Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கனடா தமிழ் வாசகர் ஒருவரிற்கு ஜெயமோகனின் பதில்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 
 
 
அ.முத்துலிங்கம் பற்றிய ஜூம் சந்திப்பில், ஒரு வாசகர்.. முந்திரிக்கொட்டைத்தனமாக ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி ஜெ. தளத்தில் அவரது வாசகர்கள் விமர்சித்து வைக்க…
இவரோ ‘சார்.. என்னைக் கிள்ளிட்டாங்க சார்” என்று ஜெயமோகனிடம் பிராது எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயமோகனோ.. இரக்கமே இல்லாமல் சுத்தியலை எடுத்து அவரின் நடு மண்டையில் ‘நச்’சென்று இறக்கியிருக்கிறார்- (சு க f-b)

########################################################################################################################

அன்பின் எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களுக்கு ,

ஈழத்து மூத்த எழுத்து ஆளுமைகளில் ஒருவரான அ .முத்துலிங்கம் அவர்களுடனான காணொளி உரையாடல் சனிக்கிழமை ,ஜூலை  25,2020 அன்று தங்களின் விஷ்ணு புரம் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொழுது கனடாவிலிருந்து கலந்து கொண்ட இலங்கை தமிழர் நான் தான் .

தமிழ் மொழி பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் தான்.அதில் இலங்கை, மலேசியா ,இந்தியா ,சிங்கப்பூர் எனும் பாகுபாடில்லை .நான் முத்துலிங்கம் ஐயாவின் இரண்டு ,மூன்று கதைகள் தான் படித்திருந்தேன் .அதை வைத்து கேள்வியை தயார் செய்திருந்தேன் .ஆனால் ஜூம் மீட்டிங் எனக்கு அவ்வளவு தூரம் பழக்கமில்லாத ஒரு விடயம் . அதனால் தான் கூடுதல் உளறிக்கொட்டிவிட்டேன்.

தமிழ் ஆர்வம் உள்ளதினால் தான் அதில் கலந்து கொண்டேன் .நான் இலங்கையில் பத்தாம் வகுப்பு வரை தான் தமிழ் படித்திருக்கிறேன். தங்களுடைய வாசகர்கள் போல், உங்களைப்போல்  தமிழ் இலக்கியம் அறிந்தவனில்லை .ஆனால் தங்களுக்கு ஒரு சில வாசகர்கள் என்னைப் பற்றி கடிதம் எழுதியிருந்ததைப்பார்த்தபொழுது மிகவும் மனம் வேதனை அடைந்தேன் .அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல்

அந்த கடிதம் இப்படி எழுதப்பட்டுள்ளது . “ஆனால் சில குறைகள். இவை பொதுவானவை. எதையுமே வாசிக்காத ஒருவர், இலக்கியச்சூழலிலேயே இல்லாதவர், கனடாவிலிருந்து உள்ளே வந்துவிட்டார். அவர் ஈழத்தவர் ஆதலால் உங்களுக்கு அவரை தெரிந்திருக்கவில்லை.உங்களால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவர் நாலைந்து வரி சொன்னதுமே வெட்டிவிட்டிருக்கவேண்டும். அவரை அவ்வளவு உளறவிட்டது பெரிய தப்பு” இதை ஸ்ரீனிவாஸ் என்னும் வாசகர் எழுதியிருக்கின்றார் .

