• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Recommended Posts

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Last updated Jul 27, 2020

சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!)

தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யாரோ ஒரு தேசவிரோதியின் காட்டிக்கொடுப்பால், புலிகளின் தாக்குதலை எதிரிப் படைகள் முன்டூட்டியே அறிந்துகொண்டன. இதனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த கணிசமான படையினரைக் குறித்த முகாம்களுக்கு வரவழைத்து ஆட்பலத்தை ஒருங்கு திரட்டிய சிங்களத் தளபதிகள், தமது பிரமாண்டமான படைக்கல சக்தியை (Fire Power) சில குறித்த பகுதிகளை நோக்கி இலக்குவைத்து, தாக்க நகர்ந்த புலிகளை எதிர்பாராத வகையிலும், எதிர்பாராத இடங்களில் இருந்தும் தாக்குனர்; இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் 180 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஆயினும், அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய புலிகளின் படையணிகள். வீரத்துடன், சமயோசிதத்துடனும் போராடி, வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்துக் குறைந்த இழப்புடன் திரும்பினர்; இல்லையேல் இதைவிடப் பலமடங்கு சோகத்தைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 
“எதிரியை விடத் துரோகியே ஆபத்தானவன்” என்ற தலைவரின் கூற்றின் தார்ப்பரியத்தை இந்தச் சோக நிகழ்ச்சி துல்லியமாகக் காட்டி நிற்கின்றது.
 
எமது விடுதலைப் போரின் இராணுவ பரிமாணம், இன்று உலகமே வியக்கும் வகையில் வளர்ச்சி கண்டுவிட்டது. முன்னர் சிறிய தொகையினரான போராளிகள், தாம் விரும்பிய இடத்தில் வைத்து, ஒரு குறித்த தொகையினரான படையினரைத் திடீரெனத் தாக்கு அழுத்துவிட்டு, அடுத்தகணமே மறைந்துவிடுவர். ஆனால், இப்போதைய தாக்குதல்களின் இரனுவப்பரிமானம் அப்படியல்ல. ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக் கணக்கில் படையினர் நிலை கொண்டுள்ள இராணுவக் கிராமங்களைத் தேடிச் சென்று தாக்கி, நிலைகளை விடுவிக்க முயலும் அதி உயர் வடிவத்திற்கு, விடுதலைப்போரின் இராணுவப் பரிமாண வளர்ச்சிக்கேற்ப சில பிரத்தியேகப் பிரச்சினைகளையும் ஒரு விடுதலை இயக்கம் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது இந்தப் பிரச்சினைகளில் பிரதானமானது தாக்குதலின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பது சம்மந்தப்பட்டது.
 
அடுத்து, எதிர்பாராத நெருக்கடிகளால் தாக்குதல் முயற்சி ஆபத்தில் சிக்கிக் கொண்டால் ஏற்படும் இழப்பு சம்மந்தப்பட்டது.
 
ஒரு சிறிய தொகைப் போராளிகள் மேற்கொள்ளும் ஒரு கெரில்லாத் தாக்குதலின் இரகசியத்தன்மை மக்களுக்குத் தெரியவர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால், பேருண் தொகைப் போராளிகள் பங்குகொள்ளும் ஒரு பாரிய படைக்கல அழிப்பின் இரகசியத் தன்மை, ஒரு குறித்ததொகை மக்களுக்கும், ஏதோ ஒருவகையில் கசிய வாய்ப்புக்கள் உண்டு. இந்த நிலையில் இரகசியம் பேணுதல் என்பது, ஒரு சிறிய கெரில்லா அணியின் ஒருசில வீரர்களின் கடமை என்ற தன்மை மாறி, மக்களின் கடமை என்ற விரிந்த நிலை தவிர்க்க முடியாது எழுகின்றது. இந்தக் கட்டத்தில்தான், மக்களாகிய நாம் பொறுப்புணர்ச்சியுடனும், விழிப்புணர்வுடனும் போராட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் போராளிகள் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். எமது படையணிகளின் பிரயாணங்களை அல்லது புதிய இடங்களில் எமது படையணிகளின் திடீர்ப் பிரசன்னங்க்களை (தங்குதல்களை) காணும் மக்கள், அவை பற்றிய செய்திகளையோ அல்லது ‘இந்த முகாமுக்கு அடி விழப்போகுது’ என்ற தங்களின் ஊகங்கலையோ எவருடனும் கதைக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு கதைக்கும்போது அப்படியே ‘காதுமாறிக் காதுமாறி’ உளவாளியின் காதுகளுக்கும், அந்த அதி உயர் இரகசியம் சென்றுவிட்டால், அதன் விளைவுகள் ஒரு தேசிய இனத்தையே துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது.
 
