• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

தன் பெயரை தருமம் செய்த ஆரையம்பதி.!

arayampathyName.jpg

இடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும்.

மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள், அரசியல் வரலாறு, தரைத்தோற்றம், குடியேற்றம், நிலவளம், தொழில்வளம் போன்ற பல்வேறு தகவல்களை இந்த இடப்பெயர்களை முன்னிறுத்தி அறிந்து கொள்ளலாம் என்பதால் இவற்றின் மானுடவியல் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகின்றது.

இந்தப் பின்னணியில், இன்றைக்கு ஆரையம்பதி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரதேசம் / ஊர் / இடம் வரலாற்றில் எவ்வகையான மாற்றங்களைக் கண்டபடி பயணித்திருக்கின்றது என சுருக்கமாக பார்ப்போம்.

ஆரையம்பதி

முன்னர்“ஆரைப்பற்றை” என அழைக்கப்பட்ட கிராமம் திரு.த.நவரெட்ணராஜா மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்த காலமான 1992 இல்,  ஆரையம்பதி என உத்தியோக ரீதியாக மாற்றப்பட்டதிலிருந்து,  ஆரையம்பதி என அழைக்கவும் அறியவும் படலாயிற்று.  இது பரவலாக அறியப்பட்டதொரு தகவலாகும். ஆனாலும் இவ்வூரின் பெயரில் பல வரலாற்றுத் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

முதலாவது, 1992 இல் உத்தியோகபூர்வமாக மாற்றம் செய்யப்பட்ட ஆரையம்பதி எனும் பெயர் புதிதாக உருவாக்கப்பட்டுச் சூட்டப்பட்ட பெயர் அல்ல. அப்பெயரின் பழமையே நூற்றாண்டு தாண்டியவொன்றாகும்.   1941, 1948 களில் முறையே திருநீலகண்ட விநாயகர்,  கந்தசுவாமி ஆலயங்களின் கும்பாபிஷேக பிரசுரங்களில் ஆரையம்பதி என ஊர்ப்பெயர் குறிப்பிட்டிருப்பதும், 1911 ஆம் ஆண்டு தமிழ்நாடு தருமபுரியைச் சேர்ந்த ம.ற.ற.ஸ்ரீ தணிகாசலமுதலியார் அவர்கள் பாடிய ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் பதிகத்தில்

“வாவிகட் சூழ்வரு மேவியம் புரையும்

ஆரையம் பதியெனு மூரசு முடையோன்…..”

(திருநீலகண்டர் அருளமுதம்  – 2008 : பக்  – 34)

என ஆரையம்பதி குறித்து காட்டப்படுவதும்,  1907 ல் கட்டப்பட்ட திருநீலகண்ட விநாயகர் கோயில் மணித்தூணில் ஆரையம்பதி என பொறிக்கப்பட்டிருந்தது என்ற தகவலும்,  அரச பதிவேடுகளில் ஆரைப்பற்றை என இக்கிராமம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை “ஆரையம்பதி” என்றே அழைத்து வந்துள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

ஆரையம்பதியின் குறித்த சில  குடிகளின் பூர்வீகத் தொடர்பு மதுரையம்பதி (மதுரை) என்பதனால் ஆரைப்பற்றை,  ஆரையம்பதி என மாற்றமடைந்தது என திரு.க.சபாரெத்தினம் (ஆரையம்பதி மண் – 2013 : பக்  -16 ) முன்வைக்கும் கருத்தும் இவ்விடத்தில்  பதிவு செய்வது பொருத்தமானதாகின்றது.

Aarai.jpg

ஆரைப்பற்றை

இரண்டாவது விடயம், ஆரைப்பற்றை என்ற இக்கிராமத்தின் முன்னய பெயரும் பழமை வாய்ந்ததொன்றாகும். மாரி காலத்தில் நீரோடுகின்ற, கோடை காலத்தில் வறண்டு ஆரைச்செடி படர்ந்து காணப்படும் வடிச்சல்கள் அல்லது நீரோடைகள் அதிகமாக கொண்ட இடமாக இருந்தமையால் அதாவது ஆரைச்செடி பற்றைகள் அதிகமாக இருந்தமையால் ஆரைப்பற்றை என்ற பெயர் உருவாகிற்று என்பது பெரும்பாலோனர்களது கருத்து. செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக்  கொண்ட மிகவும் சிறிய செடி ஆரைச் செடியாகும். மூலிகைத்தன்மை  வாய்ந்த இச் செடி  Marsilea quadrifolia என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

சங்க இலக்கியமான அகநானூறில், “வெள்ளை வெண் மறி… மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர்” (அகநானூறு 104 : 9-12) என இவ் ஆரைச் செடி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதாவது “வெள்ளை மறியாடுகள் பொது மண்டபமொன்றின் அருகே வளர்ந்துள்ள ஆரின் இருகவர் இலைகளை உண்ணும் சிற்றூர்” என்பது இதன்பொருள். அத்துடன் “ஆர மார்பின் சிறு கோல் சென்னி” (நற்றிணை 265: 4-6)  என ஆர் அல்லது ஆத்தியே சோழ மன்னனின் குலவிருதுச் சின்னம் என்பதற்கான சான்றை நற்றிணையில் காணலாம்.

