Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️

 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, uthayakumar said:

சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

சிங்களவன் போர் முடிந்தவுன் திரும்ப ஒரு மாற்று தலைமை உருவாகாத வகையில் முழு வீச்சுடன் இயங்குகின்றான்.

அவனின் தூர நோக்கு இலங்கை முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது

இனி மெல்ல சாகும் தமிழர் தேசம்

காட்டி கொடுப்பவர்களும் வஞ்சகர்களும் நிறைந்துவிட்டார்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் 

இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை 
எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம்.

இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை.

கொரோன அரசியல்  ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே  இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது.

சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள்.

எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு 
என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

பா.உதயன் ✍️

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும்

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நல்ல ஆக்கம் உதயகுமார். ஈழ தமிழர்களின் மனவிரக்கதியை தமிழ் அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்துகின்றான்.

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம்.. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.. 👌 நன்றி தோழர்..👍

6 hours ago, விசுகு said:

தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள்

இலங்கையின் எதிர்காலம்  என்பது தமிழரின் அமைதியான  வாழ்வில்  தான்  தங்கியுள்ளது  என்பதை  சிங்களம்  இனியும்  உணராவிட்டால்????

சிங்களப் பேரினவாதம் உணரக்கூடிய ஒரு காலம் நிச்சயம் வரும்.அப்போது தான் அனைவரும் அமைதியாக வாழ முடியும் விசுகு.உடையார்ர,புரட்சி தமிழன்,விசுகு  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும், தமிழர் மனங்களிலுள்ளதையும்  தேவையையும் எழுதியுள்ளீர்கள். சிங்கள இனம்  மனம் மாறும் வரை  சக மனித இனமாக   மதிக்கும் வரை எதுவும் நடக்காது

5 hours ago, சாமானியன் said:

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

7 hours ago, ஈழப்பிரியன் said:

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

நிலாமதி அக்கா ,சாமானியன் ,ஈழப்பிரியன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

நீங்கள் சொல்லுவது போல் சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதி அமைப்பு முறையை நேக்கி பயணிப்பதற்காகவே ஒரு புதிய அரசில்அமைப்பை கொண்டு வர இருக்கும் இந்த வேளையிலும் பாராளுமன்ற மக்கள் ஆட்சிலும் நம்பிக்கை கொண்ட மக்களும் 
அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.அதிகாரமும் பணமும் எல்லா வேளைகளிலும் தொடர்ந்தும் மாறாமல் இருக்கப் போவதில்லை.ஆனால் நாம் எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் போராட்டத் தானே வேண்டும்.தமிழரையும் முஸ்லீம் மக்களையும் ஒரு போதும் தேவை இல்லை என்ற விதி எப்போதும் மாறாமல் இருக்கப் போவதில்லை.பாராளுமன்ற ஆட்சி கூட கடந்த காலத்தில் தமிழ்க் கட்சிகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.எந்தவித பேரம் பேசலும் இன்றி.தமிழர் போராட்டத்தில் பல முறை மாற்றங்கள் வந்திருக்கின்றன ஆனால் நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.இது நம் அரசியல் போராட்டத்தில் இருந்து ஆயுதப் போராட்டம் வரை கண்டிருக்கிறோம்.மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகளும் சரியான பாதையை தெரியவில்லை.எங்கள் அருகில் இருக்கும் இந்தியாவைக் கூட இவர்களாளால் சரியாகப் படிக்க புரிய முடியவில்லை.அதற்காகா இன்னும் ஒரு தலைமை சரியாகாத்தான் பயணிக்கும் என்றும் இல்லை.நிரந்தரமான அரசில் தீர்வை எப்படி சாத்தியமாகும் என்ற பாதையை தேடுவார்களா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ்

70 வருடமாக ….

போயும்  கொண்டிருக்கு இப்பவும் …..

கூட்டம் கூடிய சிலர்

முன்பே கேளிக்கை  பல சொல்லி

உசுப்பேற்றி கதைகள் ,

பதவியைப் பெறுவார் -பின்

பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி

  ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்;

  சாய்வார் மண்ணில் பின்னர்....

 புதுக் கதை   ஒன்று பேசுவார் இம்முறை;  

மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு;  

இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்;  

சேருவோம் அவர்களுடன் - ஆனால்

சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று

தந்திரம் பேசுவார்-  பின்னே

தம் சுய நலம் பேணிக் கொள்வார்

விடியல் வெகு தொலைவில் ……

அண்ணா எனும் தம்பி உன் மறு பிறப்பை தேடி பரிதவிக்கும் ????????

நிதர்சனம் - நாடகம் நடந்து கொண்டிருக்கு, முடிவுகள் விரைவில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

Quote

வடக்கிலேயே சிங்கள எம் பி க்கள் வந்திடுவாங்கள் போல இருக்கு.

