Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன

August 8, 2020

அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.
அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த பின்னரே அதனை முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக சில திருத்தங்கள் அவசியம்,நாட்டை ஆளும்விடயத்தில் தற்போதுள்ள விடயங்களை தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

gl-pire3-300x169.jpg

 

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர் 19 வது திருத்தம் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தடையாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளின் மூலம் புதிய ஜனாதிபதியின் பின்னர் மக்கள் புதிய வகையிலான நாடாளுமன்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது, முன்னைய நாடாளுமன்றத்திலிருந்து மாறுபட்ட நாடாளுமன்றத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது புலனாகியுள்ளது எனவும் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் அரசமைப்பை மாற்றுவதற்கான பலம் அரசாங்கத்துக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு அவ்வாறு செய்வதற்கான அவசியம் எதுவுமில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு பேரவையின் நியமனம் மூலம் அரசியல்செல்வாக்கற்ற ஆணைக்குழுக்களை பேணுவதே சுயாதீன குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்குகள் எட்டப்படவில்லை என்பதை அனைவரும் பார்க்ககூடியதாகவுள்ளது அந்த இலக்கினை அடைவதற்கு சில சீர்திருத்தங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://thinakkural.lk/article/60883

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணனும் தம்பியும் பொருதாமல் இருக்க கூடியவாறு திருத்தம் செய்து, வாழ்நாள் பூராவும் அரசியல் கட்டிலில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • திலீபன் எனும் திறனாளன்… தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன்.  திலீபன் பம்பரமாய் சுழன்று விடுதலைக்காய் 24 மணித்தியாலமும் உழைத்தவன். இன்றுடன் எட்டு நாட்கள், 192 மணித்தியாலங்கள் தண்ணீர், உணவு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் காட்சியை பார்க்கும் போது அவரை முதன்முதலில் சந்தித்த நாட்கள் என் நினைவில் நிழலாடின. அவரை முதன் முதலில் சந்தித்து உரையாடியது சுபாஸ் வீட்டில், அன்று திலீபன் என்னை அழைத்து சென்று சுபாஸ் வீட்டு தலைவாசலில் இருந்த சாய்மனை கதிரையில் இருந்து செய்யப்படவேண்டிய வேலைகளை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித் தந்ததும் பின்னர்  நண்பர்கள் சுபாஸ், நவம், சுகு, விக்கினா, நகுலேஸ்,  அஜித், குட்டி சிறி என்று எங்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாகி திலீபனுடன் வேலை செய்யத் தொடங்கியதுமாக நாட்கள் நகர்ந்தன. திலீபன் எப்போ எங்களை இந்தியா பயிற்சிக்கு அனுப்புவார் என்ற எண்ணத்துடன் தீலிபன் வரவை எதிர்பார்த்து மேஜர் சுபாஸ் வீட்டு தலைவாசலில் எல்லோரும் காத்திருப்போம் தலைமறைவாக அரசியல் பணி செய்த காலம். திலீபன் நினைத்த நேரம் தான் சந்திப்பு நிகழும். அமைப்பில் இணையும் தவிப்பில் இருந்த நண்பர்களாக எங்களுக்குள் சில விடயங்களை கதைப்போம் அவற்றில் ஒன்று  இந்தியா சென்று பயிற்சி பெற்று செல்லக்கிளி அம்மான் வீரமரணத்தின் பின் ஒட்டிய போஸ்டரில் நின்றது போல் எஸ்.எம்.ஜி துப்பாக்கியுடன் நின்று  நாங்களும் படம் எடுக்க வேண்டும், மற்றது மானிப்பாயில் யூலை மாதத்தில் திருப்பதி புத்தக சாலையின் வாசலில் இராணுவத்தால் படுகொலை செய்த மக்களிற்கும், எங்கள் நண்பர்களுக்காகவும் அதே இராணுவத்தை திருப்பி அடிக்க வேணும் என்ற மனக்குமுறல் உடன் உலாவந்தோம். திலீபன் இந்தியாவுக்கு இந்தக் கிழமை அனுப்புகிறேன் என்று கூறி பல மாதங்கள் கடந்து விட்டது.  ஒரு நாள் அவர் வரவை எதிர்பார்த்து சுபாஸ் வீட்டில் எல்லோரும் காத்திருந்தோம் வழமை போல் அன்றும் வந்து சாய்மனை கதிரையில் அமர்ந்த திலீபனை நோக்கி, எப்போ என்னை அனுப்ப போகிறியள் என்று அஜித் கேட்டான். கேட்ட கையோடு மேசையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு சாய்மனை கதிரையில் படுத்திருந் திலீபனை பார்த்து இந்தமுறை பேய்க்காட்டினால் குத்துவன் என்று கோபமாக கிட்ட வந்தான் நாங்கள் எல்லாம் பாய்ந்து அவனை பிடித்து கத்தரிக்கோலை பறித்துக் கொண்டோம். