Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்..
ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல்..

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..
நான்தானா?.... நீயில்லை..

வான்மழையில் நனைந்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேகக் கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..

என் தேடல் அது வேறு
அடப்  போடா நீயில்லை..

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு


தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

புன்னகை செய்யும் ஒருவன்.. ஆ ஆ

தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..


இவனா?... நானில்லை..

இவனா ?.. நான் நான்  நானில்லை..


ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம் 

கண்டு கொள்ளாத ஒருவன் 

நான் போதும் போதும் என்னும் வரையில் 

புதுமை செய்யும் ஒருவன்..


இவனா?... ஐயோ நானில்லை..


நான் தேடும் ஸ்ருங்காரம் 

இங்கு ஏனோ ஏனில்லை ...


ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

எங்களில் யாருண்டு...

ஹ்ம்ம்...ஹ்ம்ம்

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி.

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஹோ.. ல ல ல ...

வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சித்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோட்சம் கொண்டேன்
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்
இழப்பிது இங்கே இன்பம் என்று கண்டேன்
நஷ்டங்களில் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
கொடுத்ததிலே நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் உடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

மோகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான்
கண்ணில் வேட்டை கொண்டான்
என் உயிர் மட்டும் விட்டு விட்டு
ஒவ்வொன்றாக சுட்டான்
உச்சுகொட்டியே உடைந்து விட்டான்
சிதறி கிடந்தேன் , சேர்த்து எடுத்தான்
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு
மலரோ நனையுது
மனமோ குளிருது
உலகோ கறையுது
சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட
தகிட..தகிட..தும்

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே

நீ தோழி அல்லவா தொடும் வேலையிலே

நீ காதல் கொண்டு வா துளி தூறையிலே

என்னை கொஞ்ச கொஞ்ச

நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே

தோளை தொட்டு தூறல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே

 தேகம் எங்கும் ஈரம் சொட்ட வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே

தத்தி தை தை தை
வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே

அள்ளும் கை கை கை
அன்பை நெய் நெய் நெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே

அழகிய துளி
அதிசய துளி
தொட தொட பரவசமே
அ ஆ…

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

தா திம்…

வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச்செல்ல வா

மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா

என்னை நீ மீட்ட
உன்னை நான் தூட்ட
செல்லம் ஆவாயா துளியே

வெள்ளை தீ போன்ற
வெட்க பூ போல
என்னை சூழ்ந்தாயோ கிளியே

அழகிய துளி
அதிசய துளி
தொட தொட பரவசமே
அ ஆ…

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே

நீ தோழி அல்லவா தொடும் வேலையில

நீ காதல் கொண்டு வா துளி தூறையில

என்னை கொஞ்ச கொஞ்ச

நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு 

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........


விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா

கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக

குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ...

விண்ணோடு ..

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ==

நீ வரும் பொது ...

விண்ணோடு .....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : மண்ணை நம்பி
மழைய நம்பி உயிர போல
பயிர நம்பி மண்ணுக்குள்ள
பொன் விளைய மகமாயி
உன்ன நம்பி வேர்வையில
பாத்தி கட்டி விதைச்சிருக்கோம்
தாயி

ஆண் : ஐயாரெட்டு
நாட்டு கட்டு ஹேய்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி
பாட்டு கட்டு பம்பரமா சுத்தி
கிட்டு பகல் எல்லாம் பாடு
பட்டா விளைஞ்சதெல்லாம்
வீடு வரும் செல்லமே

ஆண் : என் செல்லமே
செல்லமே என் தங்கமே
தங்கமே என் செல்லமே
செல்லமே என் தங்கமே
தங்கமே

பெண் : ஏய் தைமாசம்
ஊர கூட்டு தஞ்சாவூரு
மேளம் கொட்டு பூ வாழ
பந்தலுக்கு புது பொண்ணா
வெக்கபட்டு கட்டி பாரு
கூர பட்டு கழுத்துல நீ தாலி
கட்டு ஓடி வாரேன் வுட்ட
விட்டு மச்சானே

பெண் : ஏய் மச்சானே
மச்சானே ஆச வெச்சானே
வெச்சானே ஹோய் மச்சானே
மச்சானே ஆச வெச்சானே
வெச்சானே

குழு : ஓஹோ ஓ ஓ
ஓ ஓஹோ ஓ ஓ ஓ
ஆஹா ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா

குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

பெண் : தோளு மேல
கலப்ப நீ தூக்கிகிட்டு
நடப்ப ஆளு யாரும்
பாக்கலைன்னா அங்கே
இங்கே இடிப்ப
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

