Jump to content

நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலைவரம் இதோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cmev.jpg

காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம்

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் தொடர்பான மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக 15 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/காலை-10-மணி-நிலவரம்-தேர்தல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவுகள் ; இன்று காலை 10 மணி வரையான நிலைவரம் இதோ !

நாட்டின்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.  இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 10 மணி வரையான நிலைவரப்படி கொழும்பில் 27 வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 20 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 22 வீதமான வாக்குப்பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப்பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 30 வீதமான வாக்குப்பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 24 வீதமான வாக்குப்பதிவுகளும் காலி மாவட்டத்தில் 20 வீதமான வாக்குப்பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 16 வீதமான வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப் பதிவுகளும் யாழ் மாவட்டத்தில் 20 வீதமான வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 வீதமான வாக்குப்பதிவுகளும் கண்டி மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப்பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 24 வீதமான வாக்குப்பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 20 வீதமான வாக்குப்பதிவுகளும் வன்னி மாவட்டத்தில் 16 வீதமான வாக்குப்பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 21 வீதமான வாக்குப்பதிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 18 வீதமான வாக்குப்பதிவுகளும் குருணாகல் மாவட்டத்தில் 25 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
 

https://www.virakesari.lk/article/87366

Link to comment
Share on other sites

வாக்குப்பதிவு என்ற தவறான தமிழ் நாட்டு சொற்பதத்தை பாவிக்க வேண்டாம், வாக்களிப்பே  சரியான வார்த்தை பிரயோகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

வாக்குப்பதிவு என்ற தவறான தமிழ் நாட்டு சொற்பதத்தை பாவிக்க வேண்டாம், வாக்களிப்பே  சரியான வார்த்தை பிரயோகம்.

தமிழ்நாட்டில்... "ஓட்டுப் பதிவு" என்று, அல்லவா சொல்வார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

பொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்

 

a7a2e548784fdd72c3f6241a2c7c9c54_XL-720x

நாடு முழுவதும் காலை 02:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,

கொழும்பு – 51%

வன்னி – 55%

திருகோணமலை – 50%

முல்லைத்தீவு 61.79%

மாத்தளை -58%

கண்டி 55%

ஹம்பாந்தோட்டை 60%

யாழ்ப்பாணம் 53.36%

மட்டக்களப்பு -55%,

மொனராகலை 56%

களுத்துறை -60 %

கம்பஹா – 53%

நுவரெலியா – 65%

மன்னார் – 63.53%

திகாமடுல்ல-41%

புத்தளம்-52%

பொலன்னறுவை-60%

இரத்தினபுரி-56

பொதுத் தேர்தல்: 12 மணி வரை பதிவான வாக்கு வீதங்கள் – மாவட்ட விபரம் இதோ

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் காலை 12:00 மணி வரையான காலப்பகுதியில் 45 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று நண்பல் 12 மணி வரையான நிலவரப்படி கொழும்பில் 34 வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 46 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 41 வீதமான வாக்குப்பதிவுகளும் பதிவாகியுள்ளன.

அத்தோடு கேகாலை மாவட்டத்தில் 47 வீதமான வாக்குப்பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் காலி மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் 48வீதமான வாக்குப் பதிவுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் கண்டி மாவட்டத்தில் 43 வீதமான வாக்குப்பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் வன்னி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் குருணாகல் மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

நாடளாவிய ரீதியில் காலை 11:00 மணி வரை பதிவான வாக்கு வீதங்கள் – மாவட்ட விபரம் இதோ

நாடு முழுவதும் காலை 11:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,

திருகோணமலை 30%
கொழும்பு 27%
மாத்தளை 25%
கண்டி 25%
கிளிநொச்சி 37 %
குருநாகல் 25%
பதுளை 25%
ஹம்பாந்தோட்டை 24%
மாத்தறை 22%
காலி 20%,
யாழ்ப்பாணம் 20%,
மட்டக்களப்பு 16%,
புத்தளம் 16%
மொனராகலை 35%
இரத்தினபுரி 34%
களுத்துறை 35 %
முல்லைத்தீவு 27%


UPDATE 02 நாடு முழுவதும் காலை 10:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் இதுவரை கொழும்பில் 25% வாக்குப்பதிவும், மாத்தறையில் 22% வாக்குப்பதிவும் குருநாகலில் 25% வாக்குப்பதிவும் கண்டியில் 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் 20% வாக்குப்பதிவும் புத்தளத்தில் 16% விகித வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் 30%, ஹம்பாந்தோட்டை 24%, கிளிநொச்சி மற்றும் கேகாலையில் 25% வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மொனராகலை 35%, இரத்தினபுரி 24%, பதுளை 25%, முல்லைத்தீவில் 27, மட்டக்களப்பில் 16%, மாத்தளை 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

    by : Jeyachandran Vithushan

https://athavannews.com/திருமலையில்-இதுவரை-30-வாக்/

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்குகொண்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 428 வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்களிப்பு பணிகள் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இம்முறை 304 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 04 இலட்சத்து 09 ஆயிரத்து 808 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 22சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

http://tamil.adaderana.lk/news.php?nid=131829

Link to comment
Share on other sites

பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

 

