Jump to content

விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி

Recommended Posts

1 hour ago, Dash said:

எனக்கு பெயர் ஞாபகம் இல்லை  ஆனால் ஒரு ஜ நா அதிகாரி குறிப்பிட்டிருந்தார் ஜரோப்பிய ஒன்றியத்தில் புலிகளை தடை செய்யும் முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை Brussels நகரின் கோப்பி கடைகளில் எடுக்கப்பட்டது என்று. இதிலுருந்து புரிய வேணும் எந்தளவுக்கு சில தனி மனிதர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு புலிக்ளின் அழிவில் பங்காற்றியது என்று

ஐரோப்பிய ஒன்றிய தடை இந்தியாவின் புலனாய்வுத்திட்டமிடலில் நடைபெற்றது. போர்நிறுத்தகண்காணிப்பு குழுவில் ஊடுறுவி இருந்த அமெரிக்க(சார்பு) புலனாய்வாளர்களை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையே.

ஐரோப்பிய ஒன்றிய தடை மூலம் விடுதலைப்புலிகளை உணர்ச்சிவசமான முடிவெடுக்கவைப்பதற்கான ஒரு வாய்ப்பை இந்திய புலனாய்வு அமைப்பு உருவாக்கியது. அதன் படியே நடந்தது. தடைசெய்த ஐரோப்பிய நாடுகளின் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை தலைமை வெளியேறச்செய்த நிகழ்வு மிகவும் துரதிஷ்டமானது.

இதன் பாதிப்புகளை அறிக்கை மூலமும் நேரடியாகவும் தெரியப்படுத்தியும் முடிவை மாற்றமுடியாமை கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

பகலவன், நான் ஒரு பொதுமகனாக எனது பார்வையில்  கருத்துகளை தெரிவித்திருந்தேன்.  போராளிகளில் ஒருவராக உங்கள் பார்வையில் பல தகவல்கள் உண்மைகள் இருக்கும்.   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. 

உங்கள் கருத்துக்கு நன்றி. இருந்தாலும் என் கருத்தை மட்டும் எடுக்காதீர்கள். இது என் பார்வையில் மட்டுமே என்னால் சொல்லக்கூடியவற்றை மட்டுமே பதிவிடுகிறேன்.

மாயை அரசியல் குறுகிய காலத்துக்கு நன்மைகளை விளைவித்தாலும் நீண்ட காலத்தில் ஒரு மீளமுடியாவழு (fatal error) இலேயே வந்து நிற்கும் என்பதற்கு எங்கள் போராட்டம் ஒரு உதாரணம்.

1 hour ago, tulpen said:

என்ன தான் இராணுவ பலம் இருந்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதை பாதுகாக்கவும் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி செல்லவும் உலகில் ஒரு சில பலம் வாய்ந்த நாடுகளின் குறைந்த பட்ச ஆதரவாவது வேண்டும் என்பது விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுக்கு தெரியாமல் போனது எப்படி? 

இராணுவ வழியில் (இராணுவ தளவாட கொள்வனவில்) சில நாடுகளின் ஆதரவு /மறைமுக ஆதரவு எமக்கு இருந்தது என்பது நாங்கள் பாவித்த (அரச இராணுவங்கள் மட்டுமே கொள்வனவு செய்யக்கூடிய) ஆயுதங்களில் இருந்து உங்களுக்கு புரிந்திருக்கும். 

ஆனால் அரசியல் வழியில் முக்கியமான நாடுகளில் எங்கள் போராட்ட யதார்த்தை உரிய முறையில் உணர்த்த தவறிவிட்டோம்.

பாலா அண்ணை சொன்னது போல, மேலே @nirmalan குறிப்பிட்டது போல் பேச்சுவார்த்தை குழுவில் சென்றவர்கள் உள்ளூர் அமைப்புகளையும், ஆயுத இடைத்தரகர்களையும் சந்திக்க ஒதுக்கிய நேரத்தில் பாதி கூட அந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எங்கள் போராட்ட யதார்த்தத்தை சொல்லாமல் விட்டது துன்பகரமான விடயம் மட்டுமே.

ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு பணிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஆயுத கொள்வனவிலேயே அடிப்படை கவனம் செலுத்தியமை காலம் கடந்த விடயம்.

ஆனால் இறுதிவரை யாருமே அதில் வெற்றியடையவில்லை என்பது எங்களின் துரதிஷ்டமே.

மேலே @nirmalan குறிப்பிடத்தவறிய ஒரு விடயத்தையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். 

ஏழுக்கும் மேற்பட்ட ஆயுதக்கப்பல்கள் (ஆயுத தளவாடங்களுடன்) தாக்கி அழிக்கப்பட்ட பின்னர், 2008 இன் நடுப்பகுதியில் தலைவருக்கு கேபி (“அ”) யின் அடுத்த நிலையில் இருந்து தாயகத்தில் ஒதுக்கப்பட்ட போராளிகள் சிலரால் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது.(அதற்கு முன்னரும் பல தடவை தலைவரை சந்திக்க கேட்டு அனுமதி மறுக்கப்பட்டது). 

கடைசி கடிதத்தில் தலைவர் சந்திக்க ஒத்துக்கொள்ளப்படவர் M*** எனும் சங்கேத பெயரில் இருந்த (முன்னாள்) தளபதி. அவரே பின்னர் கேபி இற்கும் தலைவருக்குமிடையிலான தொடர்பாடலுக்கு உறுதுணையாக இருந்தவர்.

