Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்தே சனநாயகத்தின் ஏதுநிலையென்றபோதிலும்  இங்கே காழ்ப்புநிலை என்பது ஆபத்தானது. அது எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதற்குச் சமனானது. செந்தமிழன் சீமான் குறித்த திரிகளென்றால் நல்லாக ஒளிர்வதன் மர்மம் தான் என்ன? புரிந்துகொள்ள முடியாதுள்ளது .  ஈழத்தமிழரது தலைவிதியைத் தீர்மானிப்பவர்கள் ஈழத்தமிழர்களே. அது கோத்தாவோடு கட்டியுருண்டு வாழ்வதாயினும் சரி. கத்தரித்துக் கொண்டுபோய் வாழ்வதாயினும் சரி. ஆனால் இங்கே தமிழரது பலம் பலவீனத்தின்  உள்ளக மதிப்பீடுகளும் நட்புச் சக்திகளை  இனங்கண்டு அரவணைத்து  நகர்வதுட்படப் பல்வேறு  புற அகக் கரணியங்களின் வழியேதான் தாயகத்தின் இருப்பு உறுதிபடும் என்பதை எந்தவொரு தமிழரும் மறுக்கார்.  பங்காளதேஸின் விடுதலையில்  ஆயுதப்போராட்டத்துக்கப்பால் மேற்கு வங்கத்தின் வகிபாகம் உலகறிந்தது.  அதேவேளை இந்திய -பாக்கிஸ்தான் பகைமைநிலையும் ஏதுவானது. இந்த யுத்தத்தின்போதுகூட இலங்கை பாக்கிஸ்தான் பக்கமே நின்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசியலாய்வாளரான திரு: மு.திருநாவுக்கரசு அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கருத்துபகிர்வு நிகழ்வான நிலவரம்(தமிழீழ தேசிய காணொளிச் சேவை) நிகழ்விலே தமிழீழத்தின் துறப்பு தமிழகத்திலே இருக்கிறது என்று புலிகளின் படைபல வியூகங்கள் நிலவிடுவிப்புகள்  என்ற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திற் தமிழரது நடைமுறை அரசொன்றின் செயற்பாட்டுக் காலத்தில்  
 கூறியிருந்தார்.  இன்று எந்தவொரு பலமும் அற்ற நிலையில்  பலமான தலைமைத்துவமோ ஆளுமைகளோ அற்ற நிலையில் யாராவது ஆதரவு கொடுத்தால்  அதனை பற்றிக்கொள்ளும் மனநிலையில் யார்தான் இல்லை. இதில் கிறிஸ்தவர் சைவர் சோனகர் என்று ஆய்வுசெய்து கொண்டிருப்பார்களா? முதலில் தமிழராகச் சிந்திப்பதே முதலாவது விடுதலை.  தமிழ்த் தேசியம் தேவையில்லையென்றால் ஏன் இங்கே தட்டெழுதிப் போராட வேண்டும். யாழில் தானே அனைத்து அம்சங்களும் கொட்டிக்கிடக்கிறதே. வாசித்தால் பொழுதும் போகும்.......!

சிங்களத்தின் புலிநீக்கம் முடிந்து தமிழ்த் தேசிய நீக்கக் காலமாக நகர்கிறது. இதிலே தெரிந்தோ தெரியாமலோ தமிழ்க் கட்சிகளும் துணைபோகின்றன என்பதே கசப்பான உண்மை.  இதில் நாமெங்கே நிற்கின்றோம் என்பதை  ஒவ்வொரு தமிழரும் தம்மைத் தாமே கேட்பதுகூட  முன்னகரும் முதற்படியாகும். 

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியது திரைப்பட துறையில் நுழைந்த போது இதை அறிந்தும் அரசியலில் மக்களை ஏமாற்றத்தான் பெயரை மாற்றிக் கொண்டார் என்பவர்களுடன் வாதிட்டு என்ன பயன்?? நேரம் பொன்னானது காண்.

Link to comment
Share on other sites

7 minutes ago, விசுகு said:

அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியது திரைப்பட துறையில் நுழைந்த போது இதை அறிந்தும் அரசியலில் மக்களை ஏமாற்றத்தான் பெயரை மாற்றிக் கொண்டார் என்பவர்களுடன் வாதிட்டு என்ன பயன்?? நேரம் பொன்னானது காண்.

spacer.png1996ம் ஆண்டு சீமானின் முதல் இயக்கத்தில் வெளியாகிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இருந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நிச்சயமாக  ஏமாத்த  தான்.

எப்படியென்று விளக்குங்களேன்? 

அவர் தனக்கு வைக்கபட்ட செபாஸ்டியன் சைமன் என்ற சொந்த பெயரை எதற்காக மறைக்க வேண்டும்? அந்த பெயரை சொன்னால் அவருடைய வெளிநாட்டு ஈழ இரசிகர்கள் ஏன் கோபமடைகிறார்கள் மதம் வேண்டாம் என்று சொல்லும் கிறிஸ்த்தவர்கள் மத நம்பிக்கை உள்ள கிறிஸ்த்தவர்கள் தங்கள் பெற்றோர் வைத்த பெயரில் இருக்கும் போது செபாஸ்டியன் சைமன் மட்டும் எதற்காக தனது பெயரை மறைக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் தனக்கு வைக்கபட்ட செபாஸ்டியன் சைமன் என்ற சொந்த பெயரை எதற்காக மறைக்க வேண்டும்? அந்த பெயரை சொன்னால் அவருடைய வெளிநாட்டு ஈழ இரசிகர்கள் ஏன் கோபமடைகிறார்கள் மதம் வேண்டாம் என்று சொல்லும் கிறிஸ்த்தவர்கள் மத நம்பிக்கை உள்ள கிறிஸ்த்தவர்கள் தங்கள் பெற்றோர் வைத்த பெயரில் இருக்கும் போது செபாஸ்டியன் சைமன் மட்டும் எதற்காக தனது பெயரை மறைக்கிறார்

ரஜனிகாந்த், விஜயகாந்த் எல்லோரும் சினிமாவில் கிடத்தப்பெயர் மூலமாகத்தானே அரசியலில் அறியப்படுகிறார்கள். சீமானின் பெயர் மட்டும் ஏன் உங்களுக்கு குத்துது குடையுது! கொள்கைகளில் பிழைபிடிக்க முடியாதவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம் இதுதானே!

