் நீ மற்றவர்களுடன் உன்னை ஒரு போதும் ஒப்பிட்டு பார்க்காதே . நான் தான் எனக்கு அழகு என்பதை முதலில் நீ நம்பியாக வேண்டும். அந்த எண்ணம் உனக்குள் ஒரு வைராக்கியத்தை கொண்டுவரும் . எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உன்னுள் தோற்றுவிக்கும் . நான் அழகாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அன்பு  அமைதி அடக்கம் ஒழுக்கம் கருணை போன்ற உயரிய பண்புகளை உன்னுள் நீ வளர்த்து கொண்டால் உன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் நீ அழகாகத் தெரிவாய். மற்றவர்கள் மாதிரி நீ இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட மற்றவர்களிற்கு நீ முன்னுதாரணமாய் இருக்க முயற்சி செய். அது உனக்கு உண்மையான சந்தோஷத்தை கற்றுத்தரும்.

101% உண்மை.. 👌 நன்றி பகிர்விற்கு..👍

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101% உண்மை.. 👌 நன்றி பகிர்விற்கு..👍

வாழ்த்துக்கு நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites

நாம் புலம்பெயர்ந்து வந்த ஆரம்ப காலங்களில் இந்தப் பிரச்சனை எமது குழந்தைகள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போதைய நாட்களில் இங்கு பிறந்து வளரும் குழந்தைகள் மத்தியில் இது அநேகமாக மறைந்து விட்டது. சாதி மதம் நிறம் என்பதெல்லாம் அவர்களுக்கு பெரிய விடயமேயில்லை. நட்புக்கு முதலிடம் கொடுப்பதை அவதானிக்க முடிகிறது. இருந்தும் சில சமயம்  எமது பிள்ளைகள் இப்படியான சந்தர்ப்பங்களை சந்திக்கும் வேளைகளில் பெற்றவர்கள்தான் அவர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுக்க வேண்டுமென இக்கதை சொல்கிறது. நல்லதொரு ஆக்கம். பாராட்டுக்கள் .

Share this post

Link to post
Share on other sites
On 26/7/2020 at 11:15, Kavallur Kanmani said:

இப்போதுதான் இந்த நிறத்துவேசம் அதிகமாய் இருக்கிறது.ஆனால் மறைமுகமாக..உங்கள் அன்பான கருத்துபகிர்வுக்கு நன்றி...

Share this post

Link to post
Share on other sites
On 26/7/2020 at 03:13, nige said:

