Jump to content

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார்.

https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஒரு தண்டனைக் கைதி அல்லது கைதி தேர்தலில் நிற்க முடியும்....?!

சொறீலங்காவின் சன நாய் அகம்.. மிகக் கேலிக்கூத்தாகி விட்டது. 

இதில் இவருக்கு 54,200  விருப்பு வாக்கு. எதற்காக.. சிறையில் இருந்து களி சாப்பிடுவதற்காகவா..??!

தமிழ் மக்களின் விருப்பு வாக்கா... அல்லது சிங்களவரினதா.. அல்லது திட்டமிட்டு செயற்கையாகப் போடப்பட்டதா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருந்து தேர்தலில் பங்குபற்ற முடியுமாம். அமைச்சராகத்தான் முடியாதாம்.

அவர் பிணையிலே வெளியே வந்து அமைச்சரோ பிரதி அமைச்சரோ ஆகத்தான் போறார்.

இன்னும் கிழக்கு மக்களின் தேவையை புரிந்துகொள்ளவில்லை என்றால், அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள் என்றால், அடுத்தமுறை பிள்ளையான் கட்சியில் இருந்து மூன்று பேராவது நாடாளுமன்றம் வருவார்கள்.

இன்னும் கிழக்கு மக்களை முட்டாள் என்று நினைத்தால் அப்படி நினைப்பவர்களைத்தான் முட்டாள் என்று நினைக்கவேண்டி வரும்.

அவரிகளின் உணர்வுகளையும் மதியுங்கள். 

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

அதெப்படி ஒரு தண்டனைக் கைதி அல்லது கைதி தேர்தலில் நிற்க முடியும்....?!

அதுதானே? சட்டத்தரணிகள் எவராவது இருந்தால் விளக்கி விடுங்கோ.

மறு உலகத்தில் இருந்தும் போட்டிருப்பார்களோ? என்ன இருந்தாலும் தலைவரின் பாசறையில் பயின்ற புலி இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முதல்வன் said:

சிறையில் இருந்து தேர்தலில் பங்குபற்ற முடியுமாம். அமைச்சராகத்தான் முடியாதாம்.

அவர் பிணையிலே வெளியே வந்து அமைச்சரோ பிரதி அமைச்சரோ ஆகத்தான் போறார்.

இன்னும் கிழக்கு மக்களின் தேவையை புரிந்துகொள்ளவில்லை என்றால், அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள் என்றால், அடுத்தமுறை பிள்ளையான் கட்சியில் இருந்து மூன்று பேராவது நாடாளுமன்றம் வருவார்கள்.

இன்னும் கிழக்கு மக்களை முட்டாள் என்று நினைத்தால் அப்படி நினைப்பவர்களைத்தான் முட்டாள் என்று நினைக்கவேண்டி வரும்.

அவரிகளின் உணர்வுகளையும் மதியுங்கள். 

சரி பிள்ளையான் அமைச்சராகி (முதலமைச்சராகி மற்றவர் அமைச்சராகி கிழக்கில் பெரும் உதயத்தை உருவாக்கி விட்டார்கள்.. ஹிஸ்புல்லா அங்கால பல்கலைக்கழகம் கட்டினது புலிகளின் காலத்தில் அல்ல.. இவர்களின் காலத்தில் தான்.. கிழக்கு மக்கள் அதனை மறக்கக் கூடாது..) கருணாவுக்கு அடுத்தபடியாக பணக்காரர் ஆகிறாரா இல்லை.. கிழக்கு மக்களின் விடிவுக்கு உழைக்கிறாரோ என்றும் ஒருக்கா பார்த்திடுவோமே. எத்தனையோ பார்த்திட்டம்.. இதையும் ஒருக்கா பார்ப்பாம்.

சம் சும் கும்பலின் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான இன்றைய தெரிவு கிடையாது.. அதேபோல்.. கருணா பிள்ளையான் டக்கிளசும்.. என்பதை மக்கள் புரியவில்லை இன்னும் என்றால்.. விரைவில் புரிந்து கொள்வார்கள்.. மறதி அதிகம் இல்லை என்றால்.. முன்னரே புரிந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் வடக்குக்கு செய்ததை விட பிள்ளையான் கிழக்குக்கு செய்தவர். 

சும்மா அடிச்சுவிடுவதை விட நிஜ உலகுக்கு வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

விக்கியர் வடக்குக்கு செய்ததை விட பிள்ளையான் கிழக்குக்கு செய்தவர். 