இதை ஆரைச்செடி என்று கொண்டால், கோரைப்புல் அடர்ந்து கிடந்த குளத்தில் கோடைகாலத்தில் ஆரைச்செடிகள் வளர்ந்ததை திருமந்திரம், “கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது” (திருமந்திரம் 29:11) என்று ஒரு மெய்யியல் குறியீடாகப் பாடுகிறது. இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆரை செடி குறித்து காணப்படும் குறிப்புக்கள் அதன் சிறப்புக்கும் பழைமைக்கும் சான்றுகளாகின்றன.

“ஆரை” என்பது கோட்டை மதில் அல்லது அரண் என்றும் பொருள்படும். ஆரல்வாய்மொழி என்பதில் இருந்து திரிவடைந்த அரவாய்மொழி மற்றும் நாமக்கல் என்பதின் பழைய பெயர் ஆரைக்கல் என்றும் தமிழ்நாட்டில் காணப்படும்  ஆரை என்கின்ற ஈற்றும்பெயர் அரண் என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பேராசிரியர் பாலசுந்தரம் முன்வைக்கும் கருத்துக்களோடு, இன்றைய ஆரையம்பதியில் ஆரைப்பற்றை தெரு என அழைக்கப்படும் தெருவினுடாக ஒடும் ஒடையின் அமைவிடம் வரைதான் மண்முனை ராட்சியத்தின் குடியிருப்பு இருந்திருக்கலாம் (மூனாக்கான – 2016) என கூறப்படும் கருத்தை முன்வைத்து அன்றைய மண்முனை ராட்சியத்தின் எல்லைகளாக அல்லது  அரணாக குறித்த ஒடை காணப்பட்டதா? மண்முனையின் வீழ்ச்சியின் பின் புதர் மண்டியதால் ஆரைப்பற்றை ஆனதா என இயல்பாக எழும்  சந்தேகமும் இங்கு மறுதலிக்க முடியாதவை.

ht265.jpg

இவற்றுக்கு அப்பால் ஆரைப்பற்றை என்பது “அறப்பத்த” என்கின்ற சிங்கள சொல்லின் திரிபு என க.சபாரெத்தினம் முன்வைக்கும் கருத்தை (ஆரையம்பதி மண் – 2013 : பக்  -16 ) சிங்கள மொழியின் தோற்றம்,  பூர்வீக மட்டக்களப்பில் சிங்கள மொழியின் செல்வாக்கு என மறுப்பதற்கான  காரணிகள் பலவுள்ளன.

பொதுவாக நீர் வழிந்தோடு ஒடைகளாலும் அதன் கரைகளில் ஆரை தாவரம் படந்திருப்பதாலும் மட்டக்களப்பு தமிழில் ஆரைப்பற்றை என அழைக்கப்பட்டிருக்கின்றதென்பதே சரியானதான அமைகின்றது.

ஆரையம்பதியல் காணப்படும் சமூக கட்டமைப்பு ஒழுங்கு முறையால் குறித்த சமூகங்களின் பெயரால்  “சாதிப்பெயர்“ தெரு என அழைக்கப்படும் முறைமை காணப்பட,  பெரும்பான்மை சமூகமான பரதவர் சமூகப்பிரிவான குருகுலத்தோர் (கரையார்) வாழ்ந்த தெருக்கள் முகத்துவாரத் தெரு, நடுத் தெரு, ஆரைப்பற்றை தெரு என அழைக்கப்படலாயிற்று.  இதில் முகத்துவாரத் தெரு என்பது 1924 களுக்கு முன்பு அதாவது கல்லடிப்பாலம் அமைக்கப்படும் வரை ஊருக்கு முகமாகவும் நுழைவாயிலாகவும் காணப்பட்டதால் (மட்டக்களப்பு வாவியுடான போக்குவரத்து அக்காலத்தில் காணப்பட்டதும் தீர்வைத்துறை இந்த தெருவில் அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது) ஆரைப்பற்றை தெரு என்பது மேலே கூறப்பட்ட ஆரை ஒடை குறுக்கறுத்து செல்லும் தெரு என்பதனாலும்,  நடுத்தெரு என்பது இரண்டு தெருக்களுக்கும்  மத்தியில் அமைந்திருந்த காரணங்களாலும் அழைக்கப்படலாயிற்று. இத் தெரு முறையை வகுத்து ஒழுங்கமைத்த பெரியர் ஸ்ரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்குதோர்  1858 இல் இறந்தார் என்ற தகவலும் (ஏட்டுக்குறிப்பு , ஆரையூர் கந்தன் – 1999 :  பக் –  46),  ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உற்சவம் சீராக நடப்பதற்கு இத் தெரு முறை உருவாக காரணமாகின்றது என்பதைனையும் கருத்தில் கொண்டு ஆரைப்பற்றை எனும் சொல்லாடல் 1800 களில்  தோற்றம் பெற்றது என கருத முடியும்.

