Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

ஏற்கனவே பதில் தந்தாகிவிட்டது, 

Link to post
Share on other sites
 • Replies 98
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நீங்கள் பட்டியலிட்ட நிலைப்பாடுதான் போராட்ட காலங்களுக்கு முற்பட்ட ஈழத்தின் சூழல். பிரதேசவாதங்களாலும் ஏற்றதாழ்வுகளாலும் பிழவுபட்ட நிலையில் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள். வடகிழக்கு என்ற நிலைப்பாடு மட்டுமில்

அண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள்? தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ? இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரண

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

Quote

டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய - பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். 14 கருணா குழு உறுப்பினர்கள் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர்.

( சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய எனும் கட்டுரையில் இருந்து முக்கிய பகுதிகள் இவைகள்)

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 பணியாளர்கள் வெலிகந்தையில் வைத்துக் கடத்தப்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதற்கு வெலிகந்தை ஊடாக பயணம் செய்த 5 புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டார்கள். அதில் மூவர் உடனடியாகவே விடுதலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாள் மீண்டும் வெலிகந்தையில் வைத்து புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் 15 பேர் கடத்தப்பட்டார்கள். அதில் ஆரம்பகட்ட பணியாளர்களாக இருந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு முதல்நாள் இருவரும் அடுத்த நாள் ஐவருமாக மொத்தம் 7 பணியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். இந்தக கடத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இவர்களை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்தக் கடத்தலைக் கண்டித்துக் குரல் கொடுத்தன. அமெரிக்க அரசின் வெளிவிவகாரத்துறையின் துணை அதிகாரியான கிறிஸ்ரீனா றொக்காவும் 7 பணியாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து மார்ச் மாதம் ஒரு விசேட அறிக்கை வெளியிட்டதோடு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது. அத்துடன் சர்வதேச நடுகளிடமும் நிறுவனங்களிடம் சிறிலங்காவின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் மாஅதிபர் போன்றோருக்கு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அமெரிக்கா தொடங்கி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வரை வேண்டுகோள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை.

மனித உரிமை மீறல் சம்பந்தமான 15 விடயங்களை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரித்தது. இந்த விசாரணையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தல் சம்பவம் இடம்பெறவில்லை. புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் கடத்தல் சம்பவத்தையும் இந்த ஆணைக்குழுவின் விசாரணையில் இணைக்கும்படி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்த வேண்டுகோளும் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த கடத்தில் சம்பவத்திற்கு கருணா குழுவே பொறுப்பு என்று பல தரப்பினரால் சந்தேகிக்கப்பட்டது. அத்துடன் கடத்தலின் போது விடுதலையான இருவர் தம்மை விசாரணை செய்த இடத்தில் கருணா குழுவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.

அது மட்டும் அன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுதலைப்புலிகளே கடத்தினார்கள் என்று புதிய ஒரு கதையும் பரப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு அமைதியாக இருக்கும்படியும், இந்தக் கடத்தல் ஒரு நாடகம் என்றும், கடத்தப்பட்டவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றும் செய்தி அனுப்பி உள்ளதாகவும் கதைகள் பரப்பப்பட்டன. ஆனால் கடத்தப்பட்டவர்கள் திரும்பவில்லை.

பலரால் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டு விட்டது. ஆனால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்கள் இச் சம்பவத்தை மறக்கவில்லை. கடந்த வாரம் கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கடத்தப்பட்டவர்களின் இரு உறவினர்கள் பேசினார்கள். கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும், அவர்கள் வீடு திரும்புவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து பேசினார்கள்.

எத்தனை பேர்தான் இவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாலும் கூட, உண்மை என்பது அதுவாக இல்லை. ஒரு எழுத்தாளர் மூலம் கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்களின்படி கடத்தப்பட்ட 7 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர்களில் பெண் பணியாளர் கொடுரமான வல்லுறவிற்கு பின்பு கொல்லப்பட்டிருக்கிறார். இதை செய்தவர்கள் கருணா குழுவினர்.

தகவலை தந்தவர் கருணா குழுவினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவர். கருணா குழுவிற்குள் இருக்கின்ற அதிருப்தியாளர்கள் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது. இந்த அதிருப்தியாளர்கள் கருணா குழு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் வேட்டை நாய்களாக செயற்படுவதாக கருதுகிறார்கள். கருணா குழுவின் நடத்தைகளை அருவருப்புடன் நோக்குகிறார்கள்.

கடத்தப்பட்டவர்களுக்கு நடந்த கொடிய சம்பவம் மனதை பதற வைக்கக்கூடியது. தகவல் கிடைத்த பின்பும் பல வாரங்கள் இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே இந்த துயர நிகழ்வு இங்கு பதியப்படுகிறது.

கருணா குழுவின் முக்கிய தலைவனாக பிள்ளையான் என்பவன் இருக்கின்றான். இந்தப் பிள்ளையானே ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைக்கும் காரணமானவன். கருணா குழுவின் பல ரகசிய நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருப்பவன். கொழும்பில் நடக்கும் வர்த்தகர்கள் கடத்தலுக்கும் பிள்ளையானே முக்கிய மூளையாக செயற்பட்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.

