Jump to content

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு


Recommended Posts

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு

 

Suren-Raghavan.jpg

இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளதாக, தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரமே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டினை பதிவு செய்த சிவில் அமைப்பு உறுப்பினர் அலுத்கம இந்ர ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுரேன் ராகவனுக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்ட விதம் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவனுக்கு தேசிய பட்டியல் வழங்கப்படுகின்றமை குறித்து, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயகேரவிடமோ அல்லது வேறு உறுப்பினர்களிடமோ வினவப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  by : Jeyachandran Vithushan

http://athavannews.com/இரட்டைப்-பிரஜாவுரிமை-விவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க என்ன தான் சிங்களவனுக்கு விசுவாசத்தைக் காட்டினாலும் அவன் உங்களை தமிழனாக வைக்க வேண்டிய இடத்தில் தான் வைப்பான். அதாவது அவனின் காலடியில். இது விளங்காமல் அவனிடம் பதவிக்கு.. சலுகைக்கு.. மோகத்தில் அலைவதே எமக்குள் ஒரு கெத்து... என்று போலி விம்பம் காட்டிக்கொள்வது. 

இந்தப் பதவியை உடனடியாக நிராகரித்து.. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தவர்கள் அடங்கும் கட்சியிடம் இருந்து இதனை ஏற்கமாட்டேன் என்று அறிக்கை கொடுத்து.. மகிந்த கும்பல் மூஞ்சில கரி பூசி சர்வதேச அரங்கிற்கும் அதைச் சொல்லி இருந்தால்.. உண்மையில்.. இவரை ஒரு புத்திசாலின்னு நம்பி இருக்கலாம்.

இப்ப அதுவும் இல்லை. இவர் ஒன்றை தெரிய மறந்து விட்டார். இதே மகிந்தவின் தம்பி சிங்கள சனாதிபதியானதும் செய்த முதல் விடயம்.. இவரிடம் இருந்த வடக்கு ஆளுநர் பதவியை பறித்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு

 

Suren-Raghavan.jpg

இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரும் கொஞ்சநாள் கொழும்புக்கு மிண்டு குடுத்தவர் எல்லோ :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின்  தமிழருக்கெதிரான அடுத்த காய் நகர்த்தல்  இவர்தான். எப்படியும் கொண்டுவந்து விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இவரும் கொஞ்சநாள் கொழும்புக்கு மிண்டு குடுத்தவர் எல்லோ :grin:

யாழ்ப்பாணத்தில்.... பிரமாண்டமான, பௌத்த மாநாடும் நடத்தியவர்.

இப்ப ஒரு ஆமத்துறு தான்... இவருடைய பதவிக்கும்,  ஆப்பு அடிச்சு விட்டிருக்குது.  😁😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.