இப்பிரதேசம் ஆரைப்பற்றை என்று 1872 ஆம் ஆண்டு அரசால் பிரகடனப்படுத்தப்படும் வரை காத்தான்குடி என்றே அழைக்கப்பட்டு வந்தது (ஏட்டுக்குறிப்பு, ஆரையூர் கந்தன் – 1999 : பக் – 46). மற்றொரு முக்கியமான விடயமாகும்.

1871 சனத்தொகை கணக்கெடுப்பில் ஆரைப்பற்றை கிழக்கு, ஆரைப்பற்றை மத்தி, ஆரைப்பற்றை மேற்கு என மூன்று பிரிவுகளாக குறிப்பிடப்படும் ஆரைப்பற்றை (Arappettei) என்ற பெயரை (Census – 1873 : pg – 78) அதற்கு முன் அதாவது  1816 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் அவதானிக்க முடியவில்லை. மேலும் 1892 இல் வெளியிடப்பட்ட இலங்கை வரைபடங்களில் குறித்துகாட்டப்பட்ட ஆரைப்பற்றை (Arappettei) 1788 இல் வெளியிடப்பட்ட வரைபடத்தில் குறித்துக்காட்டப்படவில்லை என்பதும்  அவதானத்திற்குள்ளாகின்றது.

மட்டக்களப்பின் பழமையான கண்ணகை அம்மன் கோயில்கள் சார்ந்து பாடப்படும் ஊர்சுற்றுக்காவியத்தில்

நன்நில மதிக்க வரு காத்தநகர் தன்னில் வாழ்

நளினமல ரணயபத நடனசுந் தரியே ……

(பத்தினி வழிபாடு – 1978  : பக் – 7)

என ஆரையம்பதி கண்ணகை அம்பாள் பாடப்படுவது ஆரையம்பதி, காத்தான்குடியிருப்பு என்ற பெயரிலே அழைக்கப்பட்டது என்பதற்கான இலக்கிய சான்றாகின்றது.

1788.jpg

மேலும் 1788 இல் வெளிவந்த வரைபடத்தில் காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) மட்டும் குறித்து காட்டப்பட்டிருப்பதும், 1814 அரச சனத்தொகை கணக்கெடுப்பில் இன்றைய ஆரையம்பதிக்கு இரண்டு பக்கமும் அமைந்துள்ள கிராமங்களான தாளங்குடா, நாவற்குடா குறிப்பிடப்பட, ஆரைப்பற்றை எனும் ஊர் குறிப்பிடப்படாமையும், காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) குறிப்பிடப்பட்டுள்ளமையும். (Population of Ceylon – 1816  :  pg – 118 ) இன்றைய ஆரையம்பதியின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்பதை வரையறுக்க ஏதுவாகின்றது.
இரு வேறுபக்கங்களில் தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் வாழ்ந்த காத்தான்குடியிருப்பு என அழைக்கப்பட்ட இக்கிராமத்தில், இஸ்லாமியர் வாழ்ந்து பக்கத்திற்கு காத்தான்குடி என்ற பெயரை தொடர்ந்தும் பயன் படுத்தப்பட, தமிழர்கள் வாழ்ந்த பகுதிக்கு ஆரைப்பற்றை தெரு எனும் தெருவின் பெயரை ஊர் முழுவதற்கும் சூட்டி யிருக்கின்றனர்  என்பது மேற்படி தகவல்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

வெருகல் ஆற்றில் இருந்து குமுக்கன் ஆறு வரையில் நீண்டு இருந்த மட்டக்களப்பு 1960 இல் அரசியல் காரணங்களுக்காக மட்டக்களப்பு – அம்பாறை என அரசால் பிரிக்கப்பட்ட போது அம்பாறை என்கின்ற இடப்பெயர், மாவட்டம் ஒன்றின் பெயராக மாற்றமடைந்தது என்ற நம்மால் அறியப்பட்ட உண்மையானது காத்தான்குடி இரண்டாக பிரிக்கப்பட்ட போது ஆரைப்பற்றை என்ற தெருப்பெயர் குறித்த கிராமத்தின் பெயராகியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.

