Jump to content

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kidnap.jpg

வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வெள்ளை-வானில்-20-வயது-யுவதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Robinson cruso said:

வெள்ளை வான்? அப்படி என்றால்  --------------------

ஒருக்கா தூக்கினால்த் தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் விருப்பு வாக்கு புகழ் அங்கஜன் அங்கிள் வந்து மீட்டுத் தருவார்.. காத்திருங்கோ.

இதே அங்கஜனும்.. டக்கிளசும் மகிந்த கும்பலோடு சரணாகதி ஆயுத அரசியல் செய்து கொண்டு.. 5 ஆண்டுகளுக்கு முன் செய்த அநியாயங்களை மறந்து வாக்குப் போடும் அம்னீசியாக்களுக்கு..

இவை சாதாரணம். 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி எழுதப்பட்ட விதம் ஒருவித தெழிவில்லாத,  மயக்கம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

காதல் பிரச்சனையாய் இருக்க கூடும் 

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

1 hour ago, MEERA said:

spacer.png

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Robinson cruso said:

அது சில வேளைகளில் அபிவிருத்தி அரசியலின் ஒரு பகுதியாக மாறலாம்.

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன. எனி சீனக்கடன் தான் சொறீலங்கர்களின் தலையில் சுமையாக ஏறும். ஏற்கனவே உள்ள கடனுக்கு மேலதிகமாக. 

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

அண்ணை உங்களுக்கு அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாமல் டக்கிளஸ் மாதிரி மக்களை முட்டாளாக்கும் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

உலகில் சொறீலங்கா மற்றும் தெற்காசிய நாடுகள் சிலவற்றை தவிர..அபிவிருத்தி.. ஏன் தொழில் வாய்ப்பு.. ஏன் பாடசாலை அனுமதி என்று எல்லாமே அரசியல் ஆனது கிடையாது. 

அண்மையில்.. ஒரு காணொளி கண்டேன். டக்கி வெட்கம் கெட்ட தனமாக எனக்கு வாக்குப் போடுங்கள்.. உங்களின் வேலைக் கடிதம் தரப்படும் என்று சொல்கிறார். இப்படி ஒரு கேடு கெட்ட அரசியலை உலகில் சில மூன்றாம் உலக நாடுகளில் தான் காண முடியும். இது முற்றாக ஒரு சனநாயக விரோதச் செயல்.

அபிவிருத்தி என்பது எங்கு அரசியலாக்கப்படுகிறதோ.. அந்த நாடு உருப்படாது. 

அபிவிருத்தி என்பது அந்தத்த மக்களின் தேவைகள் சார்ந்த ஒன்று. அரசியல் என்பது அந்த மக்களின் உரிமை மற்றும் தெரிவினைப் பொறுத்தது. 

தமிழ் மக்களின் அபிவிருத்தி இன்று சொறிலங்காவில் சுயாதீனமாக இல்லை. அதேபோல்.. அரசியலும் அந்த மக்களின் உரிமை.. தெரிவு குறித்து இல்லை.. மாறாக.. அவர்களின் வாழ்வியலுக்கு சிலரை தெரிவு செய்வது கட்டாயப்படுத்தி... அவசியமாக்கப்படுகிறது. இது ஒன்றும் அரசியலும் அல்ல அபிவிருத்தியும் அல்ல. முழுக்க முழுக்க சனநாயகத்தின் பெயரிலான அராஜகம்.. காட்டுமிராண்டித்தனம். என்ன கொடுமை என்றால்.. தமிழ் மக்கள் இதற்கு வழக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

உங்களைப் போன்ற சில அராஜகக் காவடிகள்.. இதற்கு அபிவிருத்தி அரசியல் என்று பெயர் வைக்கிறீர்கள்.

அப்படி என்றால்.. வடக்கின் வசந்தம்.. கிழக்கின் உதயத்திற்கு என்னானது. நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகிட்டா...????! ரணில் அரசாவது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிளுக்க முனைந்துது. மகிந்த கும்பலின் வரவோடு.. வெளிநாட்டு முதலீடுகள்.. வெளி இழுக்க ஆரம்பித்துவிட்டன.