எமது மண்ணில் நிலைகொண்டிருக்கும் எதிரிப் படைகளின் பலம் பாரியது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, பாரிய படைபலத்தைக் கொண்ட இந்தப் படை முகாம்களைத் தாக்கி அழிப்பது என்பது சாதாரண விடயமல்ல. எதிரியின் காவல் நிலைகளையும், அந்தக் காவல் நிலைகளின் ஆயுதபலத்தையும் மற்றும் எதிரி முகாமின் பாதுகாப்பு வியூகங்களையும் கண்டறிந்துகொள்வதுடன், எதிரி முகாமின் மொத்த ஆள், ஆயுத பலத்தையும் அறிந்த பின்னே அந்தப் படைமுகாமைத் தாக்கி அழிக்கத் திட்டம் தயாரிக்க முடியும். இந்தளவு இராணுவ விபரங்களும், எதிரி முகாமினுள் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டிருக்க மாட்டா. (எரிமலை இதழில் வெளிவந்த பதிவை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் )ஒவ்வொன்றாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்; சேகரிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் சரிபார்க்கப்பட்ட வேண்டும்; சரி பார்க்கபப்ட்ட பின் அந்த அந்தப் புவியல் அமைப்பிற்கும், ஆயுத பலத்திற்கும் ஏற்றாற்போல் தாக்குதல் திட்டங்களை வகுக்க வேண்டும்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஏற்றவாறு பல்வேறு தாக்குதற் தந்திரோபாயங்கள் வைக்கப்பட வேண்டும். எனவே, எதிரி முகாம் மீதான தாக்குதல் நாளன்று முதலாவது துப்பாக்கி வெடிக்க முன்னரே, வேவுப் போராளிகள் பல உயிரிழப்புக்களைச் சந்தித்தபடி ஒரு வேவுச் சமரையே நடாத்தி முடித்திருப்பார்கள்.
 
தாக்குதற் திட்டங்கள் நன்றாக வரையப்பட்டாலும்கூட அது தடங்கள் எதுவ்மின்ரி நடைமுறைப்படுத்த வேண்டும். ;கண்ணுக்குள் என்னே இட்டுவிட்டு காவல் நி;லைகளில் காத்திருக்கும் எதிரிப் படையாட்களின் கண்களில் மண்ணைத் தொவிவிட்டு, அவர்களது காவல் நிலைகளுக்கு அருகே அலது அதை ஊடுருவி உள்ளே சென்று தாக்குதலை நடாத்துவது என்பது, சாதாரண விடயமல்ல. எதிரி முகாம் நோக்கி பல முனை நகர்வுகளில் ஏதாவது ஒரு நகர்வை, எவனாவது ஒரு எதிரிச் சிப்பாய் கண்டுவிட்டால், அந்த முகாமே விழித்துக் கொள்ளும். வெளிச்சக் குண்டுகள் மூலம், இரவு பகலாக்கப்படும். ‘வந்தா வா! போனாப் போ! என்று கருதி விதிக்கப்படும் பெரும்போக நெல் விதைப்பைப் போல, எதிரியின் எறிகணைகள் மிஉகாமைச் சூழ அள்ளி விதிக்கப்படும். அந்த எறிகணை விதைப்பிற்கு நீர் பாய்ச்சுவது போல ரவைமழை பொழியும். இந்த வெடிமருந்துப் புயலுக்குள் நின்றுபிடித்து, நிலை தடுமாறாது, எதிரிப் படைகளைச் சுட்டு வீழ்த்தி, அவனது நிலைகளைக் கைப்பற்றுவது என்பது சாதாரண விடயமல்ல. நூற்றுக்கணக்காக வரும் எதிரி வீரர்கள் முன்பாக, கோயில் நந்திபோல் நின்று, எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் ‘ராம்போ’ திரைப்படப் பாத்திரத்தைப் போல நியமான பொற்காலம் நிச்சயமாக இருக்காது.
 