சும்மா அடிச்சுவிடுவதை விட நிஜ உலகுக்கு வாங்கோ

அப்ப ஏனாம்... அதிகாரமில்லாத.. முதலமைச்சர் பதவி என்பது ஒன்றுக்கும் உதாவதது என்று முட்டைக்கண்ணீர் வடிச்சவர். அதையும் ஒருக்கா நீங்கள் தான் கேட்டுச் சொல்லனும். விக்கியர் அந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒன்றைத்தான் சொல்லி வந்தவர். அதில் அவரை பாராட்டலாம். ஆனால்.. உந்த பிள்ளையான் குழு தலைவர் அப்படி இல்லையே..???!

முஸ்லிம் பயங்கரவாதம்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வாலாட்டினதை விட.. இவர்கள் காலத்தில் வாலாட்டினது தான் அதிகம். அதன் தொடர்ச்சி எமது மக்களையே இலக்கு வைச்சு தற்கொலைத் தாக்குதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பியூனைக் கூட வேலைக்கு அமர்த்த அனுமதிக்காத பதவி, என்று வெளிப்படையாக அறிக்கை விட்டவர் பதவியில் இருந்தபோது. "கைப்பொம்மை" அதே இப்பவும் நடந்திருக்கிறது. வென்றது பிள்ளையான் அல்ல, பிள்ளையானின் பெயர். விளையாடப்போவது திட்ட வகுப்பாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

அதுதானே? சட்டத்தரணிகள் எவராவது இருந்தால் விளக்கி விடுங்கோ.

மறு உலகத்தில் இருந்தும் போட்டிருப்பார்களோ? என்ன இருந்தாலும் தலைவரின் பாசறையில் பயின்ற புலி இல்லையா?

கற்பகத்தாரே! குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறை செல்லாமல் குற்றம் இழைப்பவர்களும் பாராளுமன்றம் செல்வது நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கற்பகத்தாரே! குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயமோ?

நீங்கள் புலியில் இருந்து  பிரிந்து எங்களுடன் வந்து இணந்தீர்கள் என்றால், நீங்கள் சிறையிலிருந்தாலும் உங்களை வெல்ல வைப்போம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு...

என்னுடன் சிங்களவர் ஒருவர் பணிபுரிகின்றார் ...
பிள்ளையான் வெற்றியடைந்து விட்டாராம் நல்லம், கருணா தோல்வியடைந்து விட்டார் பாவம்...என்றார்....
புலம்பெயர்ந்து 25 வருடமா வாழும் சிங்களவருக்கே கருணாவும் ,பிள்ளையானும் வெல்லவேணும் என்று நினைக்கிறார்கள் என்றால் .....அங்கு அரசியல் செய்யும் அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கற்பகத்தாரே! குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயமோ?

பாராளுமன்றம் தானே குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை குடுப்பது என்று சட்டம் இயற்றுகிற இடம்? குற்றங்களை பற்றியும், குற்றங்களுக்கு தேவையான தண்டனைகள் பற்றியும் குற்றவாளிகளுக்கு தெரிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு தெரியாதல்லவா? ஆகவே, குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயம். அப்புக்காத்துமாரோட சேர்ந்து இவர்கள் சட்டம் இயற்றுவார்கள். 😎

போர் பற்றி போராளிக்கு கூட தெரியும்.

தமிழ் பற்றி தமிழனுக்கு கூட தெரியும்.

குற்றம் பற்றி யாருக்கு கூட தெரியும்? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கற்பகத்தாரே! குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயமோ?

ஏன் வெளியில் இருக்கின்ற உங்கட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சுத்தமோ?

15 hours ago, nedukkalapoovan said:

அதெப்படி ஒரு தண்டனைக் கைதி அல்லது கைதி தேர்தலில் நிற்க முடியும்....?!

சொறீலங்காவின் சன நாய் அகம்.. மிகக் கேலிக்கூத்தாகி விட்டது. 

இதில் இவருக்கு 54,200  விருப்பு வாக்கு. எதற்காக.. சிறையில் இருந்து களி சாப்பிடுவதற்காகவா..??!

தமிழ் மக்களின் விருப்பு வாக்கா... அல்லது சிங்களவரினதா.. அல்லது திட்டமிட்டு செயற்கையாகப் போடப்பட்டதா..??!