தலைவர் தன்னை நேரடியாக (வேலு மூலமாக) தொடர்பு கொள்ளவேண்டும், தன்னை மீண்டும் பழைய பதவிக்கு (பின்னர் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு ஒப்புக்கொண்டார்) நியமிப்பதாக அறிவிக்க வேண்டும், மற்றவர்கள் (காஸ்ரோ உட்பட) ஆயுத கொள்வனவில் இருந்து ஒதுங்க வேண்டும்  என்ற நிபந்தனைகளில் விடாப்பிடியாக கேபி இருந்தமையால் இந்த பேச்சுவார்தைகளில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது.

கடைசியாக கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரே 2009 ஆரம்பத்தில் தலைவரால் அவரது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டு அவர் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இருந்தாலும் இறுதி நாள் வரை கேபியினால் எந்த ஆயுதத்தையும் களத்துக்கு அனுப்பமுடியவில்லை.

@nirmalan நான் சொன்னவற்றில் கொஞ்சமாவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு என்று நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கே பீ பற்றிக் கேள்விப்பட்ட சில விடயங்களை இங்கே பகிரலாம் என்று நினைக்கிறேன். இவ்விடயங்களின் உண்மைத்தனமை பற்றி என்னால் உறுதிப்படுத்த முடியாது, ஆனால் இங்கிருக்கும் சில புலிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள், 2009 வரை புலிகளுடன் இருந்து ( தன்னார்வத் தொண்டர்களாக), இறுதியில்  முள்ளிவாய்க்காலில் ராணுவத்திடம் அகப்பட்டு, ஈ பீ டி பீ கட்சியின் உறுப்பினர்களுக்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை கப்பம் கொடுத்து தப்பி வந்தவர்கள் ஆகிய்யொர் மூலம் நான் கேட்டறிந்தவற்றையே இங்கே பகிர்கிறேன்.

2003 ஆம் ஆண்டு கே பீ யின் சர்வதேச ஆயுத முகவர் எனும் பதவில் தலைவரால் அகற்றப்பட்டு அவர் புலிகளின் ஆயுதக் கொள்வனவிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டிருந்தார். பல்லாண்டுகளாக புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் எனும் மிகப்பெரும் பொறுப்பிலிருந்து, அவர்களின் சர்வதேசக் கட்டமைப்பின் முடிசூடா மன்னனாக வலம் வந்த கே பீ இற்கு தலைவரின் இந்த முடிவு ஆத்திரத்தினைக் கொடுத்திருந்தது. தலைவருக்கு பாடம் புகட்டுவதற்கு தக்க தருணம் ஒன்றிற்காக கே பீ காத்திருந்தார். 

இந்தநேரத்தில்தான், கே பீ இற்கு இலங்கீ இராணுவத்தின் புல்நாய்வுத்துறையுடன் நெருக்கம் ஏற்படுகிறது. 2003 முதல் ராணுவ புலநாய்வுத்துறையின் ஹெந்தவிதாரண எனும் அதிகாரியுடனான நட்பு கே பீ புலிகளின் பல தகவல்களை ராணுவத்திற்கு வழங்க ஏதுவாக்கியது. 

கே பீ இன் இடத்திற்குத் தலவைவரால்  தாயகத்திலிருந்து சென்றிருந்த இரு முன்னாள்ப் போராளிகள் நியமிக்கப்பட்டார்கள். கே பீ போன்று சர்வதேச ஆயுத முகவர்களின் அறிமுகமின்மையும், அனுபவக் குறைவும் இப்போராளிகளினால் தலைவர் எதிர்பார்த்த நேர்த்தியான செயற்பாட்டினை வழங்கமுடியவில்லை. ஆகவே, போர் இறுதிக்கட்டத்தினை அடைந்திருந்தவேளை, வேறு வழியின்றி ராணுவப் புலநாய்வுத்துறையுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கே பீ யிடமே தலைவர் அப்பொறுப்பினை மீண்டும் கையளித்தார். 

தான் அப்பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டவுடன், புலிகளுக்கு அவசியமாகத் தேவைப்பட்ட ஆயுதக் கப்பல்களை கே பீ அனுப்பத் தொடங்கினார். ஆனால், எந்தக் கப்பல்களிலும் எதுவித ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ நிரப்பப்படாது வெற்றுக்கப்பலகளாகவே அவை அனுப்பிவைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், கே பீ இன்னுமொரு விடயத்தையும் செய்தார். அதாவது, தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட வெற்றுக்கப்பல்களின் விடயங்களை இலங்கை ராணுவத்தின் புல்நாய்வுத்துறைக்கு தவறாமல் அறிவித்துக்கொண்டிருந்தார். இவ்வாறு கே பீ யினால் அனுப்பப்பட்டு, காட்டிக்கொடுக்கப்பட்ட புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள் இறுதிச் சில மாதங்களில் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இந்திய இலங்கை கடற்படைகளாலும், விமானப்படையினாலும் அழிக்கப்பட்டன. 

ஆக, புலிகளின் சர்வதேச ஆயுத வலையமைப்பு ஒருகட்டத்தில் இலங்கை ராணுவப் புல்நாய்வுத்துறையின் முற்றான கண்காணிப்பின்கீழ்த்தான் செயற்பட்டுக்கொண்டிருந்ததென்றால் அது மிகையில்லை. அதற்கு ஒரே காரணம் கே பீ.

இறுதி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று ஆயுதப் பற்றாக்குறை. அதை இலங்கை இந்திய அரசுகளுக்குச் சாதகமான முறையில் கொண்டுநடத்தியவர் கே பீ. ஆகவே, கே பீ யின் வஞ்சனையும் துரோகமும் கூட புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தனிநபர்களால் அழிக்கக் கூடிய அளவுக்கு மிகவும்  பலவீனமான போராட்டம் புலிகளால் நடத்தப் பட்டது என்று  கூற  வருகின்றீர்களா? 