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஈரான் நாட்டின் தலைநகரான ‘தெஹ்ரானில்’ பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தனது குடிமக்களை மீட்கவென, அமெரிக்க வல்லரசு ஒரு பாரிய தாக்குதற் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த அதனது கடற்படைக் கப்பலில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கென புறப்பட்ட உலங்கு வானூர்த்தி அணி ஒன்று, ஈரானின் பாலைவனத்தில் பயலுக்குள் சிக்கி விபத்திற்கு உள்ளானதால், இரண்டு உலங்கு வானூர்திகளையும், சில படை வீரர்களையும் அது இழந்ததுடன் மீட்பு முயற்சியுமே நிறைவேறாது போனது. இதே போலவே, எகிப்திய விமானம் ஒன்றைக் கடத்திச் சென்ற எகிப்திய தீவிரவாதிகள், அந்த விமானத்தை லிபிய நாட்டு விமானத் தளமொன்றில் நிறுத்திவைத்திருந்த போது, 40 பேர் கொண்ட எகிப்திய கொமாண்டோ அணி ஒன்று வான்வழி சென்று, திடீர்த் தாக்குதலைத் தொடுத்து, தமது விமானத்தையும், பயணிகளையும் மீட்க ஒரு துணிகர முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சியில் 40 கொமாண்டோக்களையும் எகிப்திய அரசு பரிகொடுத்துவிட்டது. திட்டமிட்டுச் செல்வதும், எதிர்பாராத ஒரு தடையால் அல்லது காட்டிக்கொடுப்பால் திட்டம் நிறைவேறாது இழப்புக்களுடன் திரும்புவதும், அல்லது திரும்ப முடியாமல் தாக்குதல் அணிகள் அழிந்துபோவதும், போரியல் யதார்த்தம் ஆகும்.
 
இதேவேளை, எதிர்பாராத ஒரு இக்கட்டுக்குள் பல்லாயிரம் பேர் கொண்ட ஒரு படையணி சிக்கி அழிந்துபோக வேண்டிய அபாயத்தில் இருக்கும்போது, அழிவைக் குறைப்பதற்காகப் போர் புரிந்து, கலத்தைவிட்டுப் பின்வாங்கி மீண்டுவரும் வெற்றிகரச் சமர்களை உலக வரலாற்றில் காணலாம். ‘டங்கேக் சமர்’ என்ற ஒரு புகழ்பெற்ற சமர் உண்டு.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, பிரான்சு தேசம் ஜெர்மனியிடம் வீழ்ந்தபோது, பிரான்சில் நிலைகொண்டிருந்த ஆங்கில பிரான்சு கூட்டுத் துருப்புக்கள் முன்றரை இலட்சம் பேர் போரிட்டபடி பின்வாங்கி இங்கிலாந்து மீண்டதை, “அற்பதமான ஒரு மீட்பு நடவடிக்கை” என்று வின்சற் சேர்ச்சில் வர்ணித்துள்ளார். அதாவது, போரிடச் சென்றபடி எதிர்பாராத விதத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்போது, படையாட்களை அழியவிடாது மீட்டுவரும் செயலும் வெற்றியின் ஒரு அம்சம்தான்.
 
துணிவிலும், தாக்குதற் திறனிலும், போர்த் திட்டத்திலும், சிங்களப் படைகளைவிட புலிகள் இயக்கம் மேலோங்கி நிற்கின்றது என்பது, உலகிற்கே தெரியும். “மூன்றாம் ஈழப்போர்’ ஆரம்பித்த நாளில் இருந்து அடுத்தடுத்த இராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகள் இயக்கம், சிங்களப் படைக்கு ஒரு தொடர் சோகத்தைக் கொடுத்தது.
 
* சிங்களக் கடற்படையின் அதி சக்திவாய்ந்த சண்டைக் கப்பல்கள் இரண்டை (சூறையா, ரணசுறு) திருகோணமலைத் துறைமுகத்தினுள் கரும்புலிகள் மூழ்கடித்த போதும்….
 
