Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே

பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...

ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...

பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என்தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் 
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

குழு : ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

பெண் : இங்கிரண்டு ஜாதி
மல்லிகை தொட்டுக்கொள்ளும்
காமன் பண்டிகை கோவிலில்
காதல் தொழுகை

குழு : ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து
மலரே அமுதம் கொட்டும்
மலரே இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
கொத்துமலரே அமுதம்
கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின்
ஊற்று

ஆண் : உள்ளிருக்கும் வேர்வை
வந்து நீர் வார்க்கும்

பெண் : புல்லரிக்கும் மேனி
எங்கும் பூ பூக்கும்

ஆண் : அடிக்கடி தாகம்
வந்து ஆளை குடிக்கும்

குழு : { ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே } (2)

குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : ஹே வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி
வந்தியே ஒரு காதல் பாரம்
இரு தோளில் ஏறும்

பெண் : புல்வெளியின் மீது
ரெண்டு பூ மாலை ஒன்றை
ஒன்று சூடும் இது பொன்
மேடை

ஆண் : கல் வடியும் பூக்கள்
தங்கள் காம்பை மறக்கும்

குழு : ஆயிரம் தாமரை
பெண் : நன நன
குழு : ஆயிரம் தாமரை
பெண் : நனநனநன
நனநனநன நனநனநன

குழு : ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

பெண் : இங்கிரண்டு ஜாதி
மல்லிகை தொட்டுக்கொள்ளும்
காமன் பண்டிகை கோவிலில்
காதல் தொழுகை

குழு : ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்

உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை

ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

காதல் நிலமாகும் நிலம் காதலாகும்
நம் பூமி மறைவதில்லை

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்

ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
ஒருவாட்டி என உரசாட்டி
உன்ன உறுத்தும் பஞ்சணை
மெத்தையும் ராத்திரி பூத்திரி
ஏத்துற வேளையில
கருவாட்டு பான கெடச்சாக்க பூன
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம் உட்காந்து
மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தானை ஓரம்தான்
பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா
நீ முத்தி போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி
நான் முந்தாநாளு ஆளானதா
என்னுது உன் நெஞ்சு
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 

மாமா தள்ளாடும் தண்ணியில...

ஏய் தாமர பூத்திருச்சே

மாமா தாவணி வாங்கிவாங்க...

ஊரெல்லாம் கூட்டிகிட்டு...

வந்திடுங்க மேளம் கொட்டி...


ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 

புள்ள தள்ளாடும் தண்ணியில...

ஏய் தாமர பூத்திருச்சே

புள்ள தாவணி வாங்கிவாறேன்...


ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு

கொடையா மாறட்டுமா?

உன் வெட்டுற விழியில, மூட்டுற நெருப்புல 

குளிரும் காயட்டுமா?


பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப

வக்கத் த்ரி ஆச்சி...

ஒளிவா, மறவா, பேசி சிரிக்க

ஓட கடயாட்சி...


ஆண்: கையில அணைக்கிற போது

நீ துள்ளி குதிக்கிற மானு...

பெண்: ஆத்துல குளிக்கிற போது

நீ ஆள கடிக்கிற மீனு...


ஆண்: உன் இடுப்பு சேல நழுவ

அத எடுத்து எடுத்து சொருவ...


பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 

மாமா தள்ளாடும் தண்ணியில...

ஆண்: ஏய் தாமர பூத்திருச்சே

புள்ள தாவணி வான்கிவாறேன்...


பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா

உங்க பெருமூச்சி...

ஆத்தி பூத்த மாலை போல

மாமா உன் பேச்சு...


ஆண்: கண்ணே உனக்கு, மின்மினி புடுச்சி

வெளக்கா ஏத்தட்டுமா?

விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி

வெசயம் சொல்லட்டுமா?


பெண்: மாமன் தரனும் சீரு,

ரெண்டு மாங்கா தட்டு சோறு...


ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு

உன் தேவை என்ன கூறு...


பெண்: வெடல புள்ள நானும் 

ஒரு வெவரம் கேட்க வேணும்...


பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 

மாமா தள்ளாடும் தண்ணியில...

ஏய் தாமர பூத்திருச்சே

மாமா தாவணி வாங்கிவாங்க...