ஆண் : ஹேய் பத்திகிட்ட
நெருப்பா நீ பல்ல காட்டி
இளிப்ப உத்து நானும்
பாத்து புட்டா நீ பத்து
முறை குளிப்ப
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

பெண் : ஏய் வால கொஞ்சம்
சுருட்டிகிட்டு உழுது போடய்யா
உன் பட்டினத்தார் கோவனத்த
பழுது பாரய்யா

ஆண் : ஏய் சக்கபோடு
போட போறேன் யாரும்
இல்லடி ஒரு சாக்கு போக்கு
சொல்லி புட்டு ஓடி
வாயேன்டி
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

ஆண் : ஐயாரெட்டு
நாட்டு கட்டு ஹேய்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி
பாட்டு கட்டு பம்பரமா சுத்தி
கிட்டு பகல் எல்லாம் பாடு
பட்டா விளைஞ்சதெல்லாம்
வீடு வரும் செல்லமே

ஆண் : என் செல்லமே
செல்லமே
குழு : ஏ தைய்யாரே
தைய்யாரே
ஆண் : என் செல்லமே
செல்லமே
குழு : ஏ தைய்யாரே
தைய்யாரே

ஆண் : ஏய் முட்டி தெரிய
சேலை நீ தூக்கி கட்டுற
வேளை நான் கண்ணு
முழுச்சி காத்திருப்பேன்
கயித்து கட்டில் மேல
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

பெண் : ஏடாகூட பொறப்பே
உனக்கு ஏறி போச்சு
கொழுப்பே நீ மாசத்தில
மூணு நாளு எங்கே
போய் படுப்ப ஹாஹா
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

ஆண் : நாலு முழ வேட்டி
இப்ப நழுவ பாக்குது என்
பத்து விரல் பத்தினிய
தழுவ பாக்குது

பெண் : காஞ்ச மாடு
கம்பகத்தை மேய
பாக்குது இந்த கன்னி
பொண்ணு தோப்பு
இப்போ காவல்
கேட்குது
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்

ஆண் : ஏய் தைமாசம்
ஊர கூட்டு
பெண் : தஞ்சாவூரு
மேளம் கட்டு
ஆண் : பூ வாழ
பந்தலுக்கு
பெண் : புது பொண்ணா
வெக்கபட்டு
ஆண் : கட்டி பாரு
கூர பட்டு
பெண் : கழுத்துல
நீ தாலி கட்டு
ஆண் : ஓடி வாடி வுட்ட
விட்டு செல்லமே

ஆண் : என் செல்லமே
செல்லமே
பெண் : ஆசை மச்சானே
மச்சானே
ஆண் : என் செல்லமே
செல்லமே
பெண் : ஆசை மச்சானே
மச்சானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதேன்...கண்மணியே......

வழித்துணையாய் நான் இருக்க

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னைநான்பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணீர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்...

நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...கண்மணியே
அழுவதேன்...கண்மணியே....
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே 
கன்னி மயிலெனக் கண்டேன் 
உனை நானே

கண்ணே கலைமானே 
கன்னி மயிலெனக் கண்டேன் 
உனை நானே

அந்திப் பகல் உனை நான் 
பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் 
கேட்கிறேன்..ராரிராரோ..

கண்ணே கலைமானே 
கன்னி மயிலெனக் கண்டேன் 
உனை நானே

ஊமை என்றால் 
ஒரு வகை அமைதி
ஏழை என்றால் 
அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு 
பண் பாடும் 
ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது 
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே 
கன்னிமயிலெனக் கண்டேன் 
உனை நானே

அந்திப் பகல் உனை நான் 
பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் 
கேட்கிறேன்..ராரிராரோ..

காதல் கொண்டேன் 
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் 
கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் 
எந்நாளும் 
எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி 
நீதானே என் சந்நிதி

கண்ணே கலைமானே 
கன்னி மயிலெனக் கண்டேன் 
உனை நானே

அந்திப் பகல் உனை நான் 
பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் 
கேட்கிறேன்..ராரிராரோ... 
ஓராரிரோ..."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே நீரின் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லிலே நிறம் ஏழு கூடி
ஊஞ்சாலாடி ஓவியம் தீட்டுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்
(மழையே..)

பூமி தேகமே
அதில்
விழும்
மழை
துளி
இந்த உலகின் ஜீவனாகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வரண்ட பாறைகளை ஆக்கும் சோலைகளாய்
வானம் தந்த தானம்
இந்த மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
(மழையே..)

