Jump to content

தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது. எனினும் நாமும் எமது எதிர்காலசந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்குதொடர்ந்தும் நாம் போராட வேண்டி உள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல. மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும்.எனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் மிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்வதிலும் யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள், வடக்குகிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கல், தமிழ் மக்களின் தொன்மைகளை அழிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளத் தவறியகாரணத்தினால் இவற்றையும் வினைத்திறனுடன் கையாளக் கூடிய புதிய தலைமை தேவை என்கிற கருத்துகடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வந்தது.

ஏறத்தாள 45 ஆண்டுகளுக்குப் பின்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதுடன் அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளன. தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுடன் அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.மேற்கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதுடன் எமது போராட்டத்தை வலிமையுடன் சரியான திசைவழியில் எடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் 52000 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஓர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் என்பது கட்சிக்கு வெளியில் இருக்கக் கூடிய ஈடுபாடும் செயற்திறனும் மிக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்களை இணைத்து வலிமையான ஓர் அணியை உருவாக்குவதும் அதனூடாக எமது கோரிக்கைகளை பொருத்தமான தளங்களில் முன்னெடுத்துச் செல்வதுமாகும் என தெரிவித்துள்ளார் )15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-உணர்வு-என்பத/

Link to comment
Share on other sites

இவர் இப்போது தேசிய உணர்வு பற்றி பேசுகிறார். பதவி ஆசையினால் கட்சி மாறியவர் இருந்ததையும் இழந்தார். மக்களின் மண்டையில் போடடவர். சிங்கள அரசின் அமைச்சருக்கு ஆலோசகராக (?) வேலை செய்தவர். மக்களை உசுப்பேற்றி பதவி பிடிக்கலாம் எண்டு எண்ணுகிறார். இம்முறை மக்கள் நன்றாகவே மண்டையில் போட்டு  இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் தமிழ் தலைவர்களும் தமிழருக்கு ஆதரவாய் இருப்பதை விட்டு சிங்களவருக்கு ஆலோசகராயும் வக்கீலாகவும் செயற்பட்டதனாலேயே நாங்கள் இப்படி உருக்குலைந்து ஆயனில்லாமல் தவிக்கிறோம்.  பதவி பிடிக்கிறவர்களை தவிர்த்து இனத்தையே அழிக்கிறவனை  தேர்ந்திருக்கிறார்கள். நாமே பொறியில் தலையை கொடுத்த மாதிரி.

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

எல்லாத் தமிழ் தலைவர்களும் தமிழருக்கு ஆதரவாய் இருப்பதை விட்டு சிங்களவருக்கு ஆலோசகராயும் வக்கீலாகவும் செயற்பட்டதனாலேயே நாங்கள் இப்படி உருக்குலைந்து ஆயனில்லாமல் தவிக்கிறோம்.  பதவி பிடிக்கிறவர்களை தவிர்த்து இனத்தையே அழிக்கிறவனை  தேர்ந்திருக்கிறார்கள். நாமே பொறியில் தலையை கொடுத்த மாதிரி.

மக்கள் 70 வருடங்களாக சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அதை எல்லாம் கோடடை விட்டிட்டு இப்போ வந்து ஐயோ குய்யோ எண்டு முறையிடுவது நல்லதாக தெரியவில்லை.

இன்னும் ஒரு 10 வருடங்களுக்கு இவர்களை நம்பினால் தமிழன் முஸ்லிம்களுக்கு பின்னல் திரிய வேண்டி வரும். குறைந்தது அதிலிருந்ததாவது மக்களை காப்பாற்றவேண்டிய நிலை இப்போது வந்திருக்கிறது, முக்கியமாக கிழக்கு , வன்னி பிரதேசங்களில் இந்த நிலைமை எட்டப்பட்டுள்ளது.

இனியும் மக்கள் தியாகம் செய்து இவர்களை நம்புவது, சுரேஷ் பேசும் ஒற்றுமை எல்லாம் நடக்கும் காரியமாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.