• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
அபராஜிதன்

பிடித்த பத்து

Recommended Posts

பிடித்த பத்து (வரிசைப்படி):

1.உணவு- பிரியாணி (றால் மட்டன் சிக்கன் நண்டு எது என்டாலும்)

2.விளையாட்டு - பட்மின்டன் ,நீச்சல்,செஸ்

3. வாசிப்பு - ( நாவல்கள்,கட்டுரைகள் மற்றும் ஏனையவை)

4.ஓட்டம்- சில மாலை நேரங்களில்( ஞாயிறு காலையில்)

5.சமையல்

6.மெலடிஸ் 

7.தமிழ் ஆங்கில படங்கள் மற்றும் சீரியல்

8.செய்யும் வேலை ( பிடித்து தானே ஆகணும் )

9.நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை 

10. எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் 
 
மேலே எனக்கு  பிடித்து செய்வன/ செய்தவை  10 எழுதியிருக்கன்  வாசிப்பது ,படங்கள் சீரியல் ஓட்டம் என்பன இப்போது குறைந்து விட்டது ( கொரோணோ தான் காரணம் வேற எதை சொல்வதுன்னு தெரியல)

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்யும் 10 செயல்களை எழுதுங்கள் 

 • Like 9

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, அபராஜிதன் said:

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்யும் 10 செயல்களை எழுதுங்கள் 

அபராஜிதனால் தொடங்கப்பட்ட நல்ல  திரி. எல்லோரும் பங்கு பெருங்களேன் 
உணவு: மரக்கறி சோறு கறிகள் (ருசிதான் முக்கியம்)
விளையாட்டு: சைக்கிள் ஓட்டம் 
வாசிப்பு: சமயல் முறைகள், பண்டைய காலம் பற்றியவை, மனித உடல் பற்றியவை 
ஓட்டம்: நடை பயிற்சி அநேகமாக ஒரு மணித்தியாலம் 
சமையல், தோட்டம், வீடு மற்றும் வீட்டில் உள்ளவர்களை நேராக்குதல் 
இடைக்கால பாட்டுகள் (தமிழ் , சிங்கள, ஆங்கில), சில புது பாட்டுகள்
தமிழ் போட்டி நிகழ்ச்சிகள், Cine awards தெரிந்தெடுத்த படங்கள் ( தமிழ் , சிங்கள, ஆங்கில)
செய்யும் வேலை: மாணவர்களுக்காக, எனக்காக செய்கிறேன். மீட்டிங்குகள், வேலை அரசியல்கள், பாகுபாடுகளை வெறுக்கிறேன். ஆனால் மனதுக்கு பிடித்தவர்களை மட்டும் எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டேன்.
அவ்வளவாக யாருடனும் கதைக்க பிடிக்காது. கதை குறைவு எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு ஒன்றும் அதன்படி நடக்கவில்லை. செய்வன திருந்தச்செய், நல்லவைகளையே செய், கொஞ்சம் திட்டமிட்டு என்று போகிறது 

Edited by nilmini
 • Like 7
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

1.பிடித்த உணவு:

தாயக உணவு  -  குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்: நண்டுக்கறி மற்றும் இலைக்கறி மீன் புட்டு :)

2.பிடித்த விளையாட்டு: 

கால்பந்து மற்றும் மேசைப்பந்து

3.வாசிப்பு:

யாழ் மற்றும் சில செய்தி இணையத்தளங்கள்

4.உடற்பயிற்ச்சி :

மூச்சுபயிற்ச்சி மற்றும் நடை

5. சமையல்:

 பிடித்த புதிய உணவு வகைகளை  You tube பார்த்து சமைப்பது :)

6. பாடல்கள்:

இடைக்கால பாடல்கள் மெல்லிய சத்தத்தில் அமைதியான பொழுதில் கேட்கப்பிடிக்கும்

7.பொழுது போக்கு:

மகளுடன் விளையாடுவது, நீந்துவது,  பிடித்த பாடல்கள் கேட்பது, அக்காமாரோடு கதைப்பது  ( இவ்வருடம் தோட்டத்துடனும் பொழுது போகின்றது)

8.செய்யும் வேலை:

பிடித்திருக்கின்றமையால் - விரும்பி செய்ய முடிகின்றது

9.அரட்டை: 

நண்பிகளுடன் வேலைக்கு வரும் போதும் போகும் போதும் நடக்கின்றது :)

10. எதிர்கால திட்டம்: 

பெரிதாக ஒன்றுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுடன் அன்பாக  இருந்து கஸ்டப்படாமல் போய்விட வேண்டும்.

