Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஓகஸ்ட் 03 

மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.   

ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட, இறைமை மன்னனிலேயே தங்கியிருந்தது. மன்னனின் முடிந்த முடிவை மறுதலிக்கும் அதிகாரம், எங்கேனும் இருக்கவில்லை. இதனால் மன்னன் வல்லாட்சியாளனாக மாறும் போதும் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போதும் அதைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கவில்லை.   
ஆகவே, புரட்சியொன்றே அந்த எதேச்சாதிகாரத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே வழியாக இருந்தது. மக்கள் புரட்சி செய்து, ஆட்சியிலிருந்த மன்னனை வீழ்த்தினார்கள். அடுத்து, ஆட்சிப்படியேறுபவர்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாதிருக்க, சில மட்டுப்பாடுகள் உருவெடுத்தன. அவை மக்களின் உரிமைகளாகவும் அதிகாரப் பிரிவுகளாகவும் உருப்பெற்றன.   
மேற்குலகில் முடியாட்சி வீழ்ந்து, ஜனநாயகச் சிந்தனை உருப்பெறத் தொடங்கியதில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு மிக முக்கியமானது.   

‘இறைமை என்பது, மன்னனில் இல்லை; மக்களிடமே உண்டு’ என்ற சிந்தனையும் குடியாட்சி, சட்டவாட்சி, அதிகாரம் என்பன ஓரிடத்தில் குவிக்கப்படக் கூடாது என்ற சிந்தனைகளும் வலுப்பெறத் தொடங்கின. நிற்க!  

‘ஏகபோகம்’ என்பது, எப்போதுமே ஆபத்தானதொரு சிந்தனை. ஏகபோக அதிகாரம்,ஓரிடத்தில் குவியும் போது, அது மட்டுப்பாடில்லாத பெரும்பலத்தை தனிநபரிடமோ, செல்வாக்கு மிகு குழுவிடமோ வழங்கிவிடுகிறது. மற்றைய அனைவரும், அந்தத் தனிநபரினதோ குழுவினதோ கருணையில் தங்கியிருக்க வேண்டியவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்கள், அந்தத் தனிநபரினதோ, குழுவினதோ எதேச்சாதிகார நடவடிக்கைகளை விரும்பியோ விரும்பாமலோ, அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.   

அரசியலில் மட்டுமல்ல, வணிகத்திலும் கூட, ‘ஏகபோகம்’ என்பது ஆபத்தானது. அதனால்தான், திறந்த சந்தையை ஊக்குவிக்கும் பல்வேறு வளர்ந்த நாடுகளும், ‘ஏகபோகம்’  ஏற்படுவதற்கு எதிரான சட்டப் பாதுகாப்பை, வலுவாக அமல்படுத்துகின்றன. வணிகத்தில், போட்டியை இல்லாது செய்யும் முயற்சிகளைக் கூட, கடுமையான சட்டங்களின் மூலம் தடுக்கின்றன. 

ஏனென்றால், ஏகபோகம் ஆபத்தானது. அது அரசியலானாலும் சரி, அதிகாரமானாலும் சரி, வணிகமானாலும் சரி, அதிகாரமும் பலமும் செல்வாக்கும் ஓரிடத்தில் குவிவது, எவருக்குமே ஆரோக்கியமானதல்ல.  

அரசியலைப் பொறுத்தவரையில், ‘அதிகாரம் கெடுக்கும், அறுதியான அதிகாரம் அறுதியாகக் கெடுக்கும்’ என்பார், அக்டன் பிரபு. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. 

ஏகபோகம், அறுதியான அதிகாரத்தை ஒரு தரப்பிடம் குவிக்கிறது. இதன் விளைவு வல்லாட்சி. இதனால்தான், ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்புகளாக, மொன்டஸ்க்யுவின் ‘அதிகாரப் பிரிவுக் கோட்பாடு’ம் அதன்பாலான அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலிருந்து உதித்த, ‘தடைகளும் சமன்களும்’ என்ற சித்தாந்தமும் கருதப்படுகின்றன. 