இது உங்களுக்கு விளங்காது. இதுக்கு நீங்கள் சரிப்படமாட்டீர்கள் பாருங்கோ!!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டு விளங்கவில்லை. தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர் பிரச்சனை ஆயிரம் இருக்க. சீமானுக்கு என்ன பெயர் என்று விவாதிப்பதில் என்ன பயன்.

கடும் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில் கம்பராமாயணத்தில் வாலியை கொன்றது பிழையா சரியா என்று கம்பன் கழகத்து கண்மணிகள் விவாதித்துகொண்டிருந்த மாதிரி ஒரு பீலிங் ஏனோ வந்து தொலையுது😁😁

Link to comment
Share on other sites

3 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன? சீமான் ஈழ ஆதரவுப் போக்குடன் இருந்தாலும், அவர் செய்யும் அரசியல் தமிழகத்து மக்களுக்கானது. அவர் கூறுவதை அம்மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஈழத்தமிழர்கள் அவரை தமது தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நியதியில்லை, அவரும் அதனை எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இதுவரை காலமும் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அப்பிரச்சினை சம்பந்தமாக அறிவுருத்துகிறார்.சாதியினாலும், மதத்தினாலும் பிரிந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்தினை மீள இனம் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கிறார். வேற்றின மக்களால் ஆளப்படும் தமிழகத்தினை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறுகிறார். இதில் தவறு எங்கே இருக்கிறது?  

ஈழத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதுபற்றி சீமான் பேசும் விடயம் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அவர் அதைச் சொல்வதுதான் கஷ்ட்டமாக இருக்கிறதென்று நினைக்கிறேன். சீமான் இதை சொல்லாமல் (அதாவது கஜேந்திரகுமாருக்கோ அல்லது விக்னேஸ்வரனுக்கோதான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனும் கோரிக்கையைத்தான் சொல்கிறேன்) வேறு யாராவது சொல்லியிருந்தால் உங்களுக்கு அதில் பிரச்சினை இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கு வாக்களியுங்கள் என்று யார் சொன்னாலென்ன, அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? 

சீமான் உணர்வுகளைத்தூண்டி பதவிக்காக இப்படிச் செய்கிறார் என்றால், தாயகத்தில் போட்டியிட்ட கட்சிகள், கூத்தமைப்பு அடங்கலாக பேசியவை எல்லாம் பாராளுமன்றப் பதவிகளுக்காக அல்லாமல் வேறு எதற்கு? சீமானின் தமிழ்த்தேசிய அரசியலை எள்ளிநகையாடி விமர்சிக்கும் நீங்கள், இலங்கையில் தேசியம் எனும் போர்வைக்குள் ஒளிந்திருந்து புலிநீக்க - தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செய்யும் சுமந்திரனையோ அல்லது சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்கும் சோரம்போன தமிழர்களையோ ஏன் விமர்சிப்பதில்லை? சீமான் செய்யும் தீவிர தமிழ்த்தேசிய அரசியலைக் காட்டிலும், சுமந்திரனும் சோரம்போனவர்களும் செய்யும் அரசியல்கள் ஆபத்தானவை என்று நீங்கள் நினைக்கவில்லையா? 

எனது  கருத்தில் ஒரு சிறிய பகுதியை வைத்து கேள்வி கேட்காமல் எனது கருத்து முழுவதையும்  மீண்டும் வாசியுங்கள்.  அதில் உங்கள் கேள்விகளுக்கான பதிலும் உள்ளது. நன்றி ரஞ்சித்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவர் தனக்கு வைக்கபட்ட செபாஸ்டியன் சைமன் என்ற சொந்த பெயரை எதற்காக மறைக்க வேண்டும்? அந்த பெயரை சொன்னால் அவருடைய வெளிநாட்டு ஈழ இரசிகர்கள் ஏன் கோபமடைகிறார்கள் மதம் வேண்டாம் என்று சொல்லும் கிறிஸ்த்தவர்கள் மத நம்பிக்கை உள்ள கிறிஸ்த்தவர்கள் தங்கள் பெற்றோர் வைத்த பெயரில் இருக்கும் போது செபாஸ்டியன் சைமன் மட்டும் எதற்காக தனது பெயரை மறைக்கிறார்

அவர் அரசியலுக்கு வருமுன்னமே அவரது பெயர் சீமான் தானே? அதையேன் அவர் அரசியலுக்கு வந்தபின் மாற்றவேண்டும் என்கிறீர்கள்? 

சரி, அவர் எப்போதென்றாலும், என்ன பெயரையென்றாலும் வைத்துக்கொள்ளட்டும், மதம் தேவைதில்லையென்று சொல்லும் அவரது பெயர் என்னவாகத்தான் இருந்தால் என்ன? உங்களுக்கு என்ன கஷ்ட்டம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியது திரைப்பட துறையில் நுழைந்த போது இதை அறிந்தும் அரசியலில் மக்களை ஏமாற்றத்தான் பெயரை மாற்றிக் கொண்டார் என்பவர்களுடன் வாதிட்டு என்ன பயன்?? நேரம் பொன்னானது காண்.

 வேண்டா பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் எண்ட மாதிரி போகுது கதை.....

 மாரட்டிய சிவாஜிராவ் ரஜனிகாந்தாய் மாறி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆக ஆசைப்படலாம். ஆனால் ஒரு சீமான்......?

