Jump to content

கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு

கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு

 

இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 17 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியான சோகம் நிகழ்ந்து உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.

மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தோட்டத்தின் அருகிலேயே குடியிருப்பும் உள்ளது. அங்குள்ள வீடுகளில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

நிலச்சரிவில்20 வீடுகள் நாசம்

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின். அந்த வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன.

அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களில் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். என்ன நடக்கிறது என்பதை கூட அவர்களால் உணர முடியவில்லை. அவர்களில் 3 பேர் மட்டும் எப்படியோ தப்பி விட்டனர். அவர்கள் அருகே உள்ள குடியிருப்புக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், கட்டப்பனை ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர் அங்கு வந்தனர். பொதுமக்கள், தீயணைப்பு படையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் சேர்ந்து மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சரிந்து கிடந்த மண் குவியல்களை அகற்றிய போது, ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகி இருப்பது தெரியவந்தது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த காந்திராஜ் (வயது 48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாத்துரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) உள்பட 17 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

இறந்த அனைவரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கோலாஞ்சேரி, மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீதம் உள்ள 42 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

ராஜமலையில் இருந்து பெட்டிமுடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் பெட்டிமுடி பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், அந்த பகுதியில் ஓடும் பெரியபாறை ஆற்றின் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் மீட்புக்குழுவினர் வந்து சேர தாமதம் ஆனதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலச்சரிவு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ்ஐ.ஜி.அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

பெட்டிமுடியில் நிலச்சரிவில் சிக்கி பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08050356/Terrible-landslide-near-Munnar-Kerala-17-Tamils-buried.vpf

மூணாறு நிலச்சரிவு: பெருந்துயரில் இருந்து மீண்டு வர துணைநிற்போம்! - சீமான்

மூணாறு நிலச்சரிவு: பெருந்துயரில் இருந்து மீண்டு வர துணைநிற்போம்! – சீமான்
நாள்: ஆகஸ்ட் 07, 2020In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகவும், 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் அளிக்கிறது.

நிலச்சரிவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு குடியிருப்புகள் மண்ணில் புதையுண்டன என்றச் செய்தியும் அங்கு வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதும் நமது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இப்பேரிடரில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கேரள அரசு, இப்பெருந்துயரில் இருந்து மீண்டு வரவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் துணைநிற்க வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமை என்பதனை உணர்ந்து தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்திட முன்வரவேண்டும்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/kerala-15plus-dead-in-idukki-landslide-more-than-60-missing/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த  மக்களுக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள நிலச்சரிவு - தொடரும் மீட்புப் பணி : தமிழக தொழிலாளர்களின் நிலை?

spacer.png

 

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, அடுத்தடுத்து பேரழிவு தரும் நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது. கன மழையால் நிலச் சரிவு, விமான விபத்து எனக் கேரளாவில் ஒரே நாளில் இரு துயர சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன. இது கேரள மக்களை மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் 2018 வெள்ளம் போல், கேரளா மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதன் விளைவாக, மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று மூணாறு. இப்பகுதியில் அதிகளவு தேயிலை தோட்டங்கள் பயிரிடப்படுகிறது. நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட்  என பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்குத் தங்கியிருப்பவர்களில், பெரும்பாலோனோர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில், மூணாறு அருகே பெட்டிமுடி டிவிசன், ராஜமலை பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில், தொழிலாளர்கள் தங்கியிருந்த 4 வரிசை வீடுகள் இடிந்து  மண்ணுக்குள் புதைந்தன.

காலை நேரம் என்பதால் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், உறங்கிக் கொண்டிருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். சுமார், 80க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கினர்.