ஊரெல்லாம் கூட்டிகிட்டு...

வந்திடுங்க மேளம் கொட்டி...


ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 

புள்ள தள்ளாடும் தண்ணியில...

ஏய் தாமர பூத்திருச்சே

புள்ள தாவணி வாங்கிவாறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
ஒரு பொண்ண பாரு சோக்குல அட
நான்தான் உனக்கு மாப்பிள்ளை ஹோய்
இதைக் கேட்டு பாரு ஊருல என்னாட்டம்
ஒரு ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
அட என்னாட்டம் ஒரு
ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
பொள்ளாச்சி மல ரோட்டுல
ஒரு பொண்ண பாரு சோக்குல

சிம்ரன் போல ஸ்டைலா தான்
இந்த பொண்ணு இருக்கா
சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா
போல தான் இருக்கா
மன்மதன் போல் மாப்பிள்ளை ரொம்ப அழகு தான்
துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க
சச்சின் டெண்டுல் தான்
பொண்ணுகிட்ட மாப்பிள்ளை சலாம் போட நேரும்
சாந்தி முகூர்த்தம்
ஆகட்டும் பையன் வீரம் பாரு
அண்ணன் அழகில் எண்ணம்போல
புள்ள பொறக்கணும்
அட மின்னும் நெருப்பு வைரம் போல பெயரும்
எடுக்கணும்
கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம்
கொடுத்த கை சிகப்புடா
தவறு செய்யும் மனுசருக்கு
நம்ம அண்ணன் நெருப்புடா
பொள்ளாச்சி மல ரோட்டுல
ஒரு பொண்ண பாரு சோக்குல

மாப்பிள்ளை மாப்பிள்ளை மணக்கப்போகும்
மாப்பிள்ளை ம்ஹும்ம் ஆஹஹா விவரமான ஆம்பள
மாவிலைத் தோரணம் கட்டுங்கடா
மங்கள மேளத்த கொட்டுங்கடா
டும் டும்
டும்..................ஹேய்.......

முத்து ரத்தின பல்லாக்கு முன்னே போகுதே
மொத்த சனமும் ஊர்கோலம் பின்னே போகுதே
தார தம்பட்ட ஓயாம கொட்டி முழங்குதே
தைய தந்தன ஆட்டத்தில்
பூமி குலுங்குதே
எங்கும் வாணவேடிக்கை
இங்கே கொஞ்சம் பாரு ச
ொர்க்கம் போல ஆயாச்சு
இப்போ நம்ம ஊரு
தங்க சரிகை சேலை கட்டுன பொண்ணு ஜொலிக்கிறா
புது வெள்ளி சரிகை வேட்டி சட்டையில்
பையன் அசத்துறான்
மனசுக்குள்ள எதை எதையோ
நினைச்சு பொண்ணு சிரிக்கிறா
மௌனமாக பார்த்து பார்த்து
நம்ம பையன் ரசிக்கிறான்
பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
என் பொண்ண பாரு சோக்குல ஹான்
அட நீதான் எனக்கு மாப்பிள்ளை ஹோய்
இதைக் கேட்டு பாரு ஊருல ஹான்
இவளாட்டம் ஒரு பெண்பிள்ளை எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க
பொய் ஏதுமில்லை
அட இவனாட்டம் ஒரு ஆண்பிள்ளை
எங்கேயும் இல்லை
சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
பொள்ளாச்சி மல ரோட்டுல
இந்த பொண்ண பாரு சோக்குல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஹோ... ஹோ... ஒ...
ஒஹோ... ஹோ... ஒ...

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

ஒஹோ... ஹோ... ஒ...
ஒஹோ... ஹோ... ஒ...

