• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

இப்படியும் விபத்து..!

Recommended Posts

இப்படியும் விபத்து..!

 

மனுசனுக்கு 'எப்போ, எது, எப்படி நடக்குமென தெரியாது..!' என்பதை இந்தக் காணொளியை பார்த்தால் புரியும்..🙄

பெங்களூர் கே.ஆர்.புரத்தில் சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி நின்றுகொண்டிருந்த ஆட்டோக்காரர், தான் நிற்பது சாலையில் அறுந்து தொங்கும் ஒரு கேபிள் மீதென உணராமலிருக்க,

அந்தக் கேபிளை சாலையில் செல்லும் மற்றொரு ஸ்கூட்டர் இழுத்துச் செல்ல,

அதனால் 10 அடி உயரத்திற்கு எழும்பி தூக்கியெறியப்படும் ஆட்டோ ஓட்டுனர், அவ்வழியே நடந்து செல்லும் ஒரு பெண்ணின் மீது விழ,

அப்பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சையாக 54 தையல்கள் போடும் நிலைக்கு ஆளானது சோகம்..!

அதிர்ஸ்டவசமாக இருவரும் காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டனர்..!

 

 

Share this post


Link to post
Share on other sites

விதி??

Share this post


Link to post
Share on other sites

மனிச வாழ்க்கையிலை எதுக்குமே உத்தரவாதம் இல்லை. எது எப்ப என்ன நடக்குமெண்டு ஆருக்குமே தெரியாது.
 

Share this post


Link to post
Share on other sites

மனிதன் அலையில் அலையும் குமிழே 
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அரசியலில் பெண்கள்  ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும்  அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது.  இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள்.  இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள். இதில் பலராலும் அனுபவம் சார்ந்து எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பொது வெளிக்கு, அதுவும் குறிப்பாக அரசியலுக்கு வரும் பெண்களை இழிவு படுத்துபவையாக வும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஆண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்களை விட அதிகமான சிக்கல்களைக் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.  இந்தப் பதிவில் நான்  எழுதுகின்றவை இக்கலந்துரையாடல் மூலம் கிடைத்த தகவல்களோடு எனது தனிப்பட்ட கருத்துக்களையும்  அடக்குகின்றன.  இவ்வுரையாடலில் கலந்து கொண்டவர்களின்  பெயர்கள்  தவிர்க்கப்பட்டாலும்,   இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை  மேற்கொண்டவர்களின் பெயர்கள் இதன் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. சிக்கல் 1 ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லது சேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு, பொருளாதாரத் தேவைகள்  எனப் பலவகையான  குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிக்கல் 2 அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை  தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே  பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும்  அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.  தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது,  பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும்  பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது.  சிக்கல் 3 அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில்  பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின்  தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது.   எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது. இலண்டனிலுள்ள ஐ பி சி ஒளி / ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'டீக்கடை' நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வெறுமே அரசியல் நையாண்டிகள் போல அல்லாது ஊடக தர்மம் மீறி இப்படியான ஒரு ஒளிபரப்பு செய்தவர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள்  தாம் நையாண்டி செய்த  இக்குறிப்பிட்ட பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது அவசியம்.  அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும்.  அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப்  பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர் தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும்? சிக்கல் 4 தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது  அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும்  பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது.   அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான  சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே. சிக்கல்: 5 சில பெண்களே பெண்களுக்கு எதிராக ஆண்களின் திறமைகளையும் அரசியல் அனுபவங்களையும்  மட்டுமே வெளிக்கொணர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும் வருந்தத் தக்கது. இது அரசியலில் அல்லது  மக்கள் உரிமை சார்ந்த சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சில பெண்களின் கசப்பான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கல்: 6 அறிவும்,ஆளுமையும், திறமையும் கொண்ட பல பெண்கள் எமது சமூகத்தில் இருந்தாலும் கூட அவர்கள் தாமாகவே அரசியலுக்கு வரத்  தயங்குகிறார்கள் அல்லது அரசியல் பற்றிய சிந்தனை இல்லாது இருக்கிறார்கள். இப்படியானவர்களில் சிலர்  தமது கணவர், தந்தை அல்லது சகோதரர்கள் அரசியலில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். இது தாம் சுயமாகச் சிந்திக்காது வெறும் அனுதாபத்தை மூலதனமாக்கியே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பெயரையே இவர்களுக்கு கொடுக்கிறது.   பெண்களை உற்சாகமூட்டி அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்காமல் அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஆளுமை போதவில்லை எனக்குற்றம் சாட்டி அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் தமக்கு தேவை என வரும் போது, தமது கட்சிலிருந்து யாராவது ஒருவரின் உறவையோ நட்பையோ வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுப்பதும் நடக்கிறது.  இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு பெண் அரசியலுக்கு வந்து அல்லது வரும் போது, அவளால் என்ன சாதிக்கப்பட்டாலும் அது பெண்களுக்கான ஒரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.  புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பெண்கள் தமது அரசியல் அனுபவங்களையும் திறமைகளையும் தாயகத்திலுள்ள பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.  கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும் , ஜனநாயகமும்   பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவுபட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு   இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே.  பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான்  சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும்   வேண்டிவருகிறது. தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும். சில ஊடகங்களில்ப்  பெண்களை பாலியல் போகப் பொருளாகச் சித்தரிக்கும் வேளைகளில் உடனடி எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்து விடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : உமா ஷானிக்கா, விஜியுடன் ஆனந்தி பாலசூரியன் )    - அன்புடன் தோழி    
  • உண்மையில் இப்ப  தான் அண்ணா மனம்  வேதனை கொள்கிறது இலங்கை  அரசிடம்  கூட நாம் தப்பி விடலாம் ஆனால்  இவர்களை (நரிகளை)  நினைத்தால்???
  • காதல் எனும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும் காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும் போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான்! காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் ... (2) அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்! காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய் ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி சரணம் 1: இவன் யோகி ஆனது ஏனோ இவன் யோகி ஆனது ஏனோ அதை இன்று உரைதிடுவானோ இல்லை நின்று விழுங்கிடுவானோ! ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே நான் வானத்தில் ஏறிய நேரத்திலே கிளி வண்ணம் மறந்தது மேகத்திலே நான் வானம் என்ற ஒன்றில் இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே! காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ஒ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்! மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை ஒ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை! நான் காதல் மட்டும் பற்றி கொண்டு காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே!  
  • உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும். ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்
  • சரியான பதிலக்கா பாராட்டுக்கள் 👏👍