• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நிழலி

கோடை (காலம்) இங்கு - நிழலி

Recommended Posts

கோடை (காலம்) இங்கு
--------------------

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை

நிலவு எறிக்கும்
கோடை இரவொன்றில்
சாலை கடக்கும்
ஒரு பூனையை போல
கவனமாக மழையும்
வந்து போகும்

மழை வந்த சுவடுகளில்
புல்கள் முழைக்கும்
புல் வந்த வேர்களை பற்றி
மண் புழுக்கள் மேலே
வரும்
பின் அதை உண்ண
மைனாக்கள் அலைந்து
திரியும்
அதை பிடிக்க வரும்
பிறாந்துகளால்
வானம் அதிரும்

குருவிகள் கூடு கட்டும்
குலவும்
மழைக் குளிரில்
ஒன்றை ஒன்று கூடும்
முத்தமிடும்
முட்டையிடும்
குஞ்சு பொரிக்கும்
அவற்றின் கீச்சிடலில்
என் காலை
உதிக்கும்

பின் வளவில்
எப்பவோ நட்டு வைத்த
மரக் கன்று பூக்கும்.
குளிருக்குள் புதைந்து கிடந்த
காலத்தை
பற்றி விண்ணாளம்
சொல்லும்.
மண்ணுக்குள் மூவாயிரம்
அறைகளும்
ஒவ்வொரு அறையிலும்
தங்க முட்டைகள்
உள்ளதென்றும் அதைக்
காக்க முயல்கள்
மீசையுடன் திரியும்
என்றும் அவை
சொல்லும்

ஒவ்வொரு வாசலிலும்
மனுசர்கள் நிற்பர்
தம் நிழல் நிலத்தில்
வீழும் அழகை
கொண்டாடுவர்
பின் தாகம் தீர
மதுக் குடிப்பர்

ஒவ்வொரு வீதியிலும்
அரை ஆடை உடுத்திய
தேவதைகள்
உலாச் செல்வர்
கடைக் கண்ணில்
காமம் சொருகி
பார்க்கும் என்னை
நடுச் சாமம்
ஒன்றில் நினைத்து
சிரித்துக் கொள்வர்

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

---------------

நிழலி

(July 29, 2020)

  • Like 14

Share this post


Link to post
Share on other sites

கோடைகாலம் அழகிய கவிதையும் சிறப்பான வர்ணனைகளும்........!  👍

 

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை.....!

 

கோடைகால இரவுகள்தான் கடுப்பானவை, புழுக்கம் நிறைந்தவை.......பக்கத்திலும் படுக்கேலாது  தள்ளியும் போகேலாது........!     😘

நன்றி நிழலி ......! 

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு கோடை கால முழு அழகையும் இந்த கவியில் கொண்டு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

இயற்கையும்

அதன் தொழிற்பாடுகளும் அற்புதமானவை

அதிசயங்களை நடாத்துபவை

ரசிக்க ருசிக்க மனமிருந்தால்  போதும்

நன்றி  ரசிப்புக்கும் அதை இங்கே  விதைத்ததற்கும்...

(என் தம்பி கடைக்கண், தேவதைகள், முத்தம், இரவு,..... பற்றி  எல்லாம்  எழுதாமல் விட்டால்தான்  அதிசயம்)😜

Share this post


Link to post
Share on other sites

கோடையை ரசித்து ருசித்து தனக்கே உரிய பாணியில் கவிவடித்த நிழலிக்கு வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 30/7/2020 at 15:06, நிழலி said:

கோடை (காலம்) இங்கு
--------------------

கோடை கால இரவுகள்
அழகானவை
பகலில் உருகிய
வெயிலை
இருட்டின் போது
கசிய விடுபவை

நிலவு எறிக்கும்
கோடை இரவொன்றில்
சாலை கடக்கும்
ஒரு பூனையை போல
கவனமாக மழையும்
வந்து போகும்

மழை வந்த சுவடுகளில்
புல்கள் முழைக்கும்
புல் வந்த வேர்களை பற்றி
மண் புழுக்கள் மேலே
வரும்
பின் அதை உண்ண
மைனாக்கள் அலைந்து
திரியும்
அதை பிடிக்க வரும்
பிறாந்துகளால்
வானம் அதிரும்

