• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
குமாரசாமி

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு!

Recommended Posts

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்.

our-stand-on-srilankan-parliamentary-election-2020-naam-tamilar-chief-seeman-letter-to-blood-relatives-of-tamil-eelam-1.jpg

our-stand-on-srilankan-parliamentary-election-2020-naam-tamilar-chief-seeman-letter-to-blood-relatives-of-tamil-eelam-2.jpg

our-stand-on-srilankan-parliamentary-election-2020-naam-tamilar-chief-seeman-letter-to-blood-relatives-of-tamil-eelam-3.jpg

our-stand-on-srilankan-parliamentary-election-2020-naam-tamilar-chief-seeman-letter-to-blood-relatives-of-tamil-eelam-4.jpg

our-stand-on-srilankan-parliamentary-election-2020-naam-tamilar-chief-seeman-letter-to-blood-relatives-of-tamil-eelam-5.jpg

⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂

ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு...

வணக்கம்!

இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அரசும் உலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து இதுவரை இந்த உலகம் கண்டிராத இனப்படுகொலையை நிகழ்த்தி நமது விடுதலைப் போராட்டத்தை அழித்து முடித்தார்கள். எக்காலத்திலும் தமிழர்கள்‌ மறக்க முடியாத மாபெரும் துயர வடுவாக நம் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நம் மனதில் பெரும் வலியாக இருந்து வருகிறது.

நமக்கென்று உள்ளங்கை அளவிற்கு ஒரு நிலம் இருந்தால் கூட அது அனைத்து விதமான உரிமைகளுடன் கூடிய இறையாண்மைமிக்க நிலமாக இருக்க வேண்டும் என்றுதான், நமக்காகப் போராடி தன்னுயிரை ஈந்து இந்த மண்ணில் விதையாக விழுந்த மாவீரர்கள் சிந்தித்தார்கள். தமிழருக்கென்று தனித்த இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தேசம் வேண்டும் என்பதே பல்லாயிரம் ஆண்டுகால நமது இனத்தின் பெருங்கனவு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதற்கான போராட்டத்தைதான் அந்த நிலத்தில் நமது முன்னவர்கள் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டம் சனநாயக வழியில் நிகழ்ந்தபோதும், ஆயுத வழியில் நடந்தபோதும் நமது இலக்கு நமது இனத்தின் விடுதலையாக, தாய் நிலத்தின் விடுதலையாக இருந்து வந்திருக்கிறது.

நமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இலங்கையில் நடைபெறக்கூடிய தேர்தலில் கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நாம் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறோம். இலங்கை பாராளுமன்றத்திற்குள் போய் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவொன்றும் நடக்கவில்லை என்பது கண்கூடாக இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழலில் அங்கே இருந்து குரலெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது, வெல்வது மட்டுமே நமது இலக்கு அல்ல. நாடாளுமன்றம் போய்ப் பேசுகிற ஒரு வாய்ப்பை, வெறுமனே ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதுமல்ல. தமிழர்களுக்கென்று தனித்த நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமென்பதே தாயக விடுதலைக்காகப் போராடிய நம் முன்னவர்களின் நோக்கம். அந்த இலட்சிய இலக்கிற்காகதான் இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஈகங்களை நம் உடன்பிறந்தோர் செய்தார்கள். ஈடுசெய்ய முடியாத இழப்புகள் நமக்கு ஏற்பட்ட பிறகும் சொந்த மண்ணிலேயே அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட இரண்டாந்தரக் குடிமக்களாக நாம் வாழ்ந்து வருகிறோம்.

நமது விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு முறியடிக்கப்பட்டதற்குப் பிந்தைய காலகட்டமான தற்போதைய சூழலில் நம் மக்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைப் பற்றி நன்கு சிந்தித்து இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்கிற முடிவை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய மாவீரர்கள், நம்முடைய உறவுகள், தூக்கிச் சுமந்துவந்த அந்தப் புனிதக்கனவை நிறைவேற்றுவதற்கான எதிர்கால அரசியல் வடிவமாக, அதற்குத் தேவையான வலிமையைப் பெறுவதற்கான அடித்தளமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாறு நம்மிடம் கையளித்திருக்கிற கடமை என்பதை உணர்ந்துகொண்டு நம் மக்கள் இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

போராட்டத்திற்காகப் பிள்ளைகளைக் கொடுத்த பெற்றோர்களின் மனநிலையிலிருந்து, இன்றைக்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தேடி அலையும் மக்களின் நிலையிலிருந்து, ஏதிலிகளாக ஏதோ ஒரு நாட்டில் அலையும் நம்முடைய உறவுகளின் நிலையிலிருந்து நீங்கள் சிந்தித்துப் பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்ற நினைவோடு, எழுபது ஆண்டுகால நமது விடுதலை போராட்டத்தின் நீட்சியாகத்தான் இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாக்கு செலுத்த விரலில் “மை” துளியை வைக்கும்பொழுது, நமக்காகத் தம் இன்னுயிரை இழந்து, மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிகளையும் எண்ணிப் பார்த்துதான் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.