இது கேட்பதற்குச் சற்றுக் கடிணமாக இருந்தாலும் உண்மை அதுதான்.

சில அமைப்புக்களில் பலர் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரமும், நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரமும் ஒரு சிலரிடமே இருக்கிறது. அதிலும் அரசியல்ப் பலமும் சேர்ந்துவிட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்று அல்லது இருவரே அத்தனை முடிவுகளையும் எடுக்கும் நிலையேற்படுகிறது. 

இதுதான் எமக்கெதிராகவும் நடந்தது. 2005 இல் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா பதவியேற்றதுமுதல் , அவரது காங்கிரஸ் ஆதரவு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய இரு துறைகளிலும் இருந்த இரு முக்கிய அதிகாரிகள் சோனியா சார்பாக இலங்கைப் போரினை நடத்தும் பொறுப்பினை எடுக்கின்றனர். அவர்கள்தான் சிவஷங்கர் மேனனும் எம் கே நாராயணனும். இவர்களுக்கு மேலதிகமாக பிரணாப் முகர்ஜி மற்றும் விஜய் சிங் ஆகியோரும் பின்னாட்களில் சேர்கின்றனர். ஆக, இந்த மூவரடங்கிய இந்தியக் குழுவே இலங்கையில் அமைக்கப்பட்ட கொத்தாபய, லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ஷ ஆகிய மூவர் அடங்கிய போரணிக் குழுவுடன் சேர்ந்து செயற்படுகிறது. எதுவித நீதி மற்றும் நிர்வாகத் தலையீடுகள் இன்றி, போர்க்களத்தின் அன்றாடம் நடக்கும் விடயங்களுக்கான தீர்வுகளை, புதிய நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தி இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு போர் தங்குதடையின்றி நடைபெற்று அவர்களின் இலக்கான எவ்விலை கொடுத்தாவது புலிகளை அழித்தல் எனும் மிகப்பெரும் அழித்தொழிப்பு யுத்தத்தை வெறும்  6 நபர்களே செய்துமுடிக்கின்றனர். 

ட்ரொய்க்கா எனும் இக்குழு பற்றி பல இந்திய பாதுகாப்புச் சஞ்சிகைகள் பலமுறை புகழ்ந்து எழுதியிருக்கின்றன. இலங்கையில் பரீட்சிக்கப்பட்ட இந்த தங்கு தடையற்ற, சுதந்திரமான  தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட இக்குழுவைப் பின்பற்றி பல நாடுகளில் நடைபெறும் கிளர்ச்சிகளும் அடக்கப்படமுடியும் என்றும் இவை கிலாகிக்கின்றன. 

ஆகவே, புலிகள் கொண்டுநடத்திய தமிழ் மக்களுக்கான சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை இரு அரசியல்த் தலைவர்களும், 6 அதிகாரிகளுமே முற்றாக அழித்துமுடித்தார்கள் என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

10 minutes ago, ரஞ்சித் said:

இதில் எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும் சோனியாவுக்குன் இதுக்கும் சம்ப்ந்தம் இருக்காது;  அதே போல் முக்கியமாக கோபாலபுரத்து திராவிட கும்பலின் தானைத் தலைவனை மறந்து விட்டீர்கள். 

அதே போல் பிரித்தானிய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் டேவிட் மிலிபாண்டையும் பிரான்ஸ் அமைச்சர் ஜாரட் குச்னரையும் ஶ்ரீலங்கா மாதிரி ஒரு சுண்டங்காய் நாட்டு பாதுகாப்பு செயலாளர் வாயை மூடிக்கொண்டு நடையை கட்டுங்கோ என அவமதித்து அனுப்பினார் எனறால் அந்த தைரியத்தையும் கொடுத்து எந்தவிதமான தலையீடும் இல்லாமல் இலங்கையை முழுமையாக பாதுகாத்தது இந்த சில தனிநபர்கள் தான். இவர்களுடைய ஒரே இலக்கு புலி அழிப்பு மட்டுமே இதற்காக இந்தியாவின் பிராந்திய பலன்களை கூட விட்டுக்கொடுத்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி ஊடுருவி மாஸ்ட்டர் ஸ்ட்ரோக் வைக்கும் கோத்தாவுக்கே 
வாயில் அவல்கொடுத்து அரசியலமைப்பை மாற்றி  தமிழர்களுக்கு தீர்வு கொண்டுவரப்போகிறார்கள் சம்சும்பிகா 
எமது அரசியலறிவு என்பது இன்டர்நேஷனல் லெவல் அண்ணை  அதனால் தானோ என்னவோ தலையில் புரைக்கேறும் அளவுக்கு பருப்பு திண்டுகொண்டே இருக்கிறோம் 

இந்தத் தேர்தலில் தமிழ் எம்பிமார் எப்படியும் பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள். அப்படிப் போகின்றவர்கள் அங்கு நித்திரை கொள்ளப்போவதைவிட கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாகப் போகலாம்தானே.

