Jump to content

"நானும் சென்னை தாங்க !"


Recommended Posts

சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?"
வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார்,
"தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?”
“ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன்.
சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார்.
"அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ
“ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார்.
“யாரு ஏமாத்தினாங்க ?, எங்க தாம்பரமா உங்க ஊரு”
“இல்ல தம்பி, காஞ்சிபுரம் !“
ஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், "இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க ?"
"ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க" என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க" என்று பணத்தை எடுத்தேன்.
“அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நாள் பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல " என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன்.
ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார்,
“அட என்னங்கய்யா இது !” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார்,
“ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க!, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,”
கண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி ? "
அவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் 'கோயமுத்தூர்ங்க' என சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன்,
"நானும் சென்னை தாங்க !"
 
- ஹரி - fb
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் எங்கே என்று தேடுகின்றோம் அதுபாட்டுக்கு அப்பப்ப பல ரூபத்திலும் வந்து போகுது நாங்கள்தான் சரியா கவனிக்கிறதில்லை......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கின்றார், கடவுள் ரூபத்தில் வந்து ஏதிர்பாரத நேரத்தில் உதவி செய்துவிடுவார்கள், இது நியதி, நல்ல பதிவு

1 minute ago, suvy said:

தெய்வம் எங்கே என்று தேடுகின்றோம் அதுபாட்டுக்கு அப்பப்ப பல ரூபத்திலும் வந்து போகுது நாங்கள்தான் சரியா கவனிக்கிறதில்லை......!   👍

அதைதான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன் - ஒரே உள்ளம்  & எண்ணம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கின்றார், கடவுள் ரூபத்தில் வந்து ஏதிர்பாரத நேரத்தில் உதவி செய்துவிடுவார்கள், இது நியதி, நல்ல பதிவு

அதைதான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன் - ஒரே உள்ளம்  & எண்ணம் 👍

உடையார், நான் இதை எழுதிப்போட்டு இவரைத்தான் நினைத்தேன். நீங்களுமா....!  😂

Nayanthara Gif GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தையும் கடந்த உள்ளம். அது உதவும் உள்ளம். மனம்கரையும். பதிவு. மனதமற்ற நுகர்வுச் சந்தையில் நுகத்தடிகளாக மனிதர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.

6 minutes ago, suvy said:

உடையார், நான் இதை எழுதிப்போட்டு இவரைத்தான் நினைத்தேன். நீங்களுமா....!  😂

Nayanthara Gif GIFs | Tenor

நானும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

உடையார், நான் இதை எழுதிப்போட்டு இவரைத்தான் நினைத்தேன். நீங்களுமா....!  😂

Nayanthara Gif GIFs | Tenor

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

நல்ல பதிவு.

நானும் தான்.

நானும் தான் 😀

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

Nayanthara Gif GIFs | Tenor

நானும் தான்...😎

 

16 hours ago, உடையார் said:

 

நானும் தான் 😀

 

16 hours ago, உடையார் said:

 

நானும் தான் 😀

 

16 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல பதிவு.

நானும் தான்.

கதைக்கு கருத்து எழுதுவாங்கன்னு பார்த்தால் நயன்தாராவை பிடித்து தொங்கிட்டு இருக்காங்க 

17 hours ago, nochchi said:

அனைத்தையும் கடந்த உள்ளம். அது உதவும் உள்ளம். மனம்கரையும். பதிவு. மனதமற்ற நுகர்வுச் சந்தையில் நுகத்தடிகளாக மனிதர்கள்?

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்  

17 hours ago, suvy said:

தெய்வம் எங்கே என்று தேடுகின்றோம் அதுபாட்டுக்கு அப்பப்ப பல ரூபத்திலும் வந்து போகுது நாங்கள்தான் சரியா கவனிக்கிறதில்லை......!   👍

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே ரெம்பிளேட்டில் முன்னரும் படித்த நினைவு இருக்கு.

