Jump to content

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து


Recommended Posts

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து

 

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து: மீட்புப்பணிகள் தீவிரம்
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த சுமார் 200 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசரஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் மழை பெய்து வருகிறது. இதுவரை 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
192 பயணிகளில் 91 பெண்கள் என்றும் 10 வயதுகுட்பட்ட குழந்தைகள் 38 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், மீட்புப் நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் விமான இரண்டாக உடைந்திருப்பது தெரிகிறது.
இந்த விபத்து குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
 

Air India plane crashes in Kerala after skidding off the runway

By Tara John and Vedika Sud, CNN

 

(CNN)An Air India Express plane crashed in the South Indian state of Kerala after skidding off the runway while landing at Kozhikode Calicut International Airport, CNN News 18 reports.

A pilot and two passengers have died in the incident, according to CNN News 18.
The flight landed in heavy rain, overshot the runway, fell down into a valley and broke into two, the Directorate General of Civil Aviation (DGCA) said in a statement to CNN News 18.
200807121911-02-calicut-india-plane-cras
 
The plane, which is a Boeing 737, had 174 passengers on board, according to a statement sent to CNN from the ministry of aviation.
 
 
    "Air India Express flight IX 1344 operated by B737 aircraft from Dubai to Calicut overshot runway at Kozhikode at 1941 hrs tonight. No fire reported at the time of landing," the DGCA statement said, according to CNN News 18.

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    image.gif

    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து

    துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (வெள்ளிக்கிழமை) இன்று மாலை கேரளாவின் கோழிக்கோட்டில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    117080509_611172762872039_21217104419953

    கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் விமான நிலையத்தில்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கி ஓடுபாதையை கடந்து பயணித்து பின்னர், 25 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து  இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. 

    இன்று இரவு 7:38 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், இரண்டு விமானிகள், 6 பணியாளர்கள்  உட்பட 191 பேர் பயணித்துள்ளனர்.

     

    Scenes at the Kozhikode Medical College Hospital after an Air India flight overshoots the runway at Karipur airport on August 7, 2020.

     

     இதுவரை வெளியான தகவலின் படி  விமானி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன்  40 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.https://www.virakesari.lk/article/87668

     

    117038147_1227147270960667_1514741815909

     

    Image

    https://www.virakesari.lk/article/87668

    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    கோழிக்கோட்டில் தரை இறங்கும் போது விமானம் இரண்டாக உடைந்தது; 19 பேர் பலி- 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

    கோழிக்கோட்டில் தரை இறங்கும் போது விமானம் இரண்டாக உடைந்தது; 19 பேர் பலி- 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

    கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், ஏராளமான இந்தியர் கள் நாடு திரும்ப முடி யாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

    அவர்கள், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில்3 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

    விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டிச் சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

    பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

    விமானி உள்பட 19 பேர் பலி

    இதனால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்தவர்களை மீட்க தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புக்குழுவினர் ஓடுபாதைக்கு விரைந்தனர். ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

    இந்த கோர விபத்தில் விமானிகளில் ஒருவரும் மேலும் 19 பயணிகளும் பலியானார்கள். பலியான விமானியின் பெயர் வசந்த் சாத்தே என விசாரணையில் தெரியவந்தது. மேலும் இறந்த பயணிகளில் 2 பேர் சஜீவன், சார்புதீன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    பயணிகள் படுகாயம்

    மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு 24 ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 15 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மீட்புப்பணிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழை பெய்து கொண்டிருந்ததால், குடைகளை பிடித்தபடி, பொதுமக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தனர். மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஜனாதிபதி துயரம்

    இந்த விபத்து குறித்து அறிந்ததும் துயரம் அடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரள கவர்னர் ஆரிப் முகமது கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோழிக்கோட்டில் உள்ள நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

    இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள ராம்நாத் கோவிந்த், பாதிக்கப்பட்ட பயணிகள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல் விபத்து பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தார். அவர், பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுவதாகவும் கூறி உள்ளார்.

    விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தாகவும், பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

    கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து, துபாயில் உள்ள இந்திய தூதரகம் பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக 4 தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

    இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது விமானம் தீப்பிடித்து விடும். இதனால் உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும்.

    ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த விபத்தின் போது விமானம் அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்காததால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    விமானத்தை முதல் முறை தரை இறக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும், இரண்டாவது முறையாக தரை இறக்கிய போது விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

     

    https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08045730/The-plane-broke-in-two-while-landing-at-Kozhikode.vpf

    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    airline.jpg

    கேரளா விமான விபத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

    கேரளாவில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

    துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் வந்தடைந்தது.

    184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணித்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்து 10ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது.

    இதன்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.

