Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: சைவம் புனித உணவா?

spacer.png

 

அ.முத்துக்கிருஷ்ணன்

இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற தொழில்முறை வதந்தி தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உண்மை அல்ல என்பதையும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பயணம் செய்தால் நகரங்களின் தெருக்களில் மனத்தை மயக்கும் உணவின் மனம் இந்த தேசத்தின் உணவுப் பழக்கத்தை சொல்லிவிடும்.

இந்தியா சைவ உணவு நாடா?

இருப்பினும் நீங்கள் எல்லோருமே அசைவம் சாப்பிட்டாலும் இந்த தேசம் சைவ உணவுப்பழக்கம் என்கிற கட்டுக்கதையை நாங்கள் பரப்புவோம். ஏனெனில், நாங்கள் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த தேசத்தில் பெரும்பான்மையானவர்கள் எங்களைப் போல் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் என்கிற வதந்தியை தொடர்ந்து பரப்பி உலகத்தையும் ஏமாற்றுவோம், உங்களையும் சேர்த்து மூளைச்சலவை செய்வோம் என்கிறது ஒரு சிறிய குழு.

இந்தியர்களில் 80-85% பேர் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். தெலங்கானா மாநிலத்தில் 99% பேர் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மட்டுமே சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். இருப்பினும் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களை அடர் பச்சையிலும், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தை பச்சையிலும், மஹாராஷ்டிரம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசத்தை மென் பச்சையிலும் போட்டு ஓர் அசைவ-சைவ வரைபடம் ஒன்று கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் சுற்றுக்கு வந்தது. இது ஒரு சைவ லாபியின் மோசடியான வரைபடம் என்பது அவர்கள் காஷ்மீருக்கு மென் பச்சை நிறம் இட்டதில் பல்லை இளித்து காட்டியது. இப்படி கலர் கலராக காட்டித்தானே வதந்திகளுக்கு ஓர் அறிவியல் - புள்ளிவிவர சாயத்தை பூச இயலும்.

spacer.png

அசைவம் சாப்பிட்டால் கோபம் வருமா

இருப்பினும் இந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு அதனுடன் இந்தியாவில் தீண்டாமை எனும் மனித சமூகத்தின் ஆகத்தீங்காம ஒரு நடவடிக்கை நடக்கும் மாநிலங்களை ஒப்பிட்டு இந்த இரண்டு வரைபடங்களையும் இணைத்த ஒரு படம் இன்று காலை என் கண்ணில்பட்டது. இந்த படம் ஏராளமான செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆவணக் கொலைகள், மாட்டின் பெயரால் கொலைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை என இந்த பூமியின் மனிதன் தன் சக மனிதனின் மீது செய்யக் கூடிய கொலை பாதக செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் முன்னனியில் நிற்பவர்கள் இவர்களே. (ஒப்பீட்டளவில்)

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்களை வாசித்தாலே மனம் கனத்து போகும். பொதுப்பாதையில் நடக்கக் கூடாது, செருப்பு, போட்டு நடக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டக் கூடாது, தோளில் துண்டு போடக் கூடாது, வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாது, தலையில் தலைப்பாகை கட்டக் கூடாது, முகத்தில் மீசை வைக்க கூடாது, தேநீர் கடைகளில் இரட்டை குவளை, பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாது, ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு, திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது, பொது மயானத்தில் உரிமை கிடையாது, பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது, தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது என இந்த பட்டியல் முழுமையானது அல்ல.

சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அதிகபட்சமாக வாழும் நிலத்தில் நடக்கும் கொடுமைகள் பார்க்க, கேட்க சகிக்க முடியாதவை. ஆனால், இதே சைவ லாபி தொடர்ச்சியாக அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும், அசைவம் சாப்பிட்டால் அது வன்முறையை தூண்டும் என்றும் தொடர்ச்சியாக கிடைக்கும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வதந்திகளை தொடர்ந்து இடைவிடாமல் செய்வது, செய்து கொண்டேயிருப்பது என்பது ஒரு பெரும் உத்தி, அதை எதிர்த்து நாம் தொடர்ந்து சிந்திக்கவில்லை என்றால் ஒரு நாள் நம்மை அறியாமல் மூளை சலவைக்கு ஆட்பட்டு விடுவோம்.

 

கமல்ஹாசன் ஒரு பெரும் அசைவப்பிரியர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். சிப்பிக்குள் முத்து படப்பிடிப்பின் போது பச்சை கறியை கமல்ஹாசன் சாப்பிட்டார் என்று நாளிதழ்களில் வாசித்தது போல் ஒரு மங்கலான ஞாபகம் இருக்கிறது, அவர் பச்சை கறி சாப்பிடுகிறவரா இல்லையா என்பதை ஓரமாக வைப்போம் ஆனால் அவரை போன்ற ஒரு அசைவப்பிரியரே, “சைவம் சாப்பாட்டை சாப்பிட்டுட்டா இப்படி சண்டை போடுறீங்க” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதுதான் தொடர்ச்சியாக செய்யப்படும் பொய் பிரச்சாரத்துக்கு கமலை போன்ற கொஞ்சம் விவரமானவர்கூட எப்படி இரையாகக் கூடும் என்பது புலப்படுகிறது.