ஓரரசின் மூன்று அங்கங்களான சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகியன, ஒரே நபர் அல்லது, நபர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதே, ‘மொன்டஸ்க்யு’ சொல்லும் அதிகாரப் பிரிவின் சாராம்சம் ஆகும். அதுபோல, ‘தடைகளும் சமன்களும்’ என்ற சித்தாந்தத்தின் சாராம்சமானது, இந்தப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு துறையும், தமக்குள் வல்லாட்சியை உருவாக்கிவிட முடியாதவாறு, ஏனைய துறைகள் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். 

மிக எளிமையாகப் பார்த்தால், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதையும் ஏகபோகத்தையும் தடைசெய்வதே, நவீன ஜனநாயகத்தின் மிக முக்கிய அடிப்படைப் பண்பு எனலாம். 

அதிகாரம் ஓரிடத்தில் குவிந்த போதெல்லாம், ஒரு தரப்பு ஏகபோகத்தைப் பெற்றுக்கொண்ட போதெல்லாம், ஜனநாயகம் பெரும் சிதைவைக் கண்டது. இதற்கு வரலாறு சாட்சி.  

இந்த ஏகபோகத்துக்கு எதிரான சிந்தனையை, தமிழ்ச் சமூகம் மிக எளிதாகவே உணர்ந்திருந்தது. அதனால்தான், ‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்ற பழமொழி, எம்மிடையே பிரபலமாக இருக்கிறது. ‘கீரை’ என்பது, மிக எளிதாக முளைக்கும், மிக மலிவானதொரு மரக்கறிவகை. ஆனால், அந்த மலிவான கீரையை விற்கும் கடைக்குக் கூட, போட்டி இருக்க வேண்டும் என்ற, பலமான புரிதலைக் கொண்டிருந்த சமூகமாக, தமிழ்ச் சமூகம் இருந்திருக்கிறது என்பதற்கு, இந்தப் பழமொழியே சான்று.  

ஜனநாயகம் என்பது, ‘மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’ என்ற, ஆபிரஹாம் லிங்கன் உரைத்த ஜனநாயகத்தின் தாற்பரியம் என்பது உண்மையானால், ஜனநாயகம் என்பது, தலைவர்கள் பற்றியதாக அன்றி, கட்சிகள் பற்றியதாக அன்றி, மக்கள் பற்றியதாக அமைய வேண்டும். 

ஆனால், மக்கள் என்பவர்கள், ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகளைக் கொண்டமைந்த ஒருமித்த தன்மையுடையவர்கள் (homogenuos) அல்ல. மக்களிடம் அபிப்பிராயபேதமுண்டு; மாறுபட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு; வேறுபட்ட தெரிவுகள் உண்டு. ஆகவே, ஜனநாயகம் என்பது, இவற்றை அரவணைக்கத்தக்கதாக அமைய வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின், உண்மையான தாற்பரியத்துக்கு நியாயம் செய்வதாக அமையும்.  

இந்த இடத்தில், சிலருக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. போட்டி என்பது, வினைதிறனானதா, அது ஒற்றுமையைச் சிதைக்காதா, ‘ஒற்றுமையே பலம்’ இல்லையா?  போட்டி என்பது, வினைதிறனானதா என்ற கேள்விக்கு, எது வினைதிறன் என்பதை நோக்குவது முக்கியமாகிறது. 

முதலாவது உலக யுத்தத்தில் வீழ்ச்சிகண்டு, பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஜேர்மனி, இன்னோர் உலகப் போரின் காரணகர்த்தாகவாக, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளையும் கைப்பற்றுமளவுக்கும்  உலகையே ஆட்டிப்பார்க்கும் அளவுக்கும் நாஸி ஆட்சியில், வினைதிறனாக வளர்ச்சி அடைந்திருந்தது. நாம் அத்தகைய வினைதிறனைத்தான் வேண்டுகிறோமா? 

