Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் – அங்கஐன் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் – அங்கஐன் வேண்டுகோள்

யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் – அங்கஐன் வேண்டுகோள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபான்மை மக்களிடம் பிரதித்துவம்படுத்தியதே இல்லை. எனினும் நாங்கள் செய்கின்ற வேலைத்திட்டம் மற்றும் செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.ஆகவே சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். இதனால் யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்து இருக்கின்றது.தமிழ் மக்கள் வாக்குகளினாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளது.இந்நிலையில் யாழ்.மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென யாழில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தை-பிரதித்த/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்களுக்கு வாழவே முடியாத இந்நிலையில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை- சஜித் by : Yuganthini மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது. இந்த இரண்டு வளங்களையும் ஒரு சரியான திட்டமிடலின் ஊடாக மட்டுமே காப்பாற்ற முடியும். இதற்கு துரிதமாக தீர்வொன்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம், உறுதியாக இருக்கிறோம். அரசாங்கமும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கித்தான் தேர்தலில் வெற்றிப் பெற்றீர்கள். இதனை நம்பித்தான் மக்களும் இரண்டு தேர்தல்களிலும் வாக்களித்தார்கள். எனவே, மக்கள் எதிர்ப்பார்க்கும் சேவையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன்று வாழ்க்கைச் சுமை வானைத் தொட்டுள்ளது. 20யை கொண்டுவந்து ஜனநாயகத்தை அழிக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகத் தானா மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். மக்களுக்கு வாழவே முடியாத இந்த நிலையில், அரசியலமைப்புக்களை மாற்றி எந்தப் பயனும் கிடையாது. அரசாங்கத்தின் பேச்சுக்கும் செயற்பாட்டுக்கும் இடையில் பாரிய இடைவேளி உள்ளது. எவ்வாறாயினும் நாம் அரசாங்கம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/மக்களுக்கு-வாழவே-முடியாத/
    • நன்றி விக், உங்களைப் பார்த்து நானும் தற்போது கிளிநொச்சியிலுள்ள கஸ்ரப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் மெதுவாகக் கால் வைத்துள்ளேன். இலக்கு அடுத்த வருடம் A/L எடுக்கும் பிள்ளைகள். சிறிய முயற்சிதான். எனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் உதவுகின்றனர்(தொண்டையில் பிடிக்கிறேன் 😂) வேறு சில முயற்சிகளும் பேச்சுவார்த்தையில் உள்ளன... 🤔 உங்களைச் சந்திக்க முடியுமா என்று தனி மடலில் கேட்டிருந்தேன். கவனிக்கவில்லை போலும். 😀 
    • எல்லாம் ஒகே, தல ...  மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே... முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள். இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை. அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு? இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன். உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம். கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫 இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.