நிலவின் பேச்சை கேட்டேன்
மொழியை பிழிந்து போட்டேன்
வாழ்த்தினேன் வருகிறேன்
நியாபகத்தை கோர்த்தேன்

உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை 
ஒரு முறை வெளியில் எடு 

உந்தன் சாலைகள் நெடுகிலும் பூ விழும்
மரங்களை வளர்க்கிற உரிமை கொடு

நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே அழைக்கிறதே

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது

உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் நூறு முறை தானே

இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற
வார்த்தையில் மெளனத்தில் இடருகிறாய்

உள்ளே நடைபெறும் நாடகம் திரை விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே

விடைகளே கேள்வியாய் ஆகிறதே

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி கிழமை உன்ன நான்
பாத்தேன் முதலா ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு
வேற ஒன்னும் தேவையில்லை

பெண் கூட்டத்துல நீ ஒரு
தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிக்கிய சிலையே உன்னதான்
நான் தேடி ஓடோடி வந்தேன்

அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்
ஸ்டீல் பாடியா நிக்குறேன் டி
உன் வளைவுடன் அழக கண்டு
இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி

ஏ நான் குடிக்க போறேன்
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது
சோதனை உள்ளுக்குள் இல்லமானே மயிலே மஞ்சத்துல குயிலே
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
சேதி குயிலே செந்தமிழ் மயிலே
கெறங்கி கெடக்குது மனசு

நான் குடிகா ஏய்

ஆதித்தன் கரிகாலன்
கசட தபற யரல வழள

கலைஞன் எனக்கு
கவிதாய் விருந்து
உனக்கும் எனக்கும்
இருக்கும் கவலை மறந்து
மாந்தர் மதுவை அருந்து

உல்லாசம் ஆயிரம்
உள் எண்ணம் கோபுரம்
தள்ளாடும் உன் உடம்பு
வான்வெளியில் காகிதம்

நான் சிந்தனையில சிறகடிக்கிறேன்
விண்வெளியில பறந்து
பல கண் கவர்ச்சிகள் கால் கொலுசுகள்
தேடுது வழி நடந்து சென்று

சிரிக்கிற பெண்கள் என்னை
சிந்தையில் சில வைக்கிறார்
சிறுநகர் புரிந்தவள் சிறுவனை
சிலுவையில் ஏற்றினால்

குடித பிறகு குருதி எழுது
குதிரை படைகள் ஓட்டம்
என் குவலை நனைக
குமரி இடங்கள் தேடுது களி ஆட்டம்இது படைத்தவனுக்கும் பாமரனுக்கும்
வேதம் போக்கும் பானம்
நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று
உரக்க சொல்லும் கானம்

ஏ நான் குடிக்க போறேன்
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது
சோதனை உள்ளுக்குள் இல்ல

மானே மயிலே மஞ்சத்துல குயிலே
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
சேதி குயிலே செந்தமிழ் மயிலே
கெறங்கி கெடக்குது மனசு

வெள்ளி கிழமை…
நான் குடிக்க… ஏ
வெள்ளி கிழமை… ஏ
ஹான்

கருங்கூந்தலின் பாசத்தில் மூழ்கிறேனே
உன் சுவாசத்தால் நான் நனைக்கிறேனே
தேசத்தில் மழை வதைகிரம் இடமில்லையே
தேடி உன்னை அடைவேனே

சேலை நம் உடலை இணைக்க உருவானதே
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
பூ வானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே

உன்னை பார்த்ததுமே கலை கட்டுதடி
தாழிய கட்டவும் நாளையும் தேடி புடி

வெள்ளி கிழமை உன்ன நான்
பாத்தேன் முதலா ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு
வேற ஒன்னும் தேவையில்லை

பெண் கூட்டத்துல நீ ஒரு
தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிக்கிய சிலையே உன்னதான்
நான் தேடி ஓடோடி வந்தேன்

அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்
ஸ்டீல் பாடியா நிக்குறேன் டி
உன் வளைவுடன் அழக கண்டு
இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி

ஏ நான் குடிக்க போறேன்
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது
சோதனை உள்ளுக்குள் இல்ல

மானே மயிலே மஞ்சத்துல குயிலே
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
சேதி குயிலே செந்தமிழ் மயிலே
கெறங்கி கெடக்குது மனசு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

இது போதுமா
இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

நிழல் தரும்
இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே
உயிரே
உயிர் நீதான் என்றால்
உடனே
வருvaai
உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா.... Oh...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)

(இசை...)

ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே..

பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

பெண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...

(இசை...)

பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே

ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...

பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...)

ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா.
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்
வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது
நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசதிலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ ப்ரியமானவனே
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா, சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா, சம்மதமா
நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா, சம்மதமா
விடிகாலை வேளை வரை, என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டும் என்று, இடை கேக்கும் சம்மதமா
நீ பாதி, நான் பாதி, என்றிருக்க சம்மதமா
என் உயிரில் சரி பாதி, நான் தருவேன் சம்மதமா

என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை

இமையாக நான் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா, சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா, சம்மதமா
கண்மூடி தவம் இருப்பேன் சம்மதமா, சம்மதமா
ஓ, 
ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பலகோடி பௌர்ணமிகள் காத்திருப்பேன் சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும், சம்மதமா
பிரிந்தாலும் உன்னை தேடும், உயிர் வேண்டும், சம்மதமா

என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்தைஇல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ

ப்ரியமானவளே
ப்ரியமானவனே
ப்ரியமானவளே
ப்ரியமானவனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சை கொடி காட்டு
பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சை கொடி காட்டு

வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது
உள் மனம் பேசாமல், உண்மை தோன்றாது

வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால்,
ஆண் கிளி தூங்காது

ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கண்களே, நாடகம் ஆகுமா ?
பெண் நெஞ்சமே, ஊடகம் ஆகுமா ?

யார் சொல்லியும், பெண் மனம் கேட்குமா ?
கை தட்டினால், மொட்டுக்கள் பூக்குமா ?

விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிரல்லவா ?

கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா ?

உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை ?
உடைத்துச் சொல்லும் வரை புரிவதில்லை

மூடாத பூவுக்குள் என்றும், தேன் இல்லை

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சை கொடி காட்டு


என் நெஞ்சிலே, ஆயிரம் ஓசைகள்
உன் காதிலே, கேட்கவே இல்லையா ?

நீ ஆழி போல், அலைகளை ஏவினாய்
நான் கரையை போல், மௌனமாய் மேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அரிதாரமா ?

உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா ?

நிலவை பிரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை பிரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே, அங்கே நீர் இல்லை
ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சை கொடி காட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ

முல்லைப்பூவை மோதும் வெண் சங்குப்போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் சேர்த்து

வீணைப்போல உன்னை கைமீட்டும் இந்த வேளை

நூறு ராகம் சேர்க்கும் நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது

மீதம் இன்றி தந்தாள் உன்னை ஏற்றுக்கொண்ட மாது

தேவியை மேவிய தேவனே நீதான்

நீதரும் காதலில் வாழ்பவள் நான் தான்
நீயில்லாமல் நானும் இல்லையே ஏஏஏஏ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாழும் இந்த அன்பிலே ஹோய்
அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்

மாலை ஒன்று சூடும் பொன்மேனியாகும் சூடு

மாதம் தேதி பார்த்து மனதை சொல்லி கேட்டு

வேளை வந்து சேறும் நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும்

காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சில் நீங்கும் தினம் அணலில் வெந்து வாடும்

வாடலும் கூடலும் மன்மதன் வேளை

வாழ்வது காதல் தான் பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தமல்லவோ ஓஓஓஓ

அதிகாலை நேரம் கனவில் உன்னைப்பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னைச்சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லலாஆஆஆஆஆ
லலலலா லலலலா லலாஆஆஆஆஆ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணாய்
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுக்க வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே... அன்பே... யே யே
அன்பே...யே யே  அன்பே...

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
ஏனடி என்னைக் கொள்கிறாய்
உயிர்வரை சென்று தின்கிறாய்
மெழுகுபோல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிடிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதிலென்ன அதை நீயே சொல் (தோழியா என்...) 

(இசை...)

ஆண்: ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
ஆலிவ் நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்துவிட்டு
என் அருகில் வந்து நில்லு (தோழியா என்...)

குழு: சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம்
னனம் சனனம் சனனம் சானனனம் சானனனா
சனனம் சனனம் சனனம் சானனனம் 
சனனம் சனனம் சனனம் சானனனம்

(இசை...)