உழைப்பைச் சுரண்டுபவர்களும் இருக்கின்றார்கள். யாரென்றே தெரியாதவர்களுக்கு உதவும் தாராளகுணம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இப்படியான இருமைகள் இருப்பதால்தான் உலகம் உருள்கின்றது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஒரு திணுசான நகரம் தொண்ணூறுகளில் நானும் அங்கு குப்பை கொட்டியிருக்கிறேன் ஒரு முறை வறட்சி பர்மா பயார் பக்கமாக நடந்துபோய்க்கொண்டிருந்தேன் தாகம் புடுங்குது தண்ணிர் குடித்தால்தான் அடங்கும் பர்மாபஜார் கடைத்தொகுதிக்கு அருகில் ஒரு யூஸ் கடை தண்ணிர் கேட்டேன் அப்போதெல்லாம் தண்ணிர் காசுக்கு விற்பதில்லை ஆனால் அந்தாள் யூஸ் அல்லது கலர் சோடா வாங்குங்க சார் தண்ணிர் கொடுத்தால் வியாபாரம் கெட்டிடும் என்றார். சர் அப்போ யூஸ் அல்லது பன்னீர்சோடாவுக்குப் பணம்தருகிறேன் ஆனால் தண்ணீர் தா என்றேன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு ரூபாயை வாங்கிவிட்டார் ஒரு கிளாஸ் தண்ணீரும் தந்தார் குடித்து முடிந்ததும் கிளாசை வைத்துவிட்டு நடக்கமுயன்றேன் சார் கொஞ்சம் பொறுங்க என்று கொடுத்தகாசை திருப்பித் தந்திட்டார் 

கொசுறாக

பன்னீர் சோடா அதுவும் கோலி சோடாப்போத்தலுக்குள் அடைக்கப்பட்ட சோடா சிலவேளை வெயிலுக்கு இதமாக இருக்கும் இப்போ கோலி சோடப்போத்தலை மியூசியத்தில்தான் பார்க்கமுடியுமென நம்புகிறேன்.

கட்டைவிரலை மடக்கி உள்நுளைத்து மறு கையால் கொஞ்சம் பலமாக அடித்தால்  காத்துத் தள்ளிக்கொண்டு உள்ளிருக்கும் கோலி போத்தலுக்குள் போய் ஒதுங்க அது சுகமான அனுபவம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அபராஜிதன் said:

Nayanthara Gif GIFs | Tenor

கதைக்கு கருத்து எழுதுவாங்கன்னு பார்த்தால் நயன்தாராவை பிடித்து தொங்கிட்டு இருக்காங்க  

குற்றம் எங்களிலை இல்லை ஐயா!
மனதை வசியம் செய்யும் அசைபடங்களை இணைத்ததால் என்னைப்போன்ற இளம் சிங்கங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டார்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

குற்றம் எங்களிலை இல்லை ஐயா!
மனதை வசியம் செய்யும் அசைபடங்களை இணைத்ததால் என்னைப்போன்ற இளம் சிங்கங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டார்கள்.😎

Actress Nayanatara Hot Gif Animation - Actress Album

நான் ஒன்றும் இப்படி கவர்சியான படம் இணைக்க வில்லையே , ஒரு பெண் மனம் விட்டு சிரிக்கிற நல்ல படத்தைத்தான் இணைத்தேன். நீங்க எல்லாரும் சங்கக்கடையில மாசுகருவாடு வாங்க க்யூ வில  வாரமாதிரி வரிசையா "நானும் நானும்" என்று ஓடிவந்தால்  நானும்தான் என்ன செய்யிறது......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நல்ல பதிவு என்டு கடந்து போவம் என்டு பாத்தால் தாரா தண்ணி இல்லாமல் தவிக்கிறதை பாக்காமல் நகர முடியவில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

இதே ரெம்பிளேட்டில் முன்னரும் படித்த நினைவு இருக்கு.

உழைப்பைச் சுரண்டுபவர்களும் இருக்கின்றார்கள். யாரென்றே தெரியாதவர்களுக்கு உதவும் தாராளகுணம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இப்படியான இருமைகள் இருப்பதால்தான் உலகம் உருள்கின்றது!

 

நானும் முன்னர் இணைத்திருக்கிறேனா என்ற சந்தேகப்பட்டு கொண்டே தான்
இணைத்திருந்தேன் 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2020 at 05:02, அபராஜிதன் said:

“பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன்,

வாழ்க வளமுடன்! 

 

நான் சென்னையில் இலக்கியப் போராளி எஸ்.பொ அவர்களிடம் வேலை பார்த்த நாட்களில் பெரம்பூருக்கும் நுங்கம் பாக்கத்துக்கும் இடையில் இரண்டு தொடர்வண்டி எடுக்க வேண்டி இருந்தது. அந்த நாட்களில் இதுபோல பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது நானும் ஓர் அகதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.