ஆடை தாண்டியே
உடல்
மனம்
உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை
தொடும்
மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
(மழையே..)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதி சொல்லிடவில்லை

உன் கண்கள் மீது ஒரு பூட்டு
வைத்துப் பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி
வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை
வேண்டாமென்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே
வருவதை தடுத்திட முடியாது

என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் விரைகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்க

கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொன்ன ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே

பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும், என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா? மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே(2)

இத்து இத்து இத்து போன நெஞ்ச தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித் தாரேன்
மூச்சு உட்ப (2)

டீ.. போல நீ என்ன ஏன்.. ஆத்துர

சர சர சார காத்து ....

எங்க ஊரு பிடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா ?
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா ?
முட்ட கோழி பிடிக்கவா முறைப்படி சமைக்கவா?
எலும்பது கடிக்கையில் 
என்னக் கொஞ்சம் நெனைக்கவா ?
கம்மஞ்சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கதான் ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வெச்சு காவ காக்குறேன்
முக்கன்னு நுங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கையே கேக்குற

சர சர சார காத்து ....

புல்லு காட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேட்குரே
கட்ட வண்டி ஒட்டுர கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னி பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல..ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு குழியில ஒரங்கிப் போகும் பூனையா
வந்து வந்துப் பாத்துத்தான் கிரங்கிப் போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து ... (2)

இத்து இத்து (2)

டீ.. போல நீ ஆத்துர

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே....
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன....
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா....
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா...
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா...
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா.....

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள...
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன...
ஒத்துமையா நாமும் போக இது நேரமா...
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா.....
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா....
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா....

சாதத்துல கல்லுபோல ..
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற....
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற.....

அதிகம் பேசமா...
அளந்து தான் பேசி...
எதுக்கு சடபின்னுற...
சல்லிவேர ஆணிவேராக்குற...
சட்டபூவ வாசமா மாத்துற...
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற...

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே....
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன....

எங்கவேணா போய்கோ நீ..
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே...
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரமேல தலசாயுமே...

மறைஞ்சி போனாலும்...
மறந்து போகாத...
நெனப்புதான் சொந்தமே...

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே...
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே...
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே...

கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே...

நீ கூட்டிகிட்டு போகசொன்னா...
என்ன சொல்லும் ஊரும் என்ன...
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா...
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா...
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா...
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காத்தெல்லாம் பூ மணக்க
கடலெல்லாம் மீன் சிரிக்க
ஊத்தாட்டம் உன் வனப்பு
உள்ள வந்து பூந்திருச்சே
பாக்காத ஜோதி எல்லாம்
பார்த்தேனே உன் முகத்தில்
நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே

ஆண் : காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

ஆண் : பால் வழி தெருவில்
அமுதூரிய முகமே
உனக் காண காண
உரையாதோ காலம்
ஒளியாதே ஒழியே
திரை மறையாதே பிறையே
கடல் மடி போலே என்னையே
உயிர் தளுவாயோ துணையோ

ஆண் : உன்ன போல யாரோ
கூட வருவாரோ
உள்ளவரை மண் மேலே….
நாடோடி நானே
நீயும் என்னை போலே
ஹூ ஹூஒ ஓ ஹோ

ஆண் : காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

ஆண் : பறவை மொழிகள்
தெரிந்தே காடவோம்
இரவின் கிளையில்
இசைகள் கூடவும்

ஆண் : இயற்க்கை மடியில்
மரிக்கும் அகந்தை
கிழிஞ்சல் நிலவை
எடுக்கும் குழந்தை
சிவனின் சங்கீதம்
புகை ஆகுதே
நொடியில் பேரண்டம் உருவாகுதே
சுகமாகுதே சுகமாகுதே

ஆண் : வேண்டாமே ஊர்கள்
வேண்டாமே பேர்கள்
வைக்காமல் போவோம் தடையங்களே

ஆண் : காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

ஆண் : தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…ஏ….ஏ…

 

 

