Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ம் ஹ்ம் ஹ்ம்

ம் ஹ்ம் ஹ்ம்

லால லால லா

லா லால லால லா
லால லால லா...............


M)ஆத்து மேட்டுல

ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது


F)ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

M)காட்டுல
கட்டில் ஒன்னு போடவா
கையில
கட்டி கொண்டு ஆடவா

F)ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச

M)கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது
ஆத்து மேட்டுல

F)ஒரு பாட்டு கேக்குது

M)ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு

F)ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது


M)கேக்கவா
ஒன்னே ஒன்னு கேக்கவா
சேக்கவா
கையில் உன்ன சேக்கவா

F)ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

M)சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்

M)ஆத்து மேட்டுல
F)ஆ
M)ஒரு பாட்டு கேக்குது
F)ஆஹா
F)ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

 

Link to post
Share on other sites
 • Replies 214
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எ

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா... நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.. ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும். இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.

டாய் மச்சான் எங்கடா போனா அவ, அவள மாதிரி நான் பாத்ததே இல்லடா, எனக்கு.. எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போல இருக்குடா நான்….. வாய மூடி சும்மா இருடா… ரோட்ட பாத்து நேரா நடடா… கண்ண கட்டி காட்டுல

 • கருத்துக்கள உறவுகள்

ஆல்வார்பேட்டை ஆளுடா
அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
பன்னென்டு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா
GROUP ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
…போடு
….வா நர்சம்மா
…ஐய்யோ
பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா
ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா
ஐய்யயோ இதுக்கா அழுவுரே
lifeஇலே ஏன்டா நழுவுரே
காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டேய் டேய்
GROUP ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
இது மாடி வீடு நம் ஜோடி வீடு
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
தெய்வம் வந்து வாழும் வீடு
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
இது மாடி வீடு நம் ஜோடி வீடு
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
தெய்வம் வந்து வாழும் வீடு

ஜன்னல் வழியே காற்றே வருக
கதவு வழி செல்வம் வருக
வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க
முன்னே காணும் புல்வெளி வாழ்க
மொட்டை மாடி ரோஜா வாழ்க
ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க
எங்கள் இதயம் அடுக்கி வைத்து
இந்த இல்லங்கள் எழுந்ததம்மா
நீ சுவரில் காத்து வைத்தால்
மன துடிப்பு கேட்கும் அம்மா
நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க
தலைமுறை இருபது வாழிய நம் வீடு
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்

வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்
இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே ஒரு நாய்குட்டியாக
வந்து வாழும் வரமே வேண்டும் உன்னை கேட்கிறோம்
இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா
அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர
சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு
செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
இது மாடி வீடு நம் ஜோடி வீடு
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
தெய்வம் வந்து வாழும் வீடு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது பூத்தது காலையில் தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது பூத்தது காலையில் தான்

சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காவலை தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காவலை தான்
அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான்
அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான்

கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ

சிரித்தால் சிரிக்குது ஆசை
சரித்தால் சரியிது ஆடை
ஹே அணைத்தால் சிலிர்க்குது தேகம்
நினைத்தால் பிறப்பது தாகம்
காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ
காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ

கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ

சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே

என் கைகளின் மருதாணியில் உன் வாசம் வீசுதே

அரண்மனை வாசல் திறந்திட வேண்டும் காதலில் போர் தொடுப்பேன்
அரண்மனை வாசல் திறந்திட வேண்டும் காதலில் போர் தொடுப்பேன்

கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ

விழிமேல் வழிகிற நீரை விரலால் துடைத்திடுவேனே

ஹே இவனை ஜெயிப்பவன் யாரு மணம் தான் கரும்புச்சாறு
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி

கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ

சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
சலக்கு சலக்கு ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் சம்ச்சக்கு ச்சன் ச்சன் ச்சையா
வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே

என் கைகளின் மருதாணியில் உன் வாசம் வீசுதே

இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்

இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள் நிறைய ஆகணும் கல்யாணம்
ஆகணும் கல்யாணம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓக் லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…………
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்…..
நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
ஓ..ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே.