மேலும் தமிழ் –  முஸ்லீம் கிராமமான கருங்கொடித்தீவு, பிற்காலத்தில் மட்டக்களப்பின் பற்றுகளில் ஒன்றான அக்கரைப்பற்று என்ற பெயரைச் சூடிக்கொள்ள, இன்று அப்பெயர் முஸ்லீம்கள் வாழும் பகுதியையே பிரதானமாகக் குறித்து நிற்பதையும், கருங்கொடித்தீவு தமிழர் வாழ்ந்த இடம், இருபெயரையுமே இழந்து, இன்று ‘ஆலையடிவேம்பு’ என்ற  பெயரால் அறியப்படுவதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

காத்தான்குடியிருப்பு

இன்று காத்தான்குடி எனும் பெயர் அரசியல் மயப்படுத்தப்பட்டு உரிமைப் பிரச்சனையாகப் பேசப்படும் நிலையில், காத்தான்குடி என்ற பெயருக்கான காரணத்தையும் தேடுவது இங்கு அவசியமாகும்.

ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் வரலாற்றை சொல்லும் ஏட்டுப்பிரதி,  காத்தான் எனும் பெயருடைய வேடன் இருந்தான் என்றும்  இவனது தொழில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் என்றும் இவன் வசித்திருந்த காலம் 1692 எனவும் அதாவது கலிபிறநது 4794 என கூறும் தகவலும், குறித்த காத்தான் வழிபட்ட லிங்க வடிவிலான முகூர்த்தமே ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் தோற்றுவாய்க்கு காரணமாயும் அமைந்திருக்கின்றது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

காத்தான் என்ற வேடன் வாழ்ந்த இடமாகையால் காத்தான்குடி என பெயர் பெற்ற இக் கிராமம், மட்டக்களப்பில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. என 1884 இல் வெளிவந்த இலங்கை பஞ்சாங்கத்தை ஆதாரப்படுத்தி பதிவு செய்கின்றார், மட்டக்களப்பு வரலாற்றை முதன்முதலில் எழுதிய எஸ்.ஒ.கனகரெத்தினம் (Manograph of Batticaloa – 2015 2nd edsion : pg – 121)

1805.jpg

பழுவன், களுவன், புலியன், மஞ்சன், காங்கேயன் என்கின்ற வேடர்களின் பெயரால் பழுகாமம், களுதாவளை, புளியந்தீவு, மஞ்சன்தொடுவாய், காங்கேயன்ஒடை போன்ற இடப் பெயர்கள் அடையாளப்படுத்தப்படுவது போல காத்தன் என்கின்ற வேடுவத்தலைவன் குடியிருந்த இடம் காத்தான்குடியருப்பு என அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதே சரியான காரணமாக அமைகின்றபோதிலும் காத்தானின் காலம்பற்றிய கணிப்புக்கள் முன்பின் முரண்படுகின்றன.

1692 என ஏட்டுப்பிரதி சொல்ல திரு.க.இராஜரெத்தினம் 1612 என குறிப்பிடுகின்றார் ( ஆரையூர் கந்தன் – 1999 : பக் -32).  இவற்றை விட கிடைக்கும் ஒல்லாந்தர் கால குறிப்பு மிகவும் முக்கியமானதாகவும் காலக்கணிப்புக்கான தீர்வாகவும் அமைகின்றது.

1664 – 1675 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக பதவி வகித்தவர், ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ், தன் அறிக்கையில் ஒரு குறிப்பைக் தருகின்றார்.

they ware not futher occupied than a narrow strip of land, stretching from the islet of Poelian to the fisher’s village named Cattencoedereripo, situated 3 hour’s journey from there on the seashore, and subsequently,……….

அதாவது

“போர்த்துக்கேயரால் மிகச் சிறிய நிலப்பரப்பொன்றையே இங்கு கைப்பற்றிக்கொள்ள முடிந்திருந்தது. புலியனின் தீவிலிருந்து கடற்கரையோரமாக மூன்று மணிநேரப் பயணத் தூரத்தில் இருந்த மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு வரையே போர்த்துக்கேயர் ஆதிக்கம் செலுத்தினர்.”

கீழைக்கரையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பற்றிய குறிப்பாக இருந்தாலும் இக்குறிப்பில் வரும் “மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு” என்பது நமக்கு சொல்லும் சேதிகள் முக்கியமானதாகின்றன.

காத்தான்குடியிருப்பு மீனவர் என்று நெய்தல் குடிகளான குருகுல சமூக மக்களையே அவர் குறிப்பிடுவது இன்றைய ஆரையம்பதியை சுட்டிநிற்கின்றது என்பதோடு, வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் ஆளுநராக பதவி வகித்த காலம் 1664 – 1675 என்பதனை கொண்டு  காத்தான்குடியிருப்பு என்ற கிராமத்தின் பெயர்  1664  க்கு பல ஆண்டுகளுக்கும் போத்திகேயர் காலம் அல்லது அதற்கு முந்தியது என நம்பிக்கை கொள்ளலாம். இதன் அடிப்படையில் காத்தான் என்கின்ற வேடன் வாழ்ந்த  காலமும் 1600களுக்கு முந்தியவை என்பது உறுதியாகின்றது.