இதில் இன்று வரை 22 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர், உள்ளூர் மக்கள், போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

spacer.png

காந்தி ராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) ஆகியோர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

மீதமுள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், இருட்டு காரணமாக நேற்று இரவு மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கலங்கும் கயத்தாறு

spacer.png

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதி மக்கள், நிலச்சரிவில் மாயமானவர்கள் தொடர்பாக அப்பகுதி தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 71 தொழிலாளர்கள் கேரள நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதில், பெரும்பாலோனோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் உறவினர்களைக் காண கேரளா செல்வதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ராஜமலை தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளித்ததாகத் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கேரள மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருக்கின்ற குடியிருப்புகள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த நிலச்சரிவு படம்பிடித்துக் காட்டி இருக்கின்றது.  எனவே இனியாவது தேயிலைத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் குடியிருப்பைப் பாதுகாப்பான இடங்களில் அமைத்திட வேண்டும். பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

spacer.png

சம்பவ இடத்தில், ஊழிக் காற்று வீசுவதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்றும், சாலைகள் அனைத்தும் அடைபட்டுக் கிடப்பதாலும் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சம்பவ இடத்துக்குச் செல்வேன் என்று கூறியுள்ளார். அதுபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை, விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்  கேரள முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

 

https://minnambalam.com/public/2020/08/08/39/kerala-munar-land-slide-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜமலை தோட்ட மண் சரிவில் பெருமளவானோர் காணாமல் போயினர்

IMG_20200808_123354-960x540.jpg?189db0&189db0

இந்தியா – கேரளா, மூணாறு அருகே ராஜமலை தோட்டத்தில் பெட்டிமுடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 60 பேருக்கும் மேற்பட்டோர் மண் மேடுகளுக்குள் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

பலத்த மழை காரணமாக நேற்று (07) அதிகாலை இடம்பெற்ற இந்த மண் சரிவில் தமிழகத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜமலை தோட்டத்துக்கு தொழிலாளர்களாக சென்றவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனோரை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக தெரியவருகிறது.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்வு

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்வு

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

 



கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.

மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தோட்டத்தின் அருகிலேயே குடியிருப்பும் உள்ளது. அங்குள்ள வீடுகளில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின். அந்த வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன.

அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களில் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். என்ன நடக்கிறது என்பதை கூட அவர்களால் உணர முடியவில்லை. அவர்களில் 3 பேர் மட்டும் எப்படியோ தப்பி விட்டனர். அவர்கள் அருகே உள்ள குடியிருப்புக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், கட்டப்பனை ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர் அங்கு வந்தனர். பொதுமக்கள், தீயணைப்பு படையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் சேர்ந்து மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சரிந்து கிடந்த மண் குவியல்களை அகற்றிய போது, ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகி இருப்பது தெரியவந்தது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த காந்திராஜ் (வயது 48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாத்துரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) உள்பட 17 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

இறந்த அனைவரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கோலாஞ்சேரி, மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலச்சரிவு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் ஐ.ஜி.அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.  மாயமான 41 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

ராஜமலையில் இருந்து பெட்டிமுடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் பெட்டிமுடி பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இடுக்கி மற்றும் வயநாட்டில் கடுமையான மழை தொடரும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08165334/At-least-23-people-were-killed-and-several-feared.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு நிலச்சரிவு: அடித்துச் செல்லப்படும் ஆடு மாடுகள்!

spacer.png

 

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், 40 வீடுகளில் வசித்து வந்த மக்கள் சிக்கியதோடு மட்டுமின்றி, அவர்களோடு ஆடு, மாடுகளும் அடியோடு மண்ணில் புதைந்துள்ளன.

கேரளாவில் கடந்த பத்து நாட்களாகப் பருவ மழை பெய்து வருகிறது. மூணாறு மேல் பகுதியில் ராஜமலை தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டம் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமானது. இங்கு,தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சென்ற தொழிலாளர்கள் தோட்ட வேலை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் டாடா நிறுவனம், ராஜமலைத் தோட்டத்தில், 40 வீடுகள் கட்டிக்கொடுத்து தொழிலாளர்களைத் தங்கவைத்தது. ஒரு வீட்டில் சராசரியாக நான்கு பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் நூறுக்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகளும் வளர்த்து வந்துள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 7), அதிகாலை 3.00 முதல் 4.00 மணியளவில் வீட்டில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் மண்ணில் புதைந்தும், வீடுகளோடு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கேரளா வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மக்களோடு, ஆடு, மாடுகள் மற்றும் மூன்று யானைகள் அடித்துச் செல்லும் காட்சி நெஞ்சைப் பதறவைக்கிறது.