ஏன் உங்களுக்கு குடையுது?...எரிச்சலும் ,பொறாமையும் நன்கு தெரியுது  ....அது அங்குள்ள மக்கள் அவரை நம்பி போட்டது ...மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் ,எது செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

அப்ப ஏனாம்... அதிகாரமில்லாத.. முதலமைச்சர் பதவி என்பது ஒன்றுக்கும் உதாவதது என்று முட்டைக்கண்ணீர் வடிச்சவர். அதையும் ஒருக்கா நீங்கள் தான் கேட்டுச் சொல்லனும். விக்கியர் அந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒன்றைத்தான் சொல்லி வந்தவர். அதில் அவரை பாராட்டலாம். ஆனால்.. உந்த பிள்ளையான் குழு தலைவர் அப்படி இல்லையே..???!

முஸ்லிம் பயங்கரவாதம்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வாலாட்டினதை விட.. இவர்கள் காலத்தில் வாலாட்டினது தான் அதிகம். அதன் தொடர்ச்சி எமது மக்களையே இலக்கு வைச்சு தற்கொலைத் தாக்குதல்கள்.

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பெரிசா ஒன்றும் செய்ய மாட்டினம் சுமத்திரன் போல் சிங்களம் தமிழர் மீது  செய்யும் தப்புகளுக்கு நியாயம் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் எதிர்ப்பு அறிக்கையாவது  விடுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

கருணாவை விட நன்றாக செய்வார்கள் என நம்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் வெளியில் இருக்கின்ற உங்கட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சுத்தமோ?

ஏன் உங்களுக்கு குடையுது?...எரிச்சலும் ,பொறாமையும் நன்கு தெரியுது  ....அது அங்குள்ள மக்கள் அவரை நம்பி போட்டது ...மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் ,எது செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும் .

சிலோன்லை இருக்கிற மாதிரியே கதைக்கிறீங்கள். ஐரோப்பிய நாடுகளிலை ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கின்றது கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும்.

 ஒருவர் லஞ்சம் வாங்கி நிரூபிக்கப்பட்டாலே அவரின் பொது வாழ்க்கை முடிவுக்கு வரும். அதிலும் சிறைக்கு சென்றால்.....

உங்களைப்போன்ற ஆட்கள் தான் குற்றத்திற்கு குற்றத்தை சமன் பண்ணி நாட்டையே சீரழிக்கின்றவர்கள்.:cool:
நாட்டையும் மக்களையும்  திருந்தவே விடமாட்டீர்கள்.😎

Link to comment
Share on other sites

பிணையில் வெளியில்  வருகின்ற சந்தர்ப்பம் இருந்தும் தேர்தலுக்காக சிறைக்குள் இருந்து அனுதாப வாக்குகளை"யும்" பெற்றுக்கொண்டார் பிள்ளையான். பிள்ளையானின் வெற்றி முஸ்லீம்களின் மீதான வெறுப்பும் சேர்ந்ததுதான். பிள்ளையான் ஓரளவு செய்யதிறமுள்ள தமிழ் பற்றுள்ள ஒரு தளபதிதான். திட்டங்களை வகுக்கும் தலைவர் அல்ல.

தேர்தலுக்காகவே அவர் பிணை கோராமல் சிறைக்குள் இருந்தார். இனி  இலங்கை மண்டேலா என்றுகொண்டு கொஞ்சப் பேர்  கிளம்புவார்கள். இனி பிணை கோரி வெளியில் வருவார். என்னதான் இருந்தாலும் பிள்ளையான் தன்னை நம்பிய மக்களுக்கு ஏதாவது செய்வார். வடக்கின் டக்ளஸ் போல.

குற்றம் சாட்டப்பட்ட  ஒருவர், (குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை ) குறிப்பிட்ட காலத்தின் பின்னும் வழக்கு நீடிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் பிணை கோரி வெளியில் செல்லும் பாத்தியதை உடையவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

நீங்கள் புலியில் இருந்து  பிரிந்து எங்களுடன் வந்து இணந்தீர்கள் என்றால், நீங்கள் சிறையிலிருந்தாலும் உங்களை வெல்ல வைப்போம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு...

என்னுடன் சிங்களவர் ஒருவர் பணிபுரிகின்றார் ...
பிள்ளையான் வெற்றியடைந்து விட்டாராம் நல்லம், கருணா தோல்வியடைந்து விட்டார் பாவம்...என்றார்....
புலம்பெயர்ந்து 25 வருடமா வாழும் சிங்களவருக்கே கருணாவும் ,பிள்ளையானும் வெல்லவேணும் என்று நினைக்கிறார்கள் என்றால் .....அங்கு அரசியல் செய்யும் அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.

