Jump to content

ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..!

(05.08.2020)

 

தேர்தல் திருவிழா முடிந்து 

தேசம் அமைதியாகிறது

உங்கள் கட்சிதேர்களை 

ஊர் ஊராய் கொண்டு சென்று

வெண்றும், தோற்றும் 

விழா முடிவாயிற்று.

 

ஒன்றாக நிற்க்காமைல் 

ஒவ்வொன்றாய் நின்றாலும்

வெண்றவர்கள் நீங்கள்

 நாங்கள் 

வேறு வேறு தமிழர் இல்லை

தனிப்பட்ட குரோதங்கள் 

தலை தூக்கி ஆடாமல்-புல்

 

பனிகாய பகலவனின் 

கதிர் போலே நீங்கள்-நெல்

மணியாக அனைவருக்கும் 

நிதம் சோறு படைப் பீர்.

 

உள்ளக் குமுறலினால் 

உடைபட்டுப் போனாலும்

மக்களை..

அள்ளக் குறையாத 

அன்போடு பாருங்கள்.

 

தெள்ளத் தெளிவாக-எம் 

திருக்கரத்தில் மை பூசி

வெல்லத் தந்தவாக்கை 

வீணடிது போடாதீர்.

 

வடகிழக்கு பிரதேசம் 

வாழ்ந்தவர்கள் தமிழரென

அடையாளம் அனைவருக்கும் 

ஆதி தொட்டு தெரிந்திருக்கும்.

 

பாராளுமண்றமதில் 

பகை முடிச்சுப் போடாமல்

தாராள மனம் கொண்டு 

அனைவரும்..

தமிழ் வளர குரல்கொடுப்பீர்.

 

போராலும்,பொருளாதாரத்தாலும் 

பொலிவிழந்த மக்களுக்கு

பொதுச்சேவைக் கடவுள்களாய்

புதுமை செய்வீர் நம்புகின்றோம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை வீண் போக கூடாது என்பது தான் எல்லோருடைய ஆசையும் காலம் பதில் சொல்லும் .  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

நம்பிக்கை வீண் போக கூடாது என்பது தான் எல்லோருடைய ஆசையும் காலம் பதில் சொல்லும் .  .

கவிதை பார்த்து கருத்தெழுதிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து ஆண்டுக்கொருக்காய் 

வரும் திருவிழாவில்

சங்கிலி அறுத்தவனுக்கும்

சங்கை அறுத்தவனுக்கும்

சங்கரைத்தண்ணி ஊத்தினவனுக்கும்

சத்திரம் வைச்சு அன்னமிட்டவனுக்கும்

வித்தியாசம் தெரியாமல்

அள்ளி போடும் மதிகெட்ட வாக்குகளால்

மதிகெட்டோர் வாரி வழங்கும்

மேடை வாக்குகள் பலிக்குமா...?!

 

இலவு காத்து ஏமாந்த கிளிகளாய் 

பாமரக் கூட்டமாய் மக்கள் உள்ளவரை

மாளிகையில் குடியிருந்து

அரியணையில் குந்தி இருந்து

ஏவலிட்டு

அடிமைப்படுத்தும் கூட்டம் 

திருவிழாவுக்கு திருவிழா

உருமாறி உருமாறி

பெருக்கெடுக்கும் கீழ்நிலை தான் மிஞ்சும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்தது, இனி நடக்க வேண்டியதைப்  பார்க்க வேண்டியதுதான்.....நல்ல கவிதை கோபி ......!   😁

Link to comment
Share on other sites

நல்ல கவிதை. ஒவ்வொரு தேர்தலும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகி ஏமாற்றத்துடனேயே முடிவுபெறுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ஆனா நடப்பதோ வேறு, நல்ல கவிதை இனி ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கும் கூத்தை கண்மூடி பார்க்க வேண்டியதுதான்

11 hours ago, பசுவூர்க்கோபி said:

பாராளுமண்றமதில் 

பகை முடிச்சுப் போடாமல்

தாராள மனம் கொண்டு 

அனைவரும்..

தமிழ் வளர குரல்கொடுப்பீர்.

