Jump to content

இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்

 

 

Maaveerarkal-of-Operation-Ithayaboomi-scaled.jpg

‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!

மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழகத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.

லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்

Lieutenant-Thirumalai-Nambi.jpg

லெப்டினன்ட் திருமலைநம்பி

ஹயசேன, மின்னல், சிக்சர், செவண்பவர் என்றெல்லாம் மணலாற்றில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை முறியடித்தபோது எம்மோடு துணை நின்ற திருமலைநம்பியே! உன் மலைபோன்ற வீரத்தை நாம் மறந்துவிடமுடியுமா…?

மணலாறு தமிழீழகத்தின் ‘இதயம்’ என்பதை உன் இதயத்தில் பதித்து செயல்புரிந்த வீரனே! நீ பிறந்த மண் கொழும்புத்துறையா மணலாறா என்று தடுமாறவைத்தவனே! உன் உணர்வுகளை, உன் நினைவுகளை இலகுவில் அழித்து விட முடியுமா…?

சண்டைக்குச் செல்லும் போதெல்லாம் , “மச்சான் நான் இந்தச் சண்டையில் செத்திடுவன்;;; நான் சண்டைபிடிக்க செத்த முழு விபரத்தையும் வீட்டிலபோய் மறக்காமல் சொல்லிப்போடு” என்று கேட்பாய்.

பொறுப்பாளனென்பதை மறந்து தோழமையோடு பழகினாய். போர் வாழ்வில் உன்னுடன் வாழ்ந்த கால நினைவுகள் எண்ணில. அவற்றில் சிலவற்றை மட்டுமே நினைத்துப்பார்க்குச் சக்தி எனக்குண்டு. என் சக்திக்கு அப்பாற்பட்டவன் நீ. அதனால்தான் என்னை முந்தி சாதனை வரிகளில் பிறந்து நிற்கிறாய்.

மண்கிண்டிமுகாம் தகர்ப்புக்காகச் செல்லும்போது எம்மையெல்லாம் ‘வீடியோ’ படம் எடுத்ததும், அப்போது நீ சொன்னதையும் நினைத்துப்பார்க்கிறேன்.

‘வீடியோ’ கமெரா உன்னை நோக்கித் திரும்பியபோதெல்லாம் எழுந்து, எல்லோருக்கும் முன்னே வந்து நின்றாய். “ஏன் மச்சான் எழும்பி முன்னுக்கு முன்னுக்குப் போய் நிற்கிறாய்’ என்று கேட்டேன்.

“நான் இந்தச் சண்டையின் செத்தால் அண்ணன் என்னை அடிக்கடி போட்டுப் பார்ப்பாரில்லையா?” என்று, பதில் சொன்னாய். தலைவன் உன் கடைசி வீரத்தைப் பார்க்கவேண்டுமென்று தீர்மானித்துத்தான் இதைச் சொன்னாயோ…?

நீ எழுந்ததும், இருந்ததும், விழுந்ததும் இன்னும் என் மனத்திரையில்…

Lieutenant-Nakkeeran.jpg

லெப்டினன்ட் நக்கீரன்

நக்கீரா! நீ பிறந்த பழுகாமத்துக்கு வழு ஏற்படக்கூடாதென நினைத்த மறவனே! கடைசி நிமிடம் வரை உனக்கிருந்த மனக்குறையை வரிகளாக்கி, தமிழ் மக்களின் முன் வைக்கிறேன்.

“எல்லா தாய் தகப்பனும் வந்து வந்து தங்கட பிள்ளையள உயிரோட பாத்திட்டு போயிட்டாங்க அம்மா மட்டும் ஏன் இன்னும் வரவில்லை நான் இந்தச் சண்டையில் செத்தா பொடியக்கூட பார்க்க வரமாட்டாவா மச்சான்…” என்று, கடைசி நிமிடத்திலும் உன் மனதில் கிடந்த மனக்குறையை, ஏக்கத்தை வெளியிட்டாய். உன்னை உன் தாய் பார்க்கக் கொடுத்துவைக்காமல் போகலாம் ஆனால் உன் வீரத்தை கேட்டு நிச்சயம் கண்கலங்க, நிறைவு கொண்டிருப்பாள்.

நக்கீரா! உனக்கு உன் தாயைக் காணவில்லை என்று குறை. ஆனால் நாமெல்லாம் உன்னில்தானே எம் தாயைக் கண்டோம். உன் செயலில்தானே எம்தாயின் அன்பைப் பெற்றோம். நாம் காயப்பட்டிருந்தபோதும், நோயுற்றிருந்த போதும் அருவரூப்பின்றிக் காயம் கழுவியது… கருணையோடு பராமரித்தது…. இதைவிட உலகத்தில் உயர்ந்த பணி என்ன உண்டு? தாயிடந்தான் தூய அன்னைப் பெற முடியுமென நினைத்த எமக்கு, ஒரு போராளியிடமும் அதைப் பெறமுடியுமென்பதை உணர்த்திவிட்டாய். தாயை டிவன்றுவிட்டாய். தலைவன் சரியாகத்தான் வளர்த்தார் என்பதை நிலைநிறுத்திவிட்டாய்.

‘மின்னல்’ தாக்குதலில் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு, ஓடி ஓடி நீ செய்த மருத்துவப்பணி சாதாரணமானதா…? எழுத்தில் வடிக்கக்கூடியதா…? சொல்லி முடிக்கக்கூடியதா…?

நக்கீரா! மற்றவர்கள் உன்னைப் பேசியபோதெல்லாம் மௌமாக இருந்து பின் சிரித்துப் பேசுவாயே, அது எப்படி உன்னால் சாத்தியமானது! பொறுமையை உன்னிடமிருந்துதானே சிறிதளவாயினும் நான் கற்றுக்கொண்டேன்.