இன்று ஜனநாயகத் தெரிவுகள் அற்ற, ஒரே கட்சி மட்டுமே, ஆட்சி செய்யக் கூடிய நாடுகளாக சீனா, வடகொரியா, கியூபா, லாவோஸ் போன்ற நாடுகள் இருக்கின்றன. இவற்றின் மனித உரிமைநிலை, எவ்வாறு இருக்கிறது, மனித அபிவிருத்திச் சுட்டி எவ்வாறு இருக்கிறது, மனித வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால் ‘வினைதிறன்’ என்பதன் அர்த்தமற்ற தன்மை புரிபடும். 

பத்துப் பேர் விவாதித்து முடிவெடுப்பது என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்கும்; உடன்பாடு எட்டப்படாது. ஆனால், எடுக்கப்படும் முடிவு சார்ந்த, பலதரப்பு அபிப்பிராயங்களையும் கேட்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அது பெரும்பான்மைத் தரப்பின் நன்மைக்காக, சிறுபான்மைத் தரப்பின் நலன்கள் பலிக்கடாவாக்கப்படாது இருப்பதற்கான தடைகளை உருவாக்கிறது. 

மாற்றுக் குரல்கள் ஒலிப்பதற்கான வாய்ப்புக்கூட இல்லாவிட்டால், இங்கு வினைதிறன் என்பது, அதிகாரமுள்ளவர்களின் தெரிவுகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் அமல்படுத்துவதாக மட்டுமே அமையும். அத்தகைய வல்லாதிக்க வினைதிறனைத்தான் விரும்புகிறோமா?  

‘ஒற்றுமை’ என்பது, அரசியலைப் பொறுத்தவரையில் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வார்த்தையாகிவிட்டது. எது ஒற்றுமை? 

நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, எம்மீதான அடக்குமுறைகளைச் சகித்துக் கொண்டிருப்பதா? 

ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக, எமது உரிமைகளைத் தாரைவார்த்துவிட்டு, உடன்படாத விடயங்கள் தொடர்பில் மௌனம் காப்பதா? 

இதுதான் ஒற்றுமையா? இந்த ஒற்றுமையால் நாம் அடையப்பெறப்போவது என்ன என்பதுதான் முக்கியமானது. ஒற்றுமை என்பது, உண்மையாகவே அதன் அடைவுகளை ஏற்றுக்கொண்டு ஒன்றுபடுவதால் மட்டுமே பலமாக அமையுமே அன்றி, ஓர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக, எமது அடிப்படைகளைத் தொலைத்துக்கொண்டு, ஒற்றுமை என்ற பதாகையை மட்டும் ஏந்திக்கொண்டு நிற்பதால் பயனில்லை. 

ஒற்றுமைக்காகத் தனி மனித உரிமைகளையும் விருப்பங்களையும் சுதந்திரங்களையும் கொள்கைகளையும் தியாகம் செய்துவிடவேண்டும் என்பது, வல்லாதிக்க மனநிலையின் வௌிப்பாடு. ஒரு மனிதனைப் பார்த்து, “ஒற்றுமைக்காக உனது உரிமைகளையும் விருப்பங்களையும் சுதந்திரங்களையும் கொள்கைகளையும் நீ விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கேட்பது, எவ்வளவு பெரிய அபத்தம்? 

ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது, வெறுமனே ஒற்றுமை என்ற சொல்லைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு திரிவதில், எந்த அர்த்தமும் இல்லை.  