ரஜனிகாந்த் தமிழர் பிரச்சனை பற்றி பேசிய போது வாய் திறக்காத  பொன்மனசெம்பல் கூட்டம் சீமான் எண்டவுடனை பச்சைமிளகாய் கடிச்ச ஃபீலிங்கிலை திரியினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இன்னொன்றையும் கவனியுங்கள். சீமானுக்கு புலிகளை பாவிக்க தகுதி இல்லை என்போர் அனைவரும் புலிகள் மீது காட்டமான விமர்சனங்களை வைப்போரே.

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

இன்னொன்றையும் கவனியுங்கள். சீமானுக்கு புலிகளை பாவிக்க தகுதி இல்லை என்போர் அனைவரும் புலிகள் மீது காட்டமான விமர்சனங்களை வைப்போரே.

விசுகு, தமிழ் மக்களின் இன்றைய  மிக மோசமான அவல நிலைக்கு கடந்த 70 வருடங்களாக தலைமை வகித்து அரசியல் செய்த எல்லோருமே கூட்டுப்பொறுப்பாளர்கள். புலிகள் உட்பட. அனைவர் மீதும் விமர்சனம் காட்டமாக விமர்சனம் வைக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

11 hours ago, ரஞ்சித் said:

கருனாநிதியின் தனிப்பட்ட கோரிக்கைகூட புலிகளை அழிப்பதில் பங்களித்திருக்கின்றதென்பது இவர்கள் அறியாததல்ல (உபயம் : சிவ்ஷங்கர் மேனென் எழுதிய "தெரிவுகள்" - புலிகளின் தலைமை காப்பாற்றப்பட்டு, போராட்டம் தொடர்வதற்கான செயற்பாடுகளை மேற்குநாடுகள் முன்னெடுப்பதை கருனாநிதி உடபட்ட தமிழகத் தலைவர்கள் விரும்பவில்லையென்றும், அது தமது அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நம்பியதாகவும் சொல்லியிருக்கிறார்). கருனாநிதி எனும் தெலுங்கு இனத்தினைச் சேர்ந்த முதலமைச்சருக்குப் பதிலாக தமிழ் உணர்வுள்ள ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் தமிழினக் கொலையினைத் தடுத்திருக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருக்கிறது. அதனால் தமிழர்கள் தமிழரை ஆளவேண்டும் என்று கேட்கின்றனர், இது தவறில்லையே? 

இந்த யதார்த்தம் பலருக்கு விளங்குவதில்லை. புலிகளை அழிவில் இருந்து லாபம் அடைந்தது திராவிட கும்பல்கள். அதே போல் ஆந்திராவில் அல்லது கர்நாடகாவில் இப்படி தமிழம் ஆட்சி செய்ய முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

விசுகு, தமிழ் மக்களின் இன்றைய  மிக மோசமான அவல நிலைக்கு கடந்த 70 வருடங்களாக தலைமை வகித்து அரசியல் செய்த எல்லோருமே கூட்டுப்பொறுப்பாளர்கள். புலிகள் உட்பட. அனைவர் மீதும் விமர்சனம் காட்டமாக விமர்சனம் வைக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. 

அது தமிழர் வரலாற்றின் சில பக்கங்களை படித்த உங்களது நிலை. ஆனால் வரலாறு வேறு. முடிந்தவரை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த வரை எதிர்ப்பை தெரிவித்திருக்காவிட்டால் இன்றையநிலை 50களிலேயே வந்திருக்கும். அப்புறம் இன்று என்னநிலை என்று கேட்கக் கூடாது

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

அது தமிழர் வரலாற்றின் சில பக்கங்களை படித்த உங்களது நிலை. ஆனால் வரலாறு வேறு. முடிந்தவரை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த வரை எதிர்ப்பை தெரிவித்திருக்காவிட்டால் இன்றையநிலை 50களிலேயே வந்திருக்கும். அப்புறம் இன்று என்னநிலை என்று கேட்கக் கூடாது

யதார்த்தமாக சிந்தித்து தமிழ் தேசியத்திற்கு உண்மையாக எதிரிகளை இனங்கண்டு அவற்றை தனது அறிவால் எதிர்த்து முறியடிக்காமல் இப்படி கற்பனையில் புதிய புதிய எதிரிகளை உருவாக்கி அவர்களைக்கெதிராக முட்டாள்தனமாக  போராடுவதாக நினைத்து மோதி தலையை உடைத்து  அழிந்து விட்டு இன்றும் அதே பல்லவியை பாடி பாடி அழுவது தான் இன்றய தமிழ் தேசியம். அடுத்த தலைமுறை வித்தியாசமாக சிந்திக்க தொடங்கி விட்டது என பதற்கான சிறிய ஒளிக்கீற்று இந்த தேர்தலில் தென்படுகிறது. இனி பழைய கறள் பிடித்த தேசியத்தை பேசுவோர் சிறிது சிறிதாக காலவதியாக புதிய தலைமுறையாவது புத்திசாலித்தனமாக சிந்தித்து நவீன தமிழ் தேசியத்தையும் மக்களையும் வளர்க்கட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

நீங்கள் யதார்த்தத்தை உணரப்போவதில்லை. சோறு உடனடித் தேவை மட்டுமே. அதற்கப்பால் சிங்களம் விடப்போவதில்லை. உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. தேசியத்துக்கு எதிராக மக்களோ வாக்கோ அங்கு குறையவில்லை. மாறாக சோற்றுக்கான பின் நகர்வே. வரலாறும் காலமும் அதை உணர்த்தும் சில வேளைகளில் நானோ நீங்களோ அதை பார்க்க இல்லாது போகலாம்

Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

விசுகு, எனது கருத்து தமிழ் தேசியம்  பற்றியது அல்ல. தமிழ்  தேசிய காவலர்கள் என்று கூறிக்கொண்டு அதைக்  கையில் எடுத்து தேசியத்தையும் சிதைத்து மக்களின் முன்னேறத்தையும் சிதைத்த அனைவர் பற்றியதும். கட்சி இயக்க வேறுபாடு இன்றி அனைத்து தேசிய தலைமைக்கும் அதில் சம பங்கு உள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