ஒரேயொருமுறை நீ கோபமுற்றதையும் எவருடனும் பேசாது மௌனமாக இருந்ததையும் கண்டிருக்கின்றேன். ‘செவண்பவர்’ இராணுவ நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற படையணியில் இடம் பெறமுடியாது போனபோது, உனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா….? அன்றுதான் நீ நக்கீரனாய் நின்றாய். உன் ஈரநெஞ்சிலும் கனல் பறப்பதை அன்றுதான் கண்டேன். உனது கோபத்துக்குக் காரணம். நியாயமான கோபந்தான். ஆனால் உன் பெரும் பணியொன்றினைக் கருதியே, தளபதி உன்னை அக்களத்துக்கு அனுப்பவில்லையென்பதை அறிந்து, கண் கலங்கி நீ நின்ற நாளையும் நான் மறந்துவிடவில்லை.

‘இதயபூமி’ தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த போது செத்துவிழுவதாக நடித்தலும,; விழுந்த உன்னை நான் தூக்கிச் சென்றதும், பின்பொத்தென நிலத்தில் போட்டதும் நிஜமாக மாறிவிடும் என்று, நான் நினைக்கவில்லையடா!

தாக்குதலுக்குப் புறப்படும்போது “என்ன, நக்கரன்ர முகம் வித்தியாசமாய்க் கிடக்கு சாகப்போறன் போல கிடக்கு” என்று நான் சொன்னதும்.. சொன்னது நிகழ்ந்ததும்…

ஒரு தாயை இழந்நுவிட்டோம். உணர்கின்றோம். ஆனால், உன் உயிர் இதயபூமியை புனிதமாக்கி விட்டது. அங்கே உன்குருதியால் பதிந்த புதிய வரலாற்று வரிகள்…!

Lieutenant-Gandhi.jpg

லெப்டினன்ட் காந்தி

பெற்ற தாயும், இரத்தத்தில் உற்ற உறவினரும் பிறந்த பொன்னாட்டைவிட்டுச் சென்றபோதும், ‘தாயகமண்ணின் காற்று என் உடலைத் தழுவவேண்டும் வீழும் என் உடலில் பிறந்த பொன்னாடு புகழ்பெறவேண்டும் போகும் உயிரும் பாயும் குருதியும் வீசும் காற்றாய், முளைவிடும் தளையின் நீராய் மாறவேண்டும்’ என்று கருதி களம் புகுந்தவன் காந்தி.

ஆற்றலுள்ள தலைவன் காலத்தில் மானத்தை நிலைநாட்டிவிட வேண்டுமென்ற துடிப்போடு, இதய பூமியில் கால் பதித்தான். கிடைத்தது சிறிதாயினும் கொடுத்துண்டு வாழ்வது தமிழன் பண்பு. தமிழிலக்கியங்களில் இதைப் படித்திருக்கின்றேன். இக்கருத்தின் நிஜத்தை காந்தியில் கண்டிருக்கின்றேன். சாப்பிட அமர்ந்தால் சூழ இருக்கும் தன் தோழர்களுக்கு ஒவ்வொரு பிடி கொடுக்காவிட்டால், இவனுக்குச் சாப்பாடு இநங்காது. தனக்கு குறைவயிராகிப் போய் விடுமேயென்று ஒரு போதும் நினைத்திருக்க மாட்டான்.

பணிவும் இன்சொல்லும் காந்தியின் அணிகலன்கள். பேச்சில் இனிமை, செயலில் கனிவு நிறைந்த காந்தி களத்தில் தன் துணிவைக் காட்ட ஒருபோதும் பின்நின்றதில்லை. மணலாறு கண்ட களமெல்லாம் வீரவிளையாட்டில் இறங்கியவன்.

‘இதயபூமி – 1’ தாக்குதலுக்குச் செல்லும்முன், ‘நல்ல கடல் குளிப்பொன்று குளிக்கோணு’மெனச் சொல்லி, நாயாற்றுக்கடலில் குளிக்கச் சென்றோம். “மச்சான், இது கடைசிக்குளிப்பாயிருக்குண்டு நினைக்கிறன்” என்று, குளித்துக் கொண்டிருக்கும் போது சொன்ன அவனது வார்த்தையில், எவ்வளவு தீர்க்கதரிசனதிருந்தது!

கடைசி நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வழமைபோல் காந்தியும் அமர்ந்தான். அதுதான் அவன் எம்மோடு பகிர்ந்துண்ட கடைசி நாள்.

“மச்சான், எல்லா மாவட்டப்பெடியளும் இந்த சண்டைக்கு வந்திருக்கிறதால, நாங்கள் எங்கட கடைசிப் பவறினை சண்டையில் காட்டோணும். மணலாற்றைப் பற்றிநிக்கிற புகழை நிலை நாட்டிப்போடோணும்” என்று சொல்லிய போது, எவ்வளவு உறுதியிருந்தது!

காந்தி நிச்சயம் சாந்தி கொண்டே கண்மூடியிருப்பான். ஐந்தே நிமிடத்தில், மண்கிண்டி பிரதான முகாமிக்கு முன் காப்பாய் இருந்த மினிமுகாமைத் தாக்கியழித்து முன்னேறிய போது…. அந்தக் கடைசிநிமிடத்தில் பெருமையோடு உறங்கிய உன்விழிகள்…!

Lieutenant-Villavan.jpg

லெப்டினன்ட் விமலன்

விமலா! மன்னாரிலிருந்து வந்த நான், தோப்பூரிலிருந்து வந்த உன்னை மணலாற்று மண்ணில் சந்திக்கின்றேன். வடக்கிலிருந்து வந்த நானும் கிழக்கிலிருந்து வந்த நீயும் இதயபூமியில் இணைந்து வாழ்ந்தகால நினைவுகள் இனிமையானவை. ஆனால், இதயபூமி – 1 தாக்குதல் நடவடிக்கையில் நீ பிரிந்தபோது, துயரம் நிறைந்து துடிக்கின்றேன்.

விடிகின்ற ஒரு வரலாற்றில் உன் முடிவை எழுதிக்கொண்டதை நினைத்து, பெருமையில் விம்மிப்புடைக்கின்றேன். ஆனாலும், என்னைவிட்டு எப்படி உன்னால் புகழின் உச்சிக்குச் செல்ல மனம் வந்தது? அதை நினைக்கும்போது உன்மீது பொறாமையும் ஏற்படுகின்றது.

