Jump to content

நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்

நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

 
வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின் என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம். அதேபோல வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான்.

இடது கை பழக்கமுள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வை திறன் இருக்கும்.

 

https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/08/08130735/1768951/left-handed-habit-Some-research-predictions-about.vpf

 

நானும் இடதுகை பழக்கம் தான் 😄

"இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்"

இப்ப வலது கையாலும் எழுதுவேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை Montessoriயில் சேர்த்த பொழுது எனது அம்மா கூறாமலே டீச்சர் இடது கையால் எழுதிய என்னை வலது கையிற்கு மாற்றிவிட்டா.... ஆகையால் எழுதுவது மட்டும் வலது கை. இப்பொழுது நினைத்தாலும் கோபம்தான்் வருவதுண்டு. எங்களுடைய சில நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை விளங்கிகொள்ளமுடியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கைகளாலும் எழுதக்கூடியவர்கள்  பற்றி தேடித்தான் படிக்கணுமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச இடக்கையாளர் தினம்.. யாழ் கள இடக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mixed Handedness எனப்படும் பழக்கம் பற்றி ஆங்கிலத்தில் தான் நிறைய உள்ளன தமிழில் வழக்கம்போல் படித்துத்தான் இங்கு இணைக்கணும் போல் உள்ளது பலநேரம்களில் வெடிப்புளுகுகளையும் இணைத்து விட்டிருப்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இடது கைபழக்கம் உள்ளவர்கள் மூளை மிகவும் விரைவாக வேலை செய்வதை கண்டுள்ளேன். 
எனது அனுபவத்தில் அனேக இஞினியர் / ஆர்க்கிடெக் இடது கை பழக்கம் உள்ளவர்களாவே இருக்கின்றார்கள்.

mixed handedness என்பது சரியா பதமா எனத்தெரியவில்லை இரு கைகளையும் பாவித்து எழுதக்குகூடியவர்களை ambidexter என அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இடது கை தான்.சாப்பிடுவது மட்டும் சிறு வயதிலயே வலது ஆக்கி விட்டார்கள்.மற்றப்படி இடது கை தான்..சில வேளைகளில் சிலரின் முக பாவனை மற்றும் பகிடிகளை கேட்டால் கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.. என்ன செய்வது..

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இடதுகைப் பழக்கம்தான். ஆனால் அரிவரியில் கமுகம் தடியால் விழுந்த அடியில் வலது கையால்தான் எழுதுவது. கரும்பலகை/வெண்பலகையில் இரண்டு கையாலும் எழுதுவேன்.

கையால் சாப்பிடுவது என்றால் வலக்கைதான். கத்தி, முள்ளுக்கரண்டி என்றால் கத்தி இடக்கையில்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, colomban said:

mixed handedness என்பது சரியா பதமா எனத்தெரியவில்லை இரு கைகளையும் பாவித்து எழுதக்குகூடியவர்களை ambidexter என அழைப்பார்கள்.

https://www.newscientist.com/article/mg18825241-900-the-secrets-of-human-handedness/ நான்  இங்கிருந்துதான் எடுத்தேன் ambidexter என்று   கமல் ஒரு படத்தில் சொல்வது உண்டு உடனே நினைவுக்கு வரவில்லை .

Link to comment
Share on other sites

நானும்  இடது கை தான். இன்று சர்வதேச இடது கை தினம்.  யாழ் களத்தில் உள்ள அனைத்து இடது கை பாவனை உடையவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். 

large.20200813070727_compress29.jpg.ef8c5d72aad200e501594703b882af9e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Barack Obama: Der frühere US-Präsident (beim Unterzeichnen eines Dokuments im Jahr 2009) ist einer der prominentesten Linkshänder. Foto: dpa

ஒபாமாவும் இடக்கையாலை தான் எல்லாம்.:grin:
அதுக்காக இடக்கையாலை எழுதுறவையள் எல்லாம் ஒபாமா ஆக முடியாது.😎
வாழ்த்துக்கள்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நானும் இடதுகைப் பழக்கம்தான். ஆனால் அரிவரியில் கமுகம் தடியால் விழுந்த அடியில் வலது கையால்தான் எழுதுவது. கரும்பலகை/வெண்பலகையில் இரண்டு கையாலும் எழுதுவேன்.

கையால் சாப்பிடுவது என்றால் வலக்கைதான். கத்தி, முள்ளுக்கரண்டி என்றால் கத்தி இடக்கையில்தான்.

 

நானும் அதே போலவே..என்ன கொஞ்சம் நாகரீகமாக “ டீச்சர் மாற்றிவிட்டா” என எழுதினேன்.. 

இப்பொழுது பேனா, பென்சில் பயன்படுத்தி எழுதும் வழக்கம் குறைவு என்பதால்.. இடது கை, வலது கை பிரச்சனை குறைவு..

6 hours ago, யாயினி said:

நானும் இடது கை தான்.சாப்பிடுவது மட்டும் சிறு வயதிலயே வலது ஆக்கி விட்டார்கள்.மற்றப்படி இடது கை தான்..சில வேளைகளில் சிலரின் முக பாவனை மற்றும் பகிடிகளை கேட்டால் கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.. என்ன செய்வது..

 

.

உண்மைதான்.. ஊரில் நிறைய இடங்களில் அனுபவப்பட்டிருக்கிறேன்..

ஆனால், விளையாட்டு போட்டிகளில்( table tennis, badminton etc) எனக்கு இடது கை பழக்கம் நிறைய நன்மைகளை தந்துள்ளது..

இதற்காகவே, நான் எங்கேயாவது எங்கள் சமூகம் சார்ந்த நிகழ்வுகளிற்கு போகும் போது, வீட்டிலேயே சிறியளவில் snacks ஏதாவது சாப்பிட்டு, அங்கே போய், spoonலால் இலகுவாக சாப்பிடக்கூடிய உணவுவகைகளை எடுப்பது வழமை.

 

இந்த ஆய்வுகள் எல்லாம் எத்தனைதூரம் உண்மை என கூற இயலாது ஆனால் இடதுகை பழக்கமுள்ளவர்களில் தனி கவர்ச்சி ஒன்று உள்ளது☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது கை பாவனை உடையவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

வலது கை பழக்கம் உள்ளவர்கள் சரியான பொறமை பிடித்தவர்கள். இந்த பக்கம் வந்து வாழ்த்து கூட சொல்லவில்லை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்😂🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இடது கை பாவனை உடையவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

வலது கை பழக்கம் உள்ளவர்கள் சரியான பொறமை பிடித்தவர்கள். இந்த பக்கம் வந்து வாழ்த்து கூட சொல்லவில்லை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்😂🤣

 

அது தானே எம்மட்டு பிரச்சினைகளை சகிச்சுக் கொண்டு நாளாந்த வாழ்வை கடத்தி செல்ல வேண்டியுள்ளது..சும்மா ஓடியந்து பார்த்துடுப் போனால் சரியா...😀😆

Link to comment
Share on other sites

துடுப்பாட்டத்தில் இடதுகைப் பந்துவீச்சாளர்களைக் கண்டால் சிறிது நடுக்கம்வரும் அவர்கள்தான் நான் அதிகமாக அவுட்டாகி உள்ளேன்.😩

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.