Edited by தமிழினி
 • Like 8
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

1.பிடித்த உணவு:

பக்குவமாக, ருசியாக தயாரிக்கப்பட்ட தாயக உணவு  -  (முத்துச் சம்பா நெய் சோறு, உறைப்பான கறி)

2.பிடித்த விளையாட்டு: 
கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட்

3.வாசிப்பு: 
பாலாகுமார், சுஜாதா, ஆன்மீக தேடல் சார்ந்த புத்தகங்கள், யாழ் இணைய ஆக்கங்கள், கடிபாடுகள் 

4.உடற்பயிற்ச்சி : 
ஜிம் இட்கு 6 வருடங்களாக தண்டபணமாக சந்தா பணம் போகிறது, வருடத்தில் 10 முறை போவதே அபூர்வம். ஆனால் ஈஷா சாதனா, (தியானம், மூச்சுப்பயிற்சி, சாம்பவி மஹா முத்ரா) செய்கிறேன் 

5. சமையல்: 
You tube தயவால் நல்ல கை பக்குவமுள்ள சமையல்காரனாக பரணிநாமித்துள்ளேன் 

6. பாடல்கள்: 
இசை ஞானி, இசை ஞானி, இசை ஞானி ......முடிவில்லா இசை ராஜா....
அது தவிர எம்.எஸ்.வீ, ஏ .ர் ரஹமானின் சில பாடல்கள் மற்றும் ஆங்கில பாடல்கள். 
பின்னணி இசை கேட்பதில் மிகவும் ஆர்வம். (Ilayaraja, Hans Zimmer) 

7.பொழுது போக்கு: 
இசை, சமையல், Netflix,  You tube வீடியோ , நண்பர்களுடன் குளிர்ச்சியான 2,3 பீர் அதோடு சேர்ந்து வரும் ஊர், உலக அரசியல் மேதாவித்தன கதைகள்.  பீட்டர் பால் அனிதா முதல் பில் கேட்ஸ், சேரமான் இரும்பொறை வரை தெரிந்தது போல்.... தெரியாதது கதைப்போம்.  

8.செய்யும் வேலை: 
சிவனே என்று போய்க்கொண்டு இருக்கிறது (வீட்டில் இருந்து ஒண்டாரியோ அரச இயந்திரத்தை கட்டமைத்துக்கொண்டு )

9.அரட்டை: 
7 இல் சொல்லிவிட்டேன். 

10. எதிர்கால திட்டம்:  
வாழ்க்கை வாழ்வதற்கே ..அத்தனைக்கும் ஆசைப்படு... முடிந்த வரை மற்றவர் வசைபாடத வாழ்க்கை. இன்னும்  ஒருவருக்கு மண்ணை அள்ளி  போடாத வாழ்க்கை.

இது திட்டமல்ல .... ஆசை - மானசரோவர், கைலாஷ் யாத்திரை 

 • Like 6
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Sasi_varnam said:

நானும் ஈஷா பயிற்சிகள் முயன்றளவு செய்கிறேன். தியானம் யோகா பழகவெண்டு அங்கு போய் 3 மாதம் இருக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். கைலாஷ், மானசரோவர் யாத்திரை இம்முறை போவதாக இருந்தோம். முடியவில்லை. அடுத்த சீசனுக்கு நானும் எனது மச்சாளும் போக இருக்கிறோம். அதைவிட கேதாரநாத்தில் துடங்கி ராமேஸ்வரம் வரை திரும்ப எல்லா பண்டைய கோவில்களுக்கும் போகவேண்டும். Maharajas' Express, Palace on Wheels, The Deccan Odyssey, Golden Chariot, Royal Rajasthan on Wheels, Royal Orient Train, and Fairy Queen Express இந்தமாதிரி train களிலும் அம்மாவை கூட்டிக்கொண்டு போகவேணும் 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, nilmini said:

நில்மினி நீங்கள் inner engineering செய்தீர்களா?

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, Sasi_varnam said:

நில்மினி நீங்கள் inner engineering செய்தீர்களா?