மிச்சத்தை வியாழன், வெள்ளி அலசுவோம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Dash said:

இதில் எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும் சோனியாவுக்குன் இதுக்கும் சம்ப்ந்தம் இருக்காது;  

புலிகளை அழிக்கவேண்டும் என்கிற தேவை இந்தியாவில் சோனியாவைத்தவிர வேறு எவருக்கும் இருந்ததாக நான் நம்பவில்லை. நீங்கள் சோனியாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தருகிறது. உங்களின் கூற்றுப்படி சோனியா சம்பந்தப்படவில்லையென்றால், மேனனுக்கும் நாராயணனுக்கும் புலிகளை அழிக்கவேண்டிய தேவை ஏன் இருந்ததாக நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

ரஞ்சித் மற்றும் Dash உங்களின் பெரும்பாலான கருத்துகளோடு உடன்பட்டாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள், சௌத் புளக், ராஜீவ் குடும்பம் இவர்கள் எல்லாருக்கும் ஒரு ஒற்றைப்புள்ளி இலக்காக இருந்தது தலைவரை / பொட்டம்மானை உயிரோடு பிடிப்பது(எக்காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று) அல்லது அழிப்பது. (புலிகளை முற்றாக அழிப்பது அவர்கள் நோக்கமல்ல). தங்களின் சொல்கேட்டு நடக்க கூடிய புலிகளை விட்டுவைப்பது(இறுதி வெள்ளைக்கொடி நாடகம் உட்பட).இது பழிவாங்கல் மட்டுமல்ல, பிராந்திய கட்டுப்பாடு, வல்லாதிக்கம், ஈகோ, கையகலாத்தன்மையில் இருந்து வெளியேவரவேண்டிய தேவை எல்லாம் சேர்ந்த ஒரு புள்ளி நோக்கம்.

தலைவரின் நோக்கம் இந்த போரின் முடிவில் / தனது முடிவுக்கு பின்னர் புலிகள் என்ற இயக்கமே இருக்க கூடாது என்பது தான். இதை தெளிவாக தை 2009 விசுவமடு கூட்டத்தில் கூறி இருந்தார்.அதில் அவர் வெற்றியும் கண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த தகவல் சரியானதாக இருந்தால் இன்றோ நாளையோ மறுதினமோ  லண்டன் புறநகரில் காணிவாங்கி மாவீரர் துயிலுமில்லம் நடாத்துவோர், அனைத்துலகச் செயலகம் எனும் பெயரில் இதேபோன்றதொரு அறிக்கையை விளியிடுவார்கள் என அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

புலிகளை அழிக்கவேண்டும் என்கிற தேவை இந்தியாவில் சோனியாவைத்தவிர வேறு எவருக்கும் இருந்ததாக நான் நம்பவில்லை. நீங்கள் சோனியாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தருகிறது. உங்களின் கூற்றுப்படி சோனியா சம்பந்தப்படவில்லையென்றால், மேனனுக்கும் நாராயணனுக்கும் புலிகளை அழிக்கவேண்டிய தேவை ஏன் இருந்ததாக நினைக்கிறீர்கள்? 

ரஞ்சித்,

உங்களுக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படை பின்னணி பற்றி தெரியாதா? இது பற்றி விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புகளை தடை செய்தபோது மக்களுக்கு சந்தி சந்தியாக நடத்திய கூட்டங்களூடாகவும், அதன்பின்னர் பல்கலைக்கழக சமுகம் பல ஆய்வுகள், வெளியீடுகள், ஆக்கங்களூடாகவும், பின்னர் ஊடகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவும் நிறைய எழுதி இருக்கிறார்கள்.

இலங்கை பற்றிய இந்திய வெளியுறவு கொள்கை பற்றிய தெளிவில் விடுதலைப்புலிகளுக்கும், பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்த காலங்களில் இருந்த - இருக்கும் சிறிலங்கா அரசுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமையை காணலாம். இந்த ஒற்றுமைதான் பிரேமதாச காலத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் - ஆயுதப்போராட்ட ஒற்றுமையாக வளர்ந்தது.

ஆகவே, இலங்கை பற்றிய இந்திய வெளியுறவு கொள்கை என்ன?

பிரித்தானியர் வெளியேறிய நாள் முதலாய் இன்றுவரை இலங்கை, இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கவண்டு, இந்திய வழிகாட்டலில் செயற்பட மறுக்கிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நேரு காலத்தில் இதற்கு இரண்டு வகையான தீர்வுகளை வகுத்திருக்கிறார்கள். ஒன்று சரிவராவிட்டால் மற்றது நடைமுறையில் இருக்கும். 

அந்த இந்திய தீர்வுகள் எவை?

1. இலங்கையை இந்தியாவின் சிறப்பு யூனியன் பிரதேசமாக (அந்தமான் தீவுகள் போல) இணைத்துக் கொள்வது.

2. அது சாத்தியமாகுமட்டும், இலங்கையை குழப்பமான, பாதுகாப்பில்லாத, பொருளாதார உறுதியற்ற நாடாக வைத்திருப்பது.

இந்தியப்படையை இலங்கைக்கு அனுப்பியது முதலாவது முறைக்கான முயற்சி. இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கிய நோக்கமும் அதுவே. அந்த நோக்கத்தை பிரேமதாசவுடன் சேர்ந்து முறியடித்தவர்கள் விடுதலைப்புலிகள். ஆகவே விடுதலைப்புலிகள் இருக்கும்வரை, அவர்களின் தலைவராக பிரபாகரன் இருக்கும்வரை, தீர்வு 1 சாத்தியமில்லை. அதனாலேயே விடுதலைப்புலிகள் அழிக்கப்ட்டார்கள்.

எமது மக்களுக்கு விடுதலைப்புலிகளும் அறிவார்ந்த சமுகமும் 1985லிருந்தே இதை நன்கு விளக்கி இப்படி நடக்கும் என்று எதிர்வு கூறியிருந்தார்கள்.

இன்றுவரை தீர்வு 1 சாத்தியமில்லாததால், தீர்வு 2 நடைமுறையில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

தலைவரின் நோக்கம் இந்த போரின் முடிவில் / தனது முடிவுக்கு பின்னர் புலிகள் என்ற இயக்கமே இருக்க கூடாது என்பது தான். இதை தெளிவாக தை 2009 விசுவமடு கூட்டத்தில் கூறி இருந்தார்.அதில் அவர் வெற்றியும் கண்டார்.