மாறாக, ஒற்றுமை என்பது, எவ்வாறு அமைய வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் ஒன்றுபடக் கூடிய விடயங்களில் ஒன்றுபட்டும், மாற்றுக்கருத்துள்ள போது, அதைக் கௌரவத்துடன் தெரிவித்து, எதிர்ப்பை வௌிக்காட்டக் கூடிய வகையிலும் அமைய வேண்டும். அதுதான் நிஜ ஒற்றுமை. தவிர, சரணாகதி நிலையை ஒற்றுமை என்று வரையறுப்பது தவறு. 

ஒரு மக்கள் கூட்டம் என்பது, பலவகைப் பூக்களும் செடிகளும் கொடிகளும் மரங்களும் புற்களும் என, உயிர்ப்பல்வகைமை நிறைந்த அழகிய பூந்தோட்டத்தைப் போன்றது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமையைத் தேடலாமே தவிர, எல்லாவற்றையும் ஒரே நிறத்திலும் ஒரேவடிவத்திலும் வடிவமைத்துவிட முடியாது. அது, இயற்கையானதுமல்ல; யதார்த்தமானதுமல்ல.  

மாற்றுக்கருத்து, உள்ளவரை தான் அது ஜனநாயகம். அது இல்லாவிட்டால், அது வல்லாதிக்கம். இது பாமரத் தமிழனுக்கும் தெரியும். அதனால்தான் அன்றே அவன் சொன்னான், “கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்” என்று.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கீரைக்கடைக்கும்-எதிர்க்கடை-வேண்டும்/91-253927

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாற்று வழி அல்லது இரண்டாவது நிலை  இல்லையென்றால்

செயல் மற்றும் தூண்டுதலுக்கு வாய்ப்பே இல்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து, உள்ளவரை தான் அது ஜனநாயகம். அது இல்லாவிட்டால், அது வல்லாதிக்கம். இது பாமரத் தமிழனுக்கும் தெரியும். அதனால்தான் அன்றே அவன் சொன்னான், “கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்” என்று.    