ஆண்: இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய்
தனி அறையில் அடைந்துவிட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்
அலைகள் அடித்து தொலைந்துவிடும்
தீவைப்போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச்சடங்கில் மிதிகள் படும்
பூவைப்போல் கசங்கி நின்றேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கில்லை
எனக்கொரு தாய் அவள் என்னருகில் வந்துவிட்டாள் (தோழியா என்...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : { நீயே சொல் உன்
முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில்
விழுந்தும் தீயும்
அணையுமா } (2)
ஆண் : விதைகளில் உள்ள
பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி தொலையாது
பெண் : பூமியில் சில
இடங்களில் நதிகள்
கிடையாது காதலில்
பல இடங்களில்
விதிகள் கிடையாது
ஆண் : ஹே நீயே சொல்
என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில்
விழுந்தும் தீயும்
அணையுமா
பெண் : போர்வைக்குள்
பூ பூக்க வைக்க வா வா
வேர்வைக்குள் விவசாயம்
செய்ய வா வா
ஆண் : மஞ்சத்தை
பரிமாற வேண்டும்
வா வா மரியாதை
தெரியாத முத்தம்
தா தா
பெண் : கட்டில் மேல
என்ன பண்பாடு
காதலால் காதல்
வேர்கள் தொடு தொடு
ஆண் : நூறு முறை
தொட்டு வைக்கிறேன்
நுனிநாக்கில் பொட்டு
வைக்கிறேன் உயிர்
மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய
வைக்கிறேன்
பெண் : அச்சத்தை விலக
வைக்கிறாய் வெட்கத்தை
கரைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ
வைக்கிறாய் இனிமேல்
எனை என் செய்குவாய்
ஆண் : { நீயே சொல்
என் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில்
விழுந்தும் தீயும்
அணையுமா } (2)
ஆண் : உடலைப் போல்
அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு
இல்லை
பெண் : வாயோடு
வாய் வந்து கொஞ்சும்
லீலை வலியாலே
இன்பங்கள் செய்யும்
லீலை
ஆண் : மூங்கினில்
பரவும் புயல் போல
உனதுடல் மீது உதடும்
பரவுது
பெண் : இப்படியே
உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம்
கிடைக்குமா இக்கணமே
செத்து விடட்டுமா உன்
ஜீவன் அவள் வலி
பொறுக்குமா
ஆண் : இது போலே
சமயம் வாய்க்குமா
என் மடியில் இமயம்
சரியுமா என் உயிரில்
மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும்
போவோமா
பெண் : { ஹே நீயே சொல்
உன் முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில்
விழுந்தும் தீயும்
அணையுமா } (2)
ஆண் : விதைகளில் உள்ள
பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி தொலையாது
பெண் : பூமியில் சில
இடங்களில் நதிகள்
கிடையாது காதலில்
பல இடங்களில்
விதிகள் கிடையாது
பெண் : ரத்தர என்
முத்தம் விழுந்தும்
மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில்
விழுந்தும் தீயும்
அணையுமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு விழிகளும் விழிகளும் இணைத்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெட்பம் தடுமாறுதே.... ஹே ஹே ஹே ஹே ஹே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் 
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
கார்மேகம் வந்து மோதியே 
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே....
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே....

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் 
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா

மழைச்சாரலோ என் நெஞ்சிலே....
சுகமாய் கீறலோ என் உயிரிலே....

நான் அறியாமல் எனை ரசித்தாய் என் மௌனங்களை மொழிப்பெயர்த்தாய் 
உன்னை கண்ட பின்னே எந்தன் பெண்மைகளும் உயிர்ப்பெறுதே
கண்ணா மூச்சி ஆட்டம் போட்ட வெட்கங்களும் வெளிவருதே
கனவில் நின்ற போதும் மிதக்கிறேன் அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே இளவேனில் காற்றின் வெட்பம் தாக்க நின்றேனே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் 
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் 
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

நான் கனவுகளை கண்டதில்லை கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை இருந்தும் மனம் உனை நாட
முன்னூர் ஆண்டு ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற
விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன் உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிக்கட்டும்
நமை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்....
கார்மேகம் வந்து மோதியே 
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே....
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே....
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே ....
சில்லுச்சில்லாய் சில்லுச்சில்லாய் சிதறுதே....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கறையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
எய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன்
காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பாரத்ததாலே
ஊரைவிட்டு எங்கேயோ வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன்
குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா
ஒ மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.