பகலவன்,

இதுபற்றிச் சிறிது விபரமாக எழுத முடியுமா?

முடிவுபற்றி தலைவர் அறிந்திருந்தாரா? அல்லது முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதா? போராட்டம் முற்றுப்பெறவேண்டும் என்கிற தேவை தலைவருக்கு ஏன் ஏற்பட்டது? 

12 minutes ago, கற்பகதரு said:

உங்களுக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படை பின்னணி பற்றி தெரியாதா?

உங்களுடன் ஒப்பிடும்பொழுது போராட்டத்தின் முன்னைய சரித்திரம் எனக்கு அவ்வளவாகத் தெரியாதென்பதை ஒத்துக்கொள்கிறேன்.

நீங்கள் கூறும் விடயங்கள் பதில்களை வழங்குவதற்குப் பதிலாக குழப்பங்களையே விட்டுச் செல்கின்றன. நீங்கள் முன்வைக்கும் வழிகள் பற்றிய சரியான தெளிவு எனக்கு இன்னும் ஏற்படவில்லை.

சிங்களவருடன் சேர்ந்து இந்தியாவை எதிர்க்கவேண்டும் என்று நீங்கள் கேட்பதுபோலத் தெரிகிறது. ஆனால், எம்மை இன்று நேரடியாக அழித்துக்கொண்டிருப்பதே சிங்களவர்தான் என்கிறபோது, அவர்களுடன் சேர்வதென்பது எப்படிச் சாத்தியமானது என்பதற்கு இன்னமும் நீங்கள் பதில் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கற்பகதரு said:

இன்றுவரை தீர்வு 1 சாத்தியமில்லாததால், தீர்வு 2 நடைமுறையில் உள்ளது.

இந்தியாவின் உண்மையான நோக்கத்திற்கு புலிகள் எதிரானவர்கள் என்றால், சிங்களவர்கள் புலிகளை அழித்தது ஏன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகலவன் said:

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையோ தாக்குதல் வெற்றிகளை இராணுவ வல்லமையை மட்டுமே வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தன. அவை மக்கள் மத்தியில் இராணுவ வல்லமை பற்றிய ஒரு மாயையே உருவாக்கி இருந்தன. அது கடைநிலை புலிகள் வரை பரவியிருந்தமை துரதிஷ்டமே.

இதே மாயை வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் இன்றும் இருப்பதை தாரளமாக காணலாம்.

6 hours ago, nirmalan said:

பேட்டி நிர்ப்பந்தத்தால் வழங்கப்பட்டது என்பது மட்டும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

பேட்டியில் சொல்லபட்ட உண்மைகளும் நிர்ப்பந்தத்தால் தான் அவரால் சொல்லபட்டது என்றாகிவிட்டதே

Link to comment
Share on other sites

30 minutes ago, ரஞ்சித் said:

பகலவன்,

இதுபற்றிச் சிறிது விபரமாக எழுத முடியுமா?

முடிவுபற்றி தலைவர் அறிந்திருந்தாரா? அல்லது முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதா? போராட்டம் முற்றுப்பெறவேண்டும் என்கிற தேவை தலைவருக்கு ஏன் ஏற்பட்டது? 

ரஞ்சித்,

இதற்கு மேலதிக விளக்கமாக நான் 2015 இல் எழுதிய ஒரு கருத்தை அடிக்கோடு இடுகிறேன். 

உங்கள் கேள்விகளுக்கு என்னாலான வரை வெளியில் சொல்லக்கூடியவரை பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

பகலவன், நான் ஒரு பொதுமகனாக எனது பார்வையில்  கருத்துகளை தெரிவித்திருந்தேன்.  போராளிகளில் ஒருவராக உங்கள் பார்வையில் பல தகவல்கள் உண்மைகள் இருக்கும்.   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. 

என்ன தான் இராணுவ பலம் இருந்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதை பாதுகாக்கவும் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி செல்லவும் உலகில் ஒரு சில பலம் வாய்ந்த நாடுகளின் குறைந்த பட்ச ஆதரவாவது வேண்டும் என்பது விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுக்கு தெரியாமல் போனது எப்படி?   இந்த  கேள்வி என் மனதில் இப்போதும் உள்ள கேள்வி.  பலமாக தம்மால் கட்டி எழுப்பப்பட்ட போராட்டத்தை ஜதார்த்த‍த்தை உலக அரசியலை மனதில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் அடைந்தால் மகா தேவே இல்லையேல் மரண தேவி என்ற கண்ணோட்டத்தில் புலிகள் செயற்பட்டதற்கு என்ன காரணம்? 

அநேகமான கரும்புலிகளின் தாக்குதல்களுக்கு கரும்புலிகளை அனுப்பவேண்டிய தேவையே இல்லை. தூரே சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் ஆயுதங்கள் இருந்தபோதும் ஏன் அவர்களை அனுப்பி பலி கொடுத்தோம் என்பதன் வலியை எந்த மக்கள் உணர்ந்தார்???

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறும் விடயங்கள் பதில்களை வழங்குவதற்குப் பதிலாக குழப்பங்களையே விட்டுச் செல்கின்றன. நீங்கள் முன்வைக்கும் வழிகள் பற்றிய சரியான தெளிவு எனக்கு இன்னும் ஏற்படவில்லை.

சிங்களவருடன் சேர்ந்து இந்தியாவை எதிர்க்கவேண்டும் என்று நீங்கள் கேட்பதுபோலத் தெரிகிறது. ஆனால், எம்மை இன்று நேரடியாக அழித்துக்கொண்டிருப்பதே சிங்களவர்தான் என்கிறபோது, அவர்களுடன் சேர்வதென்பது எப்படிச் சாத்தியமானது என்பதற்கு இன்னமும் நீங்கள் பதில் தரவில்லை.