இன்றும் எனது சிங்கள நண்பர் ஒருவர் பேசினார்.. 60% சம்பள இழப்பாம். சலுகைகள் நிறுத்தி வைப்பாம். வெளிநாட்டில்.. அது எந்த நாடாக இருந்தாலும் ஒரு வேலை வேண்டும். தெரிந்த வகையில் சொல்லுங்கள். அவரின் தற்போதைய வெளிநாட்டு முதலீட்டாளர் தற்போதைய நிறுவனத்தை கைவிட.. முடிவு செய்திருக்கிறார்.. இந்த அரசின் வரவோடு. இதுதான் கள நிலை. ஆனால்.. நீங்கள் சிலர் தமிழ் தேசிய வெறுப்பில் உளறி அடிக்க.. தமிழ் தேசிய பக்திமான்கள்.. கவலையில் உளறி அடிக்கின்றனர்.

தேவை.. சூழலுக்கு ஏற்ப மக்களைப் பற்றி சிந்திப்பதும்.. மக்களை அணுகுவதும்.. மக்களின் உரிமைகள் தொடர்பில்.. உண்மையாக இருப்பதும் செயற்படுவதும் தான். 

இதைத்தானே 70 வருடமாக பேசுகிறோம். இனி என்ன தேசியம். இந்த 70 வருடத்தில் தமிழ் தேசியம் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையும் கிழக்கு , வன்னி என 50 % இட்கும் மேட்படட இடங்கள் சிங்களமயமாயும், சிங்களவர்களாயும் மாற்றி விடடார்கள். இன்னும் ஒரு 50 வருடத்தில் முழு இலங்கையும் சிங்கள மயமாயும் சிங்களவர்களாகவும் இருக்கப்போகின்றது. அப்படி என்றால் கடந்த 70 வருடமாக உங்கள் தமிழ் தேசியம் என்ன செய்தது? மக்களை தேசியம் தேசியம் எண்டு பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். இன்று தமிழர்களின் தலை நகராம் திருகோணமலையின் நிலவரம் என்ன? தமிழன் ஒரு சந்தை திறக்க முடியாமல் அவதிப்படுகின்றான். இப்படி தமிழனின் நிலைமையை நிர்யாவே எழுதலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது கருது எழுதுவது நல்லதாக தெரியவில்லை. மக்களுக்காக அரசியல் செய்யவேண்டும் ஒழிய , அரசியலுக்காக மக்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்குத்தான் இங்குள்ள நிலைமைகள் தெரியும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தளங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

நாம் பேசாமல் விடுவதால் மட்டும் இவை நிறுத்தப்படப் போவதில்லை. சிங்களம் அதன் தெரிவின் பால் அரசியல் செய்கிறது. எங்கு தேவையோ அங்கு சிங்களக் குடியேற்றங்கள். கல்லோயா திட்டம்.. மகாவலி திட்டம்.. இப்படி பல திட்டங்கள்.. எல்லாமே... ஆயுதமற்ற சிங்களக் குடியேற்றங்கள். 

தமிழர்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் இவை சற்று நலிவுற்றிருந்தன.. இப்போது மீண்டும்.. வலுப்பெற ஆரம்பித்து விட்டன. ஆனால்  வடக்குக் கிழக்கு எங்கணும் சிங்களக் குடியேற்றம் அவசியம் என்பதான சிங்களத்தின் தெரிவு..  ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதேபோல்.. எமது சில சிங்கள பெளத்த பேரின எஜமான அடிவருடி அடிதடிகளின் ஆதரவோடு தான் இவற்றை சிங்களம் அமுலாக்கி வருகிறது.

இது குறித்து நாம் பேச வேண்டிய தங்கள் நாட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ளன. பேசாமல்.. சிங்களவன் செய்வதை எல்லாம் அபிவிருத்தி அரசியலுக்கு என்று முழு பூசனிக்காயை சோற்றில் புதைத்து சிங்கள பெளத்த பேரின தேசத்தின் ஆட்சியாளர்களின் தமிழினப்படுகொலைகளை.. ஆக்கிரமிப்புக்களை மறைத்து மறந்து செல்வோம் என்றால்.. முழு வடக்குக் கிழக்கும் சிங்கள மயமாவதற்கு அதிக காலம் எடுக்காது.. அதுவும் தமிழர்கள் இந்த உலகத்தால் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ள நிலையில். 

