Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

நீங்கள் சீமானை சைமன் என்று விழிப்பது (அது தான் அவரின் பெயர் என்றாலும்) உங்களுடன் எதிர் கருத்தாடும் உறவுகளை கோபப்படுத்த என்றே எனக்கு தோணுது. அது தப்பு அண்ணே. 

செபாஸ்டியன் சைமன் என்ற சொந்த பெயரில் அழைப்பது தானே சரியானது. சொந்த பெயரை சொல்வதை அவரும் இரசிகர்களும் ஏன் விரும்பவில்லை?

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மானை முரளிதரன் என்று கூப்பிடுவதில் என்ன நியாயமோ அதே நியாயம் தான் அண்ணே. 

கடுப்புத்தான் எல்லாத்துக்கும் காரணம். கோப படுத்தவேணும். அதுதான் அப்போதைய தேவை 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இப்படி அவரை விழிப்பதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? செபஸ்டியான் சைமன் என்பதன்மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? அவர் ஒரு கிறீஸ்த்தவர், ஆகவே இந்துமதத்திற்கு எதிரானவர் என்பதைத்தானே? இப்படி வசைபாடும் உங்களுக்கும் இந்துமத வாதிகளுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?

கிறீஸ்த்தவர் என்றால் தமிழரின் நல்ன்கள் பற்றிப் பேசக்கூடாதெனும் சட்டம் வைத்திருக்கிறீர்களா?

பொதுவெளியில் உள்ளதைச் சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும்?

சீமானின் சுத்துமாத்துக்கள் புரியவேண்டும் என்பதற்காகத்தான் பொதுவெளியில் இருந்த பெயரைப் பாவித்தேன். வந்தேறிகள் என்று பிரிவினை பேசும் ஒருவர் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதால் உள்ள ஆபத்துக்களைப் புரியவேண்டும்.

சீமானும் இந்துமதத்தை ஆராதிக்கின்றார்தானே. அவர் பா.ஜ.க. உடன் கூட்டமைக்கும் சாத்தியம்தான் அதிகம். அரசியல் கூட்டமைப்பில்லாமல் தமிழ்நாட்டில் அதிகாரம் வராது.  தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இல்லாமல், மத்தியிலுள்ள அரசின் வெளியுறவுக்கொள்கைகளில் ஒரு மாற்றமும் வராது. இது எல்லாம் தெரிந்துதான் கட்சி நடாத்துகின்றார்கள். 

கனடாவில் இருந்து திருப்பப்பட்டபோது இந்துவில் வந்த செய்தி.

Director Seeman arrested and deported from Canada

Canadian immigration officials arrested and deported Tamil film director, Sebastian Seeman on Thursday night on charges of making inflammatory speech that coincided with the birth anniversary of the LTTE chief, Velupillai Prabakaran.

https://www.thehindu.com/news/international/Director-Seeman-arrested-and-deported-from-Canada/article16894481.ece

3 hours ago, ரஞ்சித் said:

களத்தில் நீங்கள் ஒரு மட்டுருத்துனராக இருப்பதால் இப்படி எழுதமுடிகிறது. ஏனையவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவுமே செய்யப்போவதில்லை. 

இது வேறயா!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

Director Seeman arrested and deported from Canada

Canadian immigration officials arrested and deported Tamil film director, Sebastian Seeman on Thursday night on charges of making inflammatory speech that coincided with the birth anniversary of the LTTE chief, Velupillai Prabakaran.

https://www.thehindu.com/news/international/Director-Seeman-arrested-and-deported-from-Canada/article16894481.ece

நான் மேலே சொன்னதை வாசிக்காமல் இந்து பத்திரிகை செய்தி என்று இணைக்கிறீர்கள்.

இந்த கதையின் மூலமே ஜெயராஜ் என்று சொன்னேன். அவர் தான் இந்து, பிராண்ட்லைன் பத்திரிகையின் கனேடிய நிருபர் அல்லது பத்தி எழுத்தாளர். அவரது மூலக் கருத்துக்கு ரெட்டியார், (Sebastian Simon or Sebastian Seeman) பெயரை சொருகினார் என்ற தகவலும் உண்டு.