மழையில் நனையும் பனி மலரை போல
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
ஓ..ஓ..ஓ . உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்…

மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே
ஓக் லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…………

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : டெலிபோன்
மணி போல் சிரிப்பவள்
இவளா மெல்பௌன்
மலர் போல் மெல்லிய
மகளா டிஜிட்டலில் செதுக்கிய
குரலா எலிசபெத் டெய்லரின்
மகளா சாகிர் ஹுசைன் தபலா
இவள்தானா

ஆண் : சோனா சோனா
இவள் அங்கம் தங்கம்
தானா சோனா சோனா
இவள் லேட்டஸ்ட்
செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை
அந்த பிரம்மன் படைத்தானா

ஆண் : டெலிபோன்
மணி போல் சிரிப்பவள்
இவளா மெல்பௌன்
மலர் போல் மெல்லிய
மகளா

குழு : ஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஹோ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ

பெண் : நீயில்லை என்றால்
வெயிலும் அடிக்காது துளி
மழையும் இருக்காது
நீயில்லை என்றால் சந்திரன்
இருக்காது ஒரு சம்பவம்
எனக்கேது

ஆண் : உன் பேரை
சொன்னால் சுவாசம்
முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே வீசும்
காற்றில் வேலை நிறுத்தமடி

பெண் : நீரில்லை என்றால்
அருவி இருக்காது மலை
அழகு இருக்காது நீ
இல்லாமல் போனால் இதயம்
இருக்காது என் இளமை பசிக்காது

ஆண் : வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம்
மூழ்கி ஆட விடு வெட்கம்
வந்தால் கூந்தல் கொண்டு
உனைக் கொஞ்சம் மூடி விடு

ஆண் : டெலிபோன்
மணி போல் சிரிப்பவள்
இவளா மெல்பௌன்
மலர் போல் மெல்லிய
மகளா

குழு : { ஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஹோ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ } (2)

ஆண் : உன் பேரை
யாரும் சொல்லவும்
விடமாட்டேன் அந்த
சுகத்தையும் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே
விட மாட்டேன் அதை வெயிலில்
விட மாட்டேன்

பெண் : பெண்கள் வாசம்
என்னைத் தவிர இனி
வீசக்கூடாது அன்னை
தெரசா அவரை தவிர
பிறர் பேசக்கூடாது

ஆண் : நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில்
விட மாட்டேன் அதை கவர்வேன்
தர மாட்டேன்

பெண் : புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ
தீண்டக்கூடாது காதல்
கோட்டை கற்புக்கரசா நீ
தாண்ட கூடாது

ஆண் : டெலிபோன்
மணி போல் சிரிப்பவள்
இவளா மெல்பௌன்
மலர் போல் மெல்லிய
மகளா டிஜிட்டலில் செதுக்கிய
குரலா எலிசபெத் டெய்லரின்
மகளா சாகிர் ஹுசைன் தபலா
இவள்தானா

ஆண் : சோனா சோனா
இவள் அங்கம் தங்கம்
தானா சோனா சோனா
இவள் லேட்டஸ்ட்
செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை
அந்த பிரம்மன் படைத்தானா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

அடி பிரியசகி சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிரித்து சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கொடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விசுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னௌ காணாமல் அன்னம் தண்ணீர் த்டமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பெண்ணே உன்னை மறூமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்றூ சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ 

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : {கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்} (2)

ஆண் : {மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2)

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

குழு : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

குழு : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : பந்தாடும் வயசுப்பையா
குழு : பையா
பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
குழு : கைய்யா

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே
குழு : லே லே லே…
பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா
குழு : ஐய்யா

பெண் : பெண்டாட்டியோட
ஒவ்வொரு நாளும்
குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு

பெண் : நித்தம் நீ ஆறு முற
குழு : முற
பெண் : முத்தங்கள் போட்டுவிடு
குழு : விடு

பெண் : நாளுக்கு மூணு முற
குழு : முற..அஹ..ஹா
பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு
குழு : விடு

பெண் : நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா
குழு : பெண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா.

பெண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : …………………………………….

ஆண் : வயசான சுந்தரியே
குழு : யே
ஆண் : மன்மதன் மந்திரியே
குழு : யே

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே
குழு : லே லே லே
ஆண் : பீ எச் டீ முடிச்சவளே

ஆண் : அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி
குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு
குழு : க்கு
ஆண் : சோத்துக்கு வழியில்லையே
குழு : ஏ யே

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க
குழு : யே யே யே
ஆண் : யாருக்கும் பொழுதில்லையே

பெண் : ஊர்க்கதை பேச
நேரங்கள் இருக்கு
குழு : பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

ஆண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

ஆண் மற்றும் குழு :
பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் மற்றும் குழு :
ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ...ஓho
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்...ஓho

(பெண்)..
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் 
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

(ஆண்)
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்.

( தாரார.....ஓஹோ x 2 )

(பெண்)
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்போல் பூவாசம் அதிசயமே 
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

(ஆண்)..
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே 
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

(பெண்)
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே 
உண்டான காதல் அதிசயம் ஓஹோ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஹோ..

(ஆண்)
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.
(பெண்)..
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் 
(ஆண்)...
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்.
(பெண்)
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்.
(ஆண்)..
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்.

(கோரஸ்)
அஜூபா ...........அஜூபா .