'ஜிப்ஸி' பார்த்தேன் ❤️ ஊடகங்கள் எதிர்கட்சிகளுக்கு சமமானவை. சினிமா என்கிற மாபெரும் ஊடகத்தின் மூலம் மதவாத மோடி அரசுக்கு எதிராக போர்வாளைச் சுழற்றியிருக்கிறார் 'மாவீரன்' ராஜுமுருகன் ❤️ குஜராத் கலவரத்தின்போது மதவெறியுடன் திரிந்த அசோக் பார்மர், மதவெறி கும்பலின் கோரத்தாண்டவத்திலிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ளப் போராடிய குத்புதீன் அன்சாரி எதிர் எதிர் திசையிலிருந்த இரண்டு இதயங்களும் ஒன்றிணைந்த உண்மைச் சம்பவத்தை, அதுவும் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே துணிச்சலோடு படமாக்கிய தோழர் ராஜூமுருகனுக்கு பாராட்டுகளும் பேரன்புகளும் ❤️ 'இங்கு உயிருடன் கோழி வாங்கப்படும்' என்று மாப்பிள்ளையின் கறிக்கடையில் கொட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் க்ளோஸ்-அப்பில் காண்பிக்கப்படும்போதும் அந்தக்கடையில் கோழிகள் துண்டு துண்டாக வெட்டப்படுவதும் ஒரு பெண்ணின் விருப்பத்தைக் கேட்காமலேயே மாப்பிள்ளையை பெற்றோர் நிச்சயிப்பதும் ஒன்றுதான் என்ற குறியீட்டால் உணர்த்தியிருக்கிறார், தோழர் ராஜு முருகன். குதிரையை வைத்து வித்தைக் கண்பிக்கும்போதும் கிதாரை வாசித்துக்கொண்டே பாட்டுப்பாடும்போதும் மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு ஜீவனாகிறார் ஜீவா. கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால் கட்டியிழுக்கும் நடாஷாவிடம் கயிறுபூட்டாத குதிரையாகிவிடுகிறார் ஜீவா . 'தோடா கிலோமீட்டர்' என்ற தீரன் பட வசனம்போல குதிரையில் அமர்ந்துகொள்ளும் ஹீரோயின் 'இன்னும் கொஞ்சதூரம்... இன்னும் கொஞ்சதூரம்' என காதலை வெளிப்படுத்த ஜீவாவும் புரிந்துகொண்டு அப்படியே அழைத்துச்செல்லும் காட்சி பேரழகு ❤️ படம் முழுக்க நடாஷாவின் கண்கள்தான் நிறைய்ய்ய்ய்ய கதை வசனம் பேசுகின்றன. ஒவ்வொரு முறையும் தன் முகத்தை காண்பிக்கவும் முடியாமல் மூடவும் முடியாமல் திணறும் ஏக்கம் இஸ்லாமியப் பெண்களின் ம(த)ன வெளிப்பாடு. மதக்கலவரக் காட்சிகள், சமீபத்தில் நடந்த குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக பாஜக பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறை வெறியாட்டங்களைக் கண் முன்னால் காட்டியதுபோல குலை நடுங்க வைத்தன. பதவிக்காக கத்தியை எடுத்து பகையே இல்லாதவர்களை எல்லாம் 'பலி' வாங்கி கடைசியில் சாதீயத்தால் தூக்கியெறியப்பட்டவரின் கதறல் ஒவ்வொரு சாதி, மத, இனவெறியர்களுக்குமான பாடம். தலாக்-குலா விவாகரத்துக் காட்சிகள் புதிது. அதேபோல், உண்மையான 'தலாக்' என்ன என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுயநல அரசியல்வாதி வாட்டாள் நாகராஜில் ஆரம்பித்து... யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி என அனைவரது பாசிச மக்கள் விரோதப்போக்குகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி அந்தநேரத்தில் எந்த நடிகைக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்தார் என்பதையெல்லாம்கூட அப்பட்டமாக சொல்ல முயற்சித்து சென்சாரில் வெட்டுப்பட்டுவிட்டது ஜிப்ஸி. இப்படி, பலக்காட்சிகள் அரசு எந்திரத்தால் துண்டு துண்டாக்கப்பட்டு சிப்ஸாகி ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு ஸ்டெக்சரில் கொண்டுரப்பட்டிருக்கிறது. இதனால், கணைத்தபடி 'டொக் டொக்' என்று குதிரை வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லவேண்டிய திரைக்கதையை 'சென்சார்' என்ற பெயரில் ஜிப்ஸியின் புறமுதுகில் குத்திக்குதறி வெட்டிச்சாய்த்து தடக் தடக்வென பயணிக்க வைத்திருக்கிறார்கள். மஹதீரா என்கிற மாவீரன் படத்தின் க்ளைமாக்ஸில் 'வெட்டு' குத்துப்பட்ட கொடுங்காயங்களுடன் 'மாவீர' நாயகன் ரத்தம் சொட்டியபடி போர் வீரர்களை வெட்டிச்சாய்த்துக்கொண்டு முன்னோக்கிச்செல்வதுபோல... பாஜகவின் பயங்கரவாதத்துக்கு எதிராக போர்வாளை வீசியபடி நம் இதயங்களில் செம்ம கெத்தாக முன்னோக்கி முற்போக்குடனும் மனிதத்துடனும் பயணித்திருக்கிறான் ஜிப்ஸி ❤️ - வினி சர்பனா
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாளும்ம்ம்ம்ம்
சந்திர தரையில் பாய் இடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னில் மற்றொரு பூவு இருந்தால் என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
உன் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே..