வணக்கம் சசி. 2017 ஆம் ஆண்டு Philadelphia வில் சத்குரு வந்திருந்தபோது 2 நாள் முழுக்க போய் Inner engineering completion செய்தேன். அதற்குமுன் ஒன்லைன் version ஒரு கிழமையாய் செய்து முடித்தேன் . 

Edited by nilmini

Share this post

Link to post
Share on other sites

1.பிடித்த உணவு:

கோதுமை மா பிட்டும் மரவள்ளிகிழுங்கு கறியும்,

நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல்

2.பிடித்த விளையாட்டு: 

கால்பந்து

3.வாசிப்பு:

யாழ், சில செய்தி இணையத்தளங்கள்

4.உடற்பயிற்ச்சி :

யோகாசனம் (இப்ப 1 வருட இல்லை), செல்லக்குட்டியுடன் காலை மாலை நடை, இடைக்கிடை சைக்கிள் ஓடுவது பிள்ளைகளுடன் 

5. சமையல்:

 பிடித்த புதிய உணவு வகைகளை சுமே & You tube பார்த்து சமைப்பது 

6. பாடல்கள்:

மனதுக்கு பிடித்த எல்லாப்பாடல்களும், இருக்கும் மனதின் நிலையை பொறுத்து

7.பொழுது போக்கு:

படம் பார்ப்பது, பிள்ளைகளுடன் விளையாடுவது

8.செய்யும் வேலை:

செய்து கொண்டிருக்கும் வேலை

9.அரட்டை: 

இப்ப குறைவு, யாழில்தான் அரட்டை

10. எதிர்கால திட்டம்: 

மக்களின் விடிவு, இயன்றளவு முன்னேற்றி விடனும். பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவரனும்,

ஊரில் ஒரு பெரிய காணி வாங்கி கட்டிடம் விளையாட்டு மைதானத்துடன் கட்டி இலவசமாக வகுப்புகள் நடத்தனும், அங்கேயே மணவர்கள் தங்கி படிக்க சாப்பாட்டுடன் வசதிகள் செய்து கொடுக்கனும்,... இப்படி பல கனவுகள். அந்த காணியில் மாணவர்களுடன் தோட்டம் செய்யனும், சந்தோஷமாக கடைசிகாலத்தை கழித்து ஏதோ சதித்துவிட்டோமென சாகனும்

 • Like 7
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

அப்பிடியே எதிர் காலத் திட்டத்தில் பிழையின்றி எழுத வேண்டும் என்றும் போட்டு வையுங்கள்.✍️😆

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, உடையார் said:

ஊரில் ஒரு பெரிய காணி வாங்கி கட்டிடம் விளையாட்டு மைதானத்துடன் கட்டி இலவசமாக வகுப்புகள் நடத்தனும், அங்கேயே மணவர்கள் தங்கி படிக்க சாப்பாட்டுடன் வசதிகள் செய்து கொடுக்கனும்,... இப்படி பல கனவுகள். அந்த காணியில் மாணவர்களுடன் தோட்டம் செய்யனும், சந்தோஷமாக கடைசிகாலத்தை கழித்து ஏதோ சதித்துவிட்டோமென சாகனும்

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
உங்கள் தாயக சேவை கனவு நிச்சயம் நிறைவேறும் உடையார் . 

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, யாயினி said:

அப்பிடியே எதிர் காலத் திட்டத்தில் பிழையின்றி எழுத வேண்டும் என்றும் போட்டு வையுங்கள்.✍️😆

அது முக்கியம், அவசரத்தில் திருப்பி பார்ப்பதே இல்லை😂

2 minutes ago, nilmini said:

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
உங்கள் தாயக சேவை கனவு நிச்சயம் நிறைவேறும் உடையார் . 

பதிவிடுகின்றேன் பிறகு. நம்ம சுமேயை கேட்டால் விபரமாக போடுவார்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

பிடித்த பத்து..எதை பற்றி எழுதுவது.. நிறைய பேர எழுதினால் கப்பியாக இருக்கும்.

1.அனேக பொழுதுகளில் நானே செவ்ஃப்பாக மாறுவதால் இப்போ சாப்பாடே விருப்பமின்றி வருகிறது...அதற்காக கொத்து,வெட்டு எல்லாம் செய்ய மாட்டேன்.இது ஒன்றும் புகழ்ச்சிக்காவோ அல்லது பொய் பிரட்டோ அல்ல..