(ஆண்)..
பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே.
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நி எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
(பெண்)...
ஓஹோ.
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

(ஆண்)
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம், 
(பெண்)அதிசயம்.
(ஆண்)
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள், 
(பெண்)அதிசயம்
(ஆண்)
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல், 
(பெண்)அதிசயம் 
குருநாதர் இல்லாத குயில் பாட்டு, 
(பெண்)அதிசயம்
(ஆண்)
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் . 
(தாரார......ஓஹோ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நல் இரவினில் இரைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் உன் பணி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வெள்ளலை சுகம் தொடுவது
போலே இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தல் இலை மீது தினம் தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம் போலே நெடு நேரம் இளைபாரு
ஓரு ஆயிரம் மெல்சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நல் இரவினில் இரைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஹுவே ஹஹஹஹஹ நீயோ ஹுவே ஹஹஹஹஹ
நானோ வெட்கம் வெட்கம்
ஹுவே ஹஹஹஹஹ நீயோ ஹுவே ஹஹஹஹஹ
நானோ நித்தம் நித்தம்
நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்
ஒலியில் மின்னொலியில் என் வளையலும் நெளிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் இரைவது போதும்
போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
கண் தூங்க போனாலும் தூங்காது ஆள் வாசம்
சகாயமே உன் அருகினில் இளைபிறுவேனே
தடாகமே பொன் முதுவனில் நனைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம்.... ம் ம் ம் ம் ம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் 
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் 
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்

செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும் சித்திரத்துப் தேன்குடமோ
மன்னர் இங்கு மானிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ
ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் 
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்


ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
நாளை என் வானத்தில் தேவி நீ
மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி
போகட்டும் போகப் போக இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்

ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் 
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஐ லவ் யூ
நானொரு தேனீ நீயொரு ரோஜா ஐ லவ் யூ காலம் 

நம்மைத் தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா

ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்...
அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்...
மாலைப் பொழுதின் சாரத்தில் 
மயங்கித் திரிவோம் பறவைகள் போல...

மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா

வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து 
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ 

இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ
இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ
சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ
சேர்ந்து களித்திடக் கட்டளை இட்டானோ
இன்பத் தேனிடை ஆடும் தேவதை போல ஆடிட வைத்தானோ
இந்த நேரத்தில் இது சுகமோ இதழோரத்தில் பரவசமோ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ரகசியமோ இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்… எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால்… எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
ஆஆஆ….

மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது…நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும் பாடு
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே…..
ஆஆஆ…
.
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்
துடிக்க வைத்ததும்.. துடிக்க வைத்ததும்
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஆ.., அ ஆஅ ஆஅ.., ஆஅஆ ஆஆஆஆ.., ஆஅ ஆ.., அ ஆஅ .., ஆஅஆ ஆஆஆஆ.., ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி, சல, சல, சல, வெனச் சாலையிலே, செல், செல், செல், எங்கள் காளைகளே, சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே, ஜல், ஜல், ஜல், எனும் சலங்கை ஒலி, சல, சல, சல, வெனச் சாலையிலே, செல், செல், செல், எங்கள் காளைகளே, சேர்ந்திட வேணும், இரவுக்குள்ளே, காட்டினில் ஒருவன், எனைக் கண்டான், கையில், உள்ளதைக் கொடு என்றான், காட்டினில் ஒருவன், எனைக் கண்டான், கையில், உள்ளதைக் கொடு என்றான், கையில், எதுவும், இல்லையென்று, கண்ணில், இருந்ததைக், கொடுத்து விட்டேன், ஜல், ஜல், ஜல், எனும் சலங்கை ஒலி, சல, சல, சல, வெனச் சாலையிலே, செல், செல், செல், எங்கள் காளைகளே, சேர்ந்திட வேணும், இரவுக்குள்ளே, அவன் தான், திருடன், என்றிருந்தேன், அவனை, நானும், திருடி விட்டேன், முதல், முதல், திருடும் காரணத்தால், முழுசாய்த் திருட, மறந்து விட்டேன், ஜல், ஜல், ஜல், எனும் சலங்கை ஒலி, சல, சல, சல, வெனச் சாலையிலே, செல், செல், செல், எங்கள் காளைகளே, சேர்ந்திட வேணும், இரவுக்குள்ளே, இன்றே, அவனைக், கைது செய்வேன், என்றும், சிறையில், வைத்திருப்பேன், இன்றே, அவனைக், கைது செய்வேன், என்றும், சிறையில், வைத்திருப்பேன், விளக்கம், சொல்லவும், முடியாது, விடுதலை, என்பதும், கிடையாது, ஜல், ஜல், ஜல், எனும், சலங்கை ஒலி, சல, சல, சல, வெனச் சாலையிலே, செல், செல், செல், எங்கள் காளைகளே, சேர்ந்திட வேணும், இரவுக்குள்ளே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் குழலோடு  விளையாடும்  காற்றாக  உரு  மாறி
முந்தானை  படி ஏறவா
மூச்சோடு  குடி  ஏறவா

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சுடேரவா
என்  ஜென்மம் ஈடேரவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா

உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே   தடை வைக்கவா
மௌனத்தில்  குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம்  மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது  அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல  இருக்காது  அழகே

அழகே அழகே வியக்கும்  அழகே
அழகே அழகே வியக்கும் அழகே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)
ஓஓஓஓ...