என்னைப்போல் தமிழ் அரை குறை தெரிந்தவர்களின் நிலை என்ன? தங்களைபோன்ற தமிழ் எழுத்தாளர்கள் மனதில் எங்களைபோன்றவர்களின் இடம் எங்கேயுள்ளதென்று தெரியவில்லை ஐயா? இவரைபோன்று எழுத்தாளர் நாகராஜன் கொஞ்சம் நாகரீகமாக எழுதியிருக்கின்றார் .”ஒரே ஒரு விதிவிலக்கு கனடாவிலிருந்து கேட்ட இலங்கைத் தமிழர். அவர் இந்த வட்டத்துக்குரியவரே அல்ல. அவரை ஒன்றும் செய்யவும் முடியாது”

ஆகவே என்னை எந்த வட்ட த்தில் தாங்கள் சேர்த்துக்கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? ஐயா. நான் உளறதொடங்கியதும் வெட்டி விட் டிருக்கவேண்டுமா? அல்லது திருத்தியிருக்கவேண்டுமா? இதற்கு தங்களின் பதில் என்ன வென்று தெரியவில்லை

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”  என்று  கணியன் பூங்குன்றன் எ னும் எங்கள்முன்னோன் சொன்னான் என்று தாங்கள் அடிக்கடி  சொல்வதெல்லாம் சும்மா பொய்யா? அல்லது பழங்கதையா?

நான் மலையாள சூழலில் கேரளத்தில் 1980 காலப்பகுதியில்   படித்து வந்துள்ளேன். அந்த மலையாளச் சூழல் இப்படி பட்டதில்லை.நம்மை சொல்லிக்கொடுத்து திருத்தும் பண்பு அவர்களிடம் நிறைய உள்ளதை நான் அனுபவபூர்பவமாக கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.அதிலொன்று திருவனந்தபுரத்தில் எழுத்தாளரும் ,கவிதாயினியுமான  திருமதி மாதவிகுட்டி கமலதாஸ் அவர்களை ,கேரள கௌமுதி பத்திரிகையின் புகைப் படப் பிடிப்பாளர் திரு .சங்கரன் குட்டி அவர்களுடன் சென்று சந்தித்தது இன்றும் என் மனதில் அழியா நிழல் படம் போல் இருக்கின்றது.

இம் மடல் பார்த்து தங்கள் வாசகர் வட்ட ங்களுக்கு இதனை எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகின்றேன் .பிறந்து மண்ணில் வீழ்ந்ததும் யாரும் மேதைகளாய் வருவதில்லை .உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் பனுவல்களை எழுத்தெண்ணி படிப்பதன் மூலம் தங்களின் அறிவையும்,அனுபவத்தையும் பெற்றுக்கொள்கின்றான்.

தங்களுக்கு ஏதாவது சிரமம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும் .

நன்றி

வணக்கம்

அன்புடன் ,

சிவா .பாலசந்திரன்

கனடா .

 

அன்புள்ள சிவா

நீங்கள் நேரடியாக எழுதியபின் இதை விரிவாகப் பேசியே ஆகவேண்டும். கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், இது இங்கே பொதுவாகப் பேசவேண்டிய விஷயம்

‘அவையத்து நாணுதல்’ என்பது ஒரு பண்புநலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கைநிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல்தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத்தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் ‘உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா?’ என்றேன்

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ‘ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா?’ என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்

யோசித்துப் பாருங்கள், அ.முத்துலிங்கம் அவர்கள் அவருடைய படைப்பை வாசித்த வாசகர்கள் உலகம் முழுக்க கூடியிருக்கும் ஒரு சந்திப்பில் பேசுகிறார். வெறும் இரண்டு மணிநேரம். அது வாசகர்களுக்கு மிகமிக மதிப்பு மிக்கது. அதை ஒருங்கிணைக்க பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் கூடுமானவரை அவர்தான் பேசவேண்டும். அவரிடம் அவர் படைப்பை படித்தவர்கள் கேள்விகேட்கவேண்டும். அவர்களேகூட சுருக்கமாகவே கேட்கவேண்டும்

ஆனால் அவருடைய இரண்டு கதைகளை மட்டும் பள்ளிநூலில் படித்து, அவரைப்பற்றி எதுவுமே தெரியாத நீங்கள் நீண்டநேரத்தை எடுத்துக்கொண்டு எதையெல்லாமோ பேசுகிறீர்கள். அவருடைய சந்திப்புக்கு வருவதற்குமுன் இணையத்திற்குச் சென்று ஒரு பத்துக் கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். அவருடைய இணையதளத்தைப் போய் வாசித்திருக்கலாம். அந்த ஆர்வமே உங்களிடம் இல்லை.