நடக்காது, குடும்பி சண்டைதான் நடக்கும்

 

6 hours ago, nedukkalapoovan said:

இலவு காத்து ஏமாந்த கிளிகளாய் 

பாமரக் கூட்டமாய் மக்கள் உள்ளவரை

மாளிகையில் குடியிருந்து

அரியணையில் குந்தி இருந்து

இது தொடர்கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

பசுவூரானுக்கு ஆசைகள் அதிகம். 😀

நன்றிகள் Kapithan 5வருடத்துக்கு ஒரு ஆசை வரத்தான் செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஐந்து ஆண்டுக்கொருக்காய் 

வரும் திருவிழாவில்

சங்கிலி அறுத்தவனுக்கும்

சங்கை அறுத்தவனுக்கும்

சங்கரைத்தண்ணி ஊத்தினவனுக்கும்

சத்திரம் வைச்சு அன்னமிட்டவனுக்கும்

வித்தியாசம் தெரியாமல்

அள்ளி போடும் மதிகெட்ட வாக்குகளால்

மதிகெட்டோர் வாரி வழங்கும்

மேடை வாக்குகள் பலிக்குமா...?!

 

இலவு காத்து ஏமாந்த கிளிகளாய் 

பாமரக் கூட்டமாய் மக்கள் உள்ளவரை

மாளிகையில் குடியிருந்து

அரியணையில் குந்தி இருந்து

ஏவலிட்டு

அடிமைப்படுத்தும் கூட்டம் 

திருவிழாவுக்கு திருவிழா

உருமாறி உருமாறி

பெருக்கெடுக்கும் கீழ்நிலை தான் மிஞ்சும். 

கவிதை பார்த்து காட்டமாய் எழுதிய உங்கள் கவிதை பார்க்கும்போது தெரிகிறது உண்மைகள் என்னதான் செய்வதோ?  நெஞ்சார்ந்த நன்றிகள்.

3 hours ago, nige said:

நல்ல கவிதை. ஒவ்வொரு தேர்தலும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகி ஏமாற்றத்துடனேயே முடிவுபெறுகிறது. 

உளமார்ந்த நன்றிகள்.

2 hours ago, உடையார் said:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ஆனா நடப்பதோ வேறு, நல்ல கவிதை இனி ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கும் கூத்தை கண்மூடி பார்க்க வேண்டியதுதான்

நடக்காது, குடும்பி சண்டைதான் நடக்கும்

 

இது தொடர்கதை

அரசியலை அழகாக சொன்னீர்கள்    நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nige said:

நல்ல கவிதை. ஒவ்வொரு தேர்தலும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகி ஏமாற்றத்துடனேயே முடிவுபெறுகிறது. 

உண்மைதான் நன்றிகள்Nige

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ஆனா நடப்பதோ வேறு, நல்ல கவிதை இனி ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கும் கூத்தை கண்மூடி பார்க்க வேண்டியதுதான்

நடக்காது, குடும்பி சண்டைதான் நடக்கும்

 

இது தொடர்கதை

எங்களின் மனதில் எத்தனை திருப்புமுனை வரவேண்டுமென்று நினைத்தாலும் நீங்கள் சொல்வதே உண்மை நெஞ்சார்ந்த நன்றிகள் உடையார் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை & பதில் கவிதை.. நன்றி தோழர்கள் பசுவூர் கோபி & நெடுக்காலபோவான்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 08:44, பசுவூர்க்கோபி said:

தெள்ளத் தெளிவாக-எம் 

திருக்கரத்தில் மை பூசி

வெல்லத் தந்தவாக்கை 

வீணடிது போடாதீர்.

வாக்கு போட்டவன் பேசமலிருக்கிறான்

போடாதவன் துள்ளிக் குதிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை & பதில் கவிதை.. நன்றி தோழர்கள் பசுவூர் கோபி & நெடுக்காலபோவான்..👍

பராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

18 hours ago, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டவன் பேசமலிருக்கிறான்

போடாதவன் துள்ளிக் குதிக்கிறான்.

வாக்குப் போட்ட உறவுகளின் ஆதங்கமே இந்தக்கவிதை  நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.