பொலநறுவையில் உள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் பல முகாம்கள் உண்டு. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட ஜனவரி 29 அன்று பிள்ளையானால் கருணா குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாகனம் ஒன்றில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை வெலிகந்தைப் பகுதியில் வைத்து கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான்.

அதன்படி சிந்துயன் என்பவனின் தலைமையில் கருணா குழுவின் அணி ஒன்று ஒரு வெள்ளை வானில் புறப்பட்டது. இந்த சிந்துயன் பிரதீபன் என்றும் அழைக்கப்படுகிறான். தீவுச்சேனையில் இருந்து புறப்பட்ட ஆயுதம் தாங்கிய இந்த அணி வெலிகந்தையில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டு நின்றது. இந்த கடத்தல் அணியில் இருந்த மற்றையோர் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆவார்கள். அனைவரும் 20ஐ நெருங்கிய வயதுடையவர்கள்.

புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் இராணுவ சோதனைச் சாவடியைத் தாண்டி வெலிகந்தையை அடைந்தது. கருணா குழுவின் வாகனம் அவர்களை பின்தொடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் கருணா குழுவிற்கு சாதகமான ஒரு இடத்தில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களின் வாகனம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பின்பு பணியாளர்களோடு வாகனமும் தீவைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகணத்தின் முன்பள்ளி அபிவிருத்தி செயலாளராகிய காசிநாதர் கணேசலிங்கமும், மண்முனை வடக்கின் முன்பள்ளி அபிவிருத்தி இணைப்பாளராகிய செல்வி டோசினியும், முன்பள்ளி ஆசிரியைகளான புண்ணியமூர்த்தி நடேஸ்வரி, சித்திரவேல் சிவமதியும், மற்றும் வாகன ஓட்டுனர் கதிர்காமர் தங்கராசாவும் கடத்தப்பட்ட ஐவரும் ஆவார்கள்.

கடத்தப்பட்டவர்கள் தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டார்கள். ஆண்களிடம் சிந்துயனே நேரடியாக விசாரணை நடத்தினான். பெண்களிடம் கருணா குழுவின் புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பான சித்தா என்று அழைக்கப்படும் பிரதீப் என்பவன் வேறு இருவருடன் இணைந்து விசாரணை நடத்தினான்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மீதான படுகொலையை சித்தாவே நடத்தியிருந்தான். 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சித்தாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடையாளம் கண்டு கொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடமும் சித்தா குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் தற்பொழுது அச்சத்தில் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.

மூன்று பெண்களும் சித்தாவாலும் சச்சி என்று அழைக்கப்படும் சாந்தனாலும், ஜீவா என்று அழைக்கப்படும் திலகனாலும் விசாரிக்கப்பட்டார்கள். ஒரு நேரத்தில் சித்தா டோசினியை மற்ற பெண்களிடம் இருந்து பிரித்து தனியாக விசாரிப்பதற்கு அழைத்துச் சென்றான். சச்சியும் ஜீவாவும் மற்ற இரு பெண்களையும் தொடர்ந்து விசாரித்தனர்.

சிந்துயன் தொடர்ந்து இரு ஆண்களையும் விசாரணை செய்து கொண்டிருந்தான். கணேசலிங்கம் யாழ்பாணத்தில் உள்ள தெல்லிப்பழையை சேர்ந்தவர். தங்கராசா கிளிநொச்சியை சேர்ந்தவர். கடத்தப்பட்ட இரண்டு ஆண்களுக்கும் வடக்கை சேர்ந்தவர்களாக இருக்க, மூன்று பெண்களும் கிழக்கை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரண்டு ஆண்களும் சிந்துயனால் பொட்டுஅம்மானின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர்கள் வடக்கை சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் தூசிக்கப்பட்டார்கள். பின்பு இருவரும் சிந்துயனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இதே வேளை நடேஸ்வரியும் சிவமதியும் விசாரணை முடிந்து சிந்துயனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சச்சியும் ஜீவாவும் சிந்துயனிடம் தெரிவித்தார்கள். சச்சியும் ஜீவாவும் விசாரணையின் போது இந்த இரு பெண்களிடமும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்கள். அடுத்த நாள் இரு பெண்களும் சிந்துயனால் விடுவிக்கப்பட்டார்கள்.

டோசினி விடயம் சற்று மாறுபாடாக இருந்தது. டோசினியின் நெருங்கிய உறவினன் ஒருவன் கருணா குழுவின் முக்கிய உறுப்பினாக உள்ளான். இது டோசினிக்கு சாதகமான விடயமாக இருந்தது. அத்துடன் சித்தவிற்கு டோசினி மீது ஒரு பிடிப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் டோசினியை தனிமையில் வைத்து விசாரித்தான். அவளை மிரட்டி அழச் செய்து ஆறுதல் படுத்தினான். பின்பு டோசினியை சித்தாவே தன்னுடைய வாகனத்தில் வீட்டில் கொண்டு போய்விட்டான்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி டோசினி தற்பொழுது சித்தாவுடன் மனைவியாக வாழ்கிறாள். டோசினி மீது எந்த விசாரணையும் வராதபடி சக்தி மிக்க மனிதர்களால் காக்கப்படுகிறாள்.

