Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

கோத்தாவின் கட்சி (சுதந்திரக் கட்சி) தமிழ் தேசியக் கட்சிகளை விட தனி ஒரு கட்சியாக அதிகம் வாக்கு பெற்றுள்ளது

அங்கயன் முகநூலில் சஜித்துக்கு அடுத்தபடியாக விளம்பரங்களுக்குச் செலவழித்திருந்தார். இளைஞர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் நோக்கிய பிரச்சாரமாக இருந்தது.

இந்தத் தேர்தல் தேசியம் என்று வெற்றுக்கோஷம் போடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சில திரிகளில் சொல்லியிருந்தேன். ஆனால் பாடங்களை தேசிய அரசியல் செய்பவர்களும் கற்றுக்கொள்ளப்போவதில்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருப்பவர்களும் கற்றுக்கொள்ளப்போவதில்லை.

ராஜபக்‌ஷக்களின் 2/3 பெரும்பான்மைக்கு யாழில் இரண்டு ஆசனங்கள் நிச்சயமாகியுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இப்படியே சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தே காலத்தை ஓட்டிவிடலாம். 

ஈபிடிபியும் சுதந்திரக் கட்சியும் ஒரே அணியில் நின்று இருந்தால் மிச்ச தமிழ் கட்சிகளுக்கு இதை விட மோசமான நிலை வந்து இருக்கும்.

ரணிலோடை சேர்ந்து செய்த அரசியலும் மாகாண சபை குத்து வெட்டுகளும் தான் கூட்டமைப்பின் தோல்விக்கு காரணம். கூட்டமைப்புக்கு எதிரணி என்பது தீவிர தேசிய பற்று உள்ளவர்களுக்கு சைக்கிளும் மீனும் மற்றவர்களுக்கு டக்கி அங்கயனிடமிருந்து சலுகையாவது கிடைக்கும்

Link to comment
Share on other sites

திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:13 pm GMT     0 Comments     1112     by : Yuganthini

Parliament-Election-2020-Results-1.jpg

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சி 23,008வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  18,063வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 16,794 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 2,522 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1,252 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 92,823
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 71,587

செல்லுபடியான மொத்த வாக்குகள் 66,748
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,839

http://athavannews.com/திருகோணமலை-மாவட்டம்-திர/

Link to comment
Share on other sites

இந்த தேர்தலில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் அரசை, சிங்கள கட்சிகளை விமர்சிக்காமல் வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டுமே எதிரியாக பாவித்து பிரச்சாரம் செய்தன (அப்படி இருந்தும் கூட த.தே.கூ அனேகமான இடங்களில் வடக்கில் முன்னுக்கு வந்து இருக்கு). இது கூட மக்களை சிங்கள கட்சிகளை நோக்கி நகர்த்துவதில் பங்காற்றியிருக்கும்.

சைக்கிள் ஆகக் குறைந்தது வடக்கில் 3 இடங்களாவது வரும் என நினைத்து இருந்தேன்.

1 minute ago, nunavilan said:

திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:13 pm GMT     0 Comments     1112     by : Yuganthini

Parliament-Election-2020-Results-1.jpg

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சி 23,008வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  18,063வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 16,794 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 2,522 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1,252 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 92,823
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 71,587

செல்லுபடியான மொத்த வாக்குகள் 66,748
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,839

http://athavannews.com/திருகோணமலை-மாவட்டம்-திர/

சம்பந்தரின் வெற்றி உறுதியாகியுள்ளது. திருகோணமலையில் தமிழர் பிரதினித்துவம் ஒன்றாவது (இப்போதைய நிலவரப்படி) கிடைத்துள்ளது. ஆனால் அம்பாறை பறிபோகின்றது.

Link to comment
Share on other sites

பொது தேர்தல் 2020 - மூதூர் தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு

பொது தேர்தல் 2020 - மூதூர் தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி - 51339
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 11085 இலங்கை தமிழரசு கட்சி - 9582
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1073
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது எங்கடை தமிழ்த் தேசியக் கட்சிகளும் ரணிலும் திருந்துவினமோ தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

யானை தேஞ்சு பானையாகிக் கொண்டிருப்பது யாரால்-ரணிலால்
வீடு தேஞ்சு விளக்குமாறாகிக்கொண்டிருப்பது யாரால் ரணிலின் அடிவருடி சுமோவால்.
பாடம் புகட்டும் பாராளுமன்ற தேர்தல்.....

Link to comment
Share on other sites

சம்பந்தர்  தோல்வி என ஒரு செய்தி பார்த்தேன்?

அம்பாறையில் தமிழ் பிரதிநிதுத்துவம் இல்லாமல் போகிறது.

பிள்ளையான் பாராளுமன்றம் போவார் போலுள்ளது

ஹிஸ்புல்லா தெரிவாகி உள்ளார்

கருணா பற்றி ஏதும் தகவல் ?

 

அங்கயன் ஆதரவாளர்கள் யாழில்வெடி கொளுத்தி கொண்டாடுகிறார்களாம் 

Link to comment
Share on other sites

நுவரெலியா மாவட்டம் வலப்பணை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:36 pm GMT     0 Comments     1067     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

நுவரெலியா மாவட்டம் வலப்பணை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி  34919  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18556  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி  1568 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1360 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 83242
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 67450

செல்லுபடியான மொத்த வாக்குகள் -60656

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6794

http://athavannews.com/நுவரெலியா-மாவட்டம்-வலப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அபராஜிதன் said:

சம்பந்தர்  தோல்வி என ஒரு செய்தி பார்த்தேன்?