ஒன்று உங்களுக்கு புரிய வேண்டும் அல்லது புரிந்து சொல்வதையாவது கேட்க வேண்டும்.

இல்லாவிடில், சரிதான்.... இவர் அலம்பறை பண்ணும் வெத்து வெட்டு என்று, கவனிக்காமல் போய் விடுவார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சீமான் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நானும் சைமன் என்றே அழைத்து வந்தனான். ஆனால் அவ்வாறு அழைப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதால் நிறுத்தி விட்டேன். அத்துடன் அவரை அப்படிக் கூப்பிடுகின்றவர்களின் உள் நோக்கங்களில் ஒன்று அவரை கிறிஸ்தவ மதம் ஒன்றைச் சார்ந்தவர் என்று காட்டுவதற்காகவும் என்றும் புரிந்து கொண்டேன்.  இது மத ரீதியிலான ஒடுக்குதல்களில் ஒன்று.

சீமான் மீது ஈழத்தமிழர் தொடபான விடயங்களில் கடுமையான விமர்சனம் இன்றும் எனக்கு இருந்தாலும் அவரை செபஸ்ரியன் சைமன் என்று அழைப்பது அநாகரீக அரசியலின் அம்சம் என்றே நம்புகின்றேன். இதை தவிர்ப்பது ஆரோக்கியமான விமர்சனத்தை உருவாக்கும்.

அவரும் மக்களை ஏமாத்த  தான் தன்னுடைய பேரை சீமான் என்று மாத்தி இருக்கார் இல்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நான் மேலே சொன்னதை வாசிக்காமல் இந்து பத்திரிகை செய்தி என்று இணைக்கிறீர்கள்.

வாசித்ததால்தான் “thanks” என்று பச்சை குத்தினேன் நாதம்ஸ். பொது வெளியில் இருப்பதைக் காட்டத்தான் இந்து பத்திரிகைச் செய்தியை இணைத்தேன். அது டிபிஎஸ் மூலம் வந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, முதல்வன் said:

கருணா அம்மானை முரளிதரன் என்று கூப்பிடுவதில் என்ன நியாயமோ அதே நியாயம் தான் அண்ணே. 

கடுப்புத்தான் எல்லாத்துக்கும் காரணம். கோப படுத்தவேணும். அதுதான் அப்போதைய தேவை 😝

கருணா அம்மான்  என்னும் பெயர் தலைவர் வைத்தது.
முரளிதரன் அவரது சொந்த பேர் .
இவர் ஒருத்தரையும் ஏமாத்த பேரை மாத்தேல்ல .
ஆகவே ஒப்பீடு செல்லாது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

வாசித்ததால்தான் “thanks” என்று பச்சை குத்தினேன் நாதம்ஸ்.

அதன் பிறகும்.... இந்து பத்திரிகை இணைப்பினை பதிந்தால்.... நான் எதனை விசாரிக்காமல் நம்புகிறேனோ, அதனை நீங்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு தானே.

2009ல் புலிகளுக்கு எதிரானவர்கள் என்கிற நிலைப்பாட்டில், இந்து, துக்ளக், ஜெயராஜ் இருந்தார்கள். 

புலிகள் சார்பாக விசுவாசத்தில் உறுதியாக இருந்த சீமான் மீது விசம் கக்கினர்.