    குறித்த விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த பாரிய விபத்து தொடர்பாக தகவலறிந்து அருகில் இருந்த மக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து, மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் விமானி, துணை விமானியும் உள்ளிட்ட 18பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஏனைய 173 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    http://athavannews.com/கேரளா-விமான-விபத்தில்-உய/

    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! - சீமான் ஆறுதல்

    கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்
    நாள்: ஆகஸ்ட் 08, 2020In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்
    கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்

    ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்திற்கு 174 பயணிகள் உட்பட 191 பேருடன் வந்த ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும் சொல்லொணாத் துயரத்தையும் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மனத் துயரினைப் பகிர்வதுடன் அவர்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா நோய்த்தொற்றுப் பரவலினால் பல மாதங்களாக விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ள சூழ்நிலையில், நீண்ட காத்திருப்புகள் மற்றும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தாயகத்தையும் உறவுகளையும் காணும் ஆவலில் வந்தவர்கள் எதிர்பாராத விபத்திற்குள்ளானதை நினைக்கும்போது மனம் மேலும் வேதனை அடைகிறது.

    தொடர்புடைய கோழிக்கோடு விமான நிலையமானது மேசைதளக் குறுகிய ஓடுபாதையைக் கொண்ட விமான நிலையம் என்பதும், இரவு நேர மழைப்பொழிவும் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் இதற்கு முன் ஆறுமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது. ஏற்கனவே இதே போன்ற குறுகிய ஓடுபாதையைக் கொண்ட கர்நாடக மாநில மங்களூர் விமான நிலையத்தில் கடந்த 2010 ஆண்டு ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதும், அதன் பிறகு ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்கும் வரை விமானநிலையம் செயல்படத் தடைவிதிக்கப்பட்டதும் நினைவுக் கூறத்தக்கது.

    சிறிது பிழையானாலும் பலநூறு பயணிகளின் உயிர்களைப் பலிகொள்ளும் இவ்வகை விமான நிலையங்களின் ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்து சர்வதேச தரத்திற்கு உயர்த்துமாறும், வருங்காலங்களில் இதுபோன்ற விமான விபத்துகள் நிகழா வண்ணம் விமானப் போக்குவரத்தில் உள்ள அனைத்து நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளையும் களைய வேண்டுமெனவும் மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

    மீட்புப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து நடத்திடவும், காயமடைந்துள்ளவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும் இப்பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வர தேவையான மனநல ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கேரள அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஏற்கனவே கொரோனோ நோய்த்தொற்று, கடுமையான மழைப்பொழிவின் காரணமாகப் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை இந்த விபத்து மேலும் துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் உடைமைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீட்டினைப் பெற்றுத்தரவும் துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    – சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

    https://www.naamtamilar.org/air-india-express-plane-crash-in-kozhikode-seeman-consoles-that-the-state-of-kerala-will-recover-from-this-tragedy/

    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல்

    கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல்

    வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.
     
     
    விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
     
    விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    இந்த விபத்து காரணமாக குறித்த விமான முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.
     
    கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது. விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள். 
     
    கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடிமான ஒன்றாகும்.கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
     
    மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது.ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.
     
     
    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    கேரளா விமான விபத்து: சிகிச்சைபெற்று வருபவர்களில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்

    கேரளா விமான விபத்து: சிகிச்சைபெற்று வருபவர்களில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்

     

    வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.
     
     
    விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
     
    விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
     
    நேற்றிரவு முதல் இன்று காலை அதிகாலை வரை நடந்த மீட்புப் பணிகளை அடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
     
    இந்த நிலையில், விமான விபத்து விசாரணை பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி என்றழைக்கப்படும் டிஜிட்டல் பிளைட் ரெக்கார்டரை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
     
    Link to comment
    Share on other sites

    • கருத்துக்கள உறவுகள்

    கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம்?: கருப்பு பெட்டி மீட்பு!

    spacer.png

     

    கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான தள ஓடுதளத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும். இது மங்களூரு விமான விபத்தை நினைவு படுத்துகிறது.

    2010ஆம் ஆண்டு, மங்களூரு விமான நிலையத்தில் இதுபோன்று விபத்து ஏற்பட்டது. துபாயிலிருந்து வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி பாறையில் மோதி தீ பிடித்து ஏற்பட்ட விபத்தில், விமானத்தில் பயணித்த 181 பேரில் 158 பேர் உயிரிழந்தனர். இதுபோன்று விமான விபத்துகளுக்குக் காரணம்  டேபிள் டாப் (மலைக்குன்றுகள் உயரமான இடங்களில் அமைந்திருக்கும் ஓடுதளங்கள் டேபிள்டாப் என்று கூறப்படுகிறது. ) ஓடுதளங்களில் துல்லியமாக விமானங்களை தரையிறக்க முடியாதது தான் என்று விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், அப்போது மங்களூரு - துபாய் விமானத்தில் விமானியாக இருந்த லேட்கோ குளூசிகா தூங்கியதால் ஓடுதளத்தை விட்டு, விமானம் தரையிறங்கியதற்குக் காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த  பயணத்தின் போது குளூசிகா விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த  எச்சரிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை என்றும், துணை விமானியின் அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

    கருப்புப் பெட்டி எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியில் பதிவாகியுள்ள தகவல்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட தகவல்கள் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டன.