ஆனால் நடேஸ்வரியும் சிவமதியும் பொலிஸாரினால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டார்கள். பின்பு இருவரும் தாமாகவே கொழும்பிற்கு சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் டோசினி அவ்வாறான வாக்குமூலம் எதையும் வழங்கவில்லை.

அடுத்த நாள் ஜனவரி 30 மதியமளவில் பிள்ளையானிடம் இருந்து சிந்துயனிற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. புனர்வாழ்வுக் கழகத்தின் இன்னும் ஒரு வாகனம் வருவதாகவும் அதையும் கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான். முதலில் வந்த வாகனத்தை கடத்திய அதே அணி மீண்டும் புறப்பட்டது. அதே பாணியில் இரண்டாவது வாகனத்தையும் 4.15 மணியளவில் கருணா குழு வழி மறித்தது.

புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேர் அந்த வாகனத்தில் இருந்தார்கள். வாகன ஓட்டுனர் கருணா குழுவால் தாக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டார். யோகன் அந்த வாகனத்தை பொறுப்பேற்றுக் கொண்டான். மற்றைய கருணா குழுவினர் தமது வெள்ளை வானில் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் வாகனம் நிறுத்தப்பட்டது. புலேந்திரனும் சிரஞ்சீவியும் 15 பணியாளர்களின் கண்களையும் கட்டிவிட்டனர். பின்பு இரு வாகனங்களும் பல குறுக்குப்பாதைகளால் பயணித்து தீவுச்சேனையை அடைந்தன.

15 பேரும் சிந்துயன், சச்சி, ஜீவா ஆகியோரால் விசாரிக்கப்பட்டனர். அதில் 11 பேர் ஆரம்பநிலை உறுப்பினர்கள் என்றும் பயிற்சிக்காக வவுனியா செல்வதும் தெரியவந்தது. மற்றைய நால்வரும் களிநொச்சியில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவகப் பணிமனைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் ஆரம்பநிலை உறுப்பினர்களில் ஒருவர் மீது கருணா குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப்பிரிவின் தலைவரான கீர்த்தியோடு தொடர்புடையவர் என்று கருணா குழு குற்றம் சாட்டியது.

மிகுதி பத்துப் பேரும் மீண்டும் கண்கள் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். வாகனத்தில் குமார், யோகன், ஜெயந்தன் ஆகியோர் இருந்தார்கள். வாகனம் ஏ11 வீதியால் பயணித்தது. அப்பொழுது ஒரு பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. ஜெயந்தன் "முன்னால பொலிஸ் ஜீப்" என்று கத்தினான். "அது பிரச்சனை இல்லை" என்று அமைதியாக யோகன் சொன்னான்.

பின்பு கருணா குழுவினர் பத்துப் பேரையும் விடுவிக்கும் போது மிகுதி 5 பேருக்கும் கடைசிக் காரியங்களை செய்யலாம் என்று அவர்களுடைய குடும்பத்தவர்களுக்கு சொல்லும்படியும் சொன்னார்கள்.

கருணா குழுவால் தடுத்து வைக்கப்பட்ட ஐவரில் கைலாயப்பிள்ளை ரவீந்திரன், சண்முகநாதன் சுயேந்திரன், தம்பிராஜா வசந்தராஜன் ஆகியோர் சிறுவர் இல்லங்களின் கணக்காளர்களாவும், அருணேஸ்வரராஜா சதீஸ்வரன் கணக்காள பயிற்சி பெறுபவராகவும் செல்வி பிறேமினி தனுஸ்கோடி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிழக்கு மாகாண கணக்காளராகவும் பணியாற்றியவர்கள் ஆவார்கள். பிறேமினி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் மாணவியாகவும் இருந்தார்.

சித்தாவினால் ஐவரும் மிகக் கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள். சிந்துயனும் விசாரணையில் பங்கு கொண்டான். ஆண்கள் நால்வரும் கடுமையாக தாக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். அதன் பிறகு சித்தாவும் மற்றவர்களும் அந்த முகாமை விட்டுச் சென்றார்கள். செல்கின்ற போது சிந்துயனிடம் "இனி உங்கட பொறுப்பு" என்று கூறிச் சென்றார்கள்.

பின்பு நான்கு ஆண்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அவர்களின் கண்கள் கட்டப்பட்டது. அவர்களை கண்கள் கட்டிய நிலையிலேயே காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒரு இடத்தில் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அங்கே பெரிய குழி ஒன்றை தோண்டும்படி அவர்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்கள் குழியை தோண்டிய பிற்பாடு, நால்வருயும் வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பிறேமினிக்கு ஏற்பட்ட கதி மிகக் கோடுரமானது. பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மற்றைய கருணா குழு உறுப்பினர்களாலும் வல்லுறவிற்கு உப்படுத்தப்பட்டார். 14 கருணா குழு உறுப்பினர்கள் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர். சில கருணா குழு உறுப்பினர்களுக்கு அங்கு நடந்தது உடன்படில்லாத போதும், அதை தடுப்பதற்கு வலு அற்றவர்களாக இருந்தார்கள்.