சீமான் கனடாவில் பேசியதை, அங்கே தடை செய்யப்பட்ட புலிகள் ஆதரவாக பேசினார் என்று பெட்டிசம் போட்டதே இந்த ஜெயராஜ், மற்றும் இலங்கை தூதரகமும் சேர்ந்துதான். அவரை திருப்பி அனுப்பிய, அனுப்பி வைத்த வீர பிரதாபத்தினை, ஜெயராஜ் இந்துவுக்கும், சென்னை துணை தூதர் ஹம்சா மூலமாக, தினமலர் போன்ற தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டன.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று  சீமான் சொன்னதால், அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்த இன்னோர் பிராமண அம்மணி ஜெயலலிதாவின் நல்ல புத்தகத்தில் இடம் பிடித்து கைதாகாமல் தப்பி.... அரசியலில் வளர்ந்தது வேறு கதை

இந்த பின்புலம் விளங்காமல், நீங்கள் அலம்பறை பண்ணுவது.... உங்களை மகிந்தா தன் பக்கம் இழுத்து விட்டார் போல இருக்கிறது என்று நினைக்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

.. நான் எதனை விசாரிக்காமல் நம்புகிறேனோ, அதனை நீங்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு தானே.

அப்படி இல்லை.

விசாரிக்காமல் எதையும் நம்புவதில்லை. கூகிளில் தேடினால் ஆதாரமாக இந்து வந்தது. ஆதாரம் கேட்பவர்களுக்கு ஒன்றையாவது கொடுக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை.

விசாரிக்காமல் எதையும் நம்புவதில்லை. கூகிளில் தேடினால் ஆதாரமாக இந்து வந்தது. ஆதாரம் கேட்பவர்களுக்கு ஒன்றையாவது கொடுக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்🤓

இப்போது தேவையான ஆதாரம் தந்துளேன். தவறானால், கூகிளில் தேடி நிரூபியுங்கள்.

இன்னும் ஒரு விசயம்.... கடந்த 2016 தேர்தலில், கடலூர் தொகுதியில், சீமான் என்ன பெயரில் போட்டி இருக்கின்றார் என்று பல கட்சிகள் புலனாய்ந்து, செபாஸ்டியன் சைமன் என்ற பெயர் இல்லை என்று ஏமாந்த கதையும் உண்டே. 

ஒரு சினிமாவுக்காக, (எதிரியே இல்லாத) ஜோசப் விஜய்யின் ஆதார் அட்டையினை இணையத்தில் போட்ட உங்க தலை எச்ச ராஜா, பெரும் அரசியல் எதிரி செபாஸ்டியன் சைமனின்  ஆதார் அட்டையினை போட்டிருக்க மாட்டார் என்று நீங்கள் நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

தலைவர் பிரபாகரன் போட்ட பிச்சையில் தமிழகத்தில் ஒரு சிலரின் உணர்ச்சியை தூண்டி பதவி எடுக்க கத்தித் திரியும் சீமானை ஒரு சில அறிவிலிகள் நம்பலாம்.

நீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன? சீமான் ஈழ ஆதரவுப் போக்குடன் இருந்தாலும், அவர் செய்யும் அரசியல் தமிழகத்து மக்களுக்கானது. அவர் கூறுவதை அம்மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஈழத்தமிழர்கள் அவரை தமது தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நியதியில்லை, அவரும் அதனை எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இதுவரை காலமும் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அப்பிரச்சினை சம்பந்தமாக அறிவுருத்துகிறார்.சாதியினாலும், மதத்தினாலும் பிரிந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்தினை மீள இனம் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கிறார். வேற்றின மக்களால் ஆளப்படும் தமிழகத்தினை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறுகிறார். இதில் தவறு எங்கே இருக்கிறது?  

ஈழத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதுபற்றி சீமான் பேசும் விடயம் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அவர் அதைச் சொல்வதுதான் கஷ்ட்டமாக இருக்கிறதென்று நினைக்கிறேன். சீமான் இதை சொல்லாமல் (அதாவது கஜேந்திரகுமாருக்கோ அல்லது விக்னேஸ்வரனுக்கோதான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனும் கோரிக்கையைத்தான் சொல்கிறேன்) வேறு யாராவது சொல்லியிருந்தால் உங்களுக்கு அதில் பிரச்சினை இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கு வாக்களியுங்கள் என்று யார் சொன்னாலென்ன, அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? 