அதோடு அந்த அவையில் வாசிக்கவில்லை என்று சொல்வது ஒரு குறைவு என்றுகூட உங்களுக்குத் தோன்றவில்லை. வாசிக்கவில்லை என்று ‘வெளிப்படையாக’ச் சொல்வது தவறா என்று கேட்கலாம். வாசிக்காத ஒருவர் வாசிக்கும் நோக்கத்துடன் அமைதியாகச் செவிகொடுத்து அமர்ந்திருந்தால், அவரிடம் கேட்கும்போது வாசிக்கவில்லை என வெளிப்படையாகச் சொன்னால் அது தவறில்லை. ஆனால்  ‘அவையில் பேசுவேன், ஆனால் வாசிக்கவில்லை’ என்று சொல்வது கண்டிப்பாக நாணத்தக்கதுதான். ஏனென்றால் வாசித்தவர்களுக்கான அவை அது.

அந்த விவாதத்தை கவனித்திருந்தாலே நீங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கலாம். அந்த அக்கறையும் உங்களுக்கு இல்லை. நீங்கள் எதையும் அவரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவுமில்லை. நீங்களே நேரத்தை எடுத்து பேசிக்கொண்டிருந்தீர்கள்.

அ.முத்துலிங்கம் தமிழகத்தில் இன்றிருக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.மிகப்பெரிய இடத்தில் அவரை வாசகர்கள் வைத்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பிலேயே அவர்மேல் வாசகர்கள் கொண்டிருந்த பெருமதிப்பு வெளியானதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒரு தலைமுறைக்கு ஓரிருவர் மீதுதான் அத்தனை பெருமதிப்பு உருவாகிறது. தமிழகத்தின் எழுத்தாளர்கள் பலர் வந்து அவருடைய வாசகர்களாக அமர்ந்திருந்த அவை அது

நெஞ்சைத்தொட்டு யோசித்துப்பாருங்கள், நீங்கள் பேசியது அந்த மாபெரும் படைப்பாளி மீதான மதிப்புடனா? அவரை பெருமைப்படுத்தும் விதமாகவா நீங்கள் கேள்வி கேட்டீர்கள்? நீங்கள் விரும்பாவிட்டாலும் நீங்கள் இலங்கைத்தமிழர். இலங்கைத்தமிழரின் குரலாகவே தமிழகத்தில் உங்க்ளை அடையாளம் காண்பார்கள்.

நீங்கள் படித்தவர், ஒரு வளர்ந்த நாட்டில் இருக்கிறீர்கள். தயைகூர்ந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகம் முழுக்க இருந்து தங்கள் நேரத்தைச் செலவிட்டு அந்த சந்திப்பில் அமர்ந்திருப்பவர்கள் எத்தனை முக்கியமானவர்கள். அவர்களின் நேரத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? நீங்கள் பேசுவதை அவர்கள் ஏன் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்?

நாம் பேசவேண்டிய அவைகள் என்ன, நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அவைகள் என்ன என்பது எப்போதுமே முக்கியமானது. நீங்களே எண்ணிப்பாருங்கள், நீங்கள் செயல்படும் துறையில் ஒரு நிபுணர் பேசும்போது அந்தத்துறை பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் உள்ளே புகுந்து, எதையுமே கற்றுக்கொள்ள முற்படாமல், அவரே பேசிக்கொண்டிருந்தால் அவரை எப்படி நீங்கள் நடத்துவீர்கள்?