* அடுத்தடுத்து இரண்டு ‘அவ்ரோ’ விமானங்களை விழுத்தி சுமார், 100 படையினரைக் கொன்ற போதும்…..
 
* தென் தமிழீழத்தில் கட்டுமுறிவு, தரவைக்குளம் உட்பட பல படைமுகாம்களையும் பல ரோந்து அணிகளையும் அழித்து சில நூறு பேரைக் கொன்ற போதும்….
 
* மண்டைதீவுக்குள் புலி வீரர்கள் புகுந்து 120 படையினரைக் கொன்று, ஆயுதக்கிடங்க்கையும் கைப்பற்றி வந்தவேளையிலும்…….
 
* ‘புலிப்பாய்சலில்’ புக்காரா வீழ்த்தப்பட்டு எடித்தாரா மூழ்கடிக்கப்பட்டு, 150 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்ட போதும்…………..
 
சிங்கள தேசம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்து, இடிந்துபோய் இருந்தது.
 
ithyaththil-ndnatha-perunjamar.jpgஇவ்விதம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுவந்த தமிழினம், 28.07.1995 அன்று, மணலாற்றில் ஒரு பேரிழப்பைச் சந்தித்து விட்டது. ஆயினும், அந்தப் பேரிழப்பிலும் ஒரு பெரும் நிம்மதி உள்ளது. அதாவது, தாக்குதலின் இராணுவ பரிமாணமும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட ஆட்லறி தகர்ப்பும், மற்றும் பேராபத்தை எதிர் கொண்ட போதும் ஒப்பீட்டளவில், குறைந்த இழப்புக்களுடன் புலிகளின் படையணிகள் பாதுகாப்பாக மீண்டுவந்த நிலையம், இழப்புக்கள் ஏற்படுத்திய சோகத்துக்குள்ளும் நிம்மதி அளிக்கின்றன.
 
நாங்கள் ஒரு சமரை (Battle) வெள்ளத் தவறிவிட்டோம் என்பது உண்மைதான்; ஆயினும், விடுதலைப் போரில் (War) இன்றும் நாம் முன் நிலையிலயே இருக்கின்றோம்!
 
இதேவேளை, திட்டமிட்டபடி ஐந்து முகாம்கள் மீதான அந்தப் பெருந்தாக்குதல் வெற்றிகரமாக நடந்திருந்தால், சிங்களப் படைகளின் பாரிய புதைகுழியாக மணலாறு மாறியிருக்கும்; அது சிங்கள தேசத்தையே உலுக்கு எடுக்கும். எனவே, தமிழீழம் ஒரு பேரிழப்பைச் சந்தித்தது என்பதைவிட, எதிரிச் சேனை மயிரிழையில் தப்பித்துவிட்டது என்பதே இந்தத் தாக்குதல் தொடர்பான சரியான மதிப்பீடாகும்.
 
சுருக்கமாகச் சொன்னால் 28.07.1995 அன்று பெருந்தாக்குதல், ‘யானைக்குக் குறிவைத்து குறிதவறிய வேலுக்கு ஒப்பானதே.’ தமிழ்வேதம் தந்த வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல….. ‘முயலுக்கு எய்து அதைக் கொன்ற அம்மைவிட, யானைக்குக் குறிவைத்து வீசி, இலக்குத் தவறி வீழ்ந்த வேலுக்கே பெருமை அதிகம்.’
 
யாரோ ஒரு கோடாரிக்காம்பின் தேசவிரோதச் செயலால், மணலாற்றைத் துவம்சம் செய்துகொண்டு நிற்கும் ‘யானை’ தற்காலிகமாகத் தப்பிவிட்டது.
 
ஆனால், இனிமேலும் வேல்கள் வீசப்படும்.
 
வெளியீடு :– எரிமலை இதழ்  (செப்டம்பர்  1995)
 
 
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 

https://www.thaarakam.com/news/144736

 

Share this post


Link to post
Share on other sites

மகளிர் படையணிகளின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிறுத்தியே இந்த தாக்குதல் கட்டமைக்கப்பட்டது. 

இத்தாக்குதல் நிறைவில் சிங்கள ராணுவம் தனது கோர முகத்தை வித்துடல்களில் காட்டி இருந்தது. 

இதற்கான பதில் முல்லைத்தீவில் அடுத்த வருடமே வழங்கப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this