உண்மையான வரிகள்.ஆழமான  கருத்தை சொல்லும் கட்டுரை. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று தான் இதைப் பார்த்தேன், இணைப்பிற்கு நன்றி நுணா! போல் அண்ணை இறுதியில் மத்திய கல்லூரி ஒரு  திறந்த பல்கலைக்கழகம் என்றது மிகப் பொருத்தமான விவரிப்பு. இன்றும் கூட கல்லூரியில் சேர்வதற்கு நன்கொடைகள் கேட்பதில்லை, மதச்சார்பு இல்லை, திறமை இருந்தால் மேலே வரலாம்!  ஒரேயொரு நெருடல், ஒரு கல்விக் கூடமாக கல்வித் தரத்தில் மேலும் அதிக கவனத்தை கல்லூரி செலுத்த வேண்டும்!  
  • நிகரில்லாத பாட்டுத் தலைவனுக்கு  என்  கண்ணீரஞ்சலிகள் .உங்கள் பாடல்கள் வாழும வரை உங்கள் புகழ் வாழும்.தமிழ் கூறும் நல்லுலகுக்கும் இசையை ரசிப்பவர்களுக்கும்  பேரிழப்பு  
  • உலகெங்கும் தமிழை தனது குரல் வளத்தால் வளர்த்தவருக்கு எனது நன்றிகள்.  நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புக்கள்  தமிழை வளர்க்கும்.  ஆழ்ந்த அனுதாபங்கள்.  
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி   24.09.2020 அன்று பாராளுமன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட இருந்து நீதியற்ற முறையில் சபாநாயகரால் தடை செய்யப்பட்ட எழுத்து மூல கேள்வி நேர சமர்ப்பணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் குறித்த மேற்படி நிலையியல் கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் அனுமதி கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் என்று கூறி உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தியாகி திலீபன் தொடர்பாக உரையாற்றுவதற்காக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுவிபரம் வருமாறு. //செப்ரெம்பர் 26ம் திகதி தியாக தீபம் திலீபன் என அழைக்கப்படும் திரு. இராசையா பார்த்திபன் அவர்களது 33வது ஆண்டு நினைவேந்தல் தினமாகும். அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அரசியற் பொறுப்பாளராக இருந்தவர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளித்து நிராயுதபாணிகளாக இருந்தசமயம் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார். இந்திய அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சிகளை உபயோகித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து தமிழ்மக்கள் எதிர்நோக்கம் அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கவேண்டுமென ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார். செப்ரெம்பர் 15ம் திகதி ஆரம்பித்த அவரது உண்ணாநிலைப் போராட்டம் 26ம் திகதி அவரது வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்தது. அவரது போராட்டமானது அமைதி வழியிலான அதியுச்சமான தியாகமாக உலகத் தமிழர்களால் போற்றப்படுகிறது. கடந்த 32 வருடங்களாக இலங்கையில் வாழும் தமிழர்களும் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து வருகிறார்கள். போர் நடைபெற்றுவந்த காலத்திலும், 2015ம் ஆண்டுக்குப்பின்னரும் , இந்நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறிலங்காப் படையினர் அவ்வப்போது இந்நிகழ்வினைக் குழப்புவதற்கு எத்தனித்தபோதிலும், மக்கள் தாமாக முன்வந்து இந்நிகழ்வினை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் முன்னர் நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவினைப் பெறும் முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டதில்லை. ஆனால் இம்முறை நீதிமன்ற தடையுத்தரவை பெறுமாறு தமக்கு அரசாங்கத்தின் அதி உயர்பீடத்திலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, இத்தடையுத்தரவை என்னிடம் கையளிப்பதற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டிருந்தார் . தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் செப்டம்பர் 26 ம் திகதி வருகின்றது. இந்த இறுதி நேரத்திலாவது, அடிப்படை மனிதவுரிமைகளின் அடிப்படையில் நினைவு கூருவதற்கான தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை வழங்குமாறு கோருவதற்கு இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். தியாகதீபம் திலீபன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் அவரை நினைவுகொள்ளும் நிகழ்வு நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனக்கூறி இத்தடையுத்தரவு நியாயப்படுத்தப்படுகிறது. நினைவுகூரும் நிகழ்வுகள் சமாதானத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுமே தவிர ஒருபோதும் சமாதானத்துக்கு குந்தகமாக அமையப்போவதில்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 1994ம் ஆண்டு சன்னா பீரிசுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் அமரசிங்க மேற்காட்டிய அவதானத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். “வரையறைகளுக்கு உட்படாத கருத்துப் பரிமாற்றம், அவை எந்த அடிப்படைகளுக்கு முரணாகவோ, குழப்பம் விளைவிக்கக்கூடியதாவோ அல்லது மக்களில் ஒருசாராருக்கு உடன்பாடில்லாதாக இருந்தாலும், உண்மை வெளிக்கொணரப்படுமாயின் அவை