சிங்கள இராணுவத் தளபதிகளைக் குழப்பி நிலைகுலைய வைத்த இதயபூமி – 1 நடவடிக்கையில் மரணித்த உன் வீரவரலாற்றை, எம் தலைவன் புரட்டிப்பார்க்கின்றேன். நீ பாக்கியசாலி அவர் நெஞ்சில் உயர்ந்து நிற்குமளவிற்கு சாதனை வீரனாகிவிட்டாய்.

நீ தோப்பூரில் பயிற்சி முடித்ததும், அங்கேயே களம்பல கண்டதும், விழுப்புண் சுமந்ததும், மணலாற்றுக்கு வந்த ஒருமாதகால நடைப் பயணத்தில் துயர்கள் பலவற்றைச்சந்தித்ததும், மணலாற்றுப் பாசறை வாழ்வில் தினமும் கதையாகச் சொன்னபோது கேட்டிருக்கின்றேன். மிகக்குறைந்த வயதில் விடுதலைக்கு உன்னை அர்ப்பணிக்கத் துணிந்ததை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்.

மண்கிண்டி இராணுவ முகாம் தசர்ப்புச்குச் சென்ற அன்றைய இரவு. நீ ஆணித்தரமாகச்சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் நிற்கின்றன.

“இந்த இடத்தில் எங்கட எத்தின பெடியளப் பறிகொடுத்திருக்கிறம் இந்த முகாமை அழிச்சு எங்கட கொடியினை இதில் பறக்கவிடோணும்” என்று கூறி, ஆக்கிரோஷத்துடன் முகாமிற்குள் பாய்ந்து தாக்கினாய். அணியணியாய் எம்வீரர்கள் முகாமிற்குள் பாய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த நீ…

மண்கிண்டியின் உச்சியில் கொடி பறந்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உன்னைத் தேடினேன். ஆனால் நீ… மௌனமாகக் கிடந்த உன்னைத் தூக்கி தோளில் சுமந்து….

Lieutenant-Thuraikannan.jpg

லெப்டினன்ட் துரைக்கண்ணன்

அரசியல்ஞானம், கலைஞானம், போர்த்திறன் என மூன்று திறமைகளும் ஒரு மனிதனிடம் கூடிப்பிறப்பது அரிது. எமது தலைவனிடத்தில் நிறைந்துகிடக்கின்ற இந்தத் திறமைகள், அவரது வளர்ப்புக்களிடம் குறைவின்றிக் காணப்பட்டாலும், சிலரிடமே முழுமையாகக் கிடக்கின்றன. துரைக்கண்ணனிடம் இந்தத் திறமைகளின் நிறைவைக் கண்டிருக்கின்றேன்.

சினம், கோபம், குரோதம் எப்படியென்பதை அறியாத பொறுமைசாலி. பொறுப்பாளன் என்பதை மனதிற்கொண்டு கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் அன்பில் வழிப்படுத்தும் பண்பாளன்.

தற்பெருமை, தற்புகழ்ச்சிகளை விரும்பாத குணசீலன். சகதோழர்களுக்கு வித்தைகள் செய்துகாட்டி, மகிழவைக்கும் வித்தகன். களங்களில் விழுப்புண் சுமந்த துணிவாளன். மைதானத்தில் இறங்கினால் போட்டியாளன் கலங்கும் விளையாட்டு வீரன். எடுத்த எடுப்பில் மேடையில் ஏறி நாடகமோ, கவிதையோ வடித்துக்காட்டும் கலைஞன். சுருக்கமாகச் சொன்னால், துரைக்கண்ணன் ஒரு சகலகலவல்லவன்.

துரைக்கண்ணனின் அந்த உயர்குணங்கள் போராளிகள் அனைவரையும் கவர்ந்தன. அவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே மொய்த்திருக்கும். விக்ரம் என்றால் வன்னியில் தெரியாத போராளிகள் இல்லை. போராட்ட வாழ்வில் அவனுடன் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளுமே பசுமையாய் இனிமையாய்த் தெரிகின்றது.

பாசறையில் அவனில்லாத கலை மண்டபம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கின்றேன். கண்மூடினால் கனவெல்லாம் அவனுடன் சேர்ந்து நாடகம் நடிக்கின்றேன். ஒவ்வொரு மாவீரரைப்பற்றியும் கவிதையோ ‘விழுதுகளோ’ எழுதிப் படித்துக் காட்டிவிட்டு, “பிழையிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வருவது போன்ற பிரமை.

காலையில் கண்விழிக்கும்போது, பாரம் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் துரைக்கண்கனே முன்னால் நிற்பான்.

“எப்படி மச்சான், நெஞ்ச அகலமாகியிருக்குதோ? ‘வீ கட்’ அடிக்கிறதா?” என்ற கேட்டான்.

“ஏன் மச்சான் இப்படிக் கஸ்ரப்படுகிறாய்’ என்று கேட்டால், ‘கனரக ஆயுதங்களைத் தூக்கிவச்சு அடிபடோணுமெண்டால் சுமாயிருந்தால் சரிவருமே மச்சான்” என்று பதிலிறுப்பான்.

‘வீட்டுக்கொரு புலிவரணும்’ என்ற பாடலை எந்தநேரமும் இவனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.

வட்டக்கச்சியில் தாயும் தந்தையும் சகோதரியும் வறுமையால் வாடியபோதும், துரைக்கண்ணன் அதை நெஞ்சில் போட்டுக் கொண்டதில்லை. போராட்டத்துடன் ஊறிப்போன தன் குடும்பத்தவர்கள், தான் துண்டு கொடுத்து வந்திடுவன் என்று பயப்பிடாமல் இருக்கவேண்டுமெனக்கூறி கவிதைகள் எழுதி வீட்டுக்கு அனுப்புவான். உறுதிமிக்க வீரனை – பாசம்மிக்க நண்பனை – இழந்நுவிட்டதை நினைக்கும்போது நெஞ்ச முட்டுகின்றது.

மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது என் அருகே ஓடிவந்தான்.

“மச்சான், இந்தச் சண்டையில் தப்பினா மணலாற்றில் நின்ற நாட்களைப்பற்றி ஒரு நாடகம் எழுது, நடிப்பம் நான் செத்திட்டா என்னைப்பற்றி கவிதை எழுதி வாசித்துவிடு – விழுதுகள் எழுதுக் கொடுத்துவிடு” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மனம்விட்டு அழவேண்டும்போலுள்ளது.

போர்வாழ்வில் இன்னும் அவன் சேவைகள் இருக்க வேண்டுமென நினைத்தோம், தன் சேவை போதுமென்று கருதிப் போய்விட்டான்….!

2nd-Lieutenant-Siyamani.jpg

2ம் லெப்டினன்ட் சியாமணி

பிறந்த மண்ணில், இருந்தால் குற்றம், சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம். தொடர்ந்தும் திருமலை நகரில் வாழ்வதா அல்லது வீணே சாவதுதான் முடிவா என்ற கேள்விக்கு, விடைகாண முடியவில்லை. தாமதித்தால் சாவு நிச்சயம் என்ற உண்மை 1990 இன் பிற்பகுதியில் ஏற்படத் தொடங்கியது. அங்கிருந்து வெளியேறுவது என்ற முடிவோடு படகேறினான் சியாமணி.

வாள்வெட்டுக்கும் கடற்படையின் பீரங்கிக்கும் இரையாகாமல் எஞ்சிவந்த படகுகள், மணலாற்றுக் கரையைத் தொட்டன. படகிலிருந்து கரையிரங்கிய அன்றே, தென் தமிழீழகத்தில் நாம் வாழவேண்டுமாயின், மணலாறு சுதந்திரப் பூமியாக இருக்க வேண்டுமென்ற உணர்வு. அவனிடம் கருக்கொண்டது.

முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிப்புகப் பிரதேச சுதந்திரபுரம் கிராமம், அவனது தாய்தந்தையரின் இருப்பிடமாகியது. குழந்தையுள்ளம் மாறாத வயது. கண்முன் நிகழ்ந்து முடிந்த கோரநிகழ்வுகள் அவனுள்ளதைப் பெரிதும் பாதித்திருந்தன.

படுத்து கண்ணுறங்கமுற்பட்டால் வீடுகள் எரிவது, குழந்தைகள். பெண்கள் வாள் வெட்டுக்கு இரையாகித் துடிப்பது எல்லாம் நினைவுத்தொடராய்வந்து, அவனைத் துன்புறுத்தின.

இரவு பகலாக பலநாள் அழுதிருக்கின்றான் தூக்கத்தில் விழித்திருந்து அழுவதைவிட, விடுதலைப் போரில் விடிவுக்கு வழியமைத்து நிநை;தரமாகத் தூங்குவதுமேல், என்ற பாசறை தேடினான்.

பாசறையில், பயிற்சிக்காலம் அவனுக்குத் துன்பமாகப்படவில்லை. ஏனெனில், அதைமிஞ்சிய துன்பங்களை அவன் சந்தித்துவிட்டான். போர்வாழ்வு அவனுக்கு அமைதியைக் கொடுத்தது.

நடு இரவு. தாக்குதலுக்குச் சில நிமிடங்களே இருந்தன. மண்கிண்டி முகாம் அவன் கண்களில் துல்லியமாய்த் தெரிந்தது. மனத்திரையில் வாள்வெட்டு…. வீடெரிப்பு….. உடலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இத்தாக்குதலின் வெற்றி தென்தமிழீழப் போருக்கு உத்வேகம் கொடுக்கும் உன்ற உணர்வு மேலோங்கியது.

தாக்குதல் தொடங்கியது. சியாமணி மின்னலாய்ப் பாய்ந்தான். எங்கும் ஒரே முழக்கம். வெற்றியின் ஆரவராம். முகாம் தகர்ந்தது. தமிழ்த்தாய் தன்னைக் கைநீட்டி அழைப்பது, சியாமணியின் கண்களுக்குத் தயாராகிவிட்டான். சியாமணியைத் தூக்கி என் தோளில் சுமந்து கொண்டு…..

Lieutenant-Eezhaventhan.jpg

லெப்டினன்ட் ஈழவேந்தன்

கிராமியத்துக்குரிய மிடுக்கு, தோற்றம் அனைத்தும் நிறைந்தவன் ஈழவேந்தன். ஈழவேந்தனால் அவன் பிறந்த கனகராயன்குளம் புனிதமடைகின்றது. அவனால் அவன் பிறந்த மண்ணுக்குப் பெருமை ஒரு வீரப்புதல்வனைப் பெற்றதால் அவன் பெற்றோர்க்குப் பெருமை.

மணலாற்றுக் காட்டின் போர்ப்பாசறையில் போர்க்கலை பயின்ற ஈழவேந்தனுக்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் களமுனைகள் கிடைத்தன.

பொறுமையும், பொறுப்பும், செயல்திறனும் இவனிடம் குறைவின்றி இருந்தன. கோபத்தை அடக்கியாளும் வல்லமையும் அதிகமுடைய இவனது முகத்தில். இனம் புரியாத சோகமொன்று என்றும் இழையோடிக்கிடக்கும். யாரிடமும் அதைச் சொல்லிப் பகிர்ந்துகொண்டதில்லை.

ஈழவேந்தன் சென்ற போர்க்களங்கள் பலவாக இருந்தாலும், வெற்றியைக் குவிந்த களங்கள் சிலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

1991 ஆம் ஆண்டு மாசித்திங்களில் முல்லைத்தீவு இராணுவ முகாமின் முன்னணிக் காவலரண்களைத் தாக்கி அழித்து, பன்னிரண்டு எஃப். என். சி. மூன்று மினிமினி எல்.எம்.ஜி.துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.

1992 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில், முல்லைத்தீவு இராணுவ முகாமின் முக்கிய காப்பரண்களைத் தாக்கி, 50 கலிபர் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.

மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு. மணலாற்றில், தலைவனின் காலடியில் பயிற்சிபெறும் வாய்ப்புக்கிட்டியபோதே, மணலாற்றின் முக்கியத்துவம் இவன் நெஞ்சில் பதிந்து கொண்டது இதயபூமி – 1 தாக்குதல் நடவடிக்கைக்கு, வன்னியிலிருந்து புறப்பட்ட அணியில் இடம் பெற்றபோதே, மணலாற்றுப் பயிற்சிக்கால நினைவுகள் அவன்மனதில் நிழலாடத் தொடங்கின. அன்று மனதில் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியால், தன்மனதில் உறைந்துகிடந்த சோகத்தையும் வாய்விட்டுக் கூறினான்.

“வீட்டில் சரியான கஸ்ரம் மச்சான். இந்த சண்டையில் பெரிய சாதனையை நிலை நாட்டோணும். உயிரோட திரும்பிவந்தால், வீட்டுக்கஸ்ரத்தைச்சொல்லி வீட்ட ஒரு தடவை போய்ப்பார்த்து, உதவி செய்துவிட்டு வரலாம்” என்று சொல்லி, வீட்டு நிலைபற்றி மனம் விட்டுப் பேசினான். அவன் சொல்லியபடி சண்டையில் சாதனை நிலைநாட்டினான். ஆனால் வீட்டுக்குப் போகுமுன் நாட்டுக்காய் விடைபெற்றுக்கொண்டான்….!

Lieutenant-Kuyilan.jpg

லெப்டினன்ட் குயிலன்

யாழ். மண்ணிலிருந்து மணலாற்றுக்கு வந்தபோது, மணலாற்றுக்காடுகளும், பறவைகளும் குயிலனுக்குப் புதிய அனுபவங்களாயின. இலகுவான வாழ்க்கை முறையிலிருந்து கடினமான வாழ்க்கை முறைக்கு அடியெடித்துவைக்கும் போது, துன்ப அத்தியாயங்கள் அதிகமிருந்தபோதும், இராணுவத்தால் அனுபவித்த துன்பங்களின் முன்னே இது துரும்பாகத் தெரிந்தது குயிலனுக்கு.

ஏழாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிமுடித்தகையோடு, முல்லைத்தீவு இலங்கை இராணுவ முகாம் மீதான தாக்குதற்களம் காத்துக்கிடந்தது. மிதிவெடிவைக்கும் திறமை மிகுதியாக இருந்ததால், அதற்கான சிறப்புப் பயிற்சியோடு களத்துக்கு விரைந்தான்.

மிதிவெடிவைக்கும் பணியில் குயிலனது வலதுகரம் போனதும், யாழ். சென்று சிகிச்சை பெற்றதும், ஒரு கரத்துடன் என்முன் வந்துநின்றதும், ஒரு சோகம்கலந்த வீர வரலாறு.

கரமொன்று போனபின் சண்டை செய்ய வேண்டுமென்ற துடிப்பு குயிலனிடம் மேலோங்கியது. தனது உள்ளக்கிடக்கையைத் தளபதியிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டான் தளபதியும் அவனது ஆசைக்குத் தடைபோடவில்லை. ஆனால் அவனது பொறுப்புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அணியொன்றின் பொறுப்பாளனாக நியமித்தார். பொறுப்பாளனாக இருக்க விரும்பாத குயிலன், சாதாரண வீரனாயிருந்து இரண்டு மூன்று சண்டைகள் செய்த பின், பொறுப்பாளனாக வருவதையே விரும்பினான். அதையும் வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டான். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.

குயிலன், மணலாற்றில் பெரும்பாலான களங்களில் மனமாரச் சண்டை செய்தாலும், சில சண்டைகளுக்கு தன்னைக் கூட்டிச் செல்லாததையிட்டுக் குறைப்பட்டிருக்கின்றான் – அழுதிருக்கின்றான். அழுதாவது சண்டைக்குச் செல்லஅனுமதி எடுத்துவிட வேண்டுமென்ற சண்டைக்காரன் குயிலன்.

‘இதயபூமி – 1’ நடவடிக்கைக்கான பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, குயிலன் சலிப்பும் களைப்புமின்றி பயிற்சியீலீடுபட்டான். இயலாவாளி என்று தன்னைக் கூட்டிச்செல்லாமல் விட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு.

பயிற்சி முடிந்து அணிகள் வகுக்கப்பட்டபோது, தளபதியின் கை தன்னை நோக்கி அசையுமா என்ற ஆவலோடு இசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அசைந்தது! குயிலனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியில் அவன் அடித்த மரியாதை வணக்கம், இன்னும் கண்முன் நிற்கிறது!

Lieutenant-Vasan.jpg

லெப்டினன்ட் வாசன்

தென்தமிழீழத்தில், கோவில்போரதீவு கிராமத்தில் பிறந்தவன் வாசன். இராணுவத்துக்கு அஞ்சி காடுகளில் உறங்கி வாழ்ந்தது – பள்ளிக்குச் செல்லமுடியாது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது – துடிக்கத் துடிக்க வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர்கள் – இராணுவ முகாம்களில் தூங்கிய தமிழரின் எலும்புக்கூடுகள் – பாலியல் வன்முறைகளையெல்லாம் வாசனால் எப்படி மறக்கமுடியும்? இராணுவத்தை அழிக்கவேண்டுமென்பதை விட, அவர்களின் தலையை வெட்டவேண்டும் – அவர்களின் தலை துடிப்பதைப் பார்க்கவேண்டும் – என்ற ஆத்திரம் தன்னுள் நாளுக்கு நாள் அதிகரித்தபோதே களத்துக்கு வந்தவன்.