நாங்கள் அரசுடன் சேர்ந்தவர்களை மட்டும் இதட்கு குற்றம் சாடட முடியாது. ஒன்றை கூறுகின்றேன். இதட்கு முன்னரும் எழுத்து இருக்கிறேன். நான் இதில் சம்பந்தப்படட படியால் எழுதுகிறேன்.

இரணைமடு திடத்தில் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுபோவதட்கான திடடம் இருந்தது. அதாவது நீர்த்தேக்கத்தை உயர்த்தி அதில் கிடைக்கும் மேலதிக நீரை சேமித்து அங்கு கொண்டு செல்வது. அது மட்டுமல்ல யாழில் ராட்சத குழாய்கள் மூலம் யாழில் கிடைக்கும் கழிவு நீரை , சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் நிலத்திட்க்குள் அனுப்புவது. அதாவது நிலத்தடி நன்னீரின் கொள்ளளவை அதிகரிப்பது.

அப்படியான ஒரு திடடம் வந்த பொது ஸ்ரீதரன் எம்பீ அதை சுய நலத்துடன் எதிர்த்தார். மாகாண சபையின் கீழ் உள்ள அந்த இரணைமடுக்குல திட்ட்துக்கு அரசியல் காரணுங்கலுக்காக விக்கியும் சம்மதிக்கவில்லை. அங்கு ஸ்ரீதரனுக்கு நூற்று கணக்கில் வெள்ளாமை காணிகள்  இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அந்த திடடம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதட்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கட்சிகளே.

இப்போது என்ன நடக்கின்றது? மகாவலி நீர் திசை திருப்பும் திடடம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்த நீர் இரணைமடு குளத்துக்கு கொண்டுவரப்படும். யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படும்.

இங்குதான் பிரச்சினை இருக்கின்றது. மகாவலி நீர் வந்தவுடன் இக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும். அதன்பின்னர்தான் முழு வீச்சில் நெடுங்கேணி முதல் இரணைமடுக்குளம் வரைக்கும் சிங்கள குடியேற்றம் நடைபெறும்.

இதட்கு யார் பொறுப்பு கூறுவது. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போது நெடுங்கேணி வரைக்கும் குடியேற்றம் வந்து விட்ட்து. எனவே அரசை சார்ந்தவர்களை மட்டும் குற்றம் சாடட முடியாது.

Link to comment
Share on other sites

இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.

http://www.tamilpower.com/2020/08/blog-post_10.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அபிவிருத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய முதல், தனக்கு சாதகமான திட்டத்தை முன்வைத்தே சிங்களம் செய்யும். நாங்கள் அதில் மூழ்கி இருக்க, கனகச்சிதமாய் அந்த திட்டத்தில் பயனடைவோர் சிங்களவரே. இழப்பு மட்டுமே தமிழருக்கு மிஞ்சியது. இது கடந்தகால அனுபவம். எங்கள் பூர்வீக நிலங்கள் இவ்வாறே அபகரிக்கப்பட்டன. சிங்களவன் ஒரு திட்டம் வைத்தால், அது சரியில்லை என்று ஒரு சாரார் எதிர்த்தால் மறுத்திட்டம் அதைவிட மோசமானதாய் இருக்கும். நமக்கிடையே பிளவுகள் ஏற்படும். அதை சிங்களவன் சாதகமாக்கி நம்மையே கூறு போடுகிறான். இந்த நரித்தனத்தை வெல்ல முயற்சி எடுத்தால், நமக்கு வேண்டியதை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் ஆளையாள் குற்றம் சொல்லி அடிபட்டுக்கொண்டு, அவனுக்கு சேவகம் செய்து, அவனது திட்டத்தை நாமே நிறைவேற்றியவர்களாவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