சீமான் உணர்வுகளைத்தூண்டி பதவிக்காக இப்படிச் செய்கிறார் என்றால், தாயகத்தில் போட்டியிட்ட கட்சிகள், கூத்தமைப்பு அடங்கலாக பேசியவை எல்லாம் பாராளுமன்றப் பதவிகளுக்காக அல்லாமல் வேறு எதற்கு? சீமானின் தமிழ்த்தேசிய அரசியலை எள்ளிநகையாடி விமர்சிக்கும் நீங்கள், இலங்கையில் தேசியம் எனும் போர்வைக்குள் ஒளிந்திருந்து புலிநீக்க - தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செய்யும் சுமந்திரனையோ அல்லது சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்கும் சோரம்போன தமிழர்களையோ ஏன் விமர்சிப்பதில்லை? சீமான் செய்யும் தீவிர தமிழ்த்தேசிய அரசியலைக் காட்டிலும், சுமந்திரனும் சோரம்போனவர்களும் செய்யும் அரசியல்கள் ஆபத்தானவை என்று நீங்கள் நினைக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இதைப்பற்றியெல்லாம்  ஜெயமோகன், ஷோபாசக்தி நாவல்களில் ஒன்றும் இல்லையே. நீங்கள் திடுதிப்பென்று இப்படிக்கேட்டால் அவர் பாவம் என்னத்தை எழுதுவார்? பாருங்கோ இதுக்கும் இந்து அல்லது துக்ளக் பத்திரிகையின் ஒரு கட்டிங்கோடு வந்திறங்குவார் எங்கட சிங்கன்!!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவரும் மக்களை ஏமாத்த  தான் தன்னுடைய பேரை சீமான் என்று மாத்தி இருக்கார் இல்லையா ?

நிச்சயமாக  ஏமாத்த  தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

ஜெயமோகன், ஷோபாசக்தி

இவர்கள் புலிகளையும், ஈழவிடுதலைப் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தி எழுதிவருபவர்கள் இல்லையா? 

3 minutes ago, Eppothum Thamizhan said:

இந்து அல்லது துக்ளக் பத்திரிகை

இவர்கள் வெளிப்படையாகவே புலிகளுக்கும், ஈழவிடுதலைப்போராட்டத்திற்கும், பொதுவாக தமிழினத்திற்கெதிராக   விஷம் கக்கும் பிராமணப் பத்திரிக்கையாளர்கள் அல்லவா? 

1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நிச்சயமாக  ஏமாத்த  தான்.

எப்படியென்று விளக்குங்களேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

இதைப்பற்றியெல்லாம்  ஜெயமோகன், ஷோபாசக்தி நாவல்களில் ஒன்றும் இல்லையே. நீங்கள் திடுதிப்பென்று இப்படிக்கேட்டால் அவர் பாவம் என்னத்தை எழுதுவார்? பாருங்கோ இதுக்கும் இந்து அல்லது துக்ளக் பத்திரிகையின் ஒரு கட்டிங்கோடு வந்திறங்குவார் எங்கட சிங்கன்!!😋

எப்போதும் தமிழனாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் ஜெயமோகன், ஷோபாசக்தி போன்றவர்களின் எழுத்துக்களைப் படிக்கலாம். மூடுண்ட மனத்தோடு இருக்காமல், திறந்த மனத்துடன் அணுகினால் சுயமான சிந்தனை வளரும். இல்லாவிட்டால் பஜகோவிந்தம் இருக்கவே இருக்கு😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நிச்சயமாக  ஏமாத்த  தான்.