அதிகாலையில் பிறேமினி காட்டுக்குள் கருணா குழுவால் அழைத்துச் செல்லப்பட்டார். பிறேமினி ஒரு நடைப்பிணம் போல் அவர்களுடன் சென்றார். பிறேமினி எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்று முன்னாள் கருணா குழு உறுப்பினர் தெரிவிக்கின்றார். காட்டில் வைத்து பிறேமினி வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டது.

http://www.nitharsanam.com/?art=22040

இந்த அப்பாவிப் பெண்ணை கற்பளித்துக் கொன்றது, நிச்சயமாக கிழக்கின் விடிவுக்கான ஒரு முதற்படியே!!!!! ....... "நெஞ்சு பொறுக்குதில்லையே" ..... இன்று பாரதி இருந்திருந்தால் நெஞ்சே வெடித்து இறந்திருப்பான்!!! நல்லது இல்லாமல் போய் விட்டான்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சண்டமாருதன் said:

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

அண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள்?

தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ? இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். 
அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே? கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ? அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. 

மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச் சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு?!

ஆனாலும் அண்ணை, இன்னும் ஒண்டு ரெண்டு பேர் தமிழ்த் தேசியம் எண்டு கொண்டு நிக்கினம். உவையையும் அழிச்சுப்போட்டுத்தான் இனி மிச்ச வேலை கண்டியளோ. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு துரோகம் என்றதெல்லாம் நல்ல விஷயம் எண்டு சனத்தை நம்பவைச்சு வாறம், உவை இன்னமும் தமிழும், தேசியமும், பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுக்கொண்டு திரியினம். விசர் தான் வரூது கண்டியளோ? 

 • Like 3
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

இவை குற்றமில்லை  ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....

இலங்கையின் அதி விசேஷ ஜனநாயகம் !! 

‘சாராயம்’ விலையும் அதிகரிப்பு…

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

அண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள்?

தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ? இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். 
அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே? கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ? அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. 

மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச் சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு?!

ஆனாலும் அண்ணை, இன்னும் ஒண்டு ரெண்டு பேர் தமிழ்த் தேசியம் எண்டு கொண்டு நிக்கினம். உவையையும் அழிச்சுப்போட்டுத்தான் இனி மிச்ச வேலை கண்டியளோ. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு துரோகம் என்றதெல்லாம் நல்ல விஷயம் எண்டு சனத்தை நம்பவைச்சு வாறம், உவை இன்னமும் தமிழும், தேசியமும், பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுக்கொண்டு திரியினம். விசர் தான் வரூது கண்டியளோ? 

தேவநாயகம்  எம் பி யாகவும் அமைச்சராகவும் கல்குடா தொகுதியில் பல வருடங்களாக இருந்தவர்....அவர் செய்யாத அபிவிருத்தி....ராஜதுரை செய்யாத அபிவிருத்தி ,கனகரத்தினம் செய்யாத அபிவிருத்தி, செல்லையா குமாரசாமி செய்யாத அபிவிருத்தி,ராஜன் செலவநாயகம் செய்யாத அபிவிருத்தி ,நம்ம டக்கிளஸ் செய்யாத அபிவிருத்தியையா இவர்கள் செய்யப்போகின்றார்கள் .....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இன்றைய  தேர்தல் வெற்றி  செய்திகளோடு அன்றைய செய்திகள் 

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 
நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, MEERA said:

நடந்த விடயத்தை எழுதினால் சீப்பான கருத்தாளர். மற்றவர்களுக்கு சொம்பு துக்க முன்னர் கருத்தை எதிர் கொள்ள பழகுங்கள்.

கருத்தை எதிர் கொள்ள உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் ....இதற்கு முதலில் சண்டமாருதன் பதில் சொல்லட்டும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

கருத்தை எதிர் கொள்ள உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும் ....இதற்கு முதலில் சண்டமாருதன் பதில் சொல்லட்டும் 

அது தான் நேற்று எனக்கு பிரதேசவாதம் பூச முற்பட்டு ஓடி ஒழிந்தீர்களா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

எங்கே உது தானா அந்த பதில்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இணையங்களில் வரும் செய்திக்காய் யாழில் சண்டை பிடித்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் ....உங்களுக்கு சார்பான செய்தி என்றால் ஏற்பீர்கள் இல்லாட்டில் தூக்கி போட வேண்டும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எங்கே உது தானா அந்த பதில்?...பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இணையங்களில் வரும் செய்திக்காய் யாழில் சண்டை பிடித்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் ....உங்களுக்கு சார்பான செய்தி என்றால் ஏற்பீர்கள் இல்லாட்டில் தூக்கி போட வேண்டும் 

அதே இணையங்களில் வந்த செய்தியை தான் தாங்கள் தூக்கிப்பிடிப்பது

😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

சரியாக சொன்னீர்கள். விக்கி ஐயா இனி கம்பன்வாருதி ஜெயராஜுடன் கமபன் சொட்பொலிவாற்றுவார். கஜன்கள் பஜனை பாடுவார்கள்.

பிள்ளையானின் போராட்டகால வாழ்க்கை பிழையாக இருந்தாலும் , முதலமைச்சரான பின்னர் தமிழ் மக்களுக்காக முடிந்த சேவையை வளங்களினார்.

வடமாகாண சபை கதிரைகளை சூடேற்றிக்கொண்டிருந்தபோது இவர் தமிழ் மக்களுக்காக சூடாக வேலை செய்தார். மக்கள் அதை மறக்கவில்லை.