கூட்டமைப்பை விட ஏதோ அந்த மக்களுக்கு நல்லது செய்திருக்கிரார்கள் என்று அர்த்தம் கிழக்கு மக்களை பொறுத்த வரை 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

அவர்கள் குடும்ப அபிவிருத்திகளை என்று என்ன ஆதரத்துடன்  எழுதுகிறீர்கள் ?

பொது வெளியில் எழுதும்போது குறைந்தபட்ச ஆதரமாவது இருக்கணும் இருக்கா உங்களிடம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாழ் அரியன் said:

பிணையில் வெளியில்  வருகின்ற சந்தர்ப்பம் இருந்தும் தேர்தலுக்காக சிறைக்குள் இருந்து அனுதாப வாக்குகளை"யும்" பெற்றுக்கொண்டார் பிள்ளையான். பிள்ளையானின் வெற்றி முஸ்லீம்களின் மீதான வெறுப்பும் சேர்ந்ததுதான். பிள்ளையான் ஓரளவு செய்யதிறமுள்ள தமிழ் பற்றுள்ள ஒரு தளபதிதான். திட்டங்களை வகுக்கும் தலைவர் அல்ல.

தேர்தலுக்காகவே அவர் பிணை கோராமல் சிறைக்குள் இருந்தார். இனி  இலங்கை மண்டேலா என்றுகொண்டு கொஞ்சப் பேர்  கிளம்புவார்கள். இனி பிணை கோரி வெளியில் வருவார். என்னதான் இருந்தாலும் பிள்ளையான் தன்னை நம்பிய மக்களுக்கு ஏதாவது செய்வார். வடக்கின் டக்ளஸ் போல.

குற்றம் சாட்டப்பட்ட  ஒருவர், (குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை ) குறிப்பிட்ட காலத்தின் பின்னும் வழக்கு நீடிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் பிணை கோரி வெளியில் செல்லும் பாத்தியதை உடையவர். 

பல தடவை பிணை கோரியும் மட்டக்களப்பு கோர்ட்ஸ்ஸால்  பிணை வழங்க முடியாது கொழும்பு  கைகோட்தான் பிணை பற்றி தீர்மானிக்கலாம் என கூறப்பட்டது அடிச்சு விட வேண்டாம் பொய்களை

அனுதாப வாக்கு அல்ல அத்தனையும் விருப்ப வாக்கு விரும்பிய மக்கள் இட்ட வாக்கு ஏன் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை சிறையில் இருக்கும் ஒருவனை மக்களுக்கு உள்ளிருந்தும் என்ன செய்தானே அதை வெளியிலிருந்தவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என சிந்தியுங்கள் மாறாக பொய்யான செய்திகளை எழுதி புலம்பெயர்ந்த மக்களை குழப்பியதுதான் மிச்சம்  இணையத்தளங்களால் பிள்ளையானின் திட்டமிடலை கூட நெருங்கவில்லை சிலரால்  காரணம் அறிய வாய்ப்பில்லை சிலருக்கு 

இப்ப ஜே. வி பி நியுஸ் பூட்டியாச்சு செய்தி எழுதினர் அடங்கிட்டார்  

Link to comment
Share on other sites

பிள்ளையானின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களும் வரவேற்றும்  அல்லது 'பரவாயில்லை' என்றும் எழுதி வருகின்றார்கள். இதில் புலிகள் சாதி வெறி பிடித்தவர்கள் என்று ஷோபா சக்தியுடனும், நித்தியனந்தனுடனும் இணைந்து எழுதிவரும் கிழக்கை சேர்ந்த முன்னால் ஈபிடிபி உறுப்பினரான பெளசரும் (பெளசர் மஹரூவ்) அடக்கம்.  சிறையில் இருக்கும் சக முஸ்லிம் கைதிகளுடனும் சுமூக உறவு கொண்டு பழகுகின்றார் என்றும் கருணாவைப் போல இனவாதத்தை கையிலெடுக்காதவர் என்றும் எழுதி வருகின்றார்கள். உண்மையில் அப்படியானவர் தான் என்றால் வரவேற்கலாம்.
 
Link to comment
Share on other sites

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

3 hours ago, MEERA said:

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

புளொட் சித்தார்த்தனை இப்படி அவமானப்படுத்துவதா? என்ன இருந்தாலும் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதி என்ற மதிப்பாவது கொடுக்க கூடாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.