 

ராஜமலைத் தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளிகள் மூணாறில் அடித்துச் செல்வது கேரள அரசுக்கு, காலை 4.30 மணிக்குத்தான் தெரிய வந்துள்ளது, அதன் பிறகு மீட்புப் படையினர் சென்று 22 உடல்களை மீட்டுள்ளனர்.

அதே நாளில் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் விமான நிலையத்தில் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்திய அளவுக்கு ராஜமலை தோட்டத் தொழிலாளிகளைக் காப்பாற்றுவதிலும், உடலை மீட்கவும் கவனம் செலுத்தவில்லை என்று தமிழகக் காவல்துறை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின், உறவினர்கள் வரச்சொல்லி அழைப்புக் கொடுத்த கேரள அரசு, செங்கோட்டை வழியாகச் சென்றவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி, மாநிலத்திற்குள் வந்தால் 15நாள் தனிமைப் படுத்துவோம் என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள் கேரள காவல்துறையினர்.

இதனால், தற்போது தமிழக கேரள எல்லையில் தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

https://minnambalam.com/public/2020/08/08/45/munnar-land-slide

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்பு-பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்பு-பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 78 தமிழர்கள் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இவர்கள் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளான கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். தோட்ட வளாகத்திலேயே உள்ள 20 வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர்.
 
 
கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்தபகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள 20 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
 
இதில் 16 பேர் படுகாயங்களுடனும், 17 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தொடர்மழை மற்றும் இருள் சூழ்ந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று காலையில் மீட்பு பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்குவியல்கள் அகற்றப்பட்டன. அவ்வப்போது மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்றைய தினம் மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
 
இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மழை பெய்து கொண்டே இருந்ததால் அவ்வப்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இருள்சூழ்ந்து காணப்பட்டதால் மாலை 6 மணியோடு மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
 
நேற்று மீட்கப்பட்டவர்களின் முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக பிணமாக மீட்கப்பட்ட 27 பேரில் 23 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது.
 
மீதமுள்ள 4 பேரின் பெயர்கள் தெரியவில்லை. அவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த அனைவரின் உடல்களும் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடத்தில் ராட்சத குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் அனைத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.
 
கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் ஒரே குழியில் உடல்கள் புதைக்கப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில் பலியானவர்களின் உறவினர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? உறவினர்கள் பரபரப்பு தகவல்

மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? உறவினர்கள் பரபரப்பு தகவல்

 

மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து உறவினர்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.
பதிவு: ஆகஸ்ட் 09,  2020 05:45 AM
நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள் கூறியதாவது:-

மண்ணோடு மூடப்பட்டகுடியிருப்புகள்

தேயிலை பயிரிடப்பட்ட மலைப்பகுதியின் அடிவாரத்திலேயே ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் அமைக்கப்பட்ட வீடுகளில் குடும்பத்துடன் தங்கி கயத்தாறு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அங்கு மலைப்பகுதியில் 120 குடியிருப்புகளில் அவர்கள் வசித்தனர்.

கனமழை காரணமாக மலைப்பகுதியில் இருந்து சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்து சிலர் வெளியேறி மேடான பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த மற்ற தொழிலாளர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். எனினும் அங்கு சில வினாடிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை அமுக்கியது.

மீட்பு பணி

இதற்கிடையே டீத்தூள் நிறுவன அதிகாரிகள் வசிக்கும் ராஜமலை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலம், கனமழை காரணமாக உடைந்தது.

