Jump to content

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Thellippalai-Base-Hospital.jpg

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ளது.

இந்நிலையில் வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் சத்திரசிகிச்சை இன்று காலை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவார்கள் எனத் தெரிவித்தார்.

Thellippalai-Base-Hospital-Babies-scaled.jpg

https://athavannews.com/தெல்லிப்பளை-ஆதார-வைத்திய/

Link to comment
Share on other sites

தாயிற்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்! வைத்தியர்களுக்கு பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் & சேய்க்கு வாழ்த்துக்கள்..👌

மருத்துவர் & தாதிமாருக்கு பாராட்டுக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயிற்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயிற்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்

மருத்துவருக்கும் & தாதிமாருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயிற்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்

மருத்துவருக்கும் & தாதிமாருக்கும் பாராட்டுக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.