ஏனோ இந்த கேள்வி இப்போதெல்லாம் சுயாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் “ சுயா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமோ அதை விட வேகமாக அக்குழந்தை அதை மறந்தும் விடுகின்றது . நாம் வாழும் சூழலும் வாழ்கின்ற வாழ்க்கையும் முன்னுக்கு பின் முரணானது. முரண்பட்ட சூழலில் நேரான ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது நமக்கே கடினமாக இருக்கின்ற போது பாவம் அந்த குழந்தையால் இதை சரியாகப் புரிந்துகொள்ளல் எப்படி சாத்தியம்? ஒரு தாயாக நம் மகள் சோர்வுறும் போதெல்லாம் நீதான்அவளை தட்டிக்கொடுத்தாக வேண்டும். அது உன் கடமையும் கூட” . அவன் இதை சொல்லும் போதெல்லாம் ஒரு தாயாக அதன் உண்மையை அவள் உணர்ந்து கொள்வதுண்டு.ஆனாலும் அவளது மகள் திரும்ப திரும்ப அந்த கேள்வியை எழுப்பும் போது ஒரு நிமிடம் அவள் தன்னை மறந்து வெறுப்பை காட்டி விடுவதும் உண்டு.
                           வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது அத்தனை இலகுவானதல்ல. புகைப்படங்களில் பார்ப்பதற்கு அத்தனை அழகாகவும் வர்ணஜாலமாகவும் தெரியும் இந்த வாழ்க்கை உண்மையில் வாழ்வதற்கு அத்தனை சிரமமானது . அமைதியாக எதையும் சிந்தித்து செய்வதற்கு இந்த வாழ்க்கை எப்போதுமே இடம் கொடுப்பதில்லை. எம்மால் முடியுமோ இல்லையோ அதன் போக்கில் நாம் ஓடியே ஆக வேண்டும். இயந்திரங்களுடனும் தொழில்நுட்பத்துடனும் போராடிப்போராடி மனிதத்தையும் மனிதர்களையும்
மதிக்கத் தெரியாத ஒரு யடமாக வெளிநாடுகளில் மனித இனம் மாறிக் கொண்டிருக்கின்றது. பேசுவதற்கு உறவுகளோ சேர்ந்து விழையாட நண்பரகளோ இல்லாமல் இலத்திரனியல் சாதனங்களுடனேயே போராடும் இந்த குழந்தைகளின் வாழ்க்கை அத்தனை கொடுமையானது. மாறுபட்ட நிறம் மாறுபட்ட மொழி நமக்கு பொருத்தப்படாத வாழ்க்கை முறை இவற்றுடன் தம்மை பொருத்திக்கொள்வதென்பது குழந்தைகளிற்கு உண்மையிலேயே மிகப் பெரிய சவால் என்பது சுயாவிற்கு நன்கு புரிந்திருந்தும் ஏனோ சில நிமிடங்களில் அவள் தடுமாறி விடுவதுண்டு.
                    அவள் தாயாகிவிட்டாள் என்பதை விட ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியதில்தான் அவள் இரட்டிப்பு சந்தோஷமே அமைந்திருந்தது. அவளை சுற்றி இருந்த உறவுகளிற்கு அது ஒரு சிறு ஏமாற்றமாக அமைந்த போதும் சயாவிற்கும் கணவருக்கும் அது பெருமையையே கொடுத்திருந்தது . சுயா தன் வீட்டில் ஒரு தேவதையாகவே வளர்ந்து இருக்கின்றாள். ஆனால் திருமணம் பற்றி அவள் மனதிலும் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருமணத்துடன் ஒரு பெண்ணின் சுதந்திரம் முடிந்து விடும் என்று பலர் சொல்லி அவள் கேட்டிருக்கின்றாள்.தனது சுயத்தை தொலைத்து ஒரு திருமண பந்தத்தை அமைத்து கொள்வதில் அவளிற்கு என்றுமே உடன்பாடு கிடையாது.காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அவளையும் காலம் ஒருவனுடன் இணைத்து வைத்தது. அவனை கைப்பிடித்த பின்புதான் ஆண்கள் மீதே அவளிற்கு மரியாதை வந்தது. அவளிற்கு பெற்றோர் கொடுத்த அன்பும் சுதந்திரமும் மரியாதையும் அவனிடமிருந்து இரட்டிப்பாகவே கிடைத்தது. மொத்தத்தில் அவள் அவனிற்கு ஒரு குழந்தையாகவே மாறி இருந்தாள் . இந்த மாற்றம்தான் அவள் பெண் குழந்தையை விரும்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
                   ஒரு வரமாக தனக்கு கிடைத்த குழந்தையின் வேதனையை நன்கு புரிந்தும் அதற்கான தீர்வு எதுவும் தன்னிடம் இல்லை என்று எண்ணும் போது யாரோ அவளது இதயத்தை நெரிப்பதுபோல் இருந்தது. தமிழனாய்  பிறந்தது தப்பா அல்லது தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனது தப்பா? இதுதான் வெளிநாட்டில் குடியேறியதில் இருந்து அவளுக்குள் எழும் ஒரே கேள்வி.இப்படியே சிந்தனையில் இருந்தவளை “ அம்மா” என்று அழைத்த மகளின் குரல் மீண்டும் அவளை நனவுலகத்நிற்கு கொண்டு வந்தது. 
“என்னடா என்ற சுயாவின் கேள்வியிலேயே ஏதோ ஒரு பயம் இருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே மகள் அதே கேள்வியை திரும்ப ஆரம்பித்தாள்
“அம்மா ஏன் என்னுடைய வகுப்பில் நான் மட்டும் கறுப்பாய் இருக்கிறன். என்ர பிரண்ட்ஸ் எல்லாம் வெள்ளையாய் இருக்கினம். எனக்கு என்ர கலர் பிடிக்கேல்ல. நான் வெள்ளையாய் இருந்தால் தான்
 அவை என்னோட பழகுவினம். ஏன் அம்மா நான் கறுப்பாய் பிறந்தனான் “  என்று மகள் கேட்ட போது அந்த வார்தைகள் அவளது வலியை அப்படியே படம் பிடித்து காட்டின. இந்த நிறம் என்பது எங்கேயும் ஒரு பிரச்சனைதான். நம் நாட்டில் எல்லோரும் ஒரே நிறம் என்றாலும் அதற்குள்ளும் கறுப்பு , பொதுநிறம், வெள்ளை என நாமே நம்மை பிரித்து வைத்துள்ளோம். அழகு என்பது நிறத்தில்தான் தங்கி இருப்பதாக நம்பும்