அவர் தன்னை எப்போதாவது கிறீஸ்த்தவர் இல்லை, இந்து, என்னை நம்புங்கள் என்று சொன்னாரா? அல்லது நான் இந்துவல்ல, கிறீஸ்த்தவன் , என்னை நம்புங்கள் என்று சொன்னாரா? தமிழர்கள் மதத்தினையும், சாதியினையும் விட்டு வெளியே வாருங்கள் என்று கேட்கும் ஒருவர் என்ன பெயரில் இருந்தால்த்தான் என்ன? உங்களுக்கு அது ஏன் பிரச்சினையாக இருக்கிறது? மதம் வேண்டாம் என்று கேட்பவர் எதற்காகத் தனது பெயரை மாற்றி ஏபாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  சரி, அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியதாகவே இருக்கட்டுமே, சீமான் என்றால் இந்துபெயர் என்று உங்களால் நிறுவ முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எப்போதும் தமிழனாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் ஜெயமோகன், ஷோபாசக்தி போன்றவர்களின் எழுத்துக்களைப் படிக்கலாம். மூடுண்ட மனத்தோடு இருக்காமல், திறந்த மனத்துடன் அணுகினால் சுயமான சிந்தனை வளரும். இல்லாவிட்டால் பஜகோவிந்தம் இருக்கவே இருக்கு😉

திறந்தமனதோடு ஒன்றை அணுகவேண்டுமென்றால் அதில் மற்றவர்களின் தூண்டுதலோ பாதிப்போ இருக்கக்கூடாது. பார்ப்பனியத்திற்கு திராவிடத்துக்கும் செம்புத்தூக்கும் இந்த கயவர்களின் நாவல்களை படித்துதான் பொதுஅறிவு, பக்குவம் வருமென்று நீங்கள் சொல்வதை கேட்க சிரிப்புத்தான் வருகிறது!!

எப்போதும் தமிழனாக இருக்கவேண்டும் என்றுநினைப்பதால்தான் நான் இவர்களுடைய நாவல்களையோ செய்திகளையே வாசிப்பதில்லை. அதற்காக உங்களை வாசிக்கவேண்டாம் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீமானை, சீமான் எனப்படும் செபஸ்டியன் எனறே அழைப்பதுண்டு.  பொதுவாக மேலை நாடுகளில் இவை சாதாரணம். இது தவற‌ல்ல ஒருவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர் இருக்கும்போது alias அல்லது aka என்ற வார்த்தையை பாவிப்பர்கள். 

செபஸ்டியன் என்னும் பெயரை மத‌த்தோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறு.மேலும் இவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, அவர்கள் மனம் நோகும்படியான பல்வேறு கருத்துக்க‌ளை கூறியுள்ளார்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

இந்தக் கேள்விக்கு எனது பதில்: தலைவர் பிரபாகரனை மிகவும் நேசிப்பதால் அவரது பெயரையும்,  புலிச்சின்னத்தையும் பாவித்து வந்தேறிகள் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

அவர் தன்னை எப்போதாவது கிறீஸ்த்தவர் இல்லை, இந்து, என்னை நம்புங்கள் என்று சொன்னாரா? அல்லது நான் இந்துவல்ல, கிறீஸ்த்தவன் , என்னை நம்புங்கள் என்று சொன்னாரா? தமிழர்கள் மதத்தினையும், சாதியினையும் விட்டு வெளியே வாருங்கள் என்று கேட்கும் ஒருவர் என்ன பெயரில் இருந்தால்த்தான் என்ன? உங்களுக்கு அது ஏன் பிரச்சினையாக இருக்கிறது? மதம் வேண்டாம் என்று கேட்பவர் எதற்காகத் தனது பெயரை மாற்றி ஏபாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  சரி, அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியதாகவே இருக்கட்டுமே, சீமான் என்றால் இந்துபெயர் என்று உங்களால் நிறுவ முடியுமா? 