இந்த 72 ஆண்டுகால இலங்கை நாடாளுமன்றப் பட்டறிவில் எந்தவொரு தமிழ்க்கட்சியும்  இதனை உணரவில்லை. ஏன்  ஜீ.ஜீ.பொன்னம்பலமவர்களால் வட-கிழக்கிலே தொழிற்சாலைகளை முன்மொழிந்தபோதுகூட மாற்றணிகளால்    எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுதாகக் கூறுவதைக் கேடடிருக்கின்றேன்.  இது தமிழரிடையே உள்ள துர்ப்பாக்கி நிலை. முதலில் இவைகள் மறைந்தாலே நிறைய மாற்றங்கள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை வழி கொழும்பில் வளர்ந்து, கல்வி கற்று, தொழிலும் பெற்றவர்கள். பெரும்பாலானோர் போலீஸ் இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சிங்களம் மட்டும் என்கிற சட்டம் வந்தபோது, அத்தனை உறவுகளும் தமது போலீஸ் உத்தியோகத்தை தூக்கியெறிந்துவிட்டு ஊருக்கு வந்து, விவசாயிகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அன்று அப்படி செய்ததாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  ஆனால் ஒரு அரசியல்வாதியும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிங்களவனுக்காக வாதாட பிரித்தானியா சென்ற தலைமைகள், எங்கள் உரிமைக்காக வாதாட விரும்பவில்லை. சாதாரண மக்களுக்கு இருந்த தன்மானம் தலைமைகளுக்கு இல்லாமல் பண, சொகுசு மோகமே பெரிதாக இருக்க. மக்கள் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். சிங்களவன் அதை சாதகமாக்கி, எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டான்.  அன்றே இவர்கள் போராட வெளிக்கிட்டிருந்தால், இவ்வளவு இழப்புகளையும், அழிவுகளையும் தடுத்திருக்கலாம். காலந்தாழ்த்திய பின் இலகுவாக கடவுளில் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் என்பது கூட்டமைப்புச் செய்யும் அரசியல்தான் என்று நம்பும் அரசியல் அடிமுட்டாள்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விவிவு பிறக்கப்போவதில்லை. வெறுமனே தமது கட்சியின் பெயரில் தேசியம் எனும் வார்த்தையினைத் தொங்கவிட்டு விட்டால் தேசியம் வந்திடுமா? அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா? அப்படித்தான், கூத்தமைப்பெனும் கொழும்பு மேற்தட்டு வர்க்க அரசியலினைக் கொண்டு நடத்தும் சுமந்திரனின் கட்சியும் பார்க்கப்படுதல் அவசியம். அவர்களுக்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

70 ஆண்டுகளாக சிங்களவன் ஆக்கிரமிக்கிறான். அதனாலேயே தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது. ஏதோ தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றதினால்த்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று புதிய கதையுடன் சிலர் உலாவருகிறார்கள் இப்போது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டத்தினை அடக்கவே அரச ராணுவம் போரில் இறங்கியதெனும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றுக்கு எந்தவிதத்திலும் குறையாத கூற்றே "உங்கட தேசியம் செய்ததெல்லாம் சிங்களவன்ர ஆக்கிரமிப்பை 70 வருஷமா உருவாக்கி வளர்த்தது" என்பது. உங்களுக்கு கூத்தமைப்பின் அரசியல் பிடிக்கவில்லையென்றால், தாராளாமாக விமர்சியுங்கள். அதற்கான தகுதி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இன்று தோற்றுவிட்டது தமிழ்த் தேசியம் அல்ல, மாறாக தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய எதிர்ப்பைச் செய்துவந்த கூத்தமைப்பெனும் தேசியவிரோத கட்சியின் அரசியலே. 

தமிழ்த்தேசியம் என்பது பாராளுமன்ற பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் அரசியல் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

தேசியம் என்பது ஒரு மொழிபேசும் மக்கள் கூட்டம், தமது பூர்வீகத் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான வாழ்க்கை முறையே. அதை நோக்கிச் செய்யப்படும் எந்தவித நடவடிக்கையும்ன், அரசியலாகவோ போராட்டமாகவோ இருக்கும் பட்சத்தில் தேசியம் சார்ந்த செயற்பாடாகக் கருதப்பட முடியுமே தவிர, அதுவே தேசியமாகாது. இன்று கூத்தமைப்புச் செய்வதற்கும் தேசியம் சார்ந்த செயற்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர் எதிரான செயற்பாட்டையே கூத்தமைப்பு செய்துவருகிறது.

Link to comment
Share on other sites

அதாவது கூத்தமைப்பு தமிழ் தேசியத்துக்கு உரியதல்ல, விக்கியும் கஜனும்தான் இப்போது தமிழ் தேசியம் செய்யப்போகிறார்கள் என்ற கண்ணோட்டம் இங்கு காணப்படுகின்றது. அப்படி என்றால் இவர்களை தெரிவு செய்ததுபோல , தமிழ் தேசியத்துக்கு எதிரான அரசு சார்பான கட்சிகளுக்கு ஏன் மக்கள் வாக்களித்தார்கள்? 

சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்பதால்தான் , தமிழ் தேசியம் உருவாகியதாம். அப்படி என்றால் அந்த ஆக்கிரமிப்பை தடுக்க முடிந்ததா? அந்த ஆக்கிரமிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை . இது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ் தேசியம் பேசியவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளி நாடு சென்று படிக்கவும், குடும்பத்துடன் சொகுசு வாழக்கை நடத்தினார்கள் தவிர ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. அவர்களுக்கும் தெரியும் முடியாத ஒன்றைத்தான் செய்கிறோம் என்று.

இப்போது மக்கள் கூத்தமைப்பை நிராகரித்து சில தமிழ் தேசிய (?) வாதிகளுக்கும் , அரசசார்பு வாதிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். நிச்சயமாக அடுத்தமுறை கூத்தமைப்பை காணாமல் போகும்.

அனால் மக்கள் எப்போதுமே தியாகம் செய்துகொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அரசியல் மூடத்தனம். எனவே தமிழ் தேசியத்துக்கு இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகள் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

காதல் பிரச்சனைக்கு கடத்தல் என்பது எப்படி சாத்தியமாகுது.. என்றால்.. கடத்தப்படக் கூடிய சூழலை தேற்றுவிப்பவர்கள் அதிகாரங்களோடு இருப்பது தான்.  இன்றேல்.. காதலோ என்னவோ அதுக்கு கடத்தல் என்ற இன்னொரு குற்றம் தீர்வாக முடியாது என்ற புரிதலை எது ஏற்படுத்தத் தடுக்கிறது..??! இப்படி  தான் சிந்திக்க வேண்டுமே தவிர.. சாக்குப் போக்குச் சொல்லி 2015 க்கு முன்னால சூழலை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது. 

அங்கஜனின் அராஜகங்கள் மீண்டும் அரங்கேறும் போது.. இன்னொரு செல்பீக்கு ஆக்கள் இருக்க மாட்டினம். வெயிட் அன்ட் சீ. 

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

காதல் என்றாலே (நேரம்ம்ம்ம்ம்) கடத்துதல் தானே. 

❤️எட்டு மணித்தியாலங்கள் எட்டு நிமிடமாய்க் கரைந்தே போகும். ❤️

எனது நாளை இனிதாய், பசுமையான நினைவுகளுடன் ஆரம்பிக்க உதவிய இரதிக்கு நன்றிகள் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் இது வரைக்கும் காதலுக்காய் கடத்திறதை பற்றி கேள்விப் படவில்லையா?...எல்லாத்துக்கும் அரசியல் முடிச்சு போடுறதை விட்டு போய் வேலையை பாருங்கோ 😀

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

5 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி... உங்க ஊரில.. கடத்தல் கொள்ளை.. கொலை.. கப்பம்.. எல்லாம் காதலின் அம்சமாத்தான் பார்க்கிறீங்கள் போல. ஊர் வழக்கம் அப்படி. என்ன செய்வது. 

தமிழ் இலக்கியங்களில் கரவொழுக்கம் பற்றி கற்றதில்லையா? விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள்? ரதி என்ன சொல்கிறீர்கள்? 😀 இதை காந்தர்வ திருமணம் என்றும் சொல்வதுண்டு, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://www.tamilwin.com/community/01/253311?ref=home-latest

இப்போ சொல்லுங்கோ யார் யார் இந்த வெள்ளை வான் கடத்தல் போட்டியில் 💡 வாங்கினவை.

மக்களுக்கு தமிழ் தேசிய தெளிவை கொடுங்கள், ஆனால் ரெயினில் மாடு அடிபட்டாலும், வெள்ளை வானுக்கு காத்து போனாலும் சிங்களவன் தான் காரணம் எண்டு சொல்லி தேசிய சிந்தனையை இனவெறியாக்கி கொச்சைப்படுத்தாதீங்கள்.

என்ன நான் சொல்லுறது சரிதானே.?? 😁

Link to comment
Share on other sites

10 hours ago, முதல்வன் said:

கடைசியாய் முடிவு வந்துவிட்டது. நெக்காலபோனவன் சொல்வது போலில்லை தற்போதய நிலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.