நாம் நமது குரல் கவனிக்கப்படும் என்ற உறுதி உள்ள அவையிலேயே பேசவேண்டும். அதை நாமே உறுதிசெய்துகொள்ளவும் வேண்டும். நம் குரலுக்கு செவியில்லாத அவையில் பேசுவது நம்மைக் கேலிப்பொருளாக ஆக்குவது. நாம் கற்கவேண்டிய அவையில் நம் செவிகள் திறந்திருக்கவேண்டும். நமக்கு கேட்டேயாகவேண்டிய கேள்வி இருக்கும் என்றால்கூட குறிப்பாக, சுருக்கமாக அதை முன்வைக்கவேண்டும்

ஓர் ஆடை அணியும்போதுகூட அதைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணுகிறோம். ஓர் அவையில் பேசும்போது ஏன் அதை எண்ணமாட்டேன் என்கிறோம்? அக்கடிதங்களை நான் வெளியிட்டதே ஒவ்வொருவரும் பிறர் நம்மை கவனிக்கிறார்கள் என்று உணரவேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயங்கவேண்டும் என்றுதான்.

பிறர்முன் கேலிப்பொருளாகிவிடக்கூடாது என்பது ஒரு முக்கியமான தன்னுணர்வு. அதுதான் இங்கிதம் என்று சொல்லப்படுகிறது. அது கருத்துச்செயல்பாடுகளிலும் தேவை.

மலையாளம் பற்றிச் சொன்னீர்கள்.1987ல் கமலாதாஸ் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நானும் இருந்தேன். ஒரு வாசகர் கமலாதாஸிடம் ஒரு கேள்வி கேட்டார். ஓராண்டுக்கு முன் அந்த கேள்விக்கு தான் பதிலளித்திருந்ததாக கமலாதாஸ் சொன்னார். அதை தான் வாசிக்கவில்லை என்றார் அந்த வாசகர்.  ‘உனக்கு உண்மையான ஆர்வமிருந்தால் நான் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறேன் என்பதை முதலில் தேடிப்பார்த்திருப்பாய், அதன்பிறகே இங்கே வந்து கேட்டிருப்பாய். உனக்கு என்னிடம் பேசும் தகுதி இல்லை’ என்று கமலாதாஸ் சொன்னார். அதன்பின் அவ்வாசகரிடம் முகம்கொடுக்கவே இல்லை.

மலையாளத்தில் மட்டுமல்ல நீங்கள் வாழும் கனடாச் சூழலிலும் கூட இதுதான் விதி. ஓர் அவை அதன் குறைந்தபட்ச தகுதியால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குச் சில செயல்பாட்டுமுறைகளும் அதுசார்ந்த நெறிகளும் உண்டு. அவற்றை அறியாதவர்களுக்கு அச்சபைகளில் இடமில்லை.

கற்றுக்கொள்ளக்கூடாதா, பிறர் திருத்தக்கூடாதா என்று கேட்கிறீர்கள். கற்றுக்கொள்பவர் என்றால் முதலில் அந்த விவாதங்களில் என்ன பேசப்படுகிறது, அதன் தரம் என்ன என்று பார்த்திருப்பீர்கள் இல்லையா? திருத்தலாம், ஆனால் அதற்கான அவை அல்ல அது. புதியவாசகர்களுக்கான ஓர் அவை என்றால் கண்டிப்பாக திருத்தியிருப்போம்

அன்று நீங்கள் அரைநிமிடம் பேசியதுமே நீங்கள் வாசகர் அல்ல என்று தெரிந்தது, அக்கணமே உங்கள் ஒலித்தொடர்பை நடத்துநர் வெட்டியிருக்கவேண்டும். நடத்துநருக்கு நான் அவ்வாறு செய்தி அனுப்பினேன். அவர் புதியவர், அனுபவமில்லாதவர் என்பதனால்தான் நீங்கள் அவ்வளவு பேசமுடிந்தது. அது நிகழ்ச்சியின் ஒரு சிறு குளறுபடியேதான்.