இருந்தும் முடிவு என்ன? சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி சீரழிந்த இனம் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராட வேண்டி உள்ளது. சில பகுதிகளில் உள்ள மக்கள் இதை இப்போதைக்கு உணராவிடடாலும் கிழக்கு, வன்னி மக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2020 at 17:43, tulpen said:

தமிழ் தேசிய முன்னணியை சீமான் கட்சியுடன் ஒப்பிட  ஒரு பேப்பர் பத்திரிகை ஆய்வு என்பது தமிழரின் உழுத்துப்போன பழைய அரசியல் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே. தவறுகளில் இருந்து பாடம் படிக்காத ஒரு கூட்டம் தமிழ் தேசியப்பரப்பில் உள்ளது என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.  ஒன்றுமில்லாத விடயங்களை பெருப்பித்து  வெற்று பில்டப் காட்டி எதிரியை உசாராக்குவது அல்லது பலப்படுத்துவது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதை மேலும் சிக்கலாக்குவது ஈழத்தமிழ் தேசியப்பரப்பில்  தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வே.  தமது அரசியல் பிரச்சனைகளை நாட்டுக்குள் பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் இல்லாமல் தமிழகத்தை பலமாக காண்பித்து எதிரிக்கு தேவையற்ற பயத்தை உண்டுபண்ணி எம்மை அழித்தொழிக்கும் தூண்டுதலை வழங்கியது ஆரம்ப கால தமிழ் தேசியம். 

இது ஒரு தவறான புரிதல் என்றுதான் நான் நினைக்கிறேன். முதலாவதாக, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை ஈழவிடுதலைக்கான முனைப்புகள் ஆயுத ரீதியிலான போராட்டமாக மாறும் முன்னரே அரங்கேறத் தொடங்கிவிட்டது. இந்திய ஈழப்போராளிகளுக்குக் கொடுத்த ஆதரவென்பது 1980 களின் ஆரம்பத்திலேதான் தொடங்கியது. ஆனால், இதற்குமுன்னரே சிங்களப் பேரினவாதம் தமிழர் மீதான இனக்கொலையினைக் கட்டம் கட்டமாக அரங்கேற்றிக்கொண்டுதான் இருந்தது. ஆகவே, இந்தியாவைக் காட்டித் தமிழர் சிங்களத்தினைப் பயமுருத்தியதாலேயே எம்மீதான அடக்குமுறைகள் ஆரம்பித்தன என்பது சரியாகப் படவில்லை. 1987 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எத்தகையது என்பதை சிங்களம் நன்றாகவே புரிந்துகொண்டுவிட்டது. "தமிழர்களும் இந்தியர்களும் மோதுவதைச் சிங்களவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்" என்று ஜே ஆர் சொல்லும்போதே இந்தியாவைக் காட்டித் தமிழர்கள் சிங்களவர்களை வெருட்ட முடியாதென்பது தெளிவாகிவிட்டது. அதற்குப் பின்னரான காலங்களில் இருந்து 2009 வரை இந்தியா யார்பக்கம் நின்றது, யாரைக் கொன்றதென்பது சிங்களவர்களுக்கு தெரியாததல்ல.

On 12/8/2020 at 17:43, tulpen said:

1974 ல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல தமிழிறிஞர்கள் சட்டபூர்வமாக கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதி நாளன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்விலை மகாநாட்டுக்கு   அன்று ஈழத்தமிழர் பிரச்சனையில் மிக அதிக  அக்கறை உடையவராக தன்னை காட்டிக்கொண்டு பிரசித்தி பெற்ற  அரசயல்வாதி  ஜனார்த‍னனை சட்டவிரோதமாக இங்கு வருவித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த ஒருவர்  அங்கு உரையாற்றினால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் உரையாற்றவிட்டு அரசை ஆத்திரப்படுத்தி  ஏற்பட்ட கலவரத்தில்  9 தமிழ ் பொலிசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் தான் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த‍து.

இம்மாநாடு நடக்கக் கூடாதென்று திட்டமிட்டு வந்த சிங்களப் பேரினவாதம், மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றது. இதை தமிழர்களால் தூண்டப்பட்ட தாக்குதல் என்கிற ரீதியில் நீங்கள் எழுதுவது வேதனை.

இதோ, அன்று நடந்த படுகொலைகள் தொடர்பான ஒரு பதிவு.

உலகெங்குமுள்ள தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் ஒன்றுகூடி உலகத் தமிழாராய்ச்சி மாநாடொன்றினை இலங்கையின் தமிழர் நகரான யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரையான 7 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவெடித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழரின் மொழிதொடர்பான மாநாடொன்றினை நடத்துவதை சிங்களப் பேரினவாத அரசு விரும்பியிருக்கவில்லை. அதனால், கொழும்பில் மாநாடு தொடர்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதும், யாழ்ப்பாணத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடுமையான அழுத்தங்களினைச் செலுத்தி, மாநாடு நடைபெறுவதனைத் தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பேர்ட் துரையப்பா மூலம் யாழ்நகரில் மாநாடு நடத்துவதனை எப்படியாவது தடுத்துவிட கங்கணம் கட்டியிருந்தது. அதன் ஒரு அங்கமாக மாநாடு நடத்தப்படும் திறந்தவெளி மண்டபத்தின் கட்டட நிர்மாணங்களுக்கான அனுமதியினை அல்பேர்ட் துரையப்பா இறுதிநிமிடம்வரை வழங்குவதைத் தாமதித்துக்கொண்டே வந்திருந்தார். பல நாடுகளிலுமிருந்து இமாநாட்டிற்கு வருகைதர முயன்ற தமிழரிஞர்களுக்கான விசாவினை இலங்கையரசு வெளிப்படையாகவே வழங்க மறுத்திருந்தது.