அனுமதிக்கப்பட வேண்டும். பேச்சுரிமை என்பது பொதுவில் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது என மட்டுப்படுத்த முடியாது.” இவ்விடயத்தில் இலங்கையின் மனிதவுரிமை ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு 2017ம் ஆண்டு ஜுன் 7ம் திகதி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “30வருட போருக்குப்பின்னர் தற்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இலங்கை செயற்பட்டுவருகிறது. இம்முயற்சியில் இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் இடமளிக்கவேண்டும். ஆதலால் நினைவுகூருவது நல்லிணக்க முயற்சிகளில் முக்கிய பங்களிப்பினை வகிக்கின்றது. இலங்கையில் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவதற்காக நாங்கள் பல நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளோம். அதுபோன்று தமது குடும்ப உறுப்பினர்களையும், அவர்களது அன்புக்குரியவர்களயும் நினைவுகூருவதற்கு நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கு எல்லாச் சமூகங்களுக்கும் உரிமையுள்ளது. இறந்தவர் விடுதலைப்புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர் எனக்காரணங்காட்டி அவரை நினைவுகூர்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்க முடியாது. அவர்களது அரசியல்நிலைப்பாடு எதுவாயிருப்பினும் இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு உரிமையுள்ளது. ஆணைக்குழுவின் பார்வையில், தங்களது உறவுகளை நினைவுகூர அனுமதிப்பதன் மூலம் இலங்கைத்தீவின் மக்களாக தமது உரிமையை நிலைநாட்டமுடிகிறது உணர்வினை அவர்களுக்கு வழங்கும் எனக் கருதுகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சியில் இது ஒரு பகுதியாக அமைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தை மறுப்பது இனங்களுக்கிடையிலான பிளவினை மேலும் அதிகரிக்கவும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்புவதாகவுமே அமையும்.” கடந்தகாலத்தில் இவ்விடயம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தனர். 1971ம் ஆண்டு நடைபெற்ற ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக “ஏப்பிரல் வீரர்கள்’ எனவும், 1989ம் நடைபெற்ற ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக ‘நொவெம்பர் வீரர்கள்” எனவும் அவர்களது தலைவர் ரோகண விஜேவீரவினதும் மற்றைய சகாக்களினதும் இறப்பை நினைவுகூருகிறார்கள். எல்லாவற்றிற்கும்மேலாக உண்மை, நீதி மற்றும் மீளநடவாமையை உறுப்படுத்துதல் போன்ற விடயங்களிற்கான ஐ.நா. சபையின் சிறப்பு ஆணையாளர் அவரது A/HRC/45/45 என இலக்கமிடப்பட்ட அறிக்கையில் நிலைமாறுகால நீதியை அடையும் முயற்சியில், நினைவுகொள்வது என்பது ஐந்தாவது தூணாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாவது: “பாரிய மனதவுரிமை மீறல்களுக்கு உள்ளான, பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்த சமூகங்கள் நினைவுகொள்வதற்கான உரிமை என்பது சர்வதேச மனிவுரிமைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பொருணமிய விடங்களைக் காட்டியோ அரசியல் மற்று நடைமுறைகளைக்காட்டியோ, அல்லது நிலைமாறு கால நீதிவிடயத்தில் இதர செயன்முறைகளைக்காட்டியோ சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் விலக்கிவிட முடியாது.” அவ்வறிக்கையில் 100வது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்து. “நினைவுகொள்வதனை தவிர்த்துவிட்டு, உண்மை, நீதியை கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை முழுமைப்படுத்த முடியாது. மீளநடவாமையையும் உறுதிப்படுத்த முடியாது.” 110வது பந்தியில், “போருக்குப் பின்னரான காலத்தில், நினைவுகூருதலினால் ஏற்படும் பயன் தங்களது வன்முறை நிறைந்து கடந்தகாலத்தினை உணரந்துகொள்வதற்கு மற்றவர்கள் மீது பழிவாங்கும் உணர்வினைத் தவிர்ப்பதாகவும், முன்னைய பிளவுகளை சரிசெயவ்வதற்கும் உதவும். தமிழ் மக்களின் நினைவேந்தல்கள் காலாகாலமாக அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஏனைய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட மதிப்புகொடுத்து அவற்றிற்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காமலும் நடாத்தப்படுகின்றவை . சிங்கள தேசத்தின் 80 %மான ஆதரவைப்பெற்று அவர்களின் பெரும் செல்வாக்குடன் வந்திருக்கின்ற இந்த ஒரு அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகள் என வரும்போது எதற்காக ஒரு பாதுகாப்பின்மையை பயத்தை உணர்ந்து இந்த நினைவேந்தல்களை தடைசெய்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. இந்த வகையில் இன்னும் மீதம் இருக்கும் மூன்று நாட்களாவது தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்க சிறிலங்கா காவல்துறைக்கு பணிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ளுமாறு இந்த அவையில் இருக்கும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் நன்றி            
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.