குருவிகள் கூடு கட்டும்
குலவும்
மழைக் குளிரில்
ஒன்றை ஒன்று கூடும்
முத்தமிடும்
முட்டையிடும்
குஞ்சு பொரிக்கும்
அவற்றின் கீச்சிடலில்
என் காலை
உதிக்கும்

பின் வளவில்
எப்பவோ நட்டு வைத்த
மரக் கன்று பூக்கும்.
குளிருக்குள் புதைந்து கிடந்த
காலத்தை
பற்றி விண்ணாளம்
சொல்லும்.
மண்ணுக்குள் மூவாயிரம்
அறைகளும்
ஒவ்வொரு அறையிலும்
தங்க முட்டைகள்
உள்ளதென்றும் அதைக்
காக்க முயல்கள்
மீசையுடன் திரியும்
என்றும் அவை
சொல்லும்

ஒவ்வொரு வாசலிலும்
மனுசர்கள் நிற்பர்
தம் நிழல் நிலத்தில்
வீழும் அழகை
கொண்டாடுவர்
பின் தாகம் தீர
மதுக் குடிப்பர்

ஒவ்வொரு வீதியிலும்
அரை ஆடை உடுத்திய
தேவதைகள்
உலாச் செல்வர்
கடைக் கண்ணில்
காமம் சொருகி
பார்க்கும் என்னை

நடுச் சாமம்
ஒன்றில் நினைத்து
சிரித்துக் கொள்வர்

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

---------------

நிழலி

(July 29, 2020)

நிழலி,  மிக மிக அருமையாக.... ரசித்து, இந்தக் கோடை காலத்துக் கவிதையை... எழுதியுள்ளீர்கள். எதனை, வித்தியாசமாக  மேற்கோள் காட்டி, எழுதுவது என்று நான், தடுமாறியதால்... மொத்தக் கவிதையையும் ரசித்தேன். :)

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அப்ப.... "டமார்"  💥 என்று ஒரு சத்தம் கேட்டது.  
என்ரை.. கார், முன்னுக்குப் போனவரின்... 
புது  "போர்ஷே"  காரை அடித்து விட்டது.

அதுக்குப் பிறகு... கார் ஓடும் போது... 
பெண்களைப்  பார்க்கப் படாது, என்ற முடிவுக்கு வந்து...
இன்று வரை.. அதனை கடைப் பிடிக்கின்றேன். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
On 30/7/2020 at 21:06, நிழலி said:

கோடை (காலம்) இங்கு
--------------------

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்
மூன்றே மூன்று
மாதம் வரும்
மகரந்தம்

நல்ல கவிதை, பாராட்டுக்கள்👍

நீங்கள் கொடுத்து வைத்த து அவ்வளவுதான், அவுஸ் வருங்கள் வருடமுழுக்க ரசிக்கலாம்😂

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

நிழலி,  மிக மிக அருமையாக.... ரசித்து, இந்தக் கோடை காலத்துக் கவிதையை... எழுதியுள்ளீர்கள். எதனை, வித்தியாசமாக  மேற்கோள் காட்டி, எழுதுவது என்று நான், தடுமாறியதால்... மொத்தக் கவிதையையும் ரசித்தேன். :)

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அப்ப.... "டமார்"  💥 என்று ஒரு சத்தம் கேட்டது.  
என்ரை.. கார், முன்னுக்குப் போனவரின்... 
புது  "போர்ஷே"  காரை அடித்து விட்டது.

அதுக்குப் பிறகு... கார் ஓடும் போது... 
பெண்களைப்  பார்க்கப் படாது, என்ற முடிவுக்கு வந்து...
இன்று வரை.. அதனை கடைப் பிடிக்கின்றேன். :grin:

😂🤣

அப்ப கார் ஓட்டாத போது உங்கடை வேலைகள் கன கச்சிதமாக நடக்கின்றது போலும் 33 வருடங்களாக😊

Share this post


Link to post
Share on other sites
On 30/7/2020 at 15:06, நிழலி said:

நாம் உயிர்த்து
இருப்பதை
உணர்த்திச் செல்லும்
ஒரு கால
ஓடம்

இயற்கை எமது நண்பன் போலே அழகிய கவிதை நிழலி.

