Jump to content

இராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg

இராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு!

இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது.

இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர்.

இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மன்னார்குடி ஜீயர்சுவாமி கூறியதாவது, “அயோத்தி இராமர் கோயிலுக்காக தமிழகம் சார்பில் 5 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியால் ஆன செங்கற்களை காணிக்கையாக அனுப்பிவைத்துள்ளோம்.

தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த காணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வந்து சேரும் நிதி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/இராமர்-கோயிலுக்காக-தமிழக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.