ரஞ்சித் இவர்களுடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம். இவர்கள் தமிழரை எப்படியாவது மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் குழப்பபுவதற்காகவே யாழ் களத்துக்கு வருகின்றனர், ஆனால் தமிழரை எப்பவும் மத ரீதியாக பிரிக்க முடியாது.  இவர்களது உள்நோக்கமே கிறிஸ்த்தவனை தமிழனுக்கு எதிரியாக காட்டுவது; இதற்கு நாங்கள் எமது நேரத்தை செலவளிக்காமல் விட்டால் தாமாகவே விலகி விடுவார்கள். மன்னார் மாவட்டத்தின் பிரபலமான ஊர் ஒன்றின் பெயரை உடையவர் இதே முயற்சியில் இறங்கி இப்ப வேறு ID இல் திரிகிரார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரஞ்சித் said:

சுமந்திரனும் சோரம்போனவர்களும் செய்யும் அரசியல்கள் ஆபத்தானவை என்று நீங்கள் நினைக்கவில்லையா? 

சுமந்திரன் மட்டுமல்ல,  கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றோர் செய்யும் அரசியலும் ஆபத்தானது. தமிழ்த்தேசியம் என்ற குடைக்குள் ஒற்றுமையாக இயங்காமல் செய்யும்  உதிரி அரசியல் மிகவும் ஆபத்தானது.

கூட்டமைப்பு அல்லது மக்களின் முன் எடுபடக்கூடிய பெரியதொரு சக்தி புலிகளின் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட அரசியலுக்கு எதிரான முகாமில் நிறுத்தப்பட்டது. சம்பந்தரும், அவரை தாங்கி நிற்கும் பிராந்திய சக்திகளுக்கும் இதுவொரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும். மெல்ல மெல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படையான கோரிக்கைளை கஜேந்திரகுமாரின் கோரிக்கைளாக்கிவிட்டு மலிவான, பலவீனமான நாளாந்தம் எதிர்வினையாற்றும் சொல்லாடல்களுக்குள் தன்னை தொலைத்தது.

கஜேந்திரகுமார் தலைமையிலான அணியோ தமக்குத் தாமே சூடிக்கொண்ட தமிழ்தேசியத்தின் காவலர்கள் என்ற சொல்லாடலை நிஐத்தில், மண்ணில் நிலைநிறுத்த முடியாது தத்தளித்தனர். அவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசிய போராட்ட அரசியலை கட்டியெழுப்பவில்லை. மனிதாபிமான இடைவெளிகளுக்குள் சென்று செயற்பட்டது. சர்வதேச விசாரணைகளுக்காக ஜெனிவாவிற்கு வந்துசெல்லும் இவர்களால், தமிழ் மக்களின் மனங்களில் கொடுங்குற்றங்கள் பற்றிய பிரஞ்ஞையை ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் வெறுமனே மறுமுனையில் நின்று எதிர் வினையாற்றும் வாய்ச்சவாடல்காரார்களாக தங்களை நிலைநிறுத்தினர். அவர்கள் நம்பியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் எழுச்சியென்பது அவர்களது புலம்பெயர் நாட்டு அரசியல் சகாக்களின் கைகளில் சிக்குண்டு சின்னபின்னப்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது அரசியலை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரு வகையான தமிழ்தேசிய அரசியல் வாய்ப் பேச்சுக்களிடையே சிங்கள அரசும், கட்சிகளும், பிராந்தி சக்தியும் காய்களை ‘சிறப்பாக’ நகர்த்தியது. நேற்றைய போரில் காட்டிக்கொடுப்பவர்கள், கொலையாளிகள், துரோகிகளாக பேசப்பட்டவர்களை இன்றைய அரசியலில் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்குபவர்களாக்கியது. இயற்கை தலைமுறைகளை உருவாக்குகின்றது. அவற்றிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள் தேவைப்படும் என்ற இயங்கியலை எதிர்த்தரப்பு சரியாகக் கையாண்டது. அதன் விளைவாக மெல்லமெல்ல மாற்று வழிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க வழியாகிவிட்டது. அதன் விளைவே இன்று அங்கயன்களின் எழுச்சியாகும்”