இப்படியான சிங்கள அரசின் திட்டமிட்ட தடைகளுக்கு மத்தியிலும்கூட, தமிழ் அறிஞர்களும், விழா ஏற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் இந்த ஆராய்ச்சி மாநாடு எப்படியாவது நடந்துவிடவேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாகவே இருந்தனர். தமிழர்களின் தளராத உறுதியைக் கண்டு தனது கடுமையான நிலைப்பாட்டினைத் தளர்த்திக்கொண்ட சிங்கள அரசு, சில வெளிநாட்டு தமிழறிஞர்களுக்கு மட்டும் விசாவினை வழங்க இணங்கியது.

இம்மாநாட்டின் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் தம்பையா மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை விரும்பாததனால், அப்பதவியிலிருந்து அவர் விலகிக்கொள்ள , பேராசிரியர் வித்தியானந்தன் தலைமைப் பதவியினை ஏற்றுக்கொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாடு திட்டமிட்டவாறு 3 ஆம் திகதி ஆரம்பமானதுடன், யாழ்ப்பாணமெங்குமிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் இம்மாநாட்டில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். மாநாடு பெரும் விழாக்கோலம் பூண்டிருந்ததோடு, முழு யாழ்ப்பாண நகருமே ஆனந்தத்தில் திளைத்திருந்தது.

ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான 10 ஆம் திகதியும் வந்தது. மாநாட்டின் இறுதிப்பகுதியும், முக்கிய நிகழ்வுமான தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் அதன் சரித்தரத் தொன்மை, கலாசாரத் தொடர்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் உரையாற்றத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டினைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் நைநா மொஹம்மட் இறுதியுரையினை ஆற்றத் தொடங்கினார். அவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது யாழ்பாண உதவி பொலீஸ் பரிசோதகர் சந்திரசேகரா மாநாட்டினைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள்மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார். அவரது தாக்குதலையடுத்து, உதவிக்கு நின்ற ஏனைய போலீஸ் அதிகாரிகள் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் 9 அப்பாவித் தமிழர்கள் அதேயிடத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்டதுடன், மாநாட்டு மேடையும் சிங்கள காவல்த்துறையினால் அடித்து நொறுக்கப்பட்டது.

இப்படுகொலைகளைப் புரிந்த பொலீஸ் அதிகாரி சிங்களப் பிரதமரால் பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2020 at 17:43, tulpen said:

அதே போல இப்போதும் தற்போதைய சூழ்நிலையில் சீமானால் ஒரு இலங்கையில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று நன்றாக தெரிந்திருந்தும் போலியாக ஒரு பில்டப் காட்டுவதற்காக தமிழகத்தில் சீமானை போல தமிழ் தேசியமுன்னணி வளர்ச்சியடைந்து வருகிறது என்று எழுதுவது ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் உதவபோவதில்லை. இது நன்றாக  தெரிந்தும் இவ்வாறு எழுதுகிறார்கள் என்றால் அதன் காரணம் தாம் வாழும் வரை இப்படி போலித் தேசிய போதையில் வாழும்  addicted  மனநிலையே அன்றி வேறொன்றும்  இல்லை. 

இதுவும் தவறான புரிதலே. சீமான் இலங்கையில் எதையும் செய்வார் என்பதற்காக ஈழத்தமிழர்கள் அவர்மீது நம்பிக்கை வைக்கவில்லை. நீங்கள் கூறுவதால் கேட்கிறேன், முன்னால் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரனால் ஈழத்தில் ஏதாவது துரும்பைத்தன்னும் அசைக்க முடிந்ததென்று நீங்கள் நம்புகிறீர்களா? போராட்டத்தில் அவரின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததென்று நினைக்கிறீர்கள்? 

ஈழத்தமிழர்கள் இன்று சீமானை ஆதரிப்பது அவர்  பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தினைக் கையிலெடுத்து, போராடி ஈழம் எடுத்துத் தருவார் என்பதற்காக அல்ல. மாறாக, அவர் இன்று பேசும் அரசியலுக்காக. எமது சுந்ததிர விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை தமிழகத்தில் பரப்புவதற்காக. எமக்குச் சார்பான அரசொன்றினை தமிழகத்தில் உருவாக்குவதற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்காக. 

2008 ஆம் ஆண்டளவில், தாயகம் சென்றிருந்த சீமானுக்குத் தலைவரால் ஒரு செய்தி கொடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எமது போராட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம், எமக்குச் சார்பான அரசொன்றினை தமிழகத்தில் நிறுவி, மத்திய அரசை நிர்ப்பந்தித்து தமிழருக்கான தீர்வொன்றினைச் சிங்களம் தருவதற்கு வற்புறுத்துவது. சீமான் இன்று செய்வது அதைத்தான். 

கடந்த 70 வருடகால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்த்தலைமைகள் செய்ததெல்லாம் பிழைகள் பிழைகள் பிழைகள் தான் என்று கூறும் நீங்கள், எதிரியைக் கொதிப்படையாது, கோபப்படுத்தாது, ஆத்திரப்படவைத்து எம்மைக் கொல்லவைக்காது செய்யக்கூடிய வழிமுறை ஒன்றினை ஏன் பரிந்துரைக்கவில்லை? எமக்கான விடுதலைக்கான உதவியை நாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்? கருனாநிதி போட்டுவைத்திருந்த 24 மணிநேர கடல்ப் பாதுகாப்பு வேலியை போல் இன்னொரு வேலியை தமிழ் விரோத தமிழக அரசொன்று நிறுவினால் எம்மால் எந்த உதவியையும் பெறமுடியாமல்ப் போகும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? 