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முறைதான முகந்தா

சரிதான சனந்தா 2

பூவையர் மீது கண் மேய்வது முறையா

பாவையின் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா

போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

உன் விரலில் மலை சுமந்ததது போதுமே

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

உன் இதழில் குழல் இசைத்தது போதுமே

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

 

 

கோபியர் குளிக்கையிலே

உடைகளை திருடி களைத்தாய்

ஓய்வேடு மாயவனே…

பானையில் வெண்னையினை

தினமும் திருடி இழைத்தாய்

தூங்கிடு தூயவனே

சா…மநா… மோ….கனா…

போதும் கண்ணா

நீ செய்யும் திருட்டு

வானம் எங்கும் சுழந்திடும் இருட்டு

மார்பில் சாய்ந்து கண் மூடடா..

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

 

சோலையின் நடுவினிலே

நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்

நான் உனதருகினிலே…

கானகன் நடுவினிலே மயங்கி இறங்கி கிடந்தேன்

நான் உனதழகினிலே

மா…தவா… யா…தவா…

லீலை செய்து என்னை நீ கவிழ்க்க

காளை மோதி உன்னையும் கவிழ்க்க

காயம் என்னால் கொண்டாயடா…

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

கண்ணா நீ தூங்கடா

என் கண்ணா நீ தூங்கடா

முறைதான முகந்தா

சரிதான சனந்தா

முறைதான முகந்தா

சரிதான சனந்தா

மதனா மதுசூதனா

மனோகரா மணிமோகனா

மதனா மதுசூதனா

மனோகரா மணிமோகனா

 

முறைதான முகந்தா

சரிதான சனந்தா

ஆனந்தா…. அனிருத்ரா…

கண்ணா.. கண்ணா கண்ணா கிருஷ்ண

இராத இரமனா கிருஷ்னா

கண்ணா நீ தூங்கடா…..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

(ராதை மனதில்..)


கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்

நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

(ராதை மனதில்...)


கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்

மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்

கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்

அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்

கண்ணா எங்கே சொல் சொல்

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

(ராதை மனதில்..)


கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்

கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்

காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்

கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்

குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்

கண்ணா கண்ணா வா வா

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... ச...... ச.....


ம க ம ச... ம க ம ச... ம க ம ச...
ச... ச...


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்


த க திம் த... த க திம் த...
த க திம் த... த க திம் த...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க...
தகிடு தோம்.... தகிடு தோம்.... த திம் த... த திம் த... த க... 


ஆ.... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவெது கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமோ வாழ்வினிமை பெறுமோ
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்


ஆ... ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றிப் பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை 
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறேன்ன நான் செய்த பாவம்


அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை  கேள்


ச ச ச நி நி க க க ம ப க க க ச ச நி
நி நி நி ச ச க க க ம ப க க க ச ச நி


ச க க நி ச.... ச க க நி ச...
ச க க நி ச.... ச க க நி ச...
நி ச நி த நி ச நி ச நி த ப
தகிடு தகிடு தோம்.... தகிடு தோம்....
கிகிடு தகிடு தோம்.... தகிடு தோம்.... 
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்.... தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த க தகிட த க தகிட தகிடு தகிடு தோம்....
த க தகிட த.......

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
 ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

 ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

 ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை)

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

 இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

 அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

 இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

 அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

 இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

 என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

 இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன

 நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

 உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்

 அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
 தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

 அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

 இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

 அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

 இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
 வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

 இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

 புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

(இசை...)

பெண்: தலை தொடும் மழையே...
செவி தொடும் இசையே...
இதழ் தொடும் சுவையே...
இனிப்பாயே....
விழி தொடும் திசையே...
விரல் தொடும் கனையே...
உடல் தொடும் உடையே...
இணைவாயே....
யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும் நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

(இசை...)

பெண்: கருநிறச் சிலையே...
அறுபது கலையே...
பரவச நிலையே...
பகல் நீயே....
இளகிய பனியே...
எழுதிய கவியே..
சுவை மிகு கனியே...
சுகம் நீயே....
கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: ஓ... என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா ஒரு மல்லிச்சரமே
தனியொரு அன்றில் நீதானா இலைசிந்தும் மரமே
புயல்தரும் தென்றல் நீதானா புது வெள்ளிக்குடமே
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா
ஒரு மல்லிச்சரமே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே...

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.