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மா யம்மா காதல் பொன்னம்மா....
நீ என்ன விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா....
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா...

அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல...
பெண்ணோட காதல் கை குட்டை போல...
கனவுக்குள்ள அவளை வச்சேனே...
என் கண்ண ரெண்டை திருடி போனாளே....
புல்லாங்குழல கையில் தந்தாளே...
என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே...

பொம்பளைய நம்பி...
கெட்டு போனவங்கு ரொம்ப...
அந்த வரிசையில் நானும்...
 இப்ப கடைசியில் நின்னேன்...
முத்தெடுக்க போனா ...
உன் மூச்சடங்கும் தன்னா....
காதல் முத்தெடுத்த பின்னால்...
மனம் பித்தமாகும் பெண்ணால்....

அவ கைய விட்டு தான் போயாச்சு...
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு....
காதல் என்பது வீண் பேச்சு....
மனம் உன்னாலே புண்ணா போச்சு...
காதல் பாதை கல்லு முல்லுடா...
அத கடந்து போன ஆளே இல்லடா...
காதல் ஒரு போத மாத்திரை....
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை...

யம்மா யம்மா காதல் பொன்னம்மா...
நீ என்ன விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா...
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா....

ஓட்ட போட்ட முங்கில்..
அது பாட்டு பாட கூடும்...
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்...
மனம் உன்னை பத்தி பாடும்...

வந்து போனது யாரு...
ஒரு நந்தவன தேரு...
நம்பி நோந்து போறன் பாரு...
அவ பூவு இல்ல நாரு...

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே...
எட்ட நின்னு நீ வருடாதே....
கட்டெறும்ப போல நெருடாதே...
மனம் தாங்கதே தாங்கதே...

வானாவில்லின் கோலம் நீயம்மா...
என் வானம் தாண்டி போனதெங்கம்மா...
காதல் இல்லா ஊரு எங்கடா....
என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா....

யம்மா யம்மா காதல் பொன்னம்மா...
நீ என்ன விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா...
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ மோகமில்ல

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

ஆ. தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை இந்த தேவதையே

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (6)

என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

ஓ… ஓ…

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கிகொள்வேனே
வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகில் குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (2)

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

உயிரோடு நான் இருப்பேன்

நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே

என்னோடு நீ இருந்தால்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் மன கண்களில்
நீ முதற் கனவு

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றாய் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் மன கண்களில்
நீ முதற் கனவு

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்து வந்தாயடா

 எனைப் பாடுபடுத்த நீ -

எனைப் பாடுபடுத்த.

எங்கு கொண்டு சென்றாயடா

எனைத் தேடி எடுக்க - நான்

எனைத் தேடி எடுக்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோலைக்காட்டு பாதையில வண்டி ஓட்டி ... சோளக்காட்டு பாதையிலே வண்டி ஓட்டி போற

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?

பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா 
சேர்ந்து மூணா ஆயிடும் 

தேசிங்கு ராஜா ...

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஓ ஓ
நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ஓ ஓ
கனவுக்கு விலையில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா

ஆடும் புலி ஆட்டத்திலே ஓ ஓ
ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே ஓ ஓ
வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா

தேசிங்கு ராஜா ...

ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா சேர்ந்து
மூணா ஆயிடும்

தேசிங்கு ராஜா ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் உன் (ஒரு) பாடல்…
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

பெ : ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
ஆ : அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பெ : பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

ஆ : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து

பெ : காத்து மழை காத்து
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து

ஆ : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன?

பெ : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன?
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஆ : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
பெ : சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

ஆ : (மேகம் கருக்குது...)

பெ : பூவுக்குள்ள 
ஆ : வாசம் வச்சான்
பெ : பாலுக்குள்ள 
ஆ : நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

ஆ : கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பெ : கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
ஏன்?
ஆ : நீராடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

பெ : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...
ஆ : ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...
பெ : காத்து மழை காத்து

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.