ஆண் சமூகமும் நிறமாய் இருந்தால் திருமணச் சந்தையில் பெண்களை இலகுவாய் விற்று விடலாம் என நம்பும் பெற்றோரும் வாழும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 
இந்த நிலையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளை மட்டுமே பாடசாலையில் பார்த்து வளரும் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனை வருவது மிகவும் இயல்பானதே என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. 
               இதற்கு என்ன தீர்வு என்பதுதான் அவளிற்கு புரியாமலே உள்ளது. நிற வேறுபாட்டிற்கான காரணங்களை புவியியல் , காலநிலை , பரம்பரை என்ற ரீதியில் அவள் பலமுறை விளக்கி இருக்கின்றாள். ஆனாலும் அவை எதுவும் மகளிற்கு தேவையான பதிலை வழங்கவில்லை என்பது ஒரே கேள்வி திரும்ப திரும்ப அவளிடம் இருந்து வரும்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் இம்முறை வேறுபட்ட கோணத்தில் இதற்கான பதிலை ஆரம்பித்தாள் 
“ செல்லம் நீ ஒன்றும் கறுப்பு இல்லை. உனது நண்பர்களை விட நீ கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கின்றாய். அவ்வளவுதான். வெள்ளை மட்டுமே அழகான நிறம் என்று எண்ணும் உன் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள். நிறங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட அழகை கொண்டவை. கோயிலில் இருக்கும் அத்தனை விக்கிரகங்களும் கறுப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருக்கும் அழகை வேறெங்கும் பார்க்க முடிவதில்லை . அந்த விக்கிரகங்களில் நிறைந்திருக்கும் அன்பும் கருணையும் அமைதியும் எல்லோருக்கும் உதவும் இயல்பும் அவற்றின் அழகை இரட்டிப்பாக்கின்றன. செல்லம் நீ மற்றவர்களுடன் உன்னை ஒரு போதும் ஒப்பிட்டு பார்க்காதே . நான் தான் எனக்கு அழகு என்பதை முதலில் நீ நம்பியாக வேண்டும். அந்த எண்ணம் உனக்குள் ஒரு வைராக்கியத்தை கொண்டுவரும் . எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உன்னுள் தோற்றுவிக்கும் . நான் அழகாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அன்பு  அமைதி அடக்கம் ஒழுக்கம் கருணை போன்ற உயரிய பண்புகளை உன்னுள் நீ வளர்த்து கொண்டால் உன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் நீ அழகாகத் தெரிவாய். மற்றவர்கள் மாதிரி நீ இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட மற்றவர்களிற்கு நீ முன்னுதாரணமாய் இருக்க முயற்சி செய். அது உனக்கு உண்மையான சந்தோஷத்தை கற்றுத்தரும். என்று தன்னால் முடிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் சுயா. 
                 இதை அவள் சொல்லி முடித்த போது அவள் மகளின் முகத்தில் ஒரு தெளிவை அவளால் அவதானிக்க முடிந்தது.இது நடந்து முடிந்து ஒரு ஆறு மாதத்திற்கு மேலாகிவுட்டது. இப்போதெல்லாம் அந்த கேள்வி மகளிடமிருந்து வருவதில்லை. இன்று வழமைக்கு மாறக பாடசாலையில் இருந்து வந்த மகளின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அதை பார்த்த சுயாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இதைத்தான் அவள் எதிர்பாரத்துக் கொண்டிருந்தாள். அவள் அதற்கான காரணத்தை கேட்கும் முன்பு மகளே ஆரம்பித்தாள். 
“அம்மா நீங்கள் சொன்னது சரிதான் . நான்
எல்லோரிலும் அன்பாக இருக்க ஆரம்பித்தேன் . எனது வேலையை சரியாக செய்தேன். மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் நான் நானாக இருந்தேன். இப்போது எல்லோரும் என்னுடன் நட்பாக இருக்க ஆசைப்படுகிறார்கள். என்னுடைய ரீச்சர் நான்தான் மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக சொன்னார். என்று மகிழ்வோடு சொல்லி அவளை இறுக கட்டி அணைத்தாள். சுயாவின் கண்களில் இப்போது ஆனந்த கண்ணீர் .இப்போதுதான்  சுயாவிற்கு நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது.  

நிகே

//எனது வேலையை சரியாக செய்தேன். மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் நான் நானாக இருந்தேன். இப்போது எல்லோரும் என்னுடன் நட்பாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.//

சிறப்பான வார்த்தைகள். இது எல்லாருக்கும் பொருத்தமான விடயம்.

Share this post

Link to post
Share on other sites

நன்றாக இருக்கிறது கதை. ஆனாலும் நீங்கள் புதிய உறுப்பினர் போல் தெரியவில்லை. முன்னர் எழுதிய அனுபவம் கொண்டவராக இருக்கிறீர்கள். தொடருங்கள்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கிறது கதை. ஆனாலும் நீங்கள் புதிய உறுப்பினர் போல் தெரியவில்லை. முன்னர் எழுதிய அனுபவம் கொண்டவராக இருக்கிறீர்கள். தொடருங்கள்.

நான் 2007 இல் இருந்து இங்கு எழுதினேன். இடையில் குடும்ப பொறுப்புக்கள் காரணமாக எழுதுவதை நிறுத்தியிருந்தேன். இப்போது பத்து வருடங்கள் கடந்த பின் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.