.2.அனேக கேள்விகளுக்கு பதில் இருக்காது.

3.ஒட்டி தின்று என்றாலும் யாழ் பார்க் காட்டி சரி பட்டு வராது.கடந்த பத்து வருசத்துக்கு மேல் இது தான் நிலமை.அப்புறம் வார்ப்புகள் ,முக புத்தகம்..சில நேரங்களில் வேறு சிறுகதைகள், கவிதைகள் சம்பந்தமான விடையங்கள் வாசிச்சுட்டு அப்படியே வந்துடுவேன்.

4.செய்யக் கூடியதாக இல்லை.ஏன் என்று எல்லாம் கேட்க கூடா.

5.வீட்டில் அனைத்து பொறுப்புக்களும் நானே செய்வதால் பொழுது போக்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை..

6.மனதுக்குபிடித்தவற்றை கேட்பது.

7.இப்போ தான் ஒன்றை எனக்கு பிடித்ததாக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

8. அரட்டை என்பதெல்லாம் கிடையாது.எனக்கு நான்கு சகோதரர்கள் அதில் மூவர் எப்படியும் தினமும் எடுப்பார்கள்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்க அரைப் பொழுது போய் விடும்.

9.ஒரு கேள்வி விடுபட்டுட்டு போலும் .

10.யாருக்கும் தொந்தரவு இல்லாது இருக்க வேண்டும்.

Edited by யாயினி
 • Like 5
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

1. பிடித்தவர்கள்:

அம்மா, மனைவி, குழந்தைகள், பேரன்,  ஆரம்ப பள்ளி ஆசிரியர் (பால்ய வயதில் சரியாக படிக்காமல், அடி வாங்கியே திருந்தி படிக்க பழகியவன் என்ற வகையில்.)

2. பிடித்த வாசிப்பு:

மின்னணு பொறியியல், கணிப் பொறியியல்.

3.பிடித்த பொழுது போக்கு:

பழைய திரைப்பட பாடல்களை கேட்பது.

4.பார்க்க விரும்பும் இடங்கள்:

சுவிட்சர்லாந்து, நார்வே, தமிழ் ஈழம்.

5. பிடித்த ஊர்கள்:

எனது கிராமம், மதுரை, தஞ்சை.

6. பிடித்த நாடுகள்:

தமிழ் நாடு, தமிழ் ஈழம்

7. பிடித்த வேலை:

மதியம் தூங்குவது.

8. பிடித்த உணவு:

பழைய சோறு, உரித்த வெங்காயம். பச்சை மிளகாயுடன் கேழ்வரகு, கம்பங் கூழ்.

9. எதிர்கால திட்டம்:

வறுமையில்லாத, நோயில்லா முதுமை, பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டு.

10.பிடித்த தலைவர்கள்:

காமராஜ், பெரியார், கக்கன், வே.பிரபாகரன்.

Edited by ராசவன்னியன்
 • Like 3
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

1.பிடித்த உணவு:

 சோறு , பழைய சோறு, சொதி, சம்பல் , இடியப்பம், இட்லி, தோசை........!

2.பிடித்த விளையாட்டு: 

அநேகமாக எல்லா விளையாட்டுகளும் பிடிக்கும்....!

தற்போது இடைக்கிடை விளையாடுவது பெரிய குண்டு விளையாட்டு....!

Nettoyer ses boules de pétanque - OnVaSortir! Saint-etienne

3.வாசிப்பு:

யாழ் + புத்தகங்கள்......!

4.உடற்பயிற்ச்சி :

சயிக்கிள் ஓடுவது, நடப்பது, தியானம் செய்துகொண்டே தூங்கி பிடரியில் அடி வாங்கி எழும்புவது.....!

5. சமையல்:

 ஒருநாளும் மனிசி குசினிக்குள் நிக்கும்பொழுது போவதில்லை.(தேங்காய் மட்டும் திருவி கொடுப்பதுண்டு).ஒரு கூட்டுக்குள் இரண்டு டாக் நிண்டால் கடிபடும்.மனிசி  இல்லாத வேளையில் ஸ்பெஷலாக சமைத்து வைப்பதுண்டு......!

6. பாடல்கள்:

பலதரப்பட்ட  பாடல்களும் கர்னாட்டிக் உட்பட ரசித்து கேட்பேன். எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள் சுவாசம்.....!