தமிழகத்தின் எழுச்சிமிக்க மாற்றமே இனிமேல் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தாக்கத்தினைச் செலுத்தும் என்று நான் நம்புகிறேன். இதுவரை தமிழகத்திலிருந்த அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்ட, மக்களின் மனோநிலையில மாற்றம் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையொன்று இப்போது உருவாகி வருகிறது. அதனைச் செய்ய முனைவது இன்று சீமான் மட்டும்தான், அதனால் அவருக்கான ஆதரவு ஈழத்தமிழரிடையே பெருகிவருகிறது. ஈழத்தமிழரையும், தமிழகத்தவரையும் பிர்த்துவைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பது என்னால் புரிந்துகொள்ளமுடியாததல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2020 at 17:43, tulpen said:

தலைவர் பிரபாகரன் போட்ட பிச்சையில் தமிழகத்தில் ஒரு சிலரின் உணர்ச்சியை தூண்டி பதவி எடுக்க கத்தித் திரியும் சீமானை ஒரு சில அறிவிலிகள் நம்பலாம். பெருமளவு ஈழத்தமிழ் மக்கள் அதை நம்ப தயாரில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கின்றன. இப்போது தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  கூட்டமைப்பாகட்டும், தேசிய முன்னணியாக்கட்டும் அல்லது விக்கினேஸ்வரன் கட்சியாக்கட்டும் எதிர்காலத்தில்  தமிழ் தேசியத்தை காப்பாற்றும் தமது முயற்சியில் ஜதார்த்த‍த்தை உணர்ந்து   நடைமுறை சாத்தியமான முறையில் வினை திறனுடன் கூட்டாக செயற்பட்டாலே எமது இருப்பை காப்பாற்ற முடியும்.

நீங்கள் கூறும் தமிழகத்தில் ஒரு சிலரின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு எனும் வார்த்தை மிகுந்த காழ்ப்புணர்வினால் உந்தப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையே அன்றி வேறில்லை. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்ட ஒருசிலரின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் 17 லட்சம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பணத்தாலும், சலுகைகளாலும், கள்ளவோட்டுக்களாலும்  திராவிடத் திருடர்களாலும்,  பிராமணீய அதிகார அழுத்தங்களாலும் தீர்மானிக்கப்படும் தேர்தல்களில் சீமானுக்கு அளிக்கப்பட்ட உண்மையான 17 லட்சம் வாக்குகள் என்பது, உங்களின் வார்த்தையில் சொல்வதானால்  "உணர்ச்சிகளைத் தூண்டி" எடுக்கப்பட்ட வாக்குகள், மொத்த வாக்குகளில் 4% வீதம் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. 

தேசியத்தைக் காப்பற்றும் யதார்த்தின்பாற்பட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று சற்று விளக்க முடியுமா? இதை ஏன் கேட்கின்றேன் என்றால், இந்த யதார்த்தின்பால் நின்று இன்றுவரை செயற்படும் டக்கிள்ஸ் தேவானந்தாவோ, கருணாவோ, பிள்ளையானோ சிந்திக்காதவையா அவை? அல்லது, உரிமைகள் பற்றியோ, தாயகம் பற்றியோ, போர்க்குற்றங்கள் பற்றியோ பேசவேண்டாம், இனிமேல் எம்மால் எதுவும் செய்யமுடியாது, நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்கிற யதார்த்தமா? எப்படியிருந்தாலும், ஒருமுறை சொல்லிவிடுங்கள்.

சீமானின் வளர்ச்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவரைத் தூற்றுவதற்கு இப்படி எழுதுகிறீர்கள். எமது தேசியத் தலைவரையே ஏற்றுக்கொள்ளாத, அவர் களத்திலிருந்து அகன்றபின்னரும், இன்றுவரை குறைசொல்லும், விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டும் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அது தவிர்க்கமுடியாதது. அதற்காக அவரது போராட்டம் தவறென்று அவரை இன்றுவரை ஆதரித்துவரும் பெரும் தமிழ்ச் சமூகம் நினைப்பதில்லை. அதுபோலத்தான் சீமானும். நீங்கள் கூறும் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட "ஒருசிலர்" நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க விஸ்வரூபம் எடுப்பார்கள், அது உங்களால் தடுக்க முடியாதது. நீங்கள் செய்யப்போவதெல்லாம், எமது கடந்த 70 வருடகால தேசியப் போராட்டத்தினை இன்றுவரை விமர்சிப்பதுப்போல, சீமானையும் சேர்த்து விமர்சிப்பதுதான்.  

உங்களின் எழுத்துக்களை மதிக்கிறேன், ஆனால் இக்கருத்துடன் உடன்பட முடியவில்லை நண்பரே. வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

26 minutes ago, ரஞ்சித் said:

இது ஒரு தவறான புரிதல் என்றுதான் நான் நினைக்கிறேன். முதலாவதாக, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை ஈழவிடுதலைக்கான முனைப்புகள் ஆயுத ரீதியிலான போராட்டமாக மாறும் முன்னரே அரங்கேறத் தொடங்கிவிட்டது. இந்திய ஈழப்போராளிகளுக்குக் கொடுத்த ஆதரவென்பது 1980 களின் ஆரம்பத்திலேதான் தொடங்கியது. ஆனால், இதற்குமுன்னரே சிங்களப் பேரினவாதம் தமிழர் மீதான இனக்கொலையினைக் கட்டம் கட்டமாக அரங்கேற்றிக்கொண்டுதான் இருந்தது. ஆகவே, இந்தியாவைக் காட்டித் தமிழர் சிங்களத்தினைப் பயமுருத்தியதாலேயே எம்மீதான அடக்குமுறைகள் ஆரம்பித்தன என்பது சரியாகப் படவில்லை. 1987 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எத்தகையது என்பதை சிங்களம் நன்றாகவே புரிந்துகொண்டுவிட்டது. "தமிழர்களும் இந்தியர்களும் மோதுவதைச் சிங்களவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்" என்று ஜே ஆர் சொல்லும்போதே இந்தியாவைக் காட்டித் தமிழர்கள் சிங்களவர்களை வெருட்ட முடியாதென்பது தெளிவாகிவிட்டது. அதற்குப் பின்னரான காலங்களில் இருந்து 2009 வரை இந்தியா யார்பக்கம் நின்றது, யாரைக் கொன்றதென்பது சிங்களவர்களுக்கு தெரியாததல்ல.