ஆயுதப் போராட்ட வடிவம் நிறுத்தப்பட்ட சூழலில் நமக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு அரசியல் விடுதலைதான். அந்த அரசியல் விடுதலையை உறுதியாக முன்னெடுப்பவர்கள் யார் என்பதைச் சிந்தித்துப் பார்த்து நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்குங்கள். கடந்த காலங்களில் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, பெளத்த பேரினவாதத்திற்குத் துணை போனவர்களையும், இன்றும் துணை நிற்பவர்களையும் புறந்தள்ளுங்கள். இறுதிப்போருக்கு பிறகு, ஈழ மண்ணின் உரிமைகள் பறிபோகும்போது கைகட்டி வேடிக்கை பார்த்த துரோகிகளை ஆதரிப்பதைக் கைவிடுங்கள். சிங்கள அரசின் சலுகைகளுக்கு உடன்பட்டு நம் தாய் மண்ணின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அழித்து முடிக்கத் துணைபோனவர்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்.

தாய்மண்ணின் உரிமைகளுக்காக, இனப்படுகொலை காலத்தின்போது காணாமற்போன நம் உறவுகளை மீட்டெடுக்க சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்காக உங்கள் விரல் நீளட்டும். ஒற்றையாட்சியை ஏற்காமல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகமாக அறிவிக்க யார் முயல்கிறார்களோ, தன்னாட்சி உரிமைக்காக யார் அயராது, பின்வாங்காது உறுதியாக நிற்கிறார்களோ, நம் தாய் நிலத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடந்த இனப்படுகொலை குறித்துத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்காக யார் இன்றுவரை குரல் கொடுக்கிறார்களோ, தாயக விடுதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு யார் கோருகிறார்களோ அவர்களுக்குதான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். அவர்கள் செய்த துரோகத்தைச் சரியென்று நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும். அதை ஒருபோதும் எம்மின சொந்தங்கள் செய்யமாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம் தலைவரால் தொடங்கப்பட்டது என்றெண்ணி, அவர்கள் ஒருபோதும் தங்கள் இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டார்கள் என நம்பி, அவர்கள் எது செய்தாலும் ஆதரித்துச் செயல்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஈழ நிலத்திற்கு வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். தகப்பனுடைய துப்பாக்கியே என்றாலும் நம்மைச் சுடுமாயின் மரணம் நிகழும். அதனால் நம் தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும், இன்று அது எந்தப் பாதையில் பயணிக்கிறது, எந்தக் கருத்தை முன் வைக்கிறது, அதில் உள்ளவர்கள் இன்று எந்த நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்துதான் நாம் கூட்டமைப்பை பின் தொடர்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். சிங்களவருடன் இணைந்து பணியாற்றிய சுமந்திரனால் இதுவரை ஈழமண்ணில் நடந்த நன்மை என்ன? என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

நமது வாழ்விடங்கள் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது; நமது நிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுப் பெளத்த விகார்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. காணி உரிமை, காவல்துறை உரிமை உள்ளிட்ட நம்முடைய அடிப்படை உரிமைகள் கூட அறவே மறுக்கப்பட்டுள்ளது. நமது தாய்நிலம் முழுக்க முழுக்க இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இழிநிலையிலிருந்து நம்மை மீட்க யாருமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே நம்மை நாமேதான் வலிமையாக்கி கொண்டு போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