சிங்களவர்கள், எல்லாத் தமிழர்களையும் அழிக்கவில்லை. கொழும்பில் உள்ள செல்வந்த தொழிலதிபர்களில் தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். ஆகவே எந்த தமிழர்களை சிறிலங்கா அரசு அழிக்கிறது என்று பார்க்க வேண்டும். இனக்கலவரங்கள் பல நாடுகளில் அவ்வப்போது நடக்கின்றன. அவை தொழிலதிபர்களையோ மக்களையோ நிரந்தரமாக ஒதுக்கி விடுவதில்லை. 

இந்தியாவின் அழிவு முயற்சிக்கு ஒத்துழைக்கும் தமிழர்களையே சிறிலங்கா அரசு அழிக்கிறது. யார் இந்த தமிழர்கள்? முன்னர் இவர்களில் பலர் இலங்கை முழுவதும் இருந்தார்கள். இன்று வடக்கு கிழக்கில் இருக்கிறார்கள். ஆகவே இவர்களை அடையாளம் கண்டு அழித்தால் போதுமானதல்லவா, ஏன் அப்பாவி  தமிழரை அழிக்கிறார்கள்? அப்பாவி தமிழர் தாமறியாமலே இந்திய சதிக்கு துணைபோவதால் அழிக்கிறார்கள்.

பதில் தந்திருந்தேனே? பிரேமதாச காலத்தில், பிரேமதாச பெருமளவு ஆயுதங்களையும் பணத்தையும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கி இந்திய இராணுவத்தை தாக்கி விரட்ட ஒத்துழைத்தார். ஜனாதிபதியானதும், உத்தியோகபூர்வமாக இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார். அந்த வெளியேற்றத்துடன், வடக்கு-கிழக்கை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்தார். விடுதலைப்புலிகளின் ஆட்சி நடந்தது. ஆனால் அதை உத்தியோகபூர்வமான ஆட்சியாக்க தேவையான 3 இல் 2 பாராளுமன்ற வாக்குகள் பிரேமதாசவிடம் இருக்கவில்லை. அந்தவிதமான கூட்டுறவு மூலமே, இந்திய அழிவு வேலைகளை தடுக்கமுடியும்.

அல்லாவிட்டால், தமிழரை பயன்படுத்தி இலங்கையில் இந்தியா அழிவு வேலைகளை செய்யும். அந்த தமிழரை சரியாக அடையாளம் காணமுடியாத சிங்களவர், எல்லாத் தமிழரையும் அழிவு வேலைகள் செய்யும் இந்திய கூலிகள் என்று கருதி அழிப்பார்கள். தமிழர்களும் இது இன வெறி என்று மேலும் மேலும் இந்திய உதவியுடன் சிங்களவர்களை அழிப்பார்கள். சிங்களவர்களும் தமிழர்களை அழிப்பார்கள். இந்திய நோக்கமான, இலங்கையை வளரவிடாமல் குழப்பத்தில் வைத்திருக்கும் கொள்கை வெற்றிகரமாக தொடரும். பெரும் அழிவு வலுவற்ற சிறுபான்மையான ஈழத்தமிழருக்கே. இன்று முஸ்லிம்களிலும் குறைவான தொகையாகி விட்டவர்கள் பின்னர் பறங்கியரிலும் குறைவானவர்களாகி, நாளடைவில் சிங்களம் கற்று சிங்களவராகி, விகாரைகளுக்கும் போய் பௌத்த சிங்களவராகி விடுவர். நீர்கொழும்பில் இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர் மாற ஆரம்பித்துவுட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இந்தத் தேர்தலில் தமிழ் எம்பிமார் எப்படியும் பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள். அப்படிப் போகின்றவர்கள் அங்கு நித்திரை கொள்ளப்போவதைவிட கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாகப் போகலாம்தானே.

மிச்சத்தை வியாழன், வெள்ளி அலசுவோம்😀

ஏன் ... வியாழன், வெள்ளி வரை தள்ளிப் போடுகின்றீர்கள்? :rolleyes: :grin:
உடனே.. அலச வேண்டியது தானே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

சிங்களவர்கள், எல்லாத் தமிழர்களையும் அழிக்கவில்லை. கொழும்பில் உள்ள செல்வந்த தொழிலதிபர்களில் தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். ஆகவே எந்த தமிழர்களை சிறிலங்கா அரசு அழிக்கிறது என்று பார்க்க வேண்டும். இனக்கலவரங்கள் பல நாடுகளில் அவ்வப்போது நடக்கின்றன. அவை தொழிலதிபர்களையோ மக்களையோ நிரந்தரமாக ஒதுக்கி விடுவதில்லை. 

இந்தியாவின் அழிவு முயற்சிக்கு ஒத்துழைக்கும் தமிழர்களையே சிறிலங்கா அரசு அழிக்கிறது. யார் இந்த தமிழர்கள்? முன்னர் இவர்களில் பலர் இலங்கை முழுவதும் இருந்தார்கள். இன்று வடக்கு கிழக்கில் இருக்கிறார்கள். ஆகவே இவர்களை அடையாளம் கண்டு அழித்தால் போதுமானதல்லவா, ஏன் அப்பாவி  தமிழரை அழிக்கிறார்கள்? அப்பாவி தமிழர் தாமறியாமலே இந்திய சதிக்கு துணைபோவதால் அழிக்கிறார்கள்.