நாம் ஜனநாயகம், சமத்துவம் என்பதை எல்லாம் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறோம். அது தெளிவாகத் தெரிவது நம்கூட்டங்களில்தான். ஒரு மூத்த எழுத்தாளரை கூட்டிவந்து பேசவைப்போம். ஒருவர் எழுந்து அவருடைய நேரத்தை பறித்துக்கொண்டு தானே பேசுவார். கேட்டால் ஜனநாயகம், சமத்துவம் என்பார். அந்த மூத்தபடைப்பாளி தன் துறையில் சாதித்திருக்கிறார், அவருடைய கருத்தைக் கேட்கவே அவை கூடியிருக்கிறது, அந்த அவையில் ஒன்றும் தெரியாத ஒருவருக்கு சமமான இடம் உண்டா என்ன?

ஜனநாயகம் எங்கே வருகிறது என்றால் அவையில் இருக்கும் ஒவ்வொருவரையும் நாம் மதிக்கும்போதுதான். இந்த காலகட்டத்தில் ஆயிரம் வேலைகளையும் பொழுதுபோக்குகளையும் விட்டுவிட்டு ஓர் இலக்கியச் சந்திப்பில் வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் மிகமிக முக்கியமானவர்கள். அன்று அமர்ந்திருந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தமிழின் புகழ்மிக்க எழுத்தாளர்கள் பலர் அவர்களில் இருந்தனர். அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்கி அளிக்கும் பொறுப்பு அமைப்பாளர்களாகிய எங்களுக்கு உண்டு. எங்கள் கடமை அவர்களிடம்தான். அதுதான் ஜனநாயகம் என்பது.

இந்த அனுபவம் உங்களுக்கு வருத்தம் அளித்திருப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த வருத்தம் ஆக்கபூர்வமான ஒன்று என்று கொள்ளுங்கள். அறிவியக்கம் என்பதும் இலக்கியம் என்பதும் மிகமிகத் தீவிரமானவை என்றும், தங்கள் வாழ்க்கையையே அதன்பொருட்டு முன்வைப்பவர்களால் நடத்தப்படுபவை என்றும், அதை அவ்வாறே அணுகவேண்டும் என்றும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.

அறிவியக்கத்திலும் இலக்கியத்திலும் நுழையவேண்டும் என்றால் அதற்கான உழைப்பையும் கவனத்தையும் அளிக்கவேண்டும் என்றும் முறையான தயாரிப்புகளுடனன்றி எங்கும் எழக்கூடாது என்றும் எண்ணிக்கொள்ளுங்கள். நாம் எழுந்து ஒரு சொல் சொன்னால் அவையே அதை கவனிக்கவேண்டும், அதை எவரும் புறக்கணிக்கக்கூடாது, அப்படி தன்னம்பிக்கை வந்தபின் பேசுங்கள். எந்த அவையிலும் நாம் குறைந்துவிடலாகாது என்னும் உணர்வினை அடைவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது.

நாங்கள் எவரையும் ஒதுக்குவதில்லை, புறக்கணிப்பதில்லை, எவரும் எவரைவிடவும் இயல்பிலேயே கீழானவரும் இல்லை. ஆனால் கூடுதலாக படித்தவர் மேலானவர்தான்.அவர் அடைந்த அந்த இடத்தை அடைவதற்கான முயற்சியும் கூருணர்வும் பிறருக்குத் தேவை. நீங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்றால், உங்கள் அறிதலை மேம்படுத்திக்கொள்ள முயல்வீர்கள் என்றால் நீங்கள் எங்களவரே

ஜெ

 

https://www.jeyamohan.in/136265/

Edited by அபராஜிதன்
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அபராஜிதன் said:
முந்திரிக்கொட்டைத்தனமாக ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி ஜெ. தளத்தில் அவரது வாசகர்கள் விமர்சித்து வைக்க…
இவரோ ‘சார்.. என்னைக் கிள்ளிட்டாங்க சார்” என்று ஜெயமோகனிடம் பிராது எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயமோகனோ.. இரக்கமே இல்லாமல் சுத்தியலை எடுத்து அவரின் நடு மண்டையில் ‘நச்’சென்று இறக்கியிருக்கிறார்