காத்தனின் காலத்திற்கு முன் ஆரையம்பதி

ஆரையம்பதி கிராமத்தின் தோற்றத்தை ஈழத்துப்பூராடனார் செல்வராசகோபால் அவர்களைப் பின்பற்றி க. சபாரெத்தினம் போன்றவர்கள் கி மு 2 ஆம் நுாற்றாண்டு எனவும்,  மட்டக்களப்பு பூர்வகுடிகளான நாகர்களுடன் (குருகுல நாகர்) என குறித்து க.அமரசிங்கம்(மட்டக்களப்பு தமிழர் பண்பாட்டு மரபுகள் 2015 : பக்–50) க.இராஜரெத்தினம் (பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் 2001 : பக்–46) போன்றவர்கள் நாகர் காலத்துடனும்,  இன்னும் சிலர் உலகநாச்சி காலமான  3 ஆம் நுாற்றாண்டு என்றும் கருதுவர் (மட்டக்களப்பு தேசம், வரலாறும் வழக்காறும் – 2016 : பக்–142)  எவ்வாறாயினும் காத்தானின் காலத்துக்கு முந்திய வரலாற்றை ஆரையம்பதி கொண்டிருப்பது வெளிப்படையானது.

ஆரையம்பதின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்றால் காத்தானின் காலத்திற்கு முந்திய பெயர் எதுவாக இருக்கும் என்பது நம் முன் எழும் அடுத்த கேள்வி. க.இராஜரெத்தினம், முன்னோர்கள் கூறியதாக ஆரையம்பதின் பழைய பெயர் ”ஆலஞ்சோலை” எனும் தகவலை முதன் முதலில் முன்வைக்கின்றார். (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -32).  ஆனாலும்  ஆலஞ்சோலை என்ற பெயருக்கு வேறு சான்றுகளை அவதானிக்க முடியவில்லை.

இதை தவிர்த்து மட்டக்களப்பு பூர்வசரித்திரம், மட்டக்களப்பு மான்மியம் போன்ற மட்டக்களப்பு வரலாறு சொல்லும் நூல்கள் எதிலும் எந்தவொரு குறிப்புக்களும் ஆரையம்பதி சார்ந்து இல்லை என்பது நமக்கு பெரும் ஏமாற்றமாக இருப்பினும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் கோயில் முட்டிகூறும் நிகழ்வில் இவ்வூர் கரையூர் என அழைக்கப்பட்டதற்கு சான்று காணப்படுகின்றது.

குறித்த முட்டிகூறும் நிகழ்வு நிகழ்ந்திருந்த வரை கரையாருக்குரிய முட்டியை ஆரையம்பதி மக்கள் வாங்குவது நடைமுறையாக இருந்துடன், இந்நிகழ்வின்போது   கண்டிராசாவால் பட்டயம் பெற்றவர்கள் “கரை ஊரவர்கள்” எனக்கூறப்படும்  என்ற குறிப்புக்களும் . (தேரோட்டம் 1998 :பக் – 72)

கரையூரார் கம்பிளியா ராறுகாட்டி

கருதுமுதலித்தேவன் வயித்திவேலன்

தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான்

கரையார்குடி… (மட்டக்களப்பு மான்மியம் – 1962 : பக் – 107)

என்ற கரையாரின் குடி சொல்லும் பாடலில் காணப்படும் பெரும்பாலான குடி வழியினர் ஆரையம்பதியில்  காணப்பட  கரையூரார் என்பது ஒரு ஊரை நேரடியாக குறித்து நிற்கின்றது எனவும் கருதவாய்ப்பிருப்பதன் அடிப்படையிலும். காத்தானுக்கு முந்தைய காலத்தில் கரையூர் என ஆரையம்பதி அழைக்கப்பட்டிருக்காலாம் எனவும் எண்ணத்தோன்றுகின்றது.

மேலும் மண்முனை ராட்சியம் எழுச்சியுடன் இருந்த காலத்தில் அது இன்றைய புதுக்குடியிருப்பு தொடக்கம் இன்றைய ஆரையம்பதி முகத்துவாரத்தெரு வரை (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -31).  அதன் முன்னரங்க காவல் அரண்கள் இருந்தாக கூறப்படும் ஐதீகங்களின் அடிப்படையில் ஆரையம்பதின் காத்தான் காலத்துக்கு முந்தைய பெயர் மண்முனை என்றே இருந்திருக்க வேண்டும் எனவும் சிலர் கருதுவார்.