பதில் தந்திருந்தேனே? பிரேமதாச காலத்தில், பிரேமதாச பெருமளவு ஆயுதங்களையும் பணத்தையும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கி இந்திய இராணுவத்தை தாக்கி விரட்ட ஒத்துழைத்தார். ஜனாதிபதியானதும், உத்தியோகபூர்வமாக இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார். அந்த வெளியேற்றத்துடன், வடக்கு-கிழக்கை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்தார். விடுதலைப்புலிகளின் ஆட்சி நடந்தது. ஆனால் அதை உத்தியோகபூர்வமான ஆட்சியாக்க தேவையான 3 இல் 2 பாராளுமன்ற வாக்குகள் பிரேமதாசவிடம் இருக்கவில்லை. அந்தவிதமான கூட்டுறவு மூலமே, இந்திய அழிவு வேலைகளை தடுக்கமுடியும்.

அல்லாவிட்டால், தமிழரை பயன்படுத்தி இலங்கையில் இந்தியா அழிவு வேலைகளை செய்யும். அந்த தமிழரை சரியாக அடையாளம் காணமுடியாத சிங்களவர், எல்லாத் தமிழரையும் அழிவு வேலைகள் செய்யும் இந்திய கூலிகள் என்று கருதி அழிப்பார்கள். தமிழர்களும் இது இன வெறி என்று மேலும் மேலும் இந்திய உதவியுடன் சிங்களவர்களை அழிப்பார்கள். சிங்களவர்களும் தமிழர்களை அழிப்பார்கள். இந்திய நோக்கமான, இலங்கையை வளரவிடாமல் குழப்பத்தில் வைத்திருக்கும் கொள்கை வெற்றிகரமாக தொடரும். பெரும் அழிவு வலுவற்ற சிறுபான்மையான ஈழத்தமிழருக்கே. இன்று முஸ்லிம்களிலும் குறைவான தொகையாகி விட்டவர்கள் பின்னர் பறங்கியரிலும் குறைவானவர்களாகி, நாளடைவில் சிங்களம் கற்று சிங்களவராகி, விகாரைகளுக்கும் போய் பௌத்த சிங்களவராகி விடுவர். நீர்கொழும்பில் இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர் மாற ஆரம்பித்துவுட்டனர்.

இந்தியாவும் றோவும் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிட்டது, அதற்கு கணிசமான பங்கு புலிகளே, 1989 அளவில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசா முயன்ற வேளை றோ அமைப்பு ஒரு பதில் நடவடிக்கையில் இறங்கியது, தமிழ் தேசிய இராணுவம் என்னும் பெயரில் தமிழ் இளையோரை வலுக்கட்டாயமாக ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் திரட்டி ஆயுத பயிற்சி ஆயுதம் போன்றவற்றை வழங்கியதுடன் அப்போதிருந்த வடகிழக்கு மாகாணசபையின் மூலமாக தமிழீழ பிரகடனம் செய்வதுடன் அதற்கெதிராக சிங்கள இராணுவம் இராணுவ நடவடிக்கை எடுத்தவுடன் அதனை காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற பெயரில் இந்திய இராணுவத்தை மீண்டும் கொண்டுவர இருந்தது , தமீழ பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சிலநாடுகளையும் இந்தியா தயார் படுத்திருந்த்தாக செய்தி வந்திருந்த்தது ஆனால் அதனை குழப்பியது விடுதலைப்புலிகள், தமிழ் தேசிய இராணுவத்தின் மீது சிங்கள இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் நாம் அதனைக்கையாளுகின்றோம் என்று அந்த திட்டத்தை சீர் குலைத்து விட்டார்கள், தமிழ் மக்கள் மனதில் இந்திய எதிர்ப்புணர்வினை தொடர்ந்து பேணுவது சிங்களத்திற்குதான் நன்மை தமிழர்களுக்கல்ல என்பதே எனது எண்ணம்.இலங்கை என்றும் இந்திய நலனுக்கு எதிரானநாடு என்பது இந்தியாவிற்கும் தெரியும் இதனால் ஒருமித்த இலங்கை தேசம் உண்மையான இந்திய நலன் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 04:54, satan said:

இங்கும், அங்கும் சொகுசாய் வாழ்பவரால் அல்லது உயிர் அச்சத்தால் இப்பிடி ஒரு  பேட்டி கொடுக்கலாம், புகழாரம் சூட்டலாம்.  அவ்வளவு நல்லவர்கள், இவரை தாராளமாக நடத்துபவர்கள் ஏன் இன்னும் அரசியல் கைதிகள் என்று தமிழ் இளைஞர்களின் எதிர்காலம், இளமையை  வீணாக்கி சிறையில் அடைத்து வைத்து  இனிமை காண்கிறார்கள்?  முன்னாள் போராளிகளை சந்தேகத்துடன் நாட்டில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள், வறுமையில் வாழுகிறார்கள். போராட்டத்தின் முக்கிய காரணத்தை கண்டு தீர்த்திருக்கலாமே? இதுதான் ஒரு நல்ல அரசியற் தலைவர் செய்ய வேண்டியது. 

உண்மை. ஒரு இனப்படுகொலையாளனுக்கு ஒரு இனத்துரோகி கொடுக்கும் சான்றிதழ் இப்படித்தான் இருக்கும். தேர்தலுக்கான திட்டமிட்ட பேட்டி.யென அப்பட்டமாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஏன் ... வியாழன், வெள்ளி வரை தள்ளிப் போடுகின்றீர்கள்? :rolleyes: :grin:
உடனே.. அலச வேண்டியது தானே... 

புதன் தேர்தல். வியாழன் வாக்குகளை  எண்ணத்தொடங்குவார்கள். வியாழன் இரவு, வெள்ளியன்று எல்லா முடிவுகளும் வந்துவிடும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஏன் ... வியாழன், வெள்ளி வரை தள்ளிப் போடுகின்றீர்கள்? :rolleyes: :grin:
உடனே.. அலச வேண்டியது தானே... 