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத மயான அமைதி தலைவாசலில் குடி கொண்டது. அமைதியாக அஜித்தை அழைத்து புத்திமதி கூறிவிட்டு அடுத்தமுறை கட்டாயம் அனுப்புவேன் யோசிக்க வேண்டாம் உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் கூறி விடைபெற்றார். அதன் பின் நாங்கள் அஜித்தை நீ மொக்கு வேலை பார்த்து விட்டாய் என்று எல்லோரும் வாய்க்கு வந்த படி பேசினோம்.  ஆனால் அடுத்த முறை தலைவாசல் சந்திப்பில் அஜித்தை காணவில்லை. தீலிபன் எங்கள் குழுவில் அவனை மாத்திரம் இந்தியா அனுப்பி விட்டார். எங்கள் குழுவில் கோபம் கொண்ட நண்பன் விக்கினா ரெலி என்ற இயக்கத்தில் இணைந்து விட்டான் சுகு அதிரடிப்படை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டான் குட்டிச்சிறி நான் சுபாஸ் திலீபன் பின்னால் நம்பிக்கையோடு திரிந்தோம். நவம் ரெலோ இயக்கத்திற்கு சென்றுவிட்டார். எங்கள் நண்பர்கள் வட்டம் சுருங்கத் தொடங்கியது நகுலேஸ் வெளிநாடு சென்றுவிட்டார். இத்தனை குழப்பங்களையும் அந்த ஆரம்ப காலங்களில் எங்கள் வட்டத்திற்குள் அமைதியாக சந்தித்து பொறுமையாக எல்லாப் பிரச்சனைகளையும் முகம் கொடுத்த திலீபன் அன்றும் அமைதியின்,  பொறுமையின் சிகரமாக இருந்தான் இன்று அமைதியாக உணர்வு இழந்து கிடக்கும் நிலையில் காணும்போது வேதனையாகயிருந்தது. நான்கு நாட்களின் பின்னர் ரெலோ நவத்தை இந்தியா அனுப்பவில்லை திரும்ப வந்து திலீபனுடன் கதைத்து சேர்ந்துவிட்டார் போராளிகளினது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பொறுமையாக எப்படி இந்த விடுதலை இயக்கத்தை வளர்த்தார் என்பதிற்கு இச்சம்பவங்கள் சிறு  எடுத்துக்காட்டுகளே. அந்த நாட்களில் நவாலியில் களைவோடை அம்மன் கோவிலில் இருந்த ஐயாவிடம் கதைத்து விட்டு சாப்பாடும் வேண்டி சாப்பிடுவதும் வழக்கம். இப்படி ஒரு நாள் அங்கிருந்து சயிக்கிளில் வெளிக்கிட்டு சிறு கறுப்பு சூட்கேஸ் ஒன்றுடன் வட்டுக்கோட்டை வீதியில் ஏறி நவாலி சேச்சடி என்ற இடத்திற்கு நான் சுபாஸ் நவம், திலீபனுடன் அங்குள்ள நண்பர்களான செல்லக்கிளி, மற்றும் ரவியை சந்திப்பதற்காக சேச் வாசலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அவர்களுடன் தீலிபன் கதைத்துக் கொண்டு நின்றார். எதிர்பாராமல் டேவிற்சனை தேடி சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒழுங்கையால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்தது தெரிந்தவுடன் எங்களை மெதுவாக கலைந்து செல்லுமாறு பணித்துவிட்டு தான் பஸ்ஸிற்கு போகும் பயணிமாதிரி நின்று கொண்டார். நானும் சுபாசும் எதிரில் உள்ள ஒழுங்கை ஒன்றில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஜீப் வண்டி சொல்லி வைத்தமாதிரி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றது. தீலிபனிடம் இறங்கி கதைத்து கொண்டு நின்றார்கள். தீடீர் என்று தீலிபன் சூட்கேஸால் சுழட்டி அடிப்பது தெரிந்தது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் ஒழுங்கையால் ஓடி விட்டோம். அன்று கண்முன்னால் அந்த அமைதியான திலீபனின் துணிவையும், தந்திரத்தையும் கண்டோம். பொறுமை, செயல்திறன், வீரம், சமயோசித புத்தி என பல திறன்களை ஒருங்கே கொண்ட திலீபன், இன்றைய தினம் தன் இனத்தின் உறுதியை உணர்த்த உணர்விழந்து கிடக்கிறான். திலீபனின் திறனோடும், பயிற்சியோடும் வளர்ந்த பலர், 33 ஆண்டுகளின் பின் உலகெங்கும் சிதறி கிடைக்க அவர் கனவும், சொந்த மண்ணும் இன்னமும் அந்த மக்கள் புரட்சிக்காக காத்திருக்கிறது.   http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-8/
  • அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன்  by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வேண்டும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இந்த விகாராதிபதிக்கு எதிராக உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள மக்களுக்காக பேசவேண்டும் என்ற ஒரு வினயமான கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாது. அவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். பொலிஸாரை, கிராம சேவகரை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுதல் விடுத்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக இதுவரையில் சரியான முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார். எனினும்,அவர் தொடர்ந்தும் அரச அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். நாங்கள் மத குருமாரை மதிக்கின்றோம். நாங்கள் அவர்களை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/அம்பிட்டிய-சுமனரத்ன-தேரர/
  • அகிலம் வாழ்ந்திட மகிமை சிறந்திட அகமது நபி பிறந்தார்  
  • சமர்க்கள நாயகனின் உறவினர்கள் சமூகத்தில் படும் பாடு  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.