மணலாற்றுப் போர்வாழ்வில் தென்தமிழீழத்தில் நடக்கும் இராணுவ வெறியாட்டம் பற்றியே அடிக்கடி கதைத்துக்கொண்டிருப்பான். குழந்தைத்தனமான குறும்புகள் இவனிடம் இல்லாமலில்லை. பிறந்த மண்ணில், சுதந்திரமாகச் செய்யமுடியாத குறும்புகளை, தன்னை நேசித்த தோழர்களோடு செய்யநினைத்ததில் தவறில்லை, குறும்புத்தனம் இவனிடம் இருந்தாலும் சண்டையில் இராணுவத்தைச் சுட்டுக் குவிக்கவேண்டும் சுடுவது மட்டுமல்ல வெட்டவேண்டும் என்ற வன்மமும் தலையெடுத்து விடும்.

கனரக ஆயுதம் வைத்து அடிபடவேண்டுமென தளபதியிடம் வேண்டி ஏ. கே. எல். எம். ஜி. துப்பாக்கி பெற்றுக்கொண்டான். இறுக்கமான உடற்கட்டும் – வலிமையும் – வன்மமும் – இத்துப்பாக்கியை வைத்திருக்கும் தகுதியை, இவனுக்குக் கொடுத்தன.

சண்டைகளுக்குச் செல்லத்தயாராகும்போது, கூரிய தனது கத்தியை உறைக்குள் முதலில் போட்டுக் கொள்வான். “என்ன மச்சான் கத்தியைக் கவனமாய்ச் செருகிறாய்” என்று கேட்டால்,

“கண்ணுக்கு முன்னால எத்தனை தலையை ஆமி வெட்டிருக்கிறான். துடிக்க துடிக்க வெட்டிய நாய்களை சும்மாவிடக் கூடாதுதான்” என்று பதில் சொல்வான்.

இதயபூமி 1 தாக்குதலுக்கு அணிவகுத்துச் சென்றபோது துடிப்புடன் – மிடுக்குடன் – இராஜநடை போட்டு நடந்து சென்ற காட்சி….

இலகு இயந்திரத் துப்பாக்கியை அணைத்தபடி, மலர்ந்த முகத்தோடு, செந்நீரால் வீரகாவியம் எழுதி விழிமூடிக்கிடந்த காட்சி…!

2nd-Lieutenant-Pugazharasan.jpg

2ம் லெப்டினன்ட் புகழரசன்

யாழ். மண்ணில் காரைநகர் தந்த புதல்வன் புகழரசன். தான் பிறந்த மண்ணில் சிங்களப்படைகள் ஆதிக்கம் செலுத்துவதும், பிறந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்துவாழும் தாய், தந்தையர் வறுமையால் நொந்து தவிப்பதும், புகழரசனின் நெஞ்சில் நெருப்பை மூட்டின. சிங்களத்தின் கொடுமைகள்கண்டு கொதிப்பதா? வறுமையின் நிலைகண்டு வாய் விட்டு அழுவதா?……..

அழுவதற்கு அவன் தயாரில்லை. தன்மான உணர்வோடு களப்பலி எடுக்கவேண்டுமென்ற சினம் ஓங்கி நின்றது. பயிற்சிக் காலத்தில் வீட்டு வறுமை நிலைபற்றி அடிக்கடி சொல்லிக்கொள்வான். வறுமை அவனுள்ளத்தில் ஒரு போராட்டத்தை எழுப்பியுள்ளதை உணர்ந்து கொண்டேன்.

மட்டக்களப்பில் உணவின்றி, உடையின்றி, இருப்பிடவசதியின்றித் தவிக்கும் தம் தாய் தந்தையர் துயர்பற்றிச் சகதோழர்கள் கூறும் சோகக்கதைகளைக், கேட்கும்போது புகழரசன் மன ஆறுதல் கொண்டான்.

காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, இடத்துக்கேற்ப தோழர்களோடு பழகிவிட்டு ஏனைய நேரங்களில் அமைதியாக இருப்பதையே விரும்பினான் புகழரசன். இவனுள்ளத்தில் இசைவெள்ளம் நிறைந்துகிடப்பது எவருக்கும் தெரியாது. அமைதியாக இருந்த அவனைத் தட்டியெழுப்பிப் பாட வைத்த நாள், நெஞ்சில் நிலையாய் நிற்கிறது. புகழரசன் நல்லாய்ப் பாடுவான் என்ற உண்மை தெரிந்ததும் தோழர்கள் சும்மாவிடுவார்களா? அவனைச்சுற்றி என்றும் ஒரு கூட்டம் மொய்த்திருக்கும்.

புகழரசனின் போர்வாழ்வு குறுகியது. குறுகியகாலப் போர் வாழ்வில் நிறைவான வரலாற்றுப்பதிவை ஏற்படுத்திக்கொண்டான். மண்கிண்டி இராணுவ முகாமைத் தகர்த்தெறித்து இதயபூமிக்கு உயிரூட்ட உயிர்கொடுத்த உத்தம வீரர்களின் வரிசையில், தன்னையும் இணைத்துக்கொண்டான்.

வதைபடுவதைவிட மானத்துடன் புதைபடுவதுமேல் என்று கருதி விழிதூங்கமறந்த புகழரசன், நிலையான தூக்கத்தோடு வரலாறாகிவிட்டான். அவனிசைத்த கானங்கள், கானமெங்கும் ஒலிப்பதை உணர்கின்றேன்…. காரைநகர் தந்த கானகக்குயிலின் மானம் இந்த மண்ணில் என்றும் வாழும்!

நினைவுப்பகிர்வுகள்: மணலாறு விஜயன்.
நன்றி: ‘இதயபூமி 01’ நூல் மற்றும் விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி, 1993)

 

https://thesakkatru.com/maaveerarkal-of-operation-ithayaboomi/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும் - கரும்புலி மேஜர் டாம்போ
   கரும்புலி மேஜர் டாம்போ
   காசிப்பிள்ளை தயாபரன்
   நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி
   வீரப்பிறப்பு:17.08.1967
   வீரச்சாவு:19.03.1991
   நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு
   1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
   சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
   “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது.
   சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”
   கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.
   மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, ஊர்தியை இலாவகமாக ஓட்டும் திறமையே.
   கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு நாள் குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.
   “நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.
   டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….
   “வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.”
   ”இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.”
    