அம்பாறையில் தமிழ் பிரதிநிதுத்துவம் இல்லாமல் போகிறது.

பிள்ளையான் பாராளுமன்றம் போவார் போலுள்ளது

ஹிஸ்புல்லா தெரிவாகி உள்ளார்

கருணா பற்றி ஏதும் தகவல் ?

 

அங்கயன் ஆதரவாளர்கள் யாழில்வெடி கொளுத்தி கொண்டாடுகிறார்களாம் 

அப்ப திருகோணமலையில் கூட்டமைப்பு சார்பில் யார் வெற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகாமடுல்ல மாவட்டம் - கல்முனை
 
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 20011
தேசிய காங்கிரஸ்  - 10401
அகில் இலங்கை தமிழ் மகா சபா - 10130
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6380
Link to comment
Share on other sites

3 minutes ago, கிருபன் said:
திகாமடுல்ல மாவட்டம் - கல்முனை
 
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 20011
தேசிய காங்கிரஸ்  - 10401
அகில் இலங்கை தமிழ் மகா சபா - 10130
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6380

தேசிய காங்கிரஸ் என்பது எவரது கட்சி? அத்தாவுல்லாவினதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ரதியின்டை அண்ணாவும் வெற்றியோ அல்லது அதாவுல்லாவோ

Link to comment
Share on other sites

6 minutes ago, வாதவூரான் said:

அப்ப திருகோணமலையில் கூட்டமைப்பு சார்பில் யார் வெற்றி

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்புதான் இது சரியாக தெரியவரும். தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு என்று எண்ணிய பின் தான் விருப்பு வாக்குகள் எண்ணப்படுவது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

தேசிய காங்கிரஸ் என்பது எவரது கட்சி? அத்தாவுல்லாவினதா?

அதாவுல்லா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு இரண்டு: பிள்ளையானுக்கு ஒன்று! முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று

August 6, 2020

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும், முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொது ஜன பெரமன ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும்.

 

உத்தியோகபூர்வமான முடிவு சிறிது நேரத்தில் அறிவிக்கப்படலாம்.

 

http://thinakkural.lk/article/60515

Link to comment
Share on other sites

"என் வெற்றியை சுமந்திரனுக்கு விட்டுத் தருமாறு எமது பிரதான இணைப்பாளர் மிரட்டப் படுகிறார்"  யாழ் மாவட்டச் செயலக செய்திகள்..- சசிகலா ரவிராஜ் (முகநூலில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்? முக்கிய தலைவர் விருப்பு வாக்கில் பின்னணி

August 6, 2020

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருப்பதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதனைவிட ஈ.பி.டி,பி., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ்க் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெறுவதாகவும் தெரிகின்றது.

தமிழரசுக் கட்சிக்கான 3 ஆசனங்களில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முக்கியமான தலைவர் ஒருவர் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில்.

 

http://thinakkural.lk/article/60504

 

Link to comment
Share on other sites

3 minutes ago, வாதவூரான் said:

அதாவுல்லா

தமிழர் பிரதிநிதித்துவம் கருணாவால் காவு வாங்கப்பட்ட பின்னர், அதாவுல்லாவின் கட்சியில் இருந்து ஒருவர் தெரிவானால் அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு மேலும் மோசமான நிலையைத் தான் தோற்றுவிக்கும்.

எதற்காக கருணா இறக்கப்பட்டாரோ அது நிறைவேறிக் கொண்டு இருக்குது.

Link to comment
Share on other sites

16 minutes ago, அபராஜிதன் said:

"என் வெற்றியை சுமந்திரனுக்கு விட்டுத் தருமாறு எமது பிரதான இணைப்பாளர் மிரட்டப் படுகிறார்"  யாழ் மாவட்டச் செயலக செய்திகள்..- சசிகலா ரவிராஜ் (முகநூலில்)

இதை தன் முகனூலில் முதலில் போட்ட ஜெரா தம்பி இப்ப அதை நீக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:55 pm GMT     0 Comments     1297     by : Litharsan

Parliament-Election-2020-Results-1.jpg

திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 20,011 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய காங்கிரஸ் 10,401 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் மகா சபா 10,130 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6,380 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 3,110 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,721 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 231 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 163 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 75,020
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 56,091
செல்லுபடியான வாக்குகள் – 54,228
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,863

http://athavannews.com/திகாமடுல்ல-மாவட்டம்-கல்/

Link to comment
Share on other sites

26 minutes ago, நிழலி said:

இதை தன் முகனூலில் முதலில் போட்ட ஜெரா தம்பி இப்ப அதை நீக்கியுள்ளார்.

இல்லையே சசிகலா ரவிராஜ்ஜின் முகநூல் பக்கத்தில் இன்னும் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலை ஈபிடிபிக்கு முதல் முதலா ஒரு ஆசனம் வரப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் - பாண்டிருப்பு

  பெயர் சதவீதம் % வாக்குகள்
05.png இலங்கை தமிழரசு கட்சி
 
41.7%
26498
22.png தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
 
25.66%
16308
image_2aa37570f4.jpg ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 
12.07%
7671
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி
 
10.01%
3181
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.