சைவம் - சுத்தம் - தூய்மை என்கிற இந்தப் புள்ளிகளின் இணைப்பும் அதை புனிதம் என்று கருதுவதும் ஒரு நோய்மையின் குறியீடாகவே பார்க்கிறேன். இந்த உலகத்தின் பரிணாமத்தில் மனிதன் நடமாடத் தொடங்கிய நேரத்தில் இருந்து அவன் வேட்டையாடித்தான் மாமிசம் உட்கொண்டு இருக்கிறான், வேட்டைக்கறி தான் அவனது அடிப்படை உணவு. இன்றும் உலகத்தில் 90-91% அசைவம் சாப்பிடுகிறவர்களே. சைவம் சாப்பிடுகிறவர்கள் 9-10% பேர் மட்டுமே.

மனிதர்கள் ஆடு, கோழி, மாடு, பன்றி, மீன், வாத்து, காடை என தங்களுக்குப் பிடிக்கும் உணவை உட்கொள்கிறார்கள், வேட்டைக்கறியை உண்டவர்கள் பரிணாமத்தில் அவனுக்கு தேவையான மிருகங்களை பழக்கப்படுத்தி (Domesticate), வளர்த்து (தொழில்முறை வளர்ப்பு உட்பட) உண்ணுகிறான். அசைவப் பிரியன் சக மனிதர்களை மதிக்கிறான், அவன் மீது சைவ பெரும்பான்மை மனநிலை போல் அவன் சக மனிதனின் மீது வன்முறையை, தீண்டாமையை நிகழ்த்துவதில்லை.

அவரவர் உணவு அவரவர் கலாச்சாரம்

சைவம் லாபி தொடர்ந்து முன்வைக்கும் “பெரும்பான்மை” கோட்பாடுகளை அசைவர்கள் ஒருபோதும் அவர்கள் மீது திணிப்பதில்லை. 100% அசைவம் சாப்பிடுகிறவர்கள் கலாச்சாரத்தின் மீது மெல்ல மெல்ல நல்ல நாள், பொல்ல நாள், செவ்வாய், சனி, புதன், திங்கள் என ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை தூக்கிக்கொண்டு சைவ லாபி ஆள் பிடிக்க சுற்றியபடி உள்ளது. ஆனால் அசைவம் சாப்பிடுகிறவர்கள் உங்கள் வேதத்தில் உள்ள “பீப் வகைகளை” தூக்கிக் கொண்டு உங்களை Canvas செய்ய வருவதில்லை.

உணவு என்பது மனிதனின் பரிணாமம் தொட்டு அவனுடன் வரும் பழக்கம் அவனது கலாச்சாரம், அவனது உடல் ஒரு வகை உணவை செரிமானம் செய்யும் திறனை அடைந்துள்ளது. அதே இந்தியாவிற்குள் 4000 ஆண்டுகள் முன்பு வந்த ஆரியர்களின் உடலில் பால் பொருட்களை செரிமானம் செய்யும் 13910T என்கிற Gene உள்ளது என்று மரபணுவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மனித உடல் பரிணாமத்தில் பெற்ற திறன். அவர் அவர் திறன் அவருக்கு, இது தான் மனித உடலின் தனித்தன்மை.

அவரவர் உணவு அவரவர் கலாச்சாரம், அதை அவரவர் பின்பற்றுவோம். இது சிறந்தது, இது தூய்மையானது, இது புனிதமானது என்பது ஒரு நோய், மனநோயின் வெட்டவெளிச்சமான கூறு.

அது சரி கிளம்புகிறேன் வீட்டில் மீன் வறுவல் வாசனை மூக்கை துளைக்கிறது...

கொசுறு தகவல் ஒன்று....

தென்னிந்திய சைவ உணவின் மையமாகக் கருதப்படும் சென்னையின் 6% மக்கள் மட்டுமே சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள்.

 

https://minnambalam.com/public/2020/07/28/7/Is-Vegetarian-Sanctity-Food%3F

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை பார்ப்பனிய எதிர்ப்பு கட்டுரையாகவே பார்க்கமுடியும்.

நான் ஒரு சைவன் என்ற முறையிலும் விவசாயி என்ற முறையிலும் சைவ உணவைப்பற்றி  அந்த கட்டுரையாளரை விட அதிகம் தெரியும் என்பதில் பூரிப்படைகின்றேன்.
 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான். https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati    அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில்லை என்பதையும் அது உண்ர்த்தியது.  நேற்றைய தினம் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தினார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற வகையிலான அவரது கருத்து நிச்சயமாக சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்திருக்கும். “நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்ட மீறல்களையும் கொண்டுவந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார்.  இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமாண உதவிகளைச் செய்துவரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.  சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட டுவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மையப்படுத்தி இரு நாடுகளும் இவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.  இலங்கை எந்தளவுக்கு நிதானமாக நடுநிலை தவறாமல் நடந்துகொள்கின்றது என்பதில்தான் இதற்கான பதில் அமைந்துள்ளது.  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல் படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  “விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். “இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக்காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன. அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்கமுடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது! https://thinakkural.lk/article/84249
  • பசிலின்  Rs.600 கோடி வேலை செய்கிறது.  பணம் பாதாளம் வரை பாயும். 😀
  • மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.