மற்றவர்களைப்போல் அந்தளவுக்கு படிக்கவிடடாலும் அதிகாரிகளின் துணையுடன் மக்கள் சேவையை வழங்கினார். வாழ்த்துக்கள் பிள்ளையான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

வடமாகாண சபை கதிரைகளை சூடேற்றிக்கொண்டிருந்தபோது இவர் தமிழ் மக்களுக்காக சூடாக வேலை செய்தார். மக்கள் அதை மறக்கவில்லை.

வங்காலையன், பிள்ளையான் முதலமைச்சராக இருந்தது 16/05/2008-27/06/2012

வடமாகாணசபை தோற்றம் பெற்றது  21/09/2012

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாழ் அரியன் said:

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

பிணை கோரப்பட்டதை நான் காட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள் இரண்டாம் மாதம் கோரப்பட்டது ஏன் விடுதலையாகிறார் எனா செய்தியும் வந்தது கோட்டா ஜனாதிபதியானதும் ஆனால் பிணையானது கொழும்பு கோட்ஸ் தான் தீர்மானிக்கும் சிறையில் பசில் , நாமல் , மகிந்தவும் பார்த்து சென்று விட்டு போனார்கள் மீதமானதை நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள் .

பிள்ளையானையும் , கர்ணாவையும் ஏன் கூட்டமைக்கு எதிராக யார் இறங்கினாலும் அவர்களை எப்படியாவது துரத்த கங்கணம் கட்டி திரிகிறது இது நான் பார்க்கு உன்மை சாதாரண பிரதேச ச்பை தேர்தலிலிருந்து  இப்ப வரை நடந்த எலக்சன் வரைக்கும் இப்படி இருக்கு பிள்ளையான் கருணா மீது குற்ற சாட்டுக்களை அடுக்கியே செல்வார்கள்  கட்டுரை கூட எழுதுவார்கள் ஆயுத குழுக்கள் யார் குற்றம் செய்ய வில்லை சொல்லுங்கள் 

இன்று அரசியலில் இருக்கும் பலர் முன்னை நாள் ஆயுத தாரிகள்தான் அவர்களை சேர்த்து அரசியல் கூட்டமைப்பு நடத்தும் போது பிள்ளையான் , கர்ணா நடத்தினால் தான் பாரிய பிரச்சினை .

மட்டக்களப்பு , அம்பாறை, மாவட்ட பிரச்சினைகளை கூட்டமைப்பு கையாளாமல் மைத்திரி , ரணில் அரசையும் காப்பாற்றி திரிந்ததால் மக்கள் மாற்றம் கொடுத்துள்ளார்கள் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

உங்கள் கருத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன் ...நீங்களும்,மூன்றாம் தர சீப்பான கருத்தாளர் என்று உங்களை நிரூபித்து விட்டீர்கள்.
 
நான் கருத்து எதையும் முன்வைக்கவில்லை.  இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சண்டமாருதன் said:

 இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

அன்று நடந்த சம்பவங்களை, கருணா குழு, பிள்ளையான் குழுவினரின் மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளைக் கூட கிழக்கில் மக்கள் மறக்குமளவிற்கு தமிழ்த்தேசிய நோக்குள்ளவர்களின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் மக்கள் பிரதேச அபிவிருத்திக்கும், முஸ்லிம்களின் நெருக்குவாரங்களைக் குறைக்கவும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன்னொரு தலைமுறை தாண்டும்போது “எனது தாத்தாவிடம் ஒரு புலி இருந்தது” என்ற கதையாடலில் வந்து நிற்கும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்த்தேசீய நோக்குள்ளவர்களின் செயற்பாட்டால் தான் கடந்த கால கொடுங்கோன்மையை  மக்கள் மறந்து கொடுங்கோலர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது சரியான புரிதலா ? தமிழததேசீயம் என்பதே சிதைந்த நிலையில் தேசீய செயற்பாடுகளுக்கு சாத்தியமில்லை.  தேசீயத்தை கடந்த அறம் சார்ந்த ஒரு பொது புரிதல் கூட கேள்விக் குரியதாக இருப்பதை குறிக்கவே இந்த பழைய செய்தியை இணைத்தேன்.  இதற்கு காரணம் இன்னார் என்ற சுட்டிக்காட்டுதலுக்கு கூட தகுதியற்ற நிலையில்  இருக்கின்றோம். 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

 பிள்ளையான் முதலமைச்சராக இருந்தது 16/05/2008-27/06/2012

வடமாகாணசபை தோற்றம் பெற்றது  21/09/2012

அது சரிதான். இருந்தாலும் இப்போதுதானே இரு முதலமைச்சரும் ஒரே நேரத்தில் போட்டியிட்டிருக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சண்டமாருதன் said:

நான் கருத்து எதையும் முன்வைக்கவில்லை.  இத் திரியில் நான் அன்று நடந்த சம்பவம் தெடர்பான செய்தியை இணைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். நீங்கள் நடந்த சம்பவத்தை வேண்டுமானால் முதல்தரம் மூன்றாம் தரம் என்று பிரித்துப் பார்க்கலாம் தவிர எனது கருத்து எதுவும் இல்லை. நடந்த சம்பவங்கள் இல்லை என்று ஆகிவிடாது. அப்படி அணுகுவது அறமும் கிடையாது. 

