Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தொடர்ந்து மக்கள் தொடர்பு அற்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள். தாயகம் அல்லது சொந்த மண் என்பதற்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் வித்தியாசம் தெரியாதோரோடு வாதிட்டு?????

வந்தேறி என்றால் என்னவென்று புரியவில்லையாக்கும்! நாங்கள் என்ன ஏலியன் உலகத்திலா இருக்கின்றோம்?

வரலாற்றில் மனிதர்கள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களை  வந்தேறிகள் என்பது இனவாதம். இல்லை இல்லை என்று சொல்வதன் மூலம் துவேஷத்தை மறைக்கமுடியாது.

1 hour ago, Eppothum Thamizhan said:

ஒபாமாவை கருணாநிதி குடும்பத்துடன் ஒப்பிடுகிறீர்கள்!!😬

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

வந்தேறி என்றால் என்னவென்று புரியவில்லையாக்கும்! நாங்கள் என்ன ஏலியன் உலகத்திலா இருக்கின்றோம்?

வரலாற்றில் மனிதர்கள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களை  வந்தேறிகள் என்பது இனவாதம். இல்லை இல்லை என்று சொல்வதன் மூலம் துவேஷத்தை மறைக்கமுடியாது.

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

ஊரில் இருக்கும் உங்கள் சொந்தக் காணி பற்றிச் சொல்கிறீர்களா அண்ணா??? எனக்குப் புரியாமல் தான் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஊரில் இருக்கும் உங்கள் சொந்தக் காணி பற்றிச் சொல்கிறீர்களா அண்ணா??? எனக்குப் புரியாமல் தான் கேட்கிறேன்.

ஆமாம் சகோதரி🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே பொருத்தமற்றது . நாம் நிலங்களை மட்டுமல்ல எம்மையே இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை தமிழ்த் தேசிய எதிர்நிலைக் கருத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

கிருபன் நீங்கள் இந்திய அரசியல் தெரிந்துதான் கதைக்கிறீர்களா புரியவில்லை. 2011இல் திமுக/காங்கிரஸ் கூட்டணியை இல்லாதொழிப்பதே தமது முக்கிய நோக்கம் என்பதை  சீமான் பலதடவை கூறியுள்ளாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

வணக்கம் விசுகர்!
இங்கு பல வருடங்களாக ஒரே தன்மையுடைய கேள்விகளுக்கு நீங்கள் உட்பட நெடுக்கால போவான்,நாதமுனி,இசைக்கலைஞன் இன்னும் பல பலர் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.இருந்தும் எவ்வித சூடு சுரணையுமில்லாமல் அவர்களும்கிணற்று தவளை போல்...........
சீமான் சம்பந்தப்பட்ட இவர்களின் கேள்விகளுக்கு  சீமானே நேரடியாக பதிலளித்த காணொளிகள் பல இருக்கின்றன. இருந்தும் விதண்டாவாத கேள்விகள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தவே முனைகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உலக நாடுகளுட்பட நிறுனங்களிடமும்  அவை அரசு மற்றும்  அரசு சார நிறுவனங்கள்  இன்னும் பிற தொழிற்கூடங்களவரை தமது கொள்கையை  தமது நலனை முன்னிறுத்தித்தி அது தீமை பயப்பதாயினும்  நடைமுறைப்படுத்த களைப்படையச் செய்தல்  என்ற ஒரு முறையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவார்கள்.  இதனையே இலங்கையரசும் இலங்கைக்கு ஒததூதும் அரசுகளும்  நபர்களும் செய்துவருகிறார்கள் . இவர்கள் மாறவேபோவதில்லை. ஐயர் வரவில்லை என்பதற்காக அமவாசை  வராமலா போய்விடுகிறது. (குறிப்பு: நான் அமைதிப்படைத் திரப்பட அமவாசையைச் சுட்டுவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

கூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள்?

அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவர்களும் ஏமாந்தார்கள், அவர்களை நம்பி வாக்குப்போட்ட மக்களும் ஏமாந்து போனார்கள்.. 

மக்களுக்கும் தெரியும் முன்னாள் நீதியரசரும் ஒன்றும் செய்ய முடியாது.. கஜன்கள் கூட்டணியும் 5 வருடங்களிலும் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று... ஆனால் மாற்றம் ஒன்று வேண்டும் என்பதுதான் மட்டும் நன்றாக விளங்கியிருக்கிறது.. 

வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் கிடைத்த வாக்குகள் கூறுகிறது.. நான்றிந்தவரையில் இது கஜன்கள் கூட்டணிக்கு நன்கு தெரியும், அவர்கள் இதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
இங்கு பல வருடங்களாக ஒரே தன்மையுடைய கேள்விகளுக்கு நீங்கள் உட்பட நெடுக்கால போவான்,நாதமுனி,இசைக்கலைஞன் இன்னும் பல பலர் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.இருந்தும் எவ்வித சூடு சுரணையுமில்லாமல் அவர்களும்கிணற்று தவளை போல்...........
சீமான் சம்பந்தப்பட்ட இவர்களின் கேள்விகளுக்கு  சீமானே நேரடியாக பதிலளித்த காணொளிகள் பல இருக்கின்றன. இருந்தும் விதண்டாவாத கேள்விகள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தவே முனைகின்றனர்.