   ”நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.”
   ”நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…”
   ”ஆம்! டாம்போ! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.”
    
    
    
   https://www.thaarakam.com/news/1ccbdf82-250e-4be7-b50b-02a1427711ca
  • By கிருபன்
   வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய லெப்.கேணல் ரவி
   குமாரவேல் ரவீந்திரகுமார்
   விசுவமடு – முல்லைத்தீவு
   வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
   விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.
    
   அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த படைகளின் போர்க்கருவிகள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.
   மாங்குளம் தளத்தைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 படை நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர் நிலங்களிலும் நின்று சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மன உறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து லெப்.கேணல் ரவி களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் சூடுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.
   1993ல் யாழ்தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாகக் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.
   பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.
    
    
   எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.
   -எரிமலை இதழ் 
   https://www.thaarakam.com/news/ab8d20e2-cc10-4d89-9aba-a6812bbe1fa1
    
    
  • By கிருபன்
   லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று!
   AdminMarch 13, 2021 லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். 
   ஜொனி மிதிவெடிபற்றி அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல் எனவே பார்க்கப்  படுகின்றது.

   ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.
   இந்த மிதிவெடியை உருவாக்கியபோது புலிகளமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களில் இருந்து “ஜொனி” என்ற பெயரை தலைவர் ஏன் தெரிவு செய்தார்? 
   இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.
   லெப். கேணல் ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழகப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்ட வாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது. 
   இந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர். 
   இந்தப் பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலித் தாக்குதலும் அடங்கும். 

   இந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார். 
   ஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் அறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர். 
   இன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். 
   இந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன். 
   ஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன. 
   சரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது. 
   இந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடு தான் போட்டது. அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும். 
   ஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார்.    
   1980களில் யாழ். குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.
   கிட்டண்ணையால்  சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார். 
   இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
   இதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார். 
   இந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக விரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது. 
   அப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர். 
   இதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர். 
   ஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது. 
   சில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது. 
   அதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார். 
   இவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர். 
   இந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர். அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும். 
   அதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர். 
   அதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர்  அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர். 
   இந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும். 
   ஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடி குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும். 
   ஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு யோகியண்ணையையும் அவர்க்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார். 
   தலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.  
   தலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது. 
   அவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும்  திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார். 
   இதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.! 
   அதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர். 
   இதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.
   ஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார். 
   அப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 
   இதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார். 
   ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்க கட்டளை இட்டார். 
   அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. 
   பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.
   இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்)
   இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது. 
   அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.? 
   இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.! 
   ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர். 
   அந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.! 
   அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.! 
   அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். 
   அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். 
   எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.! 
   மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர். 
   இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது. 
   தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
   இந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. 
   ஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.! 
   இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும். 
   அன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.
   தாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.
   வரலாற்றுடன் துரோணர்.!!
    
   http://www.errimalai.com/?p=37709
    
  • By கிருபன்
   செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
   On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.
   நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம்.
   சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன்.
   சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்)
   வீரச்சாவுத்திகதி: 04.02.2009
   வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில்.

    
   விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன.
   யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

    
   மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.
   1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார்.
   1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது.
   1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார்.

    
   1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது.
   2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
   சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார்.
   2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
   2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
   2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார்.
   2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக………
   “கடலிலே காவியம் படைப்போம்”
   நினைவுப்பகிர்வு:- செங்கோ
   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
   https://www.thaarakam.com/news/111954
  • By கிருபன்
   சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்...
    