நீங்கள், உண்மையிலேயே பிறேமினிக்கும் ,அவரோடு கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், பிள்ளையான் தேர்தலில் வெல்லும் மட்டும் காத்து இருந்திருக்க மாட்டீர்கள்...குறைந்த பட்சம் அவர் தேர்தலில் நிற்கும் போதாவது உங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கலாம்...அல்லது அவருக்கு எதிராய் வழக்கு போட்டு இருக்கலாம் ...இவர் எல்லாம் எங்க வெல்லப் போறார் என்று இருந்து விட்டு வென்றவுடன் பழையதுகளை கிளறுவது பொறாமையின் உச்சம்.
பிள்ளையானோ,கருணாவோ இந்த சம்பவத்தில் நேரடியாய் பங்குபற்றியதற்கோ அல்லது அங்கு அந்த இடத்தில் நின்றதற்கோ  எந்த வித ஆதாரங்களும் இல்லை ....[இதில் இருந்து தப்பி வந்த சிலர் இன்னும் மட்டுவில் தான் இருக்கினம்.]...அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் பொறுப்பாவார்கள்?
புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .
கருணா ,புலிகள் சண்டையின் போது , கருணாவோடு நின்ற பெண் போராளிகள் இறந்த பின் அவர்களை புலிகள்  அம்மணமாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் ...ஆனால் பழசை எல்லாம் கிளறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...எது ,எப்படி இருந்தாலும் இறந்தது எல்லாம் எம் மக்களே.
வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.
இப்பவும் ஒன்றும்  கெட்டு போகவில்லை ...உண்மையாகவே பிறேமினியின் மரணத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு சும் போன்றவர்களுக்கு காசை கொடுத்தீர்கள்  என்றால் வழக்காடுவார்கள் 
 
அக்காநீங்கள் எல்லாம் தெரிந்துதான் கதைக்கிறீர்களா?கருணாவே புலிகள் அநாகரிகமாகநடக்கவில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னது

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
விருப்பு வாக்கெடுப்புக் கணிப்பில் மோசடி செய்யலாமா?
இலங்கைப் நாடாளமன்றத்தேர்தலில் இருவகையான வாக்களிப்புச் செய்யலாம். முதலாவது கட்சி அல்லது சுயாதீனக் குழுத்தெரிவு வாக்களிப்பு. இதில் வாக்காள தனக்குப் பிடித்த கட்சி அல்லது சுயாதீனக் குழுவிற்கு எதிரே உள்ள கட்டத் துக்குள் புள்ளடியிட வேண்டும். இது கட்டாயம்.
இரண்டாவது விருப்பத்துக்குரிய வேட்பாளருக்கு வாக்களிப்பு. இதில் ஒரு வாக்காளர் தனது விருப்பத்துக் குரிய வேட்பாளர் ஒருவர், இருவர் அல்லது மூவரை அவர்களுக்குரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட வேண்டும். இந்த வாக்களிப்பைச் செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம்.
முதலில் கட்சித் தெரிவு வாக்குகளை எண்ணுவார்கள். எண்ணும் போது எல்லா கட்சி மற்றும் சுயாதீனக் குழுக்கள் சார்பிலும் முகவர்கள்/வேட்பாளர்கள் இருந்து வாக்கு எண்ணுவதைக் கண்காணிக்கலாம்.
பின்னர் ஒவ்வொரு கட்சியினதும்/சுயாதீனக் குழுக்களினதும் விருப்பு வாக்குகள் தனித்தனி எண்ணப்படும்.
ஒரு கட்சி/சுயாதீனக் குழுவின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் போது அந்தக் கட்சி/சுயாதீனக் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இருக்கலாம். இதன் போது தேர்தல் ஆணையகத்திற்காக பணிபுரியும் அரச அதிபர்/அதிகாரிகள் ஊழலுக்கு ஒத்துப் போனால் மோசடி செய்யலாம். ஏதாவது கட்சிக்கு ஆதரவானவராகவோ, அவர்களிடமிருந்து பணம் பெற்றவராகவோ அல்லது அவர்களால் கடுமையாக மிரட்டப்பட்டவராகவோ விருப்பு வாக்கு எண்ணும் இடத்தில் உள்ள அரச அதிகாரி இருந்தால் மோசடி செய்யலாம். கட்சிக்கு மட்டும் வாக்களிக்கப்பட்டு விருப்பு வாக்கை அளிக்கப்படாத அல்லது மூன்றிற்கும் குறைவான விருப்பு வாக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களில் கள்ளமாக ஒரு வேட்பாளருக்கு உரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட்டு அவரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கச் செய்யலாம். இதனால் முன்னுக்கு இருந்தவர் பின் தள்ளப்பட்டு தோற்கடிக்கப்பட்டவரை வென்றவராக அறிவிக்கலாம்.
நன்றி தர்மா 
 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நீங்கள், உண்மையிலேயே பிறேமினிக்கும் ,அவரோடு கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், பிள்ளையான் தேர்தலில் வெல்லும் மட்டும் காத்து இருந்திருக்க மாட்டீர்கள்...குறைந்த பட்சம் அவர் தேர்தலில் நிற்கும் போதாவது உங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கலாம்...அல்லது அவருக்கு எதிராய் வழக்கு போட்டு இருக்கலாம் ...இவர் எல்லாம் எங்க வெல்லப் போறார் என்று இருந்து விட்டு வென்றவுடன் பழையதுகளை கிளறுவது பொறாமையின் உச்சம்.
பிள்ளையானோ,கருணாவோ இந்த சம்பவத்தில் நேரடியாய் பங்குபற்றியதற்கோ அல்லது அங்கு அந்த இடத்தில் நின்றதற்கோ  எந்த வித ஆதாரங்களும் இல்லை ....[இதில் இருந்து தப்பி வந்த சிலர் இன்னும் மட்டுவில் தான் இருக்கினம்.]...அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் பொறுப்பாவார்கள்?
புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .
கருணா ,புலிகள் சண்டையின் போது , கருணாவோடு நின்ற பெண் போராளிகள் இறந்த பின் அவர்களை புலிகள்  அம்மணமாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் ...ஆனால் பழசை எல்லாம் கிளறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை ...எது ,எப்படி இருந்தாலும் இறந்தது எல்லாம் எம் மக்களே.
வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.
இப்பவும் ஒன்றும்  கெட்டு போகவில்லை ...உண்மையாகவே பிறேமினியின் மரணத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு சும் போன்றவர்களுக்கு காசை கொடுத்தீர்கள்  என்றால் வழக்காடுவார்கள் 
 