உண்மையில் சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ என் போன்றவர்கள் 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை. மாறாக குறை பிடிப்போர் அல்லது அவர் ஒன்றுமே இல்லை என்போர் தான் இரவும் பகலும் அவருக்கு பின்னால் திரிகிறார்கள் ஒருவரை இப்படி பின் தொடர்ந்தால் நாற்றத்தை மட்டுமே நுகர முடியும் ☹️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுகளும் விமர்சனங்களும் முக்கியம் தான். ஆனால் எல்லாருக்கும் ஆக குறைஞ்சது ஒரு வருசமாவது அவகாசம் கொடுங்கோவன். என்ன செய்யினம் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 இம்முறை பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதால் கடைசி ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

 இம்முறை பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதால் கடைசி ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.

எல்லோரும் சேர்ந்து பார்லிமன்ற் கன்ரீனில் ரீ குடிப்பார்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல கருத்து.

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் கிடைத்த வாக்குகள் கூறுகிறது.. நான்றிந்தவரையில் இது கஜன்கள் கூட்டணிக்கு நன்கு தெரியும்,

நுறுவீதம் உண்மை.

அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருந்து இவர்களை ஆதரித்த ஈழ வீரர்களை மீறி எடுப்பார்களா என்பதை பார்ப்போம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உண்மையில் சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ என் போன்றவர்கள் 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை. மாறாக குறை பிடிப்போர் அல்லது அவர் ஒன்றுமே இல்லை என்போர் தான் இரவும் பகலும் அவருக்கு பின்னால் திரிகிறார்கள் ஒருவரை இப்படி பின் தொடர்ந்தால் நாற்றத்தை மட்டுமே நுகர முடியும் ☹️ 

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

அதுதான் பெயரிலேயே இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது.   வடிவேலுக்கு எதோ ஒரு படத்தில சொல்லுற மாதிரி, நீங்கள் அதுக்கு சரிவரமாட்டீர்கள் பாருங்கோ!!

ஒருவரை, அவரது கொள்கைகளை அறிய அவரது எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முன்னோர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

சீமானுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்ததில்லை. உண்மை தான். ஆனால் தமிழர்கள் ஒன்று திரண்டால் சிங்களம் சிறுபான்மையினராகிவிடுவர். தமிழர் ஒன்று படாமல் தமிழகம் தமிழர் கையில் வராமல் தமிழருக்கு விடிவில்லை. இதுவே எனது நிலைப்பாடு.

இன்று தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பது சீமான் மட்டுமே.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

எல்லோரும் சேர்ந்து பார்லிமன்ற் கன்ரீனில் ரீ குடிப்பார்கள்😁

அதுவும் குடிக்க வேணும் தானே.அதுவும் 150 ரூபா flat rate  என்றால் விடுவார்களா??பார்ப்போம் இம்முறையாவது சித்தண்ணா வாய் திறந்து ஏதாவது சொல்கிறாரா என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 11:45, விளங்க நினைப்பவன் said:

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

உப்பிடி தான் ஒரு யாழ்கள விமர்சகர் சைக்க்கிள் உருண்டு விழும் பிரண்டு விழும் என்று எதிர்வு கூறினவர். இப்போ அவர்கள் வென்று தானே வந்துள்ளார்கள். அதுவும் சுத்துமாத்து இல்லாமல் என்பது தான் point. 11 வருடமாக பேக்காட்டிய ஆட்களை பற்றி விமர்சிக்க ஏன் பயமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 18:33, குமாரசாமி said:

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

நானும் ஆயிரம் தடவை யோசிச்சு பார்த்தேன் இந்த தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று,

கடைசிவரை விளங்கவேயில்லை,

சீமான் ஆதரவு பெற்றதனால்தான் ஸ்ரீலங்கா தேர்தலில் முண்ணனி பெற்றார்களா?

அந்த அளவிற்கு தாயகத்தில் சீமான் அலை வீசுகிறதா?

சும்மா சொல்லகூடாது  எம்ஜிஆருக்கு அப்புறம் ஈழதமிழர் பிரதேசத்தின் அரசியலை புரட்டி போடும் செல்வாக்கு உள்ளவர்தான் சீமான் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அதுதான் பெயரிலேயே இருக்கே.

மணித்தியால தமிழன் நிமிட தமிழன்  செக்கன் தமிழன் இல்லை எப்போதும் தமிழன் என்று பெயரை ஆங்கிலத்தில் வைத்த மாதிரியா😜
சீமான் கோமாளியின் கொள்கைகளை அறிய   எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

நானும் ஆயிரம் தடவை யோசிச்சு பார்த்தேன் இந்த தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று,

கடைசிவரை விளங்கவேயில்லை,

சீமான் ஆதரவு பெற்றதனால்தான் ஸ்ரீலங்கா தேர்தலில் முண்ணனி பெற்றார்களா?

அந்த அளவிற்கு தாயகத்தில் சீமான் அலை வீசுகிறதா?

சும்மா சொல்லகூடாது  எம்ஜிஆருக்கு அப்புறம் ஈழதமிழர் பிரதேசத்தின் அரசியலை புரட்டி போடும் செல்வாக்கு உள்ளவர்தான் சீமான் போல கிடக்கு.

இது எல்லாம் வெறும் விளம்பரம்.

கலியாண வீட்டில் மாப்பிளையாகவும், செத்தவீட்டில் பிணமாகவும் இருந்தால்தானே எல்லோரினதும் பார்வை கிடைக்கும்.

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

ஆனால் இதெல்லாம் செபாஸ்டியன் சைமனின் ஈழத் தம்பிகளுக்கு முக்கியம் இல்லை. எவ்வளவு பார்வை, எத்தனை லைக்குகள் கிடைக்கின்றன என்பதுதானே முக்கியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.