முடிவுரை

இற்றைக்கு நாறு வருங்களுக்கு முன்னர் , 1911 இல் இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட கிராமங்களின் வரிசைப்படுத்தலில், இலங்கையில் 31 ஆவது இடத்தை பெறும் ஆரையம்பதி கிராமானது, கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட தமிழ் கிராமங்களில் அதிக சனத்தொகை கொண்டதாக முதன்மைபெறும் (CENSUS OF CEYLON, 1911 : pg – 392) போக்கிலும், குறித்த கிராமத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் வழக்காறு போன்றவற்றில் காணப்படும் தனிதுவமும் பழமையும் சிறப்பாக அடையாளப்படுத்தப்படும் போக்கிலும் ஆரையம்பதி மிகநீண்ட வரலாற்று பாரப்பரியத்தை கொண்டிருப்பது நிதர்சனமானது.

இருப்பினும் மட்டக்களப்பு வரலாற்றை பேசும் ஆரம்பகால குறிப்புகள், மட்டக்களப்பு மாண்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் ஆரையம்பதி சாந்து எந்த குறிப்புக்களும் காணப்படாத நிலையில் இப்பிரதேசத்தின் வரலாறு சார்ந்து பேசும் போது, இடப்பெயர் பற்றிய தேடல் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றது.

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இன்று ஆரையம்பதி என அறியப்படும் பிரதேசம் ஆரைப்பற்றை, காத்தான்குடியிருப்பு என்ற பெயர்களாலும் அதற்கு முன் ஆலஞ்சோலை, கரையூர் மண்முனை என்ற பெயர்கள் கொண்டும் அறிப்படுகின்றது என்கின்ற புரிதல், வரலாற்றை கட்டமைக்கும் போது, குறித்த பிரதேசத்தின் வரலாற்றை சரியான முறையில் அணுக வழிகோலும் என்பதுடன் இன்று தேற்றுவிக்கப்படும் உரிமைப் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளியிடுவதற்கான தொடக்க புள்ளியாக அமையும் என்பதும் திண்ணம்.

prasad-300x250.jpg

பிரசாத்  சொக்கலிங்கம்,

ஆவணாளாளர் ,

கிழக்கு ஈழ மட்டக்களப்பு மண்ணை சேர்ந்த பிரசாத் சொக்கலிங்கம் ஆவணப்படுத்தல் பணிகளில்  தீவிரமாக இயங்கி வருபவர்.