CMEV.jpg

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 1 மணி வரையான தேர்தல் வன்முறை குறித்த அறிவிப்பினை தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 18 மீறல்கள் சம்பவங்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக 10 முறைப்பாடுகளும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக 06 தேர்தல் மீறல்கள் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக 16 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  by : Jeyachandran Vithushan

https://athavannews.com/பொதுஜன-பெரமுன-கட்சி-சார்/

Link to comment
Share on other sites

2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

 

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 65%
களுத்துறையில் 60%
ஹம்பாந்தோட்டையில் 60%
மாத்தளை 58%
மொணராகலையில் 56%
கண்டியில் 55%
காலியில் 55%
வன்னியில் 55%
மட்டக்களப்பில் 55%
இரத்தினபுரியில் 55%
திகாமடுல்லையில் 55%
பொலன்னறுவையில் 55%
கம்பஹாவில் 53%
கேகாலையில் 55%
மாத்தறையில் 54%
யாழ்ப்பாணத்தில் 53%
புத்தளத்தில் 52%
திருகோணமலையில் 50%
கொழும்பில் 51%
அனுராதபுரத்தில் 50%
பதுளையில் 50%
குருணாகலையில் 49%
Link to comment
Share on other sites

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு

 

இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொவிட் 19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டிந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தல் இடம்பெற்ற காரணமாக 10 மணித்தியாலங்கள் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பல மாவட்டங்களில் வாக்களிப்பு விகிதம் 70 % விட அதிகரித்திருந்தது.

இம்முறை குருணாகலை, காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான வாக்குகள் பதிவாகியிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், சுகாதார வழிகாட்டலை தயாரித்து தந்து ஆரோக்கியமான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு ஆதரவினை பெற்றுத் தந்த சுகாதார பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்று மாலை 05 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
கொழும்பில் 72%
திகாமடுல்லையில் 72%
மட்டக்களப்பில் 72%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
அனுராதபுரத்தில் 71%
கேகாலையில் 71%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
காலியில் 69%
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

 

http://tamil.adaderana.lk/news.php?nid=131844

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

---நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
------------------------------------
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

யாழ்ப்பாணத்தான்,  சரியான... சோம்பேறி போல், இருக்குது.   😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் 71 வீத வாக்களிப்பு - விபரம் இதோ !

கிளிநொச்சியில் இம்முறை 71 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் 2020 இன் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு 71.52 வீதமாகும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சுமூகமாக இடம்பெற்ற வாக்களிப்பில் பதிவு செய்யப்பட்ட 92264 மொத்த வாக்காளர்களில் 65984 பேர் வாக்களித்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 107 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் பொலீஸ் பாதுகாப்புடன்  கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/87408

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 74 வீத வாக்குப்பதிவு - விபரங்கள் இதோ !

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

IMG-20200805-WA0051.jpg

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்நிலையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 74 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளது. அந்தவகையில்  வவுனியா தொகுதியில்-72, முல்லைத்தீவு தொகுதியில்-74, மன்னார் தொகுதியில்-76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்ட பின்னர் நாளைகாலை 7 மணியளவில் எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது

 

அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள  காமினி மகாவித்தியால பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.https://www.virakesari.lk/article/87407

நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு - விபரங்கள் இதோ !

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிரின் மத்தியிலும் அங்கு 75 சத வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இடையிடையே மழை பெய்ததால் குடைகளை பிடித்துக்கொண்டு, வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாக்குரிமையை நுவரெலியா மாவட்ட மக்கள் பயன்படுத்தினர்.நுவரெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கத்த ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 65 வீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சராசரியாக 75 வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளது.

vlcsnap-2020-08-05-08h36m59s583.png

https://www.virakesari.lk/article/87404

Link to comment
Share on other sites

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் மந்தகதியில்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் மந்தகதியில்

 

 
2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்தகதியிலும் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக தேர்தல் அம்பாறை மாவட்டத்தில்  திகாமடுல்ல, பொத்துவில், சம்மாந்துறை , கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

525 வாக்களிப்பு நிலையங்களில் 513,979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 ஆசனங்களுக்காக 20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பல சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி உள்ளன.

இதேவேளை அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில இடங்களில் இரு வேறு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் 5 மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு ஒன்றும் பாரிய சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 76,283 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 89,057 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 143,229 பேரும்,  திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 174,385 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைக்காக இம்மாவட்டத்தில் 7000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்கள் 74 இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
 

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

http://tamil.adaderana.lk/news.php?nid=131822

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் மந்தகதியில்

கருணா... காசை, வெளியில் எடுக்க, பயப்பிட்டுட்டார், போலை கிடக்கு. :grin:
அங்கஜன் மாதிரி,  கூத்தமைப்பு  மாதிரி...  செயல் படுங்க சார். 😎
"பெஸ்ற் லக்.. "நெக்ஸ்ற் எலக்சன்" .. அம்மான்"  😆      

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.