Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Donald-Trump.jpg

அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

டிக் டொக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதைவிட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான்.

அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக் டொக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயற்பட தடை விதிக்கப்படுகிறது.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக் டொக்கை  வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி தூதரகத்தை உடனடியாக  மூட அமெரிக்கா உத்தரவிட்டது.

ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக் டொக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக் டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் டிக் டொக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இதனால் ட்ரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக் டொக் செயலியின் அமெரிக்க செயற்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமம் விற்பனைக்கு வருவதால் அதை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையிலேயே, டிக் டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக் டொக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயற்பட தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/அமெரிக்க-நிறுவனத்திடம்-ஒ/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அபரிதமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத அமெரிக்கா இப்படியான சில்லறைத்தனமான வேலைகளில் இறங்கியுள்ளது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கடைஞ்யெடுத்த இந்திய அரசியல்வாதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்

டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்

 

வாஷிங்டன்:

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. 
வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. 


 
மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுக்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிடவேண்டும் அல்லது தங்கள் நாட்டில் செயலிக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனமும் இந்த களத்தில் குதித்துள்ளது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க டுவிட்டர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் நிதி அடிப்படையில் அதிக பலம்வாய்ந்த மைக்ரோசாப்டே டிக்டாக்கின் உரிமத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/09155024/1769153/Twitter-and-TikTok-reportedly-have-had-talks-about.vpf

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவு

டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவு

 

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


 
கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/16062409/1790541/Trump-gives-TikTok-a-new-deadline-90-days-instead.vpf

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.