காணொளியில் சிவா பாலச்சந்திரன் பேசிய சில நிமிடங்களையும்,  எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் பதிலையும் பார்த்தேன். கனடாவில் இருந்துகொண்டே முத்துலிங்கம் அவர்களின் இலக்கியக் கூட்டங்களுக்குப் போயிருக்கவில்லை. எழுத்தாளரின் இரண்டு கதையை மகனின் தமிழ்ப்புத்தகத்தில் படித்ததாக வேறு சொன்னார். ஆனால் மு. தளையசிங்கத்தையும் அவர் எழுதிய மெய்யுள் நூலையும் அறிந்து வைத்திருக்கின்றார். படித்தாரோ தெரியவில்லை!

கேள்வியைத் தயார் செய்து சுருக்கமாகக் கேட்கவேண்டும், கேள்வி சுவாரசியமான, எழுத்தாளரை சிந்திக்க வைத்து பதில் கூறத்தக்கதாக இருக்கவேண்டும். ஆனால் இவர் சும்மா கேள்வி என்று ஏதோ கேட்கின்றார். எழுத்தாளர் முத்துலிங்கமும் நீட்டிமுழக்கி (அவரது கதைகளில் வருவதுபோல) ஏதோ ஒரு பதில் சொல்லுகின்றார். 

அவருக்கு அடுத்ததாக கேள்வி கேட்ட எடுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் குழந்தை வீரிட்டுக் கத்தியதால், சுனில் கேட்ட கேள்வியே முத்துலிங்கம் ஐயாவுக்குப் புரியவில்லை. ஆனால் பதில் என்று தனது கதை ஒன்றின் சாராம்சத்தைச் சொல்லுகின்றார். அக்கதையை நானும் முன்னர் படித்திருந்தேன். அதன் ஆழ அகலங்களைச் சொல்லாமல் வெறும் சாராம்சமாக பேசியது புதிதாக எதையும் கற்றுத்தரவில்லை.

 

 