7.பொழுது போக்கு:

பால்கனி தோட்டம்,யாழ் இணையம், குண்டு விளையாட்டு, நடை போன்றவை.....! 

8.செய்யும் வேலை:

வாகனம் திருத்துதல், பக்கத்தில் எங்காவது ஜெர்மன், பார்சிலோனா, ஸ்பெய்ன் , அந்தோரா என்று போய் வருதல்.

9.அரட்டை: 

இது சூப்பர்.....மனிசிக்கு பிடிக்காத ஏதாவதொன்றை சொல்லி விட்டு கம் என்று இருப்பது, அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.

10. எதிர்கால திட்டம்: 

நிகழ்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது.....!

😂  😂

 • Like 4
 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, suvy said:

தற்போது இடைக்கிடை விளையாடுவது பெரிய குண்டு விளையாட்டு....!

Nettoyer ses boules de pétanque - OnVaSortir! Saint-etienne

3.

அத்தான் இந்த குண்டுகளை பிரான்ஸில் இருந்து ஊருக்கு கொண்டுபோய் விளையாடிஇருக்கின்றார் தம்பியின் பிள்ளைகளுடன், நான் ஊருக்கு போன போது அவர்களுடன் விளையாடினேன், நல்ல பெழுது போக்கு👍

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 30/7/2020 at 12:33, nilmini said:

மரவள்ளிகிழுங்கு கறி, நெத்தலி கருவாட்டு பொரியல், மாசி கருவாட்டு சம்பல் இந்த மூன்றின் செய்முறைகளை பகிருங்கள்.
 
உங்களுக்காக இதில் இணைத்துள்ளேன்,👍

மானம் போட்டுது அவசரத்தில் இணைத்தபடியால், காத்திருந்து அபராஜிதன் பழிவாங்கிவிட்டார்😪, விடமாட்டேன் 😂

 • Like 1
 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

5. சமையல்:

 ஒருநாளும் மனிசி குசினிக்குள் நிக்கும்பொழுது போவதில்லை.(தேங்காய் மட்டும் திருவி கொடுப்பதுண்டு).ஒரு கூட்டுக்குள் இரண்டு டாக் நிண்டால் கடிபடும்.மனிசி  இல்லாத வேளையில் ஸ்பெஷலாக சமைத்து வைப்பதுண்டு......!

😄😄😄😄 super

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

1.பிடித்த உணவு:

தாயக உணவு  -  : நண்டுக்கறி , றால் காரி  பொரிச்சமீன்  புள்ளி விழுந்த தோசை  அப்பம்  மற்றும்  வெள்ளைப் பிட்டு  

2.பிடித்த விளையாட்டு:

போட்டி நிகழ்ச்சிகள்

3.வாசிப்பு:

யாழ் களம்,  மற்றும் சில செய்தி இணையத்தளங்கள். யு tube    வேடிக்கைகள்

4.உடற்பயிற்ச்சி :

நடை  ( கஸ்ர பட்டு). .

5. சமையல்:

 முடிந்தவரை  உணவு    சமைப்பது .

6. பாடல்கள்:

பழைய பாடல்கள் மெல்லிய சத்தத்தில் அமைதியான பொழுதில் கேட்கப்பிடிக்கும்.

7.பொழுது போக்கு:

யாழ்  களம் , வாசிப்பது,  கணனியில் தேடுவது ....என்னேரமும் எதாவது மனதில்   ஓடிக்கொண்டே இருக்கும் .

8.செய்யும் வேலை:

 இல்லத்தரசி  (homemaker )

9.அரட்டை:

அதிகம் கதைக்க மாட்டேன் . கேடடால் பதில் . அவசியமான கதைகள் மட்டும் . மற்றவர்களை ஊக்குவிப்பேன் . உதவ நினைப்பேன் .

10. எதிர்கால திட்டம்:

 வாழ்வில்  முக்கால் வீதம்  உடலாலும் மனதாலும் போராடி ஓடியாயிற்று . .இன்னும் கொஞ்சக் காலம்.  ஓய்வாக அமைதியாக  நோய் நொடியின்றி  உறக்கத்திலேயே கஸ்டப்படாமல் போய்விட வேண்டும்.