Share this post


Link to post
Share on other sites

பின்னூட்டம் இட்ட, பாராட்டிய மற்றும் ஊக்குவிப்பு புள்ளிகளை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இங்கு கோடை தன் இறுதிச் சுற்றிற்கு அண்மித்துக் கொண்டு இருக்கின்றது. மழையும் முகிலும் மப்பும் மந்தாரமுமாக கடந்த இரண்டு நாட்கள் கழிகின்றன. இலையுதிர்காலத்துக்குள் எல்லா உணவையும் வேர்களுக்குள் சேகரித்து வைத்து விட வேண்டும் என மரங்களும் இலைகளும் வேகமாக சரசரவென இயங்கிக் கொண்டு இருக்கின்றன. 
 

Share this post


Link to post
Share on other sites
On 31/7/2020 at 10:56, தமிழ் சிறி said:

நீல  நிறம்,  அடித்த வரிகளில்.. ஒரு துயரச்  சம்பவம், 
எனக்கு, நிகழ்ந்ததை... இன்றும் மறக்க  முடியாது.    🤩

33 வருடங்களுக்கு, முன்பு... நான், திருமணம் செய்யாத காலத்தில்...
கோடை காலத்தில்... நகரத்து  உள்ளூர் வீதியில்... 
கார் ஓடிக்  கொண்டு இருக்கும் போது....
வீதியின் கரையில்..   பாதசாரிகள், நடந்து செல்லும் பாதையில்...
ஒரு அழகி..  "மினி  ஸ்கேட்டுடன்"  அழகிய நடையுடன் செல்வதை... 💖
ஒரு வினாடிக்கும், குறைவான நேரத்தில் தான்... 🙃 திரும்பிப் பார்த்தேன். 

அதுக்கு ஏன் திருமணத்தின் முன் என்கிறீர்கள்.

இப்ப பார்த்தாலும் தப்பே இல்லை.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அழகும் எழிலுமாய் கடந்து செல்லும் கோடை காலம் . காட்சிகள் நாமும் கடந்து எம்மையும் கடந்து கலந்து இயற்கையின் விளையாட்டின் அற்புதம். எளிமையும் அழகுமாய் கவிதை நன்று.

Share this post


Link to post
Share on other sites
On 30/7/2020 at 06:06, நிழலி said:

கோடை என்பது யாதெனில்
அது ஒரு
மதுக் கிண்ணம்
அழகியின் உதடுகள்
அழுத்தி தரும் முத்தம்
பசி ஆறா காமம்
கால பைரவனின்
கடைக்கண்ணில்
கிடைக்கும் வரம்

ஏசியில் இருந்து வேலை செய்தா இப்படித் தான் சொல்லத் தோன்றும்.

எத்தனை பேர் நெருப்பில் போட்ட மசுக்குட்டி மாதிரி துடித்துப் போகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

எட்டுமாதம் உறைபனிக்குள் இருந்து கோடைக்காக ஏங்குவதும், கோடை முடியும்போது மீண்டும் மனம் அடுத்த கோடைக்காக தயாரிப்பதும் என்று காலம் உருள்கின்றது.

சூரியன் எறி(ரி)க்கும் நாட்களில் வீட்டினுள் நானும் இருப்பதில்லை!

Share this post


Link to post
Share on other sites

உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்களிற்கு இந்த கோடைகாலம் ஒரு மகிழ்ச்சியான காலம். வருடம் முழுவதும் பனியில் இருக்கும் இவர்களுக்கு சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படும் சுகம் இதமாக இருக்கும்.
ஆனால் இன்னொரு பகுதியில் வாழுபவர்களுக்கோ எப்பொழுது இந்த வெப்பம் எங்களை கடந்துபோகும் என்று தவிப்போம். 
வாகனத்தில் இருக்கும் வெப்பமானி 47c. அல்லது 48c ஐ காட்டுகின்றது. இதைவிட கொடுமையானது வாளியில் இருக்கும் ஈரப்பதன். ஒரு 5 நிமிடம் நடந்தாலே வியர்வையினால் உடலில் உள்ள உப்புக்கள் / நீர்தன்மை என்பன ஆவியாகி போகின்றன.     

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.