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜேம்ஸ் கல்லாகர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது. இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏன் பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை. கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா வைரஸ் அச்சமூட்டுவதாக இருக்கிறது? ஏமாற்றுவதில் அரசன் நோய் தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இந்த வைரஸ் உடலை ஏமாற்றும் ஆற்றல் கொண்டது. நமது நுரையீரலில் வேகமாகப் பரவும். ஆனால், நம் உடலின் எதிர்ப்பு சக்திக்கு எல்லாம் சரியாக இருப்பது போன்றே தோன்றும். இது தொடர்பாகப் பேசும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் லெஹ்னர், "இது மிகவும் புத்திசாலித்தனமான வைரஸ். உங்கள் மூக்கை வைரஸ் தொழிற்சாலையாக மாற்றும். ஆனால் எல்லாம் சரியாக இருப்பது போலவே தோன்றும்," என்கிறார். நமது உடலில் உள்ள உயிரணுக்கள் ஒரு வேதிப்பொருளை வெளிப்படுத்தும். அதன் பெயர் இண்டெர்ஃபெரோன்ஸ். ஒரு வைரஸ் இந்த வேதிப்பொருளைக் கடத்துவது நம் உடலுக்கும், எதிர்ப்பு சக்திக்கும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞை. ஆனால் கொரோனா வைரஸுக்கு ஓர் ஆற்றல் இருக்கிறது. அதாவது இந்த வேதிப்பொருள் கொடுக்கும் சமிக்ஞையை இல்லாமல் செய்யும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உங்களுக்கே தெரியாது என்கிறார் பேராசிரியர் பால் லெஹ்னர். இந்த வைரஸ் தாக்கிவிட்டு ஓடிவிடும் கொலையாளியைப் போன்றது. பட மூலாதாரம், Getty Images   ஒரு கட்டத்தில் நம் உடல்நிலை முடியாமல் போன பிறகு நம் உடலில் உள்ள இந்த வைரஸ் உச்சத்தை அடையும். ஆனால், இதற்குக் குறைந்தது ஒரு வார காலம் எடுக்கும். நம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் ஒரு வாரம் நமக்கு எதுவுமே தெரியாது. நாம் குணம் அடைவது அல்லது மரணம் அடைவதற்கு முன்பே அந்த வைரஸ் வேறொருவர் உடலுக்கு சென்று இருக்கும். நீங்கள் செத்துவீட்டீர்களா என்றெல்லாம் அந்த வைரஸ் கவலை கொள்ளாது. இது உங்களை தாக்கிவிட்டு ஓடிவிடும் வைரஸ் என்கிறார் பேராசிரியர் லெஹ்னர். 2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் - கொரொனா வைரஸுடன் இந்த வைரஸ் முரண்படும் இடம் இது தான். சார்ஸ் உடனடியாக சமிக்ஞை காட்டும். உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். நம் உடல் தயாராக இல்லை உங்களுக்கு இதற்கு முந்தைய கொரோனா தொற்று நினைவிருக்கிறதா? 2009ஆம் ஆண்டு H1N1 வைரஸ் குறித்த அச்சம் எங்கும் இருந்தது. ஆனால், அந்த வைரஸ் எதிர்பார்த்த அளவும் மரண வைரஸாக மாறவில்லை. அதற்கு காரணம் உடலில் அந்த வைரஸை உணரும் எதிர்ப்பு சக்தி இருந்ததுதான். பட மூலாதாரம், Getty Images   இது குறித்து பேசும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ட்ராஸி ஹசெல், "இந்த வைரஸ் புதியது. இதன் காரணமாக நம் உடலில் இதற்கான எதிர்ப்பு சக்தி இருக்காது. இதனால் இதற்கான பாதுகாப்பும் இருக்காது" என்கிறார். இதனை எளிதாக விளக்க வேண்டுமானால், ஐரோப்பியர்கள் மூலமாக சின்னம்மை பல இடங்களுக்கு பரவிய போது, அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தியது போன்றதுதான் இதுவும். புதிய வைரசுடன் போராட, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பல பரிசோதனைகளை செய்யும். ஆனால், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முன்பே பலவீனமாக இருப்பதால், அவர்களால் இந்த வைரஸை எதிர்த்து போராடுவது கடினமாக ஆகிறது. லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் மரோ கியாகோ, "கோவிடின் பலதன்மைகள் தனித்துவமானது. இது வேறு எந்த பொதுவான வைரஸ் நோயிலிருந்தும் வேறுபட்டது," என்கிறார். நுரையீரல் உயிரணுக்களை கொல்வதை மட்டும் இந்த கொரோனா வைரஸ் செய்வதில்லை. இது அதனை முழுவதுமாக சிதைத்துவிடும். இது மிகவும் விசித்திரமான தொற்று என்கிறார் அவர். உடல் பருமனும் கொரோனாவும் உடல் பருமன் உள்ளவர்களை கொரோனா தாக்கினால், அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஸ்டீஃபன் ஒ ரஹிலி, "உடல் பருமனுக்கும் இதற்கு முன்பு பரவிய வைரஸ் தொற்றுகளுக்கும் பெரிதாக தொடர்பு இல்லை. ஆனால், கொரோனா வைரசுக்கு இருக்கிறது," என்கிறார். உடல் முழுவதும் உள்ள கொழுப்பு, குறிப்பாக நுரையீரலில் உள்ள கொழுப்பு, வளர்சிதை மாற்ற இடையூறை ஏற்படுத்துகிறது. இது கொரோனா வைரஸுடன் இணைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.https://www.bbc.com/tamil/science-54677340
  • யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் மற்றும் வெளியாட்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/93082
  • இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்    22 Views ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை. ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது. இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார். அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள். இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர். சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது. இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும். அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின்  கவலை. இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும். https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/
  • அதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள்  மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.