Edited by நிலாமதி
 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

பிடித்த உணவு கோழியில் செய்த எந்த உணவானாலும் பிடிக்கும்...பொரித்த கோழி இன்னும் அதிகமாய் பிடிக்கும்😋
நேரம் கிடைத்தால் நடப்பதைத் தவிர வேறு எந்த விளையாட்டும் விளையாடுவதில்லை...கிரிக்கெட் பார்க்க பிடிக்கும் ...ஆனால் உப்ப அதுவும் பார்ப்பதில்லை.
சரித்திரம்,வரலாறு,சயன்ஸ் தவிர மற்றதெல்லாம் வாசிக்க பிடிக்கும். 
நல்லா நித்திரை கொள்ள பிடிக்கும்.😴
சமைக்க பிடிக்கும்...ஆனால் அதன் பிறகு சுத்தம் செய்ய பிடிப்பதில்லை.
பழைய பிரிட்டிஷ் டீவி மூவிக்களை பார்க்க பிடிக்கும்...அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தாய் இருக்கும்.
தமிழ்,மலையாள ,ஹிந்தி,தெலுங்கு படங்கள் பார்க்க பிடிக்கும்...தமிழ் தவிர்ந்த மற்றவை நல்லாய் இருந்தால் மட்டும் தான் பார்ப்பது.
புதுப்புது இடங்கள் போய் பார்க்க பிடிக்கும்.
புத்தகங்கள் சேகரிக்க பிடிக்கும்.
யாழில் அரட்டை அடிக்க பிடிக்கும்😂

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

1.பிடித்த உணவு: கருவாட்டுக்கறியும் பழஞ்சோறும்.😍

images?q=tbn%3AANd9GcQ_JpWu5upBP2zECRW1MFtVmd8-jQReQOaShA&usqp=CAU

2.பிடித்த விளையாட்டு: உப்பு மூட்டை, கீச்சு கீச்சு  தாம்பலம் .😁

உப்பு மூட்டை - காதல் கவிதை

3.பாடல்கள்: ஏரிக்கரையின் மேலே போறவளே,நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்.💞

4.பார்க்க விரும்பும் இடங்கள்: வல்லிபுரக்கோவில் மண் திட்டிகளை பார்த்து காலாற நடக்க வேண்டும் 🚶🏽‍♂️

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய ....

5.பிடித்த ஊர்கள்:அம்பன்,குடத்தனை.tw_glasses:

image_resize

6.பிடித்த பொழுது போக்கு: யாழ்களத்துக்கு வந்து ஆரையும் கடுப்பெத்துறது.😎

yarl.com - Online News Paper

7.அரட்டை: மனிசியிட்டை மச்சானைப்பற்றி கூடாமல் சொல்லுறது.பிறகென்ன அண்டு முழுக்க பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி ஒரே ஜாலியாய் இருக்கும் :grin:

கிறுக்கியின் கிறுக்கல்கள் – தமிழ் ...

8.உடற்பயிற்ச்சி: வேலைக்கு நடந்து போய் வாறது.💪🏽முதுமையில் நடை பயிற்சி நினைவாற்றலை ...

9.செய்யும் வேலை: செய்யும் தொழிலே தெய்வம் எண்டு நினைச்சு கண்ணியமாய் வேலை செய்யுறது 🧑🏽‍🍳

.வீட்டுத் தலைவர் - Kungumam Tamil Weekly Magazine

10.எதிர்கால திட்டம்: என்ரை காணி பூமியை கள்ள உறுதி முடிச்சு வைச்சிருக்கிறவையை ஒருக்கால் கண் குளிர பார்க்க வேண்டும்.tw_rage:

ஆறுவது சினம் (பயிற்சி) | Quiz

Edited by குமாரசாமி
 • Haha 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

ஹாஹா ...வெட்கமில்லாமல் சொந்த காணியை பறி கொடுத்து விட்டு ...அவர்களை பார்க்க வேற போறீங்களாக்கும்...நல்லா இருங்கோ என்று வாழ்த்துவீங்களா அல்லது நாசமா போகோணும் என்று சபிப்பீங்களா?
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

ஹாஹா ...வெட்கமில்லாமல் சொந்த காணியை பறி கொடுத்து விட்டு ...அவர்களை பார்க்க வேற போறீங்களாக்கும்...நல்லா இருங்கோ என்று வாழ்த்துவீங்களா அல்லது நாசமா போகோணும் என்று சபிப்பீங்களா?
 
கலைமகள் கைப்பொருள்  பலம் அவர்களிடம்......😎

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this