இம்மாநாடு நடக்கக் கூடாதென்று திட்டமிட்டு வந்த சிங்களப் பேரினவாதம், மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றது. இதை தமிழர்களால் தூண்டப்பட்ட தாக்குதல் என்கிற ரீதியில் நீங்கள் எழுதுவது வேதனை.

இதோ, அன்று நடந்த படுகொலைகள் தொடர்பான ஒரு பதிவு.

உலகெங்குமுள்ள தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் ஒன்றுகூடி உலகத் தமிழாராய்ச்சி மாநாடொன்றினை இலங்கையின் தமிழர் நகரான யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரையான 7 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவெடித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழரின் மொழிதொடர்பான மாநாடொன்றினை நடத்துவதை சிங்களப் பேரினவாத அரசு விரும்பியிருக்கவில்லை. அதனால், கொழும்பில் மாநாடு தொடர்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதும், யாழ்ப்பாணத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடுமையான அழுத்தங்களினைச் செலுத்தி, மாநாடு நடைபெறுவதனைத் தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பேர்ட் துரையப்பா மூலம் யாழ்நகரில் மாநாடு நடத்துவதனை எப்படியாவது தடுத்துவிட கங்கணம் கட்டியிருந்தது. அதன் ஒரு அங்கமாக மாநாடு நடத்தப்படும் திறந்தவெளி மண்டபத்தின் கட்டட நிர்மாணங்களுக்கான அனுமதியினை அல்பேர்ட் துரையப்பா இறுதிநிமிடம்வரை வழங்குவதைத் தாமதித்துக்கொண்டே வந்திருந்தார். பல நாடுகளிலுமிருந்து இமாநாட்டிற்கு வருகைதர முயன்ற தமிழரிஞர்களுக்கான விசாவினை இலங்கையரசு வெளிப்படையாகவே வழங்க மறுத்திருந்தது.

இப்படியான சிங்கள அரசின் திட்டமிட்ட தடைகளுக்கு மத்தியிலும்கூட, தமிழ் அறிஞர்களும், விழா ஏற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் இந்த ஆராய்ச்சி மாநாடு எப்படியாவது நடந்துவிடவேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாகவே இருந்தனர். தமிழர்களின் தளராத உறுதியைக் கண்டு தனது கடுமையான நிலைப்பாட்டினைத் தளர்த்திக்கொண்ட சிங்கள அரசு, சில வெளிநாட்டு தமிழறிஞர்களுக்கு மட்டும் விசாவினை வழங்க இணங்கியது.

இம்மாநாட்டின் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் தம்பையா மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை விரும்பாததனால், அப்பதவியிலிருந்து அவர் விலகிக்கொள்ள , பேராசிரியர் வித்தியானந்தன் தலைமைப் பதவியினை ஏற்றுக்கொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாடு திட்டமிட்டவாறு 3 ஆம் திகதி ஆரம்பமானதுடன், யாழ்ப்பாணமெங்குமிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் இம்மாநாட்டில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். மாநாடு பெரும் விழாக்கோலம் பூண்டிருந்ததோடு, முழு யாழ்ப்பாண நகருமே ஆனந்தத்தில் திளைத்திருந்தது.

ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான 10 ஆம் திகதியும் வந்தது. மாநாட்டின் இறுதிப்பகுதியும், முக்கிய நிகழ்வுமான தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் அதன் சரித்தரத் தொன்மை, கலாசாரத் தொடர்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் உரையாற்றத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டினைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் நைநா மொஹம்மட் இறுதியுரையினை ஆற்றத் தொடங்கினார். அவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது யாழ்பாண உதவி பொலீஸ் பரிசோதகர் சந்திரசேகரா மாநாட்டினைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள்மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார். அவரது தாக்குதலையடுத்து, உதவிக்கு நின்ற ஏனைய போலீஸ் அதிகாரிகள் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் 9 அப்பாவித் தமிழர்கள் அதேயிடத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்டதுடன், மாநாட்டு மேடையும் சிங்கள காவல்த்துறையினால் அடித்து நொறுக்கப்பட்டது.

இப்படுகொலைகளைப் புரிந்த பொலீஸ் அதிகாரி சிங்களப் பிரதமரால் பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

ரஞ்சித்,  சுதந்திரத்தின் பின்னர் இனப்பிரச்சனை உருவாகி தொடங்கிய முதல் 20 வருங்களில் அதை சிறப்பாக எதிர் கொண்டு தீர்க்ககூடிய வல்லமை அன்று இருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருந்த‍து. அப்படி இருந்தும் அதை தமது வாக்கு வங்கிக்காக மக்களுக்கு உசுப்பேற்றும் அரசியலையே தமிழ் தலைமைகள் மேற்கொண்டன என்பது வரலாறு.  அன்றைய தமிழ் தலைமை தமிழ தொடர்புகளை காட்டி ஒரு மாயையை ஸ்ரீலங்கா அரசுகளுக்கு காட்ட முற்பட்டது.   உதயசூரியன் தேர்தல் ்சின்னமும் அதனை யொட்டி மேற்கொள்ள பட்டதொன்றே. 

மற்றயது தமிழாய்ச்சி மகாநாடு தொடர்பாக சிங்கள பொலிசார் நடந்து கொண்ட முறை, படுகொலைகள் எல்லாம் நடைபெற்றது என்பதை நான் மறுக்கவில்லை. மகாநாட்டு ஏற்படாடுகளில் தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக  அன்றைய மேயர் துரையப்பாவை புறக்கணிக்கும் வகையில் தமிழர் கூட்டணி  மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அன்று மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த‍து.  சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்த ஜனார்த்தன்ன் கூட்டத்தில் பேச அனுமதிக்கபட்ட நிகழ்வு மிக மோசமான நடவடிக்கை. இது போன்ற பல விரும்பதாகத செயல்களை அன்றைய தமிழ் தலைமகள் மேற்கொண்டது. அதனால் சிங்கள பொலிசார் நடந்து கொண்ட முறை சரி என்பதல்ல.ஆனால் தமிழ் தலமைகள் திறமையாக அதை கையாளாமல் இழப்புகளில் இருந்து தமது வாக்கு வங்கியை அதிகரிக்கவே முயன்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்த ஜனார்த்தன்ன் கூட்டத்தில் பேச அனுமதிக்கபட்ட நிகழ்வு மிக மோசமான நடவடிக்கை.