எந்த அடிப்படை உரிமைகளைக் கேட்டு முதன்முதலில் அரசியல் போராட்டத்தைத் தொடங்கினோமோ, அதே உரிமைகளைக் கேட்டும் கிடைக்கப் பெறாத நிலையில்தான் இன்றும் உள்ளோம். தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும் நிற்கும் அவலநிலையில் நாம் இருக்கிறோம். ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் நம்முடைய நீண்டகாலப் பெருங்கனவான தாயக விடுதலை என்கிற மகத்தான இலட்சியக் கனவு மறைந்துவிட்டது, அது முடிந்துவிட்டது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம்மிடம் மீதம் இருப்பது அரசியல் போராட்டம் என்பதனை எமது மக்கள் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இலக்கை நோக்கிய சமரசமற்ற அரசியல் போராட்டத்திற்குச் சரியான தலைமை யாரென்பதை நீங்கள் உணர்ந்து, தெளிந்து தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தத் தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும்போது நமது இனத்தின் உரிமைக்கு, நமது தாயக விடுதலைக்குச் சமரசமின்றிக் குரல் எழுப்பக் கூடிய தலைமை யாரோ, அவர் முன்னிறுத்துகிற வேட்பாளர்கள் எவரோ அவர்களைக் கண்டறிந்து நீங்கள் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும். இதில் தனிப்பட்ட முறையில் எமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று எவருமில்லை. எவர் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறாரோ அவர்தான் நமக்குரியவர், நமக்கு வேண்டியவர். நம் பக்கம் நிற்காது எதிரிக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போகிற எவரும் நமக்கும் வேண்டாதவர். அந்த நிலைப்பாட்டை உணர்ந்து நீங்களே தெரிந்து, தெளிந்து முடிவெடுங்கள்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என் மக்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த நிலத்தில் நிற்கிற என்னைப்போன்ற தாயக தமிழர்களை விட, ஈழத்தாயகத்தில் வாழும் உறவுகளான நீங்கள் சுமந்து நிற்கும் காயங்களும், வலிகளும் மிக அதிகம். அந்த வலியிலிருந்து உணர்ந்து, சிந்தித்து நீங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற நம் இலட்சிய முழக்கம் இன்று “தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்” என்று அரசியல்தளமாக மாறியிருக்கும் இவ்வேளையில் தகுதியான வேட்பாளர்களைத் தெரிவுசெய்து சரியான முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.

 

இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி 

https://www.naamtamilar.org/

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாவை சேனாதிராசா மனக்கிலேசமடைந்திருந்தால் நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம்: சரணடைந்தார் சுமந்திரன்.! மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி தலைவர் இதனால் எந்த மனச்சஞ்சலமும் பட வேண்டியதில்லை. கட்சித் தலைவர் இதனால் வருத்தப்பட்டால் நானும் சிறிதரனும் இதனால் வருத்தப்படுகிறோம். தலைவரை கட்சித் தலைமையிலிருக்கு நீக்குவதாக சொல்லப்படவில்லை, அப்படியொரு எண்ணமுமில்லை, இப்பொழுது தலைமையில் மாற்றம் தேவையில்லையென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் அதற்கு எதிர்மாறான கருத்தையே ஊடகங்கள் சொன்னதால், அதனால் தலைவருக்கு எதாவது மனவருத்தம் ஏற்பட்டால் அதற்கு மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறென். மாவை சேனாதிராசா எமது கட்சியின் தலைவர். கட்சி பின்னடைவை சந்திக்கின்ற போது தலைமையிலிருப்பவர்கள் தோற்பது வழக்கம். அது ஒரு அறிகுறி. அதனால் அவர் தோற்றிருக்கிறார். எங்களுடைய பொதுச்செயலாளரும் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது எங்களிற்கு பெரிய தோல்வி. 10 ஆசனங்கள் கிடைத்தது என்பது எமக்கு பெரிய தோல்வி. மாவை சேனாதிராசாதான் என்னை அரசியலுக்கு இழுத்தவர். பலர் சொல்வது- சம்பந்தன்தான் என்னை அரசியலுக்கு இழுத்ததாக. அதில் சிறிய உண்மையுண்டு. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்றத்தில் 2 முறை நாடாளுமன்ற ஆசனம் காலியானது. அந்த இரண்டு முறையும் அந்த இடத்திற்கு என்னை நியமிக்க மாவை சேனாதிராசா முயற்சித்தார். நான் இணங்கவில்லை. ஆனால் போர் முடிந்த பின்னர் நாம் சில சட்ட வரைபுகளில் ஈடுபட்டதால், 2010இல் சரத் பொன்சேகாவுடனான இணக்கப்பாட்டை வரைவதில் ஈடுபட்டதால், அதன் பின்னர் சம்பந்தனும், மாவவையும் என்னை அழைத்தார்கள். அப்போது மறுத்தேன். பின்னர் சம்பந்தன் தனியாக பேசிய பின்னர் ஒத்துக் கொண்டேன். மூன்று முறையும் மாவை சேனாதிராசாதான் என்னை அழைத்தார். தேசியப்பட்டியல் எம்.பியான பின்னர், பியசேன கட்சி மாறியதால், என்னை அம்பாறையை பார்க்கும்படி சொல்லியிருந்தார். என்னை அம்பாறைக்கு அழைத்து சென்று, அங்குள்ளவர்களை அறிமுகம் செய்தார். சென்ற பாராளுமன்ற தேர்தலில் சேனாதிராசாதான் எனக்காக அதிகம் பிரச்சாரம் செய்தார். இன்று எங்கள் இருவருக்குமிடையில் பெரிய சர்ச்சையிருப்பதை போல ஊடகங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது தவறு. அப்படியான ஒரு போட்டியோ, சர்ச்சையோ கிடையாது. நான் அவர் மீது வைத்துள்ள ஒரேயொரு குற்றச்சாட்டு மற்ற வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது, நான் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதே எனது குறை. ஒரேயொரு முறை- விமலேஸ்வரி குற்றச்சாட்டு சுமத்தியபோது நடவடிக்கையெடுத்தார். ஏனைய சந்தர்ப்பங்களில் நடவடிக்கையெடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் நான் இதை சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் சுமந்திரனை தோற்கடிப்போம் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியானபோது, அந்த பத்திரிகை பிரதிகளை கொள்வனவு செய்து விநியோகித்தேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிகை உரிமையாளர் சக வேட்பாளர் என்பதால் பேசாமலிருந்தேன். கே.வி.தவராசா என்பவரின் பெயர் எமது தேசியப்பட்டியில் இருந்ததால், அவர் என்னைப்பற்றி பொய்யான செய்திகளை சொன்னபோதும், நான் பேசாமல் இருந்தேன். ஏனெனில், அவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். தேர்தல் முடிந்த பின்னர் நான் சொல்கிறேன். தேர்தலிற்காக பேசாமல் இருந்தேன். இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் நடவடிக்கையெடுக்கவில்லையென்றே தெரிவித்தேன். அவர் எனக்கு எதிராக செயற்பட்டார் என சொல்லவில்லை. தேசியப்பட்டியல் விவகாரம் சம்பந்தமாக 7ஆம் திகதி இரவு நானும், சிறிதரனும் மாவையை சந்தித்து பேசினோம். தேசியப்பட்டியல் பற்றி சிறிதரன் கேட்டார். அதற்கு அவர், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சசிகலா ரவிராஜை யோசிக்கலாம் என்றார். அதைத்தான் சம்பந்தனிடம் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலின் முன்னர் நியமன குழுவில், முதலாவது ஆசனம் திருகோணமலையை சேர்ந்த குகதாசனிற்கு வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்னுடைய நிலைப்பாடு- எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அம்பாறையின் தேவையென்பது மிக முக்கியமானது. நான் அறிந்தபடி, 1931ஆம் ஆண்டின் பின் அம்பாறையில் ஒரு தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை. அதை குறித்து சிந்தித்து கட்சி தலைவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், என்னுடைய நிலைப்பாடு எடுத்த தீர்மானத்தின்படி நாம் ஒழுக வேண்டுமென்பதுதான். அதை தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைகள் அவசியமில்லை. பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தம்முடன் பேசவில்லையென சொல்லியுள்ளனர். நான் கட்சி தலைவர் அல்ல. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அது பற்றி சம்பந்தன் ஐயா பேசியிருப்பார் என நினைக்கிறன். அது பற்றி மேலதிக விளக்கமெதுவும் நான் கொடுக்க முடியாது என்றார் http://www.pagetamil.com/139949/
  • இதை நான் முன்னரும் எழுதி இருந்தேன். இரணைமடு குளத்துக்கு மகாவலி நீரை திசைதிருப்பிய கையுடன் இது அமோகமாக நடக்கப்போகின்றது. இதட்கு வடக்கு மாகாண சபையின் முதல்வரும், மாவையும், ஸ்ரீதரனும்தான் பொறுப்புக்கூற வேண்டும். கொண்டச்சி கஜூ பார்மில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும் ஆரம்பமாக நடவடிக்கை எடுப்பதாக அறியக்கிடைக்கிறது.
  • முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..! நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார். இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் . https://jaffnazone.com/news/19871
  • அடிமைக்கு ஏது தெரிவு. பாராளுமன்றத்துக்கு தெரிவாகி அமைச்சராக வந்திருந்தால் , மக்கள் தெரிவு செய்திருந்தால் எதாவது முடிவெடுத்து செய்யலாம். தேசியப்பட்டியல் மூலம் பிச்சை எடுத்து வரும்போது நிச்சயமாக அடிமையாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் தீர்மானம் சரிதான்.
  • இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம் உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே கடல் மாதா ஆடையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன் என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குதே உன்னை இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசன என்ன நீ தொட்டதும் மணக்குதே இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே நீ என் கண்ணு போல இருக்கணும் என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்