எந்தப்பக்கம் வசதியோ அந்தப்பக்கம் பாய்வினம்.பாய்ஞ்சிட்டு
பிறகு எங்களுக்கு எப்பவோ தெரியும் எண்டுவினம் 😎

மதில் மேல் பூனை | Cat on the wall - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்தப்பக்கம் வசதியோ அந்தப்பக்கம் பாய்வினம்.பாய்ஞ்சிட்டு
பிறகு எங்களுக்கு எப்பவோ தெரியும் எண்டுவினம் 😎

மதில் மேல் பூனை | Cat on the wall - YouTube

நான் இந்தத் திரியிலும் பிற திரிகளிலும் எழுதியதை வாசித்திருந்தால், கூட்டமைப்பு 10 ஆசனங்கள் மட்டுமே எடுக்கும் என்றும் சம்பந்தர் திருமலையில் தோற்கவேண்டும் என்பதும் எனது விருப்பு/கணிப்பு.

எதையும் வாசிக்காமல் முன்முடிபுகளோடு எழுதுவது இங்கு பலருக்கு வழமையானதுதானே.😜

திரும்பவும் சலிக்காமல் சொல்லுவது இதுதான்.

நான் கூட்டமைப்பு, மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளில் நம்பிக்கையுள்ளவன் இல்லை. பிற உதிரிக் கட்சிகளை கணக்கிலும் எடுப்பதில்லை. 

நீண்ட தேர்தல்  விஞ்ஞாபனங்கள், அரசியல் ஆய்வுகள் போன்றவற்றை மேலோட்டமாகவேனும் படித்தால் தமிழ்க்கட்சிகளின் பிளவுகளும், அவர்கள் கூசாமல் பேசும் பொய்களும் தெரியும்.

இந்தத் தேர்தலில் மக்கள் ஒற்றுமையின்மைக்கு ஒரு பாடம் கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அது வியாழன், வெள்ளியில் தெரியும்.

யாழில் சுமந்திரனும் இன்னும் 3 பேரும் கூட்டமைப்பில் வெல்வார்கள் என்பது என் கணிப்பு. இது பிழைக்கலாம். அதுபோல கிழக்கில் மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள், பிள்ளையானுக்கு ஒன்று கிடைக்கலாம்.

அம்பாறையில் கருணா அம்மான் வெல்லலாம். அவர் வெல்லாவிட்டால், அம்பாறையை பிரதிநிதிப்படுத்த தமிழர் இருக்கமாட்டார்கள்.

தேசியப்பட்டியல் நாடுதழுவிய வாக்குப் பதிவில் 5% க்கு மேல் கிடைக்கும் என்பதால் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிட்டும். அதை அம்பிகா அம்மையாருக்குத்தான் கொடுப்பார்கள் என்பது என் கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நான் கூட்டமைப்பு, மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளில் நம்பிக்கையுள்ளவன் இல்லை. பிற உதிரிக் கட்சிகளை கணக்கிலும் எடுப்பதில்லை. 

இப்படியான பதில்களுக்காகத்தான்  அந்த பூனைப்படம்.😎
அது அப்படியே நிற்க....

எனது விருப்பம் இவர்கள் இருவரும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே.

 இவர் சுமந்திரனின் துரோகச்செயல்களுக்காக பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் கொடுக்கக்கூடியவர்.தமிழ் தேசியத்திற்கு குரல் கொடுத்த தந்தையை இழந்தவர்.

kajenthirakumar-e1487678966256-768x576.jpg

இவர்  தமிழ்தேசியத்திற்கு குரல் கொடுத்த காரணத்திற்காக கணவரை இழந்தவர். சோரம் போக மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு.

116587551_3763470717047081_7583807092141830452_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=v9-4EQyYLHEAX8IcPX7&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b1c30b8b1eaf9c767e5a856d7fab7366&oe=5F4C7CE6

அம்பிகா நிச்சயம் பாரளுமன்றம் நுழைவார். இது தமிழினத்திற்கு இன்னுமொரு பின்னடைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 இவர் சுமந்திரனின் துரோகச்செயல்களுக்காக பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் கொடுக்கக்கூடியவர்.தமிழ் தேசியத்திற்கு குரல் கொடுத்த தந்தையை இழந்தவர்

2015 இல் கஜேந்திரகுமார் வெல்வார் என்று கணித்து அது பொய்த்திருந்தது. இம்முறை வெல்லக்கூடும். ஆனால் விக்கியரும் கஜேந்திரகுமாரும் பிரிந்து கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதனால் இருவரும் போகலாம், போகாமலும் விடலாம்.

5 minutes ago, குமாரசாமி said:

இவர்  தமிழ்தேசியத்திற்கு குரல் கொடுத்த காரணத்திற்காக கணவரை இழந்தவர். சோரம் போக மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு.

ரவிராஜின் மீதான ஆதரவைக்கொண்டு கூட்டமைப்புக்கு வாக்குகளை சேர்க்கத்தான் சசிகலா அம்மையார் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். விருப்பு வாக்குகள் இவருக்கு விழாதவண்ணம் சிறிதரன், சுமந்திரன், மாவை, சரவணபவான் போன்றோர் தமது பிரச்சாரங்களை செய்திருந்தனர். எனவே இவர் வெல்ல சாத்தியம் வலுகுறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2020 at 20:24, பகலவன் said:

40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன்.

muligai%2Bthuupam.jpg

போட்ட சாம்பிராணி நல்ல தரம் போல...
புகை நல்லாய் வருது :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.