நேற்று முன்தினம் காலையில் மாற்றுப்பாதை வழியாக சென்று, வனத்துறையினர், உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு செல்வதற்கு தற்காலிக பாலம் அமைத்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்பு துறையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தீவிரம் அடையும்போது, முன்னெச்சரிக்கையாக மலைப்பகுதியில் வசித்தவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்து இருந்தால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

இவ்வாறு அவர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/09014704/How-did-the-Kayatharu-workers-get-caught-in-the-three.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......இயற்கையின் சீற்றம் கொடுமையானது.........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

 

மூணாறு,

கேரளம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

 



இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டதாக் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 36 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் தங்கியிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி கனமழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய இணை மந்திரி முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/09154417/Kerala-landslide-death-toll-rises-to-42.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது

.மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது

மூணாறு, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

பெட்டிமுடி மலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் நாசமாயின. அந்த வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 13 பேரை உயிருடன் மீட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 2-வது நாளாக நேற்றுமுன்தினம் கொட்டும் மழையில் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் புதைந்த கிடந்த மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கொட்டும் மழையில் 3-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி நடந்தது. மண்ணுக்குள் புதைந்த குடியிருப்பு பகுதியில் 2 மோப்பநாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய்கள் அடையாளம் காட்டிய இடங்களில், பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி 16 உடல்களை மீட்டனர். அவை, அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காண முடியவில்லை.

இதற்கிடையே மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த உடல்கள், தனித்தனியாக சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன. அதன்பிறகு தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடத்தில், 2 ராட்சத குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நிலச்சரிவின் போது 3 பேர் உயிர் தப்பினர். மீட்பு குழுவினரால் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. மீதம் உள்ள 19 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இருக்கிறார்களா? அல்லது குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டர்களா? என்று தெரியவில்லை.

அவர்கள் 19 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சப்படுகிறது.

இதற்கிடையே பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 4-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

ராட்சத பாறைகள் மண்ணுடன் கலந்து கிடப்பதால், வீடுகளில் சிக்கி இருப்பவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரத்தில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மத்திய மந்திரி முரளி ஆகியோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

நிலச்சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர்

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மூணாறு பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான பெட்டிமுடியைச் சேர்ந்த அனந்தசிவன் (வயது 58) நிலச்சரிவு ஏற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அனந்தசிவன், அவருடைய மனைவி வேலுத்தாய் (55), மகன் பாரதிராஜா (35), மருமகள் ரேகா (26) உள்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், பள்ளிக்கூட மாணவர்கள் என தெரியவந்து உள்ளது. இவர்கள், அனைவரும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 படித்து வந்தனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/10024112/Terrible-landslide-near-Munnar-16-more-bodies-recovered.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

மூணாறு,
 
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது. மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
 
 
நேமக்கடா பகுதியில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் கனமழை பெய்ததாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 
 
நேற்றுவரை 26 உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்ட நிலையில் புதையுண்ட பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. நேற்று வரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டன.  தொடர்ந்து மீட்பு பணிகள்நடந்து வருகின்றது. 
 
இந்தநிலையில் நிலச்சரிவில் புதையுண்ட பகுதியில் இருந்து இன்று இதுவரை மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சிறிது தாமதமாகி வருகின்றன.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி | நாம் தமிழர் கட்சி

கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 07-08-2020 அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியையும் சொல்லொணாத் துயரத்தைத் தருகிற அதே வேளையில் இதுவரை 49 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது; இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை – பெட்டிமுடி மட்டுமின்றி இடுக்கி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள்.  குறிப்பாக நூற்றாண்டு காலமாகத் தேயிலைத் தோட்டங்களைத் தங்கள் குருதியால் நனைத்து வளர்த்தவர்களின் வாழ்க்கை தரம் மட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் நூற்றாண்டு காலம் பின்தங்கியே இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவு அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் அழித்துவிட்டது.

இதே கேரள மாநிலத்தில், கடந்த 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மிகவும் கொடுமையான துயர நிகழ்விற்கு நம்முடைய ஆறுதலையும் தெரிவித்து இருந்தோம். விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலரது உயிரை காப்பற்றியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு மற்றும் மத்திய அரசுகள் கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

கேரள முதல்வர், விமான விபத்திற்கு அமைச்சர் தலைமையில் மீட்பு குழு ஒன்றை அமைக்கிறார். இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கேரள முதல்வருடன் தொடர்புகொண்டு மீட்புபணிகள் விரைந்து நடைபெறுவதை உறுதி செய்ததுடன் தேவையான உதவிகள் புரிய மத்திய பேரிடர் மீட்பு படையையும் உடனடியாக அனுப்பி மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர். மத்திய அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால் அதே வேளையில் அதைவிட அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த துயர நிகழ்வில் சிக்குண்டவர்களை மீட்க இத்தகைய வேகத்துடன் மத்திய-மாநில அரசுகள் செயல்படவில்லையோ என்ற ஐயம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு  கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை.

மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே ஆனால் சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் ஐயா பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

எனவே மத்திய-மாநில அரசுகள்,

1. தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இனியும் இடங்கொடுக்காமல் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிலச்சரிவில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிகபட்ச இழப்பீட்டையும் உரிய துயர் துடைப்பு உதவிகளையும் வழங்க வேண்டும்.

3.இறந்தவர்களின் உடல்களை முறையாக நல்லடக்கம் செய்ய அவர்களது உறவினர்களிடம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. வீடு உட்பட அனைத்து  உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கையறு நிலையில் நிற்பவர்களுக்கு உடனடியாக மறுவாழ்விற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.

5. அதிக வேலை வாங்குவதற்காகத் தேயிலை தோட்டம் அமைந்துள்ள மலைச்சரிவுகளிலேயே தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்புகளை அமைத்து தந்துள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பாதுகாப்பான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-questions-why-delay-in-rescuing-tamil-victims-of-the-munnar-landslide-tragedy/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

 

இடுக்கி,
 
கேரளாவில் கடந்த ஜூன் 1ந்தேதி பருவமழை தொடங்கி பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், பல்வேறு நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.  தொடர்ந்து ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்தது.
 
 
இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
 
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.  இதில், ராஜமலை பகுதியில் கனமழையால் கடந்த வெள்ளி கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.
 
இந்த சம்பவத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வந்தது.  இந்நிலையில், சம்பவ பகுதியில் இருந்து இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டது.  இதனால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது என இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53  ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும்  ஒருவரின்  உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53- ஆக உயர்ந்தது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/12134534/pettimudi-death-toll-rises-53.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

 

மூணாறு, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.

இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 6-ம் நாளான நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பாறைகள் தகர்த்து அகற்றப்பட்டன.

நேற்று நடந்த மீட்பு பணியின்போது, வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்குள்ளேயே 5 நாட்களுக்கும் மேல் இருந்ததால் அவர்களின் முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதன் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.

தேயிலை தோட்ட உரிமையாளர்களின் உதவியுடன் அவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 7-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

https://www.dailythanthi.com/News/India/2020/08/13022049/The-death-toll-from-Moonar-landslides-has-risen-to.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கேரள நிலச்சரிவில் சிக்கிய மேலும் ஒரு குழந்தையின் உடல் மீட்பு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
கேரள நிலச்சரிவில் சிக்கிய மேலும் ஒரு குழந்தையின் உடல் மீட்பு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
 

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.


இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளின் மூலம் 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டதால் தற்போது பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/15081725/Recovery-of-one-more-child-trapped-in-Kerala-landslide.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
 

மூணாறு,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.  நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை நடந்த மீட்பு பணியில் 56 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 10வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. 

இதுபற்றி இடுக்கி மாவட்ட தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் இருவரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.  மீதமுள்ள காணாமல் போன 12 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/16142522/Kerala-landslide-death-toll-rises-to-58.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயும் பாதிக்கப்படுவது அப்பாவித் தொழிலாளர்கள் தான் ...ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பதிவு: ஆகஸ்ட் 20,  2020 05:15 AM
சென்னை,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6-ந் தேதி யன்று ராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரியை நான் 7-ந் தேதியன்று தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு பல ஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்த முழுத் தகவல்களை பெறும்படியும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு 7-ந் தேதியன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து, தேசிய மீட்புப் பணி குழுவினருடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டில் உள்ள உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர் ஒருவருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயினால் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/20050459/Rs-3-lakh-relief-for-families-of-Tamils-killed-in.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.