மிச்சத்தைதும் படியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ரஞ்சித் இவர்களுடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம். இவர்கள் தமிழரை எப்படியாவது மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் குழப்பபுவதற்காகவே யாழ் களத்துக்கு வருகின்றனர், ஆனால் தமிழரை எப்பவும் மத ரீதியாக பிரிக்க முடியாது.  இவர்களது உள்நோக்கமே கிறிஸ்த்தவனை தமிழனுக்கு எதிரியாக காட்டுவது; இதற்கு நாங்கள் எமது நேரத்தை செலவளிக்காமல் விட்டால் தாமாகவே விலகி விடுவார்கள். மன்னார் மாவட்டத்தின் பிரபலமான ஊர் ஒன்றின் பெயரை உடையவர் இதே முயற்சியில் இறங்கி இப்ப வேறு ID இல் திரிகிரார்

இவர்களின் கபடம் அப்பட்டமாகப் புரிகிறது. வங்காலையான், ரொபின்சன் குறூஸோ இப்படிப் பலபெயர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், தலைவரின் பெயரையும், புலிகளின் கொடியினையும் பாவிக்கும் ஒருவர் எப்படி தலைவருக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் இருக்க முடியும் என்பது.

தமிழகத்திக் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த தமிழரல்லாத வேற்றினத்தவர்களின் கைகளில் தமிழினம் அனுபவித்த இன்னல்கள் களையப்பட வேண்டுமென்பதில் உள்ள தவறென்ன? கருனாநிதியின் தனிப்பட்ட கோரிக்கைகூட புலிகளை அழிப்பதில் பங்களித்திருக்கின்றதென்பது இவர்கள் அறியாததல்ல (உபயம் : சிவ்ஷங்கர் மேனென் எழுதிய "தெரிவுகள்" - புலிகளின் தலைமை காப்பாற்றப்பட்டு, போராட்டம் தொடர்வதற்கான செயற்பாடுகளை மேற்குநாடுகள் முன்னெடுப்பதை கருனாநிதி உடபட்ட தமிழகத் தலைவர்கள் விரும்பவில்லையென்றும், அது தமது அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நம்பியதாகவும் சொல்லியிருக்கிறார்). கருனாநிதி எனும் தெலுங்கு இனத்தினைச் சேர்ந்த முதலமைச்சருக்குப் பதிலாக தமிழ் உணர்வுள்ள ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் தமிழினக் கொலையினைத் தடுத்திருக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருக்கிறது. அதனால் தமிழர்கள் தமிழரை ஆளவேண்டும் என்று கேட்கின்றனர், இது தவறில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும், புலிகளுக்கெதிராகவும், அவர்களது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தியும், சர்வதேசத்தில் தமிழர்களின் இருப்பைப் பலவீனப்படுத்தியும் சுமந்திரன் செய்துவந்த திருகுதாலங்களை ஆமோதித்துக்கொண்டு அக்கட்சியில் இருப்பதைக் காட்டிலும் வெளியேறுவதைத்தவிர வேறு வழிகளை அக்கட்சி கஜேந்திரனுக்கோ விக்னேஸ்வரனுக்கோ விட்டுவைக்கவில்லை. 

தலைவர் கட்டிய கட்சியை, அவருக்கெதிராகவே திருப்பியது சுமந்திரனும் சம்பந்தனும்தான். இன்று தமிழ்த்தேசியம் அடைந்திருக்கும் இழிநிலைக்கு ஒற்றைக்காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை, குறிப்பாக சுமந்திரன். இன்று கிழக்கு மாகாண மக்கள் கருணாக்களுக்கும், பிள்ளையான்களுக்கும் வாக்களிக்கக் காரணம் என்னவென்று தேடுங்கள். நிச்சயமாக கஜேந்திரனோ விக்னேஸ்வரனோ கிடையாது.

வீரகேசரியில் வரும் கூத்தமைப்பிற்குச் சார்பான அறிக்கையினை மேற்கோள் காட்டவேண்டாம் கிருபன். நான் அதனைப் படித்துவிட்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.