https://www.vanakkamlondon.com/arayampathy-s-prasad-19-07-2020/

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • முதல்வர் வேட்பாளர் யார்?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை.! சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டசபைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிக்கான வலுவான முகத்தை இறக்க முடிவு செய்துள்ளன. அதன்படி திமுகவுக்கு ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிமுகவில் இந்த முடிவில் பல குழப்பங்கள் உள்ளன. அண்மையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு அதிரடி பதிலை அளித்தார். அதாவது 2021-ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினர்கள் கூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர் என தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜியோ, எடப்பாடியாரே முதல்வர் என ட்விட்டரில் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் வரும் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தெரிகிறது. https://tamil.oneindia.com/news/chennai/admk-is-discussing-about-cm-candidate-394344.html
  • காவிரிக்கரையின்  தோட்டத்திலே .......!   😁
  • தற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்  -நமது கடமை என்ன? சென்னை: தற்போதைய நிலை தொடர்ந்தால் இனி யானைகள் தினம் என்பது மட்டும் இருக்கும்; யானைகளே இருக்காது என்கிற நிலை உருவாகிவிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினத்தை முன்னிட்டு (ஆக.12) சீமான் வெளியிட்ட அறிக்கை: உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகத்து 12 ஆம் நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், மின்சார வேலிகள், தண்டவாளங்கள் , தோட்ட வெடிகள், உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்படும் இன்னல்களால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது பெரும்வேதனையளிப்பதாக உள்ளது. விலங்கினங்களில் தனித்துவமிக்கச் சிறப்பு வாய்ந்த உயிரினம் யானை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. உயிரினங்களில் அதிக நினைவுத்திறனும் உடையவை. யானைகள் காடுகளில் இருக்கும்போது, பெரிய மரங்களின் இளம் கிளைகளை ஒடித்து உணவாக உட்கொள்கின்றன. மேல்மட்ட கிளைகளை ஒடிப்பதால், சூரிய ஒளி அடர்ந்த காட்டின் தரையை அடைய முடிகிறது. தேவையான சூரிய ஒளி கிடைப்பதால், புற்கள் அதிகம் வளர்ந்து, தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன. மேலும், கீழே விழும் இலை தழைகளையும் மற்ற தாவர உண்ணிகளான முயல், மான், காட்டெருமை போன்றவை உணவாக்கிக் கொள்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளுக்கு உணவு கிடைக்கின்றது. எனவே உணவுச்சங்கிலியில் யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. யானைகள் ஒரு நாளில் 300 முதல் 350 வரை விதைகளை விதைக்கிறது. தன் வாழ்நாளில் சராசரியாக 18 இலட்சம் மரங்கள் வளரக் காரணமாக உள்ளது. அழிந்த 22 வகை யானைகள் இத்தகைய பல்லுயிர்ச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த யானைகள் மனிதர்களின் தன்னலத்தால் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பதுதான் மறுக்கவியலா உண்மை. ஆதிகாலத்தில் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகள் இனங்களில் இதுவரை 22 வகைகள் அழிந்து தற்போது, உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா என இருவகை யானைகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் மொத்தமே 3,500 யானைகள் 1900 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கோடியாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 1990-களில் பத்து இலட்சமாகக் குறைந்தது. தற்போது ஆப்பிரிக்காவில் 5 இலட்சம் யானைகளும் , ஆசியாவில் 1 இலட்சம் யானைகள் மட்டுமே உள்ளன. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஏறத்தாழ 31,000 யானைகளும் தமிழகத்தில் 3,500 யானைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. 8 மாதங்களில் 17 யானைகள் பலி 17 யானைகள் மரணம் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 3000 யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மாதந்தோறும் 8க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன. யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் எனப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (IUCN) எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு எத்தனை பாதுகாப்புச்சட்டங்கள் இயற்றியிருந்தாலும், அரசுசாரா நிறுவனங்களும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், யானைகள் அழிக்கப்படுவதும் அழிவதும் குறைந்தபாடில்லை. யானைகள் இருக்காது யானைகள் இனி இருக்காது இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது. மிருகக்காட்சி சாலைகளிலும், திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் , புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அரிய வகை உயிரினமாக யானைகள் மாறிப்போகும். ஏற்கனவே, மனிதர்களால் முற்றாக அழிந்துபோன உயிரினங்களால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், அதிக வறட்சி, குறுகிய நாளில் அதிக மழைப்பொழிவு, திடீர் புயல்கள் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம் விடப் பல மடங்கு தாக்கத்தை, ஆபத்தைச் சூழலியலில் ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையல்ல. கடுமையான சட்டங்கள் தேவை ஆகவே, இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய-மாநில அரசுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் தளர்த்திட முனையக்கூடாது. அது வனவிலங்குகளுக்கும் நாட்டின் வளங்களுக்கும் மட்டுமின்றி எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கே தவிர்க்கமுடியாப் பேராபத்தினை விளைவிக்கக் கூடும். நமது கடமை என்ன? மேலும், சூழலியல் பாதுகாப்பு குறித்த அரசின் சட்டங்களையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதும், தவறான சட்டங்களை எதிர்த்துப் போராடுவதும், சரியான சட்டங்களை மதித்து முறையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். தன்னலம் விடுத்துத் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும், மலைகள், அருவிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கூறுகளையும் நேசித்து, பாதுகாத்து இப்புவியை உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்ததாக அடுத்தத் தலைமுறைக்குக் கையளிப்பதே நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-on-world-elephant-day-394292.html