   லெப்.கேணல் வேணு
   “கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம்; பத்து ஆமி செத்துப் போனாங்களாம்”
   இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்து விடும். ஆனால் இதனுடைய பெறுமதி – இதன் பரிமாணம் – மிகப்பெரியது.
   இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்புகளில் – முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி – அடம்பன் – நீராவியடி – வஞ்சியன்குளம்….. என்ன தவறு நடந்தது?
   பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை.
   இவ்வாறான சம்பவங்களில் ஒன்றுதான் மன்னாரை அதிரப்பண்ணிய வஞ்சியன் குளம் விபத்து. மன்னார்ப் பிராந்தியத் தளபதி லெப். கேணல் வேணு, மேஜர் குகன், மேஜர் சயந்தன், கப்டன் குட்டிமணி ஆகியோரை எம்மிடமிருந்து பறித்தெடுத்த சம்பவம் அது.
   பூநகரியிலிருந்து முள்ளிக்குளம் வரையிலான இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்கள் அனைவருக்குமே இவர்கள் நன்கு பரிச்சயமானவர்கள். ஆகையால் இவர்களின் இழப்பு இப்பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலித்தது.
   இச்சந்தர்ப்பத்தில் எம்மால் இழக்கப்பட்டவர்களுள் ஒருவரான கப்டன் குட்டிமணி பேசாலையைச் சேர்ந்தவன். 1988 ஆம் ஆண்டு இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் எம்முடன் இணைந்து கொண்டவன். பயிற்சி முடிந்ததும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்தான். கண்ணிவெடிகள் வைப்பதில் கைதேர்ந்தவன். இந்தக் காடும், வெளியும் எமக்கே சொந்தம் என்பதை மிதிவெடிகள் மூலம் இந்திய இராணுவத்தினருக்கு உணர்த்திக் காட்டியவன். சொந்தக் காலுடன் வந்த இந்திய இராணுவத்தை செயற்கைக் காலுடன் அனுப்பி வைத்தவன்.
   மேஜர் குகன் – மேஜர் சயந்தன் இருவருமே 1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயக்கத்துடன் இணைந்து கொண்டவர்கள். இவர்களில் குகன் மன்னார்ப் பிராந்தியத்திற்கு அப்பாலும் அநேக போர்க்களங்களைக் கண்டவன். இந்திய இராணுவம் எமது மக்கள் மேல் போர் தொடுத்த போது அதை யாழ்ப்பாணத்தில் பல களங்களில் எதிர் கொண்டவன். முதன்முதல் இந்தியப் படையை ஆயுதங்களுடன் சரணடையச் செய்த தாக்குதலிலும் பங்குபற்றியவன். கொண்டச்சிஇ கஜூவத்தை, வஞ்சியன்குளம் என பல்வேறு இடங்களிலும் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியவன்.
   ஒருமுறை இராணுவ நிலைகளை வேவு பார்க்கச் சென்ற போது இளைய தோழன் ஒருவனால் இவனது பிரத்தியேக ஆயுதம் இழக்கப்பட்டது. அந்தச் செய்தி மட்டும் தான் விசேட தளபதி சுபனைச் சந்தித்தது.
   அடிபட்ட புலியாக திரிந்த இவன் மிகவும் ஆபத்தான பகுதி ஒன்றில் இரவு நேரம் வந்து கொண்டிருந்த ஜூப் ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்து இவ்வண்டி எரிந்து கொண்டிருக்கையில் நாலுக்கு மேற்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றி அவற்றுடன் சென்று தான் விசேட தளபதியைச் சந்தித்தான். இதுதான் புலிகளுக்கேயுரிய பாரம்பரியம். இந்த வழிவழியாக வந்த சொத்து என்னிடமும் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவன்.
   உப்புக்குளத்தைச் சேர்ந்த மேஜர் சயந்தன் தளபதி வேணுவுடன் இணைந்து மருத்துவக் குழுவில் பணியாற்றியவன். அத்துடன் போர்க்களத்தில் பணியாற்றத் தகுதி படைத்த சாரதியுமாவான். நீண்ட காலம் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே வியக்கும் வண்ணம் மருத்துவப் பணிகளை ஆற்றியவன். தம்பளையில் நிகழ்ந்த சண்டையில் காயமடைந்த போராளிகளைக் காப்பாற்றி வாகனத்தில் கொண்டு செல்லும் போது குண்டு வீச்சு விமானம் ஒன்று அந்த வாகனத்தைத் துரத்தித் துரத்திக் குண்டுகளைப் போட்டது. “எனது வேகத்திற்கேற்ப குண்டு வீசுவதற்கு இனிமேல் தான் நீங்கள் பழக வேண்டும்” என்ற செய்தியை உணர்த்தும் வகையில், மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தி வந்து அவர்களைக் காப்பாற்றியவன்.
   “ஆட்காட்டி வெளி” இந்தப் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு மூக்குச் சிவக்கும். பொதுவாக அடம்பனுக்கு அப்பாலுள்ள இடங்கள், அவர்கள் வரைபடத்திலும் உயர இருந்து விமானம் மூலமே பார்க்க வேண்டிய பகுதிகளாகும். இப்பகுதிகளுக்குள் கால் வைக்க முனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிங்கள இராணுவத்தினர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடியான தாக்குதல் நடக்கும். இங்கு தான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான்.
   1984 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன் மன்னார்த் தளபதியாக விளங்கிய லெப். கேணல் ராதாவின் பயிற்சி முகாமில் உருவாகியவன்.
   மன்னார்த் தீவினுள் சிறீலங்கா இராணுவம் எமது இரு போராளிகளைச் சுட்ட போது மன்னார்க் கோட்டைக்குப் பக்கத்தில் லெப். கேணல் ராதாவின் தலைமையிலான அணி பதிலடி கொடுத்தது போல, 1988 ஆம் ஆண்டு அடம்பனில் எமது இரு போராளிகளைக் கைது செய்த சிறீலங்கா இராணுவம் இவர்களை இந்திய இராணுவத்திடம் கையளித்ததிற்கு பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். அடம்பன் முகாமுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் ஜூப்பில் வந்த சிறீலங்காப் படை உயர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவ ரீதியில் பதிலடி கொடுத்தான்.
   பயிற்சி முகாமிலிருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக் கொள்வதற்கு பெரிதும் உதவியது. இவன் பங்கு கொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்ட போராளிகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும்.
   மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்த வரை இவனே டாக்டர். ஆனாலும், இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை.
   17. 01. 1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி லெப். கேணல் விக்ரரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற நிலையில், ஓடிய இராணுவம் நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது.
   பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் – அடம்பன் போன்ற வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவனோ இந்த நிலையை மாற்றி மக்களைத்தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டி வெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமானான். இரவு – பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ வேணுதான் டாக்டர்.
    
   இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. அவர்களோடு அவன் பழகிய விதம் – மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான், குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள்.
   07. 11. 1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம் சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் தனது தோழர்கள் 14 பேருடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள்மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர் – பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால், உயிரிழந்த தமது சகா ஒருவனைக்கூட விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான் இவன். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே.
   இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன்.
   1991 ஆம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு.
   அன்று அது ஒரு கொடிய நாள். ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத்தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி – திறமையான மருத்துவன் – மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம்.
   அவனுடன், மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி என்று நால்வரை – எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம்.
   நினைவுப்பகிர்வு: சுரேஸ்
   விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – 1992).
    
    
   https://www.thaarakam.com/news/2efdf305-e084-40cb-b069-0d9f9bdad3cd
 • Topics

 • Posts

  • தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம். தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த 'வெளிநாடு வாழ் இந்தியர்கள்' எனும் துறையை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை' எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். மின்னஞ்சலில் கிடைத்தது.
  • நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩
  • கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்....  16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.
  • Lesson 44 | போதல் 02 | aller | French with Pirakalathan | ASCES......! சென்ற வாரத்தின் தொடர்ச்சி...........!   👍
  • யார் சொன்னது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர் சொன்னதில உங்களுக்குச் சந்தேகமோ ?  அத முதலில சொல்லுங்கோ..மிச்சத்த பிறகு பார்ப்போம்.. 😜
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.