கருணாவை எதிர்க்க முஸ்லிம்களே கூத்தமைப்பிற்கு வாக்குப்போட தயார் என்று சொல்லுமளவுக்கு 
அவர்களோடு அனுசரித்து (அவிஞ்சு) போய் அரசியல் செய்திருக்கிறார்கள் , கூத்தமைப்பிற்கு வாக்கு போட்டாலும் ஆளப்போவது அவனுகள் தான் என்பதில் 100 இற்கு 200 வீதம் கன்பார்ம் 
இவர்கள் இருக்கும் வரை வடக்கில் சிங்கள எம் .பீ வருவது பீஸ் ஆப் கேக் , பாடிப்பாடி வருவானுகள் 

05/08/20 அன்று அடித்து   சொல்கிறேன்  நாளைக்கு கூத்தமைப்பு வென்றால் குறித்துவைத்துக்கொள்ளுங்கோ மக்காள் 
 முழு இலங்கை தமிழனின் நிலையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  சேது விக்கிரம் தான் -எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் அறிவாரோ என்று சங்கிலியையும் தூக்கிக்கொண்டு தெரு தெருவாக உலாத்துவீர்கள் 

Edited by அக்னியஷ்த்ரா
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை நீங்களே இப்படி சொன்னால் ....?
சம்சும்பிகா பிடுங்கப்போகும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நிரந்தர  தீர்வு இந்த பட்டியலிலேயே இல்லையே..ஆக சிங்களம் அரசியலமைப்பை ஜில் மாட் செய்யும் போது வழமை போல பெப்பே தானோ ? 
உங்களுக்கும் பெப்பே ,எனக்கும் பெப்பே வாக்கு போட்ட கூழ்முட்டைகளுக்கும் பெப்பே 

எப்பவும் பெப்பேதானே. அதுக்காக பெப்பேக்களை பாராளுமன்றம் அனுப்பினால் யாப்பு வரைபில் என்ன வருகின்றது என்பதையே புரியாமல் முழுப்பார்கள்! எப்படியோ 15 தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள்.  கொஞ்சம் விளக்கமுள்ளவர்கள் போனால் நல்லதுதானே.

விக்கியரும், கஜேந்திரகுமாரும் போனால் அவர்கள் தத்தமது கொழும்பு வீடுகளில் இருக்கவும் வசதியாக இருக்கும். மக்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா , கூட்டமைப்பிற்காய் வோட்டு கேக்கும் வீடியோ பார்த்தேன்

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

இந்தத் தேர்தல் மகிந்தவும், கோத்தபாயவும் 2/3 பெரும்பான்மையைப் பெற்று அவர்களின் வம்சம் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியில் கொலுவிருப்பதற்கான ஆணையையும் பேரம்பேசலையும் நோக்கமாகக்கொண்டது.

விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மை பெறுவது கடினம் என்றாலும் அதன் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் கட்சி தாவல்கள் நடக்கும். அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மீண்டும் சர்வவல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சியை உறுதிப்படுத்தும். 

அரசின் விருப்பத்திற்கு இணங்காத தமிழர்களையும், முஸ்லிம்களையும் கண்டும் காணாமல் விடும். அரசியல் யாப்பை மாற்றி அடுத்த தேர்தலில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை இன்னும் குறைத்து உதிரிகளாக மாற்றும். தமிழரும் தங்கள் பங்கிற்கு இன்னும் பிரிந்து உதிரிகளாகவும், கையாலாதவர்களாகவும் தொடர்ந்தும் அரசியல் செய்வார்கள்.

எனவே எதுவித மாற்றமும் தமிழர்கள் சார்பாக வரப்போவதில்லை.

மஹிந்தவிற்கு அடுத்து நாமல் என்றும் அவர்களின் அசுர பலத்திற்கு முன் யாருமே தாக்கு பிடிக்க முடியாது என்றும் தான் நான் 2015  மைத்திரியை பிரித்தெடுக்கும் வரை எண்ணியிருந்தேன். எத்தனுக்கு எத்தன் என்ற ரீதியில் அவரின் கட்சியிலிருந்தே   ஒருத்தரை அவருக்கு எதிராக  நிறுத்தும் வரை ஒரு ஆடசி மாற்றம் என்பதை யாருமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது சிங்களவரின் 60  வீதத்திற்கு மேலானோரின் ஆதரவு கோத்தா மற்றும் மஹிந்த தரப்பிற்கு உள்ளது.

.இதும் மாறுமே காத்திருப்போம் .. என்ன தான் மாறினாலும் அதற்க்கு ஏற்ப காய் நகர்த்தி எங்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்த எங்கள் தரப்பில்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்பது தான் துயரமானது 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.