Jump to content

ஓய்வு காலத்தை  நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு காலத்தை  நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர்

 

டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில்  அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர்,  இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார்.

Sports_02.JPG

சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் 38 வயதான பெடரர் ஓய்வு கட்டத்தை நெருங்கி விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

தற்போது தரவரிசையில்  4 ஆவது இடத்தை வகிக்கும் பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதி கட்டத்தில் இருப்பதை அறிவேன். 

அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் கூற முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயற்பட்டு வருகிறேன். 

ஆனால், இப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன். 

டென்னிஸை  பொறுத்தவரை வயதானாலும் நிச்சியம் விளையாட முடியும். ஆனால் தொடர்ந்து கடின பயிற்சிகளில் ஈடுபட முடியாது.

ஒலிம்பிக் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. 

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். இதில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். 

Sports_01.JPG

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றார்.

பெடரர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் ருசித்து இருக்கிறார். 

அநேகமாக அவர் அடுத்த ஆண்டுடன் டென்னிலிருந்து விடைபெறுவார் என்று கருதப்படுகிறது.
 

https://www.virakesari.lk/article/87101

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.