Quote

புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...அதை எல்லாம் கண்ணை மூடி கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்[உங்களை போன்றோர் ] இந்த கொலைகளை தட்டிக் கேட்க வெளிக்கிடுவது எந்த விதத்தில் நியாயம் ?...யாராயினும் உயிர் ,உயிர் தான் ...கொலை ,கொலை தான் என்பதை மறந்து விட  வேண்டாம் .

இத்தால் நீங்கள் சொல்லவருவதாவது அப்பாவிப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தை மீள பதிவு செய்தது கூட நியாயமற்ற செயல் என்பதேயாகும். அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில் இணைய நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை  தொடர்புகொண்டு எங்கள் தலைவர் பிள்ளையான் தலமையிலான குழு முன்னர் செய்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த செய்திகள் இன்னும் இணையத்தில் இருக்கின்றது . அவை நியாயமற்ற செயல்  ஆகவே  இந்த செய்திகளை நீக்குங்கள் என்று கோருங்கள்.  நான் எதோ மட்டக்கிளப்பில் நின்று ஆர்பாட்டம் செய்வதுபோல் என்னை தட்டிகேட்பதாக கற்பனை செய்து பதிவிடுவது பொருத்தமற்ற கருத்து. நான் பழைய யாழ்பதிவை இணைத்தேன் அவ்வளவுதான். முதலில் மீனகத்தை தொடர்பு கொண்டு நீக்க கோருங்கள். 

https://www.meenagam.com/?p=12004

Quote

வடக்கு அரசியலில் இருந்து முற்றாக வேறுபட்டது கிழக்கு ...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...முடியா விட்டால் ஒதுங்கி இருங்கள்.
உங்களுக்கு கீழ் தான் அவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.

இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. 

யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்? யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் ? புரியவில்லை. 

Quote

புலிகள் செய்யாத தனி மனித கொலைகளா ?...

கருணாவும் பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்தவர்ள் தானே ? அவர்களைத் தான் சொல்கின்றீர்களா ?

-------

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, சண்டமாருதன் said:

இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. 

யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்? யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் ? புரியவில்லை. 

இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா சண்டமாருதன்?

இவர்கள் சொல்லவருவது இதனைத்தான் என்று நினைக்கிறேன்.

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.

5. வடக்குத் தமிழர்கள் சொல்வதுபோல் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை ( உபயம் அண்மைய கருணாவின் செவ்வி - அது யுத்தம் மட்டும்தானாம்). அத்துடன் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பாவித்ததனாலேயே பலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வடக்குத் தமிழர்கள் அல்லது வன்னிப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதால், கிழக்குத் தமிழர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.. அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

On 10/8/2020 at 07:14, சண்டமாருதன் said:

தமிழததேசீயம் என்பதே சிதைந்த நிலையில் தேசீய செயற்பாடுகளுக்கு சாத்தியமில்லை.  தேசீயத்தை கடந்த அறம் சார்ந்த ஒரு பொது புரிதல் கூட கேள்விக் குரியதாக இருப்பதை குறிக்கவே இந்த பழைய செய்தியை இணைத்தேன்.  இதற்கு காரணம் இன்னார் என்ற சுட்டிக்காட்டுதலுக்கு கூட தகுதியற்ற நிலையில்  இருக்கின்றோம். 

முதலில் தேசியம் என்றால் என்னவென்று சற்றுத் தெளிவுபடுத்துங்கள் சண்டமாருதன். ஏனென்றால், இங்கு பலருக்கு தேசியம் என்றால் சுமந்திரனின் சுத்துமாத்து அரசியல் என்றுதான் விளக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் எதற்கெடுத்தாலும் சுமந்திரனின் அரசியலை எதிர்க்கிறோம் என்கிற போர்வையில் தேசியத்தை தேசியத்தை எதிர்க்கிறோம் என்று கூவுகிறார்கள்.