  • மாவை சேனாதிராசா மனக்கிலேசமடைந்திருந்தால் நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம்: சரணடைந்தார் சுமந்திரன்.! மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி தலைவர் இதனால் எந்த மனச்சஞ்சலமும் பட வேண்டியதில்லை. கட்சித் தலைவர் இதனால் வருத்தப்பட்டால் நானும் சிறிதரனும் இதனால் வருத்தப்படுகிறோம். தலைவரை கட்சித் தலைமையிலிருக்கு நீக்குவதாக சொல்லப்படவில்லை, அப்படியொரு எண்ணமுமில்லை, இப்பொழுது தலைமையில் மாற்றம் தேவையில்லையென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் அதற்கு எதிர்மாறான கருத்தையே ஊடகங்கள் சொன்னதால், அதனால் தலைவருக்கு எதாவது மனவருத்தம் ஏற்பட்டால் அதற்கு மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறென். மாவை சேனாதிராசா எமது கட்சியின் தலைவர். கட்சி பின்னடைவை சந்திக்கின்ற போது தலைமையிலிருப்பவர்கள் தோற்பது வழக்கம். அது ஒரு அறிகுறி. அதனால் அவர் தோற்றிருக்கிறார். எங்களுடைய பொதுச்செயலாளரும் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது எங்களிற்கு பெரிய தோல்வி. 10 ஆசனங்கள் கிடைத்தது என்பது எமக்கு பெரிய தோல்வி. மாவை சேனாதிராசாதான் என்னை அரசியலுக்கு இழுத்தவர். பலர் சொல்வது- சம்பந்தன்தான் என்னை அரசியலுக்கு இழுத்ததாக. அதில் சிறிய உண்மையுண்டு. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்றத்தில் 2 முறை நாடாளுமன்ற ஆசனம் காலியானது. அந்த இரண்டு முறையும் அந்த இடத்திற்கு என்னை நியமிக்க மாவை சேனாதிராசா முயற்சித்தார். நான் இணங்கவில்லை. ஆனால் போர் முடிந்த பின்னர் நாம் சில சட்ட வரைபுகளில் ஈடுபட்டதால், 2010இல் சரத் பொன்சேகாவுடனான இணக்கப்பாட்டை வரைவதில் ஈடுபட்டதால், அதன் பின்னர் சம்பந்தனும், மாவவையும் என்னை அழைத்தார்கள். அப்போது மறுத்தேன். பின்னர் சம்பந்தன் தனியாக பேசிய பின்னர் ஒத்துக் கொண்டேன். மூன்று முறையும் மாவை சேனாதிராசாதான் என்னை அழைத்தார். தேசியப்பட்டியல் எம்.பியான பின்னர், பியசேன கட்சி மாறியதால், என்னை அம்பாறையை பார்க்கும்படி சொல்லியிருந்தார். என்னை அம்பாறைக்கு அழைத்து சென்று, அங்குள்ளவர்களை அறிமுகம் செய்தார். சென்ற பாராளுமன்ற தேர்தலில் சேனாதிராசாதான் எனக்காக அதிகம் பிரச்சாரம் செய்தார். இன்று எங்கள் இருவருக்குமிடையில் பெரிய சர்ச்சையிருப்பதை போல ஊடகங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது தவறு. அப்படியான ஒரு போட்டியோ, சர்ச்சையோ கிடையாது. நான் அவர் மீது வைத்துள்ள ஒரேயொரு குற்றச்சாட்டு மற்ற வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது, நான் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதே எனது குறை. ஒரேயொரு முறை- விமலேஸ்வரி குற்றச்சாட்டு சுமத்தியபோது நடவடிக்கையெடுத்தார். ஏனைய சந்தர்ப்பங்களில் நடவடிக்கையெடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் நான் இதை சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் சுமந்திரனை தோற்கடிப்போம் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியானபோது, அந்த பத்திரிகை பிரதிகளை கொள்வனவு செய்து விநியோகித்தேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிகை உரிமையாளர் சக வேட்பாளர் என்பதால் பேசாமலிருந்தேன். கே.வி.தவராசா என்பவரின் பெயர் எமது தேசியப்பட்டியில் இருந்ததால், அவர் என்னைப்பற்றி பொய்யான செய்திகளை சொன்னபோதும், நான் பேசாமல் இருந்தேன். ஏனெனில், அவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். தேர்தல் முடிந்த பின்னர் நான் சொல்கிறேன். தேர்தலிற்காக பேசாமல் இருந்தேன். இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் நடவடிக்கையெடுக்கவில்லையென்றே தெரிவித்தேன். அவர் எனக்கு எதிராக செயற்பட்டார் என சொல்லவில்லை. தேசியப்பட்டியல் விவகாரம் சம்பந்தமாக 7ஆம் திகதி இரவு நானும், சிறிதரனும் மாவையை சந்தித்து பேசினோம். தேசியப்பட்டியல் பற்றி சிறிதரன் கேட்டார். அதற்கு அவர், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சசிகலா ரவிராஜை யோசிக்கலாம் என்றார். அதைத்தான் சம்பந்தனிடம் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலின் முன்னர் நியமன குழுவில், முதலாவது ஆசனம் திருகோணமலையை சேர்ந்த குகதாசனிற்கு வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்னுடைய நிலைப்பாடு- எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அம்பாறையின் தேவையென்பது மிக முக்கியமானது. நான் அறிந்தபடி, 1931ஆம் ஆண்டின் பின் அம்பாறையில் ஒரு தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை. அதை குறித்து சிந்தித்து கட்சி தலைவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், என்னுடைய நிலைப்பாடு எடுத்த தீர்மானத்தின்படி நாம் ஒழுக வேண்டுமென்பதுதான். அதை தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைகள் அவசியமில்லை. பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தம்முடன் பேசவில்லையென சொல்லியுள்ளனர். நான் கட்சி தலைவர் அல்ல. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அது பற்றி சம்பந்தன் ஐயா பேசியிருப்பார் என நினைக்கிறன். அது பற்றி மேலதிக விளக்கமெதுவும் நான் கொடுக்க முடியாது என்றார் http://www.pagetamil.com/139949/
  • இதை நான் முன்னரும் எழுதி இருந்தேன். இரணைமடு குளத்துக்கு மகாவலி நீரை திசைதிருப்பிய கையுடன் இது அமோகமாக நடக்கப்போகின்றது. இதட்கு வடக்கு மாகாண சபையின் முதல்வரும், மாவையும், ஸ்ரீதரனும்தான் பொறுப்புக்கூற வேண்டும். கொண்டச்சி கஜூ பார்மில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும் ஆரம்பமாக நடவடிக்கை எடுப்பதாக அறியக்கிடைக்கிறது.