    பொதுவாக, விமான நிலைய  ஓடுதளங்கள் ,3150 மீட்டருக்குக் குறைவாக இருந்தால், அதில் விமானங்களைத் தரையிறக்குவது கடினமாகும். மிக துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், கவனமாகவும் தரையிறக்க வேண்டும். ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம், 2,850 மீட்டர் வரை மட்டுமே உள்ளது. இது மங்களூரு விமான நிலைய ஓடு தளத்தைக் காட்டிலும் 400 மீட்டர் நீளம் ஆகும். இவ்வாறு குறைந்த நீளம் கொண்ட ஓடு தளங்களில்  விமானங்களைத் தரையிறக்கும் போது, விபத்து ஏற்படும் என்பதால் ஒரு சில விமான நிறுவனங்கள் இதுபோன்ற ஓடுதளங்களில், விமானங்களைத் தரையிறக்குவதில்லை.

    spacer.png

    அந்தவகையில், மங்களூரு விமான விபத்தைத் தொடர்ந்து 2011ல்,  விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன்  கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றது என்று சிவில் ஏவியேஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். எனினும், தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில், பாதுகாப்பற்ற ஓடுதளம், சீரற்ற வானிலை, ஆகியவை கேரள விமான விபத்தை மோசமாக்கியது என்று விமான துறை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    விமானி உயிரிழப்பு

    இந்த விபத்தில், விமானத்தை இயக்கிய விமானி தீபக் வசந்த் சாத்தேவும் உயிரிழந்துள்ளார்.  இந்திய விமானப் படையில் பணியாற்றியுள்ள இவர், விமானங்களை இயக்குவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 58ஆவது பேட்ச்சை சேர்ந்தவர். இங்குப் பயிற்சி முடிந்து வெளியே வரும்போது ஸ்வார்டு ஆப் ஹானர் அவார்டு வாங்கியுள்ளார்.  ஹரியானாவின் அம்பாலாவில் விமானப்படையின் கோல்டன் ஆரோஸ் பிரிவில் கமாண்டராக பணியாற்றியிருக்கிறார். மிக்21 போர் விமானம்,  போயிங் 737, ஏர்பஸ்A3110 போன்ற விமானங்களை இயக்கியிருக்கிறார்.  சிறந்த விமானி என்று  தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவர் ஒரு ஸ்குவாஷ் வீரர் என்று முன்னாள் விமானத் தளபதி ஏர் மார்ஷல் பூஷன் கோகலே கூறியுள்ளார்.  மும்பையில் போவாய் நகரில் வசிக்கும் சாத்தேவுக்கு, கோழிக்கோட்டில் டேபிள் டாப் ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்குவது புதிதல்ல.  அவர் பல முறை அந்நகரத்திற்குச் சென்றிருக்கிறார் என்று அவரது  நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

    spacer.png

    இந்நிலையில், இச்சம்பவத்தின் போது, கோழிக்கோடு  விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் பல முறை  தரையிறங்க முயன்றுள்ளது. இதையடுத்து மீண்டும் வானிலேயே இரு முறை  சுற்றிய பிறகு தரையிறக்கப்பட்டுள்ளது என்று விமானம் தொடர்பான தகவல்களை அளிக்கும் ஃபிளைட் ரேடார் இணையதளம் தெரிவித்துள்ளது. எனினும், ஹைட்ரோபிளேனிங்( வழவழப்புத் தன்மை அதிகரிப்பு) காரணமாக, விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தசூழலில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று மதியம் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். விமானத்தின் செயல்திறன், வேகம், பிரேக்கிங் மற்றும் கணினி நிலை பற்றிய தகவல்கள் மற்றும் பைலட் உரையாடல்களின் பதிவுகள் உள்ளிட்ட தரவுகளைச் சேமித்து வைக்கும், கருப்பு பெட்டி மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் தற்போது விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த  விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

     

    விபத்தில் சிக்கிய விமானத்தில் வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் விமானத்தில் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


     

     

    https://minnambalam.com/public/2020/08/08/43/kozhikode-air-india-express-palne-crash-black-box-recover

    Link to comment
    Share on other sites

    Archived

    This topic is now archived and is closed to further replies.



    ×
    ×
    • Create New...

    Important Information

    By using this site, you agree to our Terms of Use.