Edited by ரஞ்சித்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, ரஞ்சித் said:

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.

5. போர்க்குற்றங்களும், மனிதவுரிமை மீறள்களும் வன்னியிலேயே நடைபெற்றன. இதன்போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றில் வன்னிப் புலிகளுக்கு ஆதராவாய் நின்றவர்கள் அல்லது யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

ரகு  அண்ணை 
கீழே எனது பதில்கள் 

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.
    Correct அவனவன் உழைத்தால் தான் அவனவனுக்கு சோறு .

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.
    Wrong கிழக்கு தமிழர்கள் முஸ்லிம்களுடன் வடக்கு தமிழர்களை விட அதிக முன் அனுபவம்  கொண்டிருப்பவர்கள் என்பதால் சாத்தியப்படாதவை பின்னே போய்  இருப்பையும் பறிகொடுக்க தயாரில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். வடக்கு தமிழர்கள் தமக்காக  ஒரு பிரதிநிதியை கூட தெரிவுசெய்யமுடியாமல் இனவிகிதாசாரத்தில் நொண்டும் போது சிலவேளை  ஞானம் பிறக்கலாம், 

Don't Worry அப்போதும் புலம் பெயர்சினால் தமிழ் தேசியம் நீரூற்றி பேணப்படும். ஆனால்  அவர்களது பிள்ளைகளாளோ வெள்ளைகளுடனும் காப்பிலிகளுடனும் கலந்து ஜனநாயக பன்மைத்துவம் பேணப்படும்   

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
     Correct- கிழக்கு தமிழர்களின் முதல் பிரட்ச்சினை முஸ்லிம்கள் + அவர்களுடன் அரசியல் செய்யத்தெரியாத தமிழ் தலைமைகள் 

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.
    Correct- தேசிய தலைவர் போன்றொரு தலைவர் இனி வரப்போவதேயில்லை .Dot 

5. போர்க்குற்றங்களும், மனிதவுரிமை மீறள்களும் வன்னியிலேயே நடைபெற்றன. இதன்போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றில் வன்னிப் புலிகளுக்கு ஆதராவாய் நின்றவர்கள் அல்லது யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.
   Wrong- நீதி கேட்க்கும் பொறிமுறையை தெளிவாக மக்களிடம் விளக்கவேண்டியது நீதிகேட்பவர்களின் கடமை, எப்படி...? எதைவைத்து...?, யாரை வைத்து...? ,யார் கேட்பது...? என்ற இப்படியான கேள்விகளுக்கு  இந்த பத்தியை எழுதிய உங்களுக்கே பதில் தெரியாது என்பதுதான் உண்மை. உந்த அறப்படிச்ச ஜெனிவா கூத்துக்களை எல்லாம் அந்த அறப்படிச்ச கோமாளிகளிடமே விட்டு விடுங்கள், உபரி Budget வைத்துக்கொண்டு எப்படி காசை செலவழிப்பது என்று அவர்களே அவர்களை சொறிந்து  விளையாடிவிட்டு திருநாள் முடிந்ததும் அவர்களது வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்     

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.
   Wrong- கிழக்கு தமிழர்கள் கடைசி துரும்பாக தமது இருப்பையாவது  காப்பாற்றிவிடவேணும் என்றே பிரயத்தனப்படுகிறார்கள், சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதை விட வடக்கு தமிழர்கள் முற்றுமுழுதாக முஸ்லீம் மயாமாகிவிட்ட  கிழக்கிஸ்தானுடன் சேர்ந்து வாழும் நிலை வரக்கூடாது என்றே போராடுகிறார்கள்.  

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.
  Wrong- கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னும் தமிழ் தேசிய நீரோட்டத்தில் வடக்குடன் சேர்ந்து பங்கெடுத்தவர்கள் தான் ,ஆனால் வடக்கும் கிழக்கும் சேர்ந்து தேசியத்தை ஒப்படைத்தது கசப்போக்கிலிகளிடம், ஐந்தைந்து வருடம் குத்தகைக்கு எடுத்து இலங்கையிலே மிகவும் நலிவுற்ற இனமாக தமிழர்களை மாற்றிய சாதனையை மட்டுமே செய்திருக்கிறார்கள், சரி தேசியத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை தேசிய உணர்வாளர் நீங்கள் தான் சொல்லவேண்டும்  

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.
Wrong- யாரும் உங்களை அழிக்கத்தேவையில்லை, நீங்களே உங்களை அழித்துக்கொள்வீர்கள்,இந்தியா, சர்வதேச சமூகம்,உலகநாடுகள்  ,எமக்காதரவான சக்திகள் என்று தளரும் போதெல்லாம் பீ கோ ஊசி போட்டுவிட்டு குத்தகைக்கு எடுத்தவர்கள் குடும்பம் பிள்ளைகுட்டிகள் எல்லாம் வெளிநாட்டுகளில் வசித்துக்கொண்டு  Top Uni களில் படிக்க, ஈழ தேசியவாதிகள் ஒழுக்கெடுக்கும் குடிசைகளில் பீத்தல் ,விழுந்த சோட்டி ,சாரனுடன் தேசியம் தலைக்குத்தாக விழாமல் முரட்டு முட்டை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்  

Edited by அக்னியஷ்த்ரா
 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.