இதுபற்றி சிறிது விளக்குங்களேன்? அவர் யார், என்ன பேசினார்? அவரால் நாட்டிற்குள் எப்படி வரமுடிந்தது? அல்பேட் துரையப்பாவை இம்மாநாட்டிற்கு அழைக்கவேண்டிய தேவையென்ன? அவருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கும் இடையிலான தொடர்பென்ன? யாழ்நகர மேயர் என்பதைத் தவிர அவர் சுந்ததிரக் கட்சியின் ஏஜென்ட் என்பது உண்மைதானே? இந்த மாநாடு நடைபெற்றிருக்காவிட்டால், தமிழர் மீது எதுவித தாக்குதல்களும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறீர்களா? இதற்கு முன்னரும் தாக்குதல்களும் கலவரங்களும் நடந்தனதானே? 

சிங்களவரைக் கோபப்படுத்தவேண்டாம் என்கிற சிந்தனை சரியானதுதானா? நாங்கள் அவர்களைக் கோபப்படுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம், என்ன செய்யவேண்டும் என்பதுபற்றிய தெளிவு நன்றாகவே இருக்கிறது. நாங்கள் அவர்களைக் கோபப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டாலென்ன, அது நடக்கத்தான் போகிறது.

அவர்கள் கோபப்படுவார்கள் என்பதற்காக நாம் உரிமை கேட்பதை நிறுத்திவிட முடியுமா டுல்பேன்? அவர்களைக் கோபப்படுத்தாமலும், எமது உரிமைகளை அடையக் கூடியதுமான வழியொன்று இருந்தால் தயவுசெய்து இங்கே அதுபற்றிப் பேசுமாறு கேட்கிறேன். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, tulpen said:

Tulpen நீங்கள் சொன்னவை சரியானவையே. எனக்கும் இதுபற்றி சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களிடம் மிக அதிக அக்கறை உடையவராக தன்னை காட்டிக்கொண்ட ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியை சட்டவிரோதமாக இங்கு வரவழைத்து திட்டமிட்டே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதை தாங்கள் புகழ் அடைய நமது அரசியல்வாதிகள் பயன்படுத்தினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ரஞ்சித்,  சுதந்திரத்தின் பின்னர் இனப்பிரச்சனை உருவாகி தொடங்கிய முதல் 20 வருங்களில் அதை சிறப்பாக எதிர் கொண்டு தீர்க்ககூடிய வல்லமை அன்று இருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருந்த‍து. அப்படி இருந்தும் அதை தமது வாக்கு வங்கிக்காக மக்களுக்கு உசுப்பேற்றும் அரசியலையே தமிழ் தலைமைகள் மேற்கொண்டன என்பது வரலாறு.  அன்றைய தமிழ் தலைமை தமிழ தொடர்புகளை காட்டி ஒரு மாயையை ஸ்ரீலங்கா அரசுகளுக்கு காட்ட முற்பட்டது.   உதயசூரியன் தேர்தல் ்சின்னமும் அதனை யொட்டி மேற்கொள்ள பட்டதொன்றே. 

மற்றயது தமிழாய்ச்சி மகாநாடு தொடர்பாக சிங்கள பொலிசார் நடந்து கொண்ட முறை, படுகொலைகள் எல்லாம் நடைபெற்றது என்பதை நான் மறுக்கவில்லை. மகாநாட்டு ஏற்படாடுகளில் தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக  அன்றைய மேயர் துரையப்பாவை புறக்கணிக்கும் வகையில் தமிழர் கூட்டணி  மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அன்று மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த‍து.  சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்த ஜனார்த்தன்ன் கூட்டத்தில் பேச அனுமதிக்கபட்ட நிகழ்வு மிக மோசமான நடவடிக்கை. இது போன்ற பல விரும்பதாகத செயல்களை அன்றைய தமிழ் தலைமகள் மேற்கொண்டது. அதனால் சிங்கள பொலிசார் நடந்து கொண்ட முறை சரி என்பதல்ல.ஆனால் தமிழ் தலமைகள் திறமையாக அதை கையாளாமல் இழப்புகளில் இருந்து தமது வாக்கு வங்கியை அதிகரிக்கவே முயன்றன.

தமிழர் தரப்பால் நடத்தப் பட்ட பேச்சு வார்த்தைகள் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறிய சிங்களம்.  சட்டியில் எதுவும் இல்லையே.  இவைகள் அனைத்தையும் மறந்து எல்லாமே தமிழர் தரப்பின் தவறாக  புதுக்கதை எழுதுகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தமிழர் தரப்பால் நடத்தப் பட்ட பேச்சு வார்த்தைகள் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறிய சிங்களம்.  சட்டியில் எதுவும் இல்லையே.  இவைகள் அனைத்தையும் மறந்து எல்லாமே தமிழர் தரப்பின் தவறாக  புதுக்கதை எழுதுகிறீர்கள்

சட்ட ஒழுங்கு முறையாக இருந்த ஒரு சமாதான காலத்தில், 1972ல் சட்ட விரோதமாக ஒருவர் நாட்டுக்குள் வந்து தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் கலந்து கொள்ள, என்ன தேவை இருந்தது? சும்மா அவிச்சு இறங்குவோம